Thursday, December 23, 2004

வேற்றுமைத் தொடர்கள் - பயிற்சி 1

என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க ஜெயஸ்ரீ வேற்றுமைத் தொடர்களுக்கான பயிற்சிகளைத் தர முன் வந்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

முதல் நாளுக்கான 25 பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எந்த வேற்றுமைத் தொடர் (உதாரணம், இரண்டாம் வேற்றுமைத் தொகை) என்ற பதிலை, கருத்துகள் பகுதியில் விரும்புவோர் இடலாம். இப்பயிற்சியில் நானும் மாணவனே. எனவே, நானும் பதில்கள் இட முயல்கிறேன்.

கருத்துகள் பகுதியில் பதில்கள் இடுவது ஒருவரின் விடையை இன்னொருவர் அறிந்து கொள்ள உதவும். தெரியாத கேள்விகளுக்கு இன்னொருவர் என்ன பதில் சொல்கிறார் என்று இதன்மூலம் கண்டுபிடித்துவிட முடியலாம். எனவே, கருத்துகள் பகுதியில் பதில்களை இட விரும்பாதோர் அவற்றை pksivakumar@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், அடுத்த நாள் அல்லது பயிற்சிகள் முடிந்தபின்னர் எல்லாரின் பதில்களையும் நான் ஒரு பதிவாக இடுகிறேன்.

இப்பயிற்சிக்கு ஆசிரியை ஜெயஸ்ரீதான். முந்தைய நாளின் பயிற்சிக்கான விடைகளை அடுத்த நாள் பயிற்சி வினாக்களுடன் கொடுப்பதா அல்லது எல்லா பயிற்சிகளும் முடிந்தபின் விடைகளை மொத்தமாகக் கொடுப்பதா என்கிற முடிவை ஆசிரியையின் வசதிக்கு விட்டு விடுகிறேன்.

இப்பயிற்சிகள் மிகவும் உதவும் என்று நம்புகிறேன். எந்த நல்ல விஷயத்தையுமே எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதிலேயே அதன் வெற்றி இருக்கிறது. ஜெயஸ்ரீயின் நேரத்தையும், முயற்சியையும், அறிவையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வோம் என்று நம்புகிறேன்.

1) வல்லமை தாராயோ
2) மழைச்சாரல்
3) கட்டித்தயிர்
4) கருணைக் கடல்
5) கட்சி தாவினான்
6) பெரியார் கொள்கை
7) நேர மாற்றம்
8) நேர்த்திக் கடன்.
9) பால் அபிஷேகம்
10) பட்டுப்புடவை
11) கல் சிலை
12) அம்பு எய்தான்
13) மரபுக் கவிதை
14) பேசாப் பொருள்
15) கந்தல் துணி
16) கல்யாணக் கனவுகள்
17) கண் நிறைந்த காட்சி
18) பதவி சுகம்
19) பல்வலி
20) வட்டிக்கடன்
21) பாட்டில் மூடி
22) திரைப் பாடல்கள்
23) கலாசார சிலுவை
24) தமிழ் இலக்கணம்
25) பயிற்சி முடித்தேன். :)

No comments: