Monday, May 31, 2010
It's complicated
தினம் சில வரிகள் - 30
2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும். ஆனால், அப்படத்தைப் பார்தத் நாள் முதலாக மெரில் ஸ்ட்ரீப் எனக்குப் பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக ஆகிப்போனார். அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் எனக்குப் பிடித்துப் போயின. ஹாலிவுட்டில் ஜாக் நிக்கசன், மெரில் ஸ்ட்ரீப் என்று நடிக/நடிகைகளில் ஒரு புனிதப் பட்டியல் (revered list) இருக்கிறது என்று பின்னர் தெரிந்தது. அந்தப் பட்டியலுக்கு மெரில் தகுதியானவர்தான் என நினைத்துக் கொண்டேன்.
மெரிலுக்காகப் பார்க்க வேண்டுமென்று எடுத்து வைத்த It's complicated படத்தை இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து முடித்தேன். தியேட்டரைத் தவிர வீட்டில் ஒரே அமர்வில் என்னால் ஒரு படத்தை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆகையால் அதை இப்படத்தின் குறையாகச் சொல்ல முடியாது. மெரிலுக்கு வயதாகிவிட்டது என்பது படத்தில் தெரிகிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினருக்கிடையே மீண்டும் உறவு மலர்வதை நிஜவாழ்வில் கேட்டிருக்கிறேன். அதனால் மெரிலுக்கும் அவர் முன்னாள் கணவருக்குமான மீள்உறவு படத்தில் ஆச்சரியம் தரவில்லை. அதேநேரத்தில் மெரில் ஸ்டீவ் மார்ட்டினுடனான புது உறவையும் விரும்புகிறார். இந்தக் குழப்பத்தை மெரில் பாத்திரம் வெளிப்படுத்துகிற உடல்மொழி, சிரிப்பு, குறைவான வசனங்கள் ஆகியன பிடித்திருந்தன. உறவுச் சிக்கலும், குழப்பமும், சீரியசுமான ஒரு கதைக் கருவை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய கதைகளைச் சீரியஸாகச் சொல்லப்போனால் அபத்தத்திலும், தோல்வியிலும் முடியும் என்பது என் தனி எண்ணம். இத்தகைய படங்களை நகைச்சுவையே சிறப்பாக ஆக்குகின்றன. அலெக் பால்ட்வினுக்கும் ஸ்டீவ் மார்டினுக்கும் நகைச்சுவையில் சோபிக்க மெரில் முன்னாலும் கதையிலும் அதிக இடமில்லை. வயதுக்கு வந்த குழந்தைகள் உடையவர்களின் பிரச்னைகள், உறவுமுறை, காதல் ஆகியவற்றைச் சொல்லும்படியான படங்கள் அதிகம் இல்லை. அதிலும் இந்த வயதுடைய பெண்களின் பிரச்னைகளை அணுகும் படங்கள் அதிகம் இல்லை. அதனால் இயக்குநரின் மிகவும் தைரியமான முயற்சி இப்படமெனச் சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்படத்தில் மெரில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று படம் முடிந்தவுடன் தோன்றுகிறது. அதுவே அவர் சிறப்பு.அவரில்லாமல் வேறு ஒருத்தர் அவ்வேடத்தில் நடித்திருந்தால் மட்டுமே மெரிலின் சிறப்பை நம்மால் உணர முடியும். 6/10.
2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும். ஆனால், அப்படத்தைப் பார்தத் நாள் முதலாக மெரில் ஸ்ட்ரீப் எனக்குப் பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக ஆகிப்போனார். அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் எனக்குப் பிடித்துப் போயின. ஹாலிவுட்டில் ஜாக் நிக்கசன், மெரில் ஸ்ட்ரீப் என்று நடிக/நடிகைகளில் ஒரு புனிதப் பட்டியல் (revered list) இருக்கிறது என்று பின்னர் தெரிந்தது. அந்தப் பட்டியலுக்கு மெரில் தகுதியானவர்தான் என நினைத்துக் கொண்டேன்.
மெரிலுக்காகப் பார்க்க வேண்டுமென்று எடுத்து வைத்த It's complicated படத்தை இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து முடித்தேன். தியேட்டரைத் தவிர வீட்டில் ஒரே அமர்வில் என்னால் ஒரு படத்தை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆகையால் அதை இப்படத்தின் குறையாகச் சொல்ல முடியாது. மெரிலுக்கு வயதாகிவிட்டது என்பது படத்தில் தெரிகிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினருக்கிடையே மீண்டும் உறவு மலர்வதை நிஜவாழ்வில் கேட்டிருக்கிறேன். அதனால் மெரிலுக்கும் அவர் முன்னாள் கணவருக்குமான மீள்உறவு படத்தில் ஆச்சரியம் தரவில்லை. அதேநேரத்தில் மெரில் ஸ்டீவ் மார்ட்டினுடனான புது உறவையும் விரும்புகிறார். இந்தக் குழப்பத்தை மெரில் பாத்திரம் வெளிப்படுத்துகிற உடல்மொழி, சிரிப்பு, குறைவான வசனங்கள் ஆகியன பிடித்திருந்தன. உறவுச் சிக்கலும், குழப்பமும், சீரியசுமான ஒரு கதைக் கருவை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய கதைகளைச் சீரியஸாகச் சொல்லப்போனால் அபத்தத்திலும், தோல்வியிலும் முடியும் என்பது என் தனி எண்ணம். இத்தகைய படங்களை நகைச்சுவையே சிறப்பாக ஆக்குகின்றன. அலெக் பால்ட்வினுக்கும் ஸ்டீவ் மார்டினுக்கும் நகைச்சுவையில் சோபிக்க மெரில் முன்னாலும் கதையிலும் அதிக இடமில்லை. வயதுக்கு வந்த குழந்தைகள் உடையவர்களின் பிரச்னைகள், உறவுமுறை, காதல் ஆகியவற்றைச் சொல்லும்படியான படங்கள் அதிகம் இல்லை. அதிலும் இந்த வயதுடைய பெண்களின் பிரச்னைகளை அணுகும் படங்கள் அதிகம் இல்லை. அதனால் இயக்குநரின் மிகவும் தைரியமான முயற்சி இப்படமெனச் சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்படத்தில் மெரில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று படம் முடிந்தவுடன் தோன்றுகிறது. அதுவே அவர் சிறப்பு.அவரில்லாமல் வேறு ஒருத்தர் அவ்வேடத்தில் நடித்திருந்தால் மட்டுமே மெரிலின் சிறப்பை நம்மால் உணர முடியும். 6/10.
Saturday, May 29, 2010
தினம் சில வரிகள் - 29
நான் வேலையில் மூழ்கிப் போயிருக்கும்போது எதையும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ப்து உட்பட.
மலச்சிக்கலின்போது உணர்கிறேன்.முந்தையநாள் அப்புத்தகத்தைப் படித்திருக்கக் கூடாதென்றோ அத்திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டாமென்றோ.
குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதைப் பார்க்கும்போது மீண்டும் மாணவனாகும் ஆசை வருகிறது.
பொய் சொல்வதில் உள்ள த்ரில் போய்விட்டது. எல்லாரும் சொல்வதைச் சுலபமாக நம்புகிறார்கள்.
டெஸ்டர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உள்ள நேச-வெறுப்பு உறவுமுறையைப் பார்க்கும்போது விமர்சக-எழுத்தாள உறவு நினைவுக்கு வருகிறது
கல்ப் ஆயில் ஸ்பில்லுக்கு யார் காரணமென்று பலதையும் படித்துக் குழம்பிப் போன நண்பர் கேட்டார். ஆயில்தான் காரணமென்றேன்.
நடைப்பயிற்சிக்குப் பின்னான ஆசுவாசத்தில் நம் சுவாசத்தின் வயது தெரிகிறது.
துணுக்கெழுத்துக்கும் டிவிட்டெழுத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து 100 டிவிட்டுகள் எழுத வேண்டும்.
தயிரை எப்படிச் சிறப்பாகத் தாளிப்பது என்பது குறித்து ஒரு கட்டுரை தமிழில் இதுவரை எழுதப்படவே இல்லை என்பது வருத்தம் தருகிறது.
அரசியல் எழுதவேண்டாமென கொஞ்சநாளாக இருக்கிறேன். நானெழுதாத அரசியல் போரடிக்கத்தான் செய்கிறது.
இன்றிரவு எழுத வேண்டும். இன்பம் சொட்டும் இவ்வாழ்வின் ஆனந்த வரிகளை, நெரூதாவுக்கு நன்றி சொல்லி.
பேசவராமல் போகிற தருணங்களை எழுதிவிடலாமென்றும், எழுதவராத தருணங்களைப் பேசிவிடலாமென்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
சிறுநீர் கழிக்க எழ மனம் வராமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரளும் அவஸ்தையெனும் உவமைக்கு எதை ஒப்பிடவெனும் ’கிரியேடிவ் தாட்’டில் உள்ளேன்.
மலச்சிக்கலின்போது உணர்கிறேன்.முந்தையநாள் அப்புத்தகத்தைப் படித்திருக்கக் கூடாதென்றோ அத்திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டாமென்றோ.
குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதைப் பார்க்கும்போது மீண்டும் மாணவனாகும் ஆசை வருகிறது.
பொய் சொல்வதில் உள்ள த்ரில் போய்விட்டது. எல்லாரும் சொல்வதைச் சுலபமாக நம்புகிறார்கள்.
டெஸ்டர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உள்ள நேச-வெறுப்பு உறவுமுறையைப் பார்க்கும்போது விமர்சக-எழுத்தாள உறவு நினைவுக்கு வருகிறது
கல்ப் ஆயில் ஸ்பில்லுக்கு யார் காரணமென்று பலதையும் படித்துக் குழம்பிப் போன நண்பர் கேட்டார். ஆயில்தான் காரணமென்றேன்.
நடைப்பயிற்சிக்குப் பின்னான ஆசுவாசத்தில் நம் சுவாசத்தின் வயது தெரிகிறது.
துணுக்கெழுத்துக்கும் டிவிட்டெழுத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து 100 டிவிட்டுகள் எழுத வேண்டும்.
தயிரை எப்படிச் சிறப்பாகத் தாளிப்பது என்பது குறித்து ஒரு கட்டுரை தமிழில் இதுவரை எழுதப்படவே இல்லை என்பது வருத்தம் தருகிறது.
அரசியல் எழுதவேண்டாமென கொஞ்சநாளாக இருக்கிறேன். நானெழுதாத அரசியல் போரடிக்கத்தான் செய்கிறது.
இன்றிரவு எழுத வேண்டும். இன்பம் சொட்டும் இவ்வாழ்வின் ஆனந்த வரிகளை, நெரூதாவுக்கு நன்றி சொல்லி.
பேசவராமல் போகிற தருணங்களை எழுதிவிடலாமென்றும், எழுதவராத தருணங்களைப் பேசிவிடலாமென்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
சிறுநீர் கழிக்க எழ மனம் வராமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரளும் அவஸ்தையெனும் உவமைக்கு எதை ஒப்பிடவெனும் ’கிரியேடிவ் தாட்’டில் உள்ளேன்.
Friday, May 28, 2010
Sherlock Holmes - சில குறிப்புகள்
தினம் சில வரிகள் - 28
ஷெர்லாக் ஹோம்ஸ் வரும் கதைகளைப் படித்த என் மகன் ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதால் இப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமணி நேரப் படம் தொய்வில்லாமல் போகிறது. ஷெர்லாக் ஹோம்ஸாக ராபர்ட் டௌனி ஜூனியர் அனாயசமாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை தெரியவில்லை. கச்சிதமாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. மிகையாக நடிக்கும் தமிழ் நடிகர்கள் சிலர் ஏனோ அவர் நடிப்பைப் பார்க்கும்போது தன்னிச்சையாக நினைவுக்கு வந்தார்கள். ராபர்ட் டௌனி ஜூனியரின் பிற படங்களைப் பார்க்கும் ஆர்வத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது. ஜீட் லாவுக்கு டாக்டர் வாட்சன் மாதிரியான கனவான் பாத்திரம் இயல்பாகப் பொருந்துவதை இப்படத்திலும் உணர்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் புதிர்களுக்கு விடைகாணும் போக்கைப் பார்க்கும்போது, லார்ட் ப்ளாக்வுட்டை மிஞ்சிய மந்திரவாதியாக இருப்பாரோ எனத் தோன்றுகிறது. கடைசியில், எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை அவரே விளக்கி, மாயமந்திரமெல்லாம் மோசடி என்று செய்தியும் தருகிறார். படத்தினூடே மெல்லிய ஓடைபோல ஓடும் wit (இதற்குத் தமிழில் என்ன?) படத்தை ரசிக்கச் செய்கிறது. படத்தின் இயக்குநர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்திலும் நிகழ்வுகளிலும் சிலவற்றை மாற்றியெடுத்திருக்கிறார் என்று IMDB இணையதளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரைக்கதையாக்கும்போது சில மாறுதல்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதே நான் இதிலிருந்து புரிந்து கொள்வது.
ஷெர்லாக் ஹோம்ஸ் வரும் கதைகளைப் படித்த என் மகன் ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதால் இப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமணி நேரப் படம் தொய்வில்லாமல் போகிறது. ஷெர்லாக் ஹோம்ஸாக ராபர்ட் டௌனி ஜூனியர் அனாயசமாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை தெரியவில்லை. கச்சிதமாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. மிகையாக நடிக்கும் தமிழ் நடிகர்கள் சிலர் ஏனோ அவர் நடிப்பைப் பார்க்கும்போது தன்னிச்சையாக நினைவுக்கு வந்தார்கள். ராபர்ட் டௌனி ஜூனியரின் பிற படங்களைப் பார்க்கும் ஆர்வத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது. ஜீட் லாவுக்கு டாக்டர் வாட்சன் மாதிரியான கனவான் பாத்திரம் இயல்பாகப் பொருந்துவதை இப்படத்திலும் உணர்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் புதிர்களுக்கு விடைகாணும் போக்கைப் பார்க்கும்போது, லார்ட் ப்ளாக்வுட்டை மிஞ்சிய மந்திரவாதியாக இருப்பாரோ எனத் தோன்றுகிறது. கடைசியில், எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை அவரே விளக்கி, மாயமந்திரமெல்லாம் மோசடி என்று செய்தியும் தருகிறார். படத்தினூடே மெல்லிய ஓடைபோல ஓடும் wit (இதற்குத் தமிழில் என்ன?) படத்தை ரசிக்கச் செய்கிறது. படத்தின் இயக்குநர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்திலும் நிகழ்வுகளிலும் சிலவற்றை மாற்றியெடுத்திருக்கிறார் என்று IMDB இணையதளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரைக்கதையாக்கும்போது சில மாறுதல்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதே நான் இதிலிருந்து புரிந்து கொள்வது.
Thursday, May 27, 2010
தினம் சில வரிகள் - 27
காலைக் கழுவிக் கீழிருக்கும் மணற்கறையைக் கரைத்துச் செல்லும் அலைபோல உடலைக் கழுவி காமத்தைக் கரைக்கும் கடல் நீ.
நிலவொளியில் தூங்கும் மரக்கூட்டத்தை திடீரென படபடக்கும் தன் இறக்கையொலியில் எழுப்புகிறது பறவை.
கார்க் கண்ணாடியில் விழும் மழையைத் துடைக்கும் வைப்பர்போல மனதைத் துடைத்துக் கொண்டே இருக்கிறது காதல்
ஹெட்லைட்டுகள் பிரகாசிக்கும் காரின் வெளிச்சத்தில் சாலைக்கு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
உடற்பயிற்சிக் கூடத்தில் அழகான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் மனப்பயிற்சிக்கான தேவையை உணர்கிறேன்.
சொற்களுக்கான தூண்டிலில் சிலநேரங்களில் வாக்கியங்களும் சிக்குகின்றன.
நனைதலைப் பற்றி எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் துவட்டிக் கொள்ளுதலைப் பற்றி எழுதலாமென இருக்கிறேன்.
நிலவொளியில் தூங்கும் மரக்கூட்டத்தை திடீரென படபடக்கும் தன் இறக்கையொலியில் எழுப்புகிறது பறவை.
கார்க் கண்ணாடியில் விழும் மழையைத் துடைக்கும் வைப்பர்போல மனதைத் துடைத்துக் கொண்டே இருக்கிறது காதல்
ஹெட்லைட்டுகள் பிரகாசிக்கும் காரின் வெளிச்சத்தில் சாலைக்கு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
உடற்பயிற்சிக் கூடத்தில் அழகான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் மனப்பயிற்சிக்கான தேவையை உணர்கிறேன்.
சொற்களுக்கான தூண்டிலில் சிலநேரங்களில் வாக்கியங்களும் சிக்குகின்றன.
நனைதலைப் பற்றி எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் துவட்டிக் கொள்ளுதலைப் பற்றி எழுதலாமென இருக்கிறேன்.
தினம் சில வரிகள் - 26
நூலகத்தில் புத்தக அடுக்குகளில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு அமர்ந்தபடி வாசகர்களை எதிர்நோக்கித் தவம் செய்யும் எழுத்தாளர்களைப் பார்க்கிறேன்.
மகன் ரோபாட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். மனிதர்களைவிடச் சொல்வதை அப்படியே கேட்கும் ரோபாட்டுகள் எனக்கும் பிடித்துதான் இருக்கின்றன.
குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. சைக்கிள் தந்தையிடம் பதறாதே,நான் பார்த்துக் கொள்கிறேன் என்றதைக் கேட்டேன்.
3D போர்ன் வரவிருப்பதாகப் படித்தேன். சந்தோஷம்.போர்ன்ல் வரும் பெண் திரையிலிருந்து நேரடியாக இறங்கி நம்மிடம் வராதவரை இது முன்னேற்றமில்லை.
கச்சேரிக்குச் சென்று வந்ததில் பெற்ற கேள்வி. ஏன் எல்லா ராகங்களின் பெயர்களையும் பெண்களுக்கு வைப்பதில்லை.
மகன் ரோபாட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். மனிதர்களைவிடச் சொல்வதை அப்படியே கேட்கும் ரோபாட்டுகள் எனக்கும் பிடித்துதான் இருக்கின்றன.
குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. சைக்கிள் தந்தையிடம் பதறாதே,நான் பார்த்துக் கொள்கிறேன் என்றதைக் கேட்டேன்.
3D போர்ன் வரவிருப்பதாகப் படித்தேன். சந்தோஷம்.போர்ன்ல் வரும் பெண் திரையிலிருந்து நேரடியாக இறங்கி நம்மிடம் வராதவரை இது முன்னேற்றமில்லை.
கச்சேரிக்குச் சென்று வந்ததில் பெற்ற கேள்வி. ஏன் எல்லா ராகங்களின் பெயர்களையும் பெண்களுக்கு வைப்பதில்லை.
Sunday, May 23, 2010
கருத்துக்கே எதிரி
தினம் சில வரிகள் - 25
வலைப்பதிவில் பின்னூட்டப் பெட்டியை ஏன் மூடிவிட்டீர்கள் என்று சிலர் கேட்டார்கள். நான் நிம்மதியாக எழுதிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லையா சிரித்தபடி கேட்டேன். யோசிக்கும்போது பின்வரும் காரணங்கள் சொல்லலாம்.
1. முதலில் எனக்குப் பின்னூட்ட மழை பொதுவாகப் பெய்வதில்லை.வருகிற பின்னூட்டங்கள் சொற்பம்தான்.
2. அப்படியே பின்னூட்டத்தைத் திறந்து வைத்தாலும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட சில நேரங்களில் நேரமில்லாத என் சூழ்நிலையில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.
3. பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டதால் என்னைக் கருத்துச் சுதந்திரத்தின் எதிரி என்று சொல்லமாட்டார்களா? இணைய அகராதிப்படி பின்னூட்டத்தை மட்டுறுத்தினால் அல்லது வெளியிட மறுத்தால் மட்டுமே கருத்துச் சுதந்திரத்தின் எதிரி. பின்னூட்ட வாய்ப்பே தரவில்லை எனில் கருத்துக்கே எதிரி என்று புதியதாக வேண்டுமானால் சொல்லலாம். அப்படி என்னைப் பற்றிச் சொல்கிறவர்களை வரவேற்கிறேன்.
4. இணையதளங்களில் தான் தடை செய்யப்பட்டபோது வானத்துக்கும் பூமிக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகக் குதித்த மகானுபவர்கள், தாங்கள் வலைப்பதிவு ஆரம்பித்துப் பார்த்துப் பின்னூட்டங்களில் வரும் கருத்துகளை மட்டுறுத்த வேண்டி வந்தபோது, ”என் கருத்தை எழுத வலைப்பதிவு வைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை உங்கள் இடங்களில் சொல்லுங்கள்” என்று அருளிய நியாயவானாக மாறிய கதைகள் இங்குண்டு. அந்த மாதிரி தேவைக்கெற்ப வந்த திடீர் ஞானோதயமா என்று கேட்பவர்களுக்கு வலைப்பதிவின் என் சென்ற இன்னிங்க்ஸில் பின்னூட்டமிடும் வசதி இருந்ததை நினைவுபடுத்துகிறேன்.இந்த முறை சண்டைபோட நிஜமாகவே நேரம் இல்லை. மற்றபடி பதில் சொல்ல விரும்புபவைக்குப் பதிவிலேயே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.
5. பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்தும் வழியல்லவா? பின்னூட்டம் இல்லாமல் எப்படித் தொடர்ந்து எழுதுவது? பாராட்டுகிற பின்னூட்டங்கள் தற்காலிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் தொடர்ந்து எழுத உத்வேகம் எனக்கு உள்ளிருந்துதான் வரவேண்டும். வெளியிருந்து இல்லை.
6. பெரிய எழுத்தாளர்கள் பலர் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு வாசகர்கள் கடிதங்கள்தான் எழுத வேண்டும். அப்படி வருகிறவற்றில் பாராட்டாய் வருகிற கடிதங்களை மட்டும் தேவைக்கேற்ப மாற்றி எழுத்தாளர்கள் தங்கள் தளத்தில் பிரசுரித்துக் கொள்வது சில சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் இணையத்துக்குக் அளித்த கொடை. அந்த மாதிரி தாங்களும் என்னைப் பாராட்ட விரும்பினால்... :-)
Peaceful Warrior
தினம் சில வரிகள் - 24
ஆர்லாண்டோ மேஜிக் கூடைப்பந்து அணியின் டிவைட் ஹொவர்ட் இன்றைய NBA-வில் Center ஆக ஆடுகிறவர்களில் மிகச் சிறந்தவர். இவ்வருடம் ஆர்லாண்டோ மேஜிக்கின் ப்ளேஆஃப்ஸ் முதல் ரவுண்டில் ஹொவர்ட் நிறைய foul trouble-களில் அவதிப்பட்டார். அதைவிட்டு வெளியே வர இப்படத்தைப் பார்த்ததாக அவர் சொல்லியிருந்தார். இப்படம் அவர் உள்ளமைதியை மீட்க உதவியதாக ஹொவர்ட் சொல்லியிருந்தார். அதனால் இப்படம் என் கவனம் பெற்றது. இணையத்தில் தேடியபோது டான் மில்மேன் எழுதிய அவரின் நிஜவாழ்க்கை குறித்த புத்தகத்திலிருந்து சினிமா வடிவம் பெற்றது என அறிந்தேன். நான் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆதலால் புத்தக வடிவம் சரியாக திரைபப்டமாக்கப் பட்டிருக்கிறதா என்று தெரியாது.
என் வீட்டில் ஒரு வளரும் விளையாட்டு வீரர் இருக்கிறார். அதனால் அவருக்கு இப்படம் உதவுமோ எனத் தோன்றியது. அவர் பார்ப்பதற்கு முன் நான் ஒருமுறை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் பரிந்துரைக்கலாம் என்று முதலில் பார்த்தேன்.
திரைப்படமாக இப்படம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, காட்சிகள் தாவித் தாவிச் செல்வது, நேரடியான அறிவுரைகள், சொல்லப்படுகிற அறிவுரைகளில் தென்படும் ஸ்டீரியோத்தன்மை, அறிவுரையைப் பெற்றுத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் போதாமை, குருவின் வேடத்தில் நடித்தவர் சிறப்பாகச் செய்யாமை, மெசேஜ் சொல்லும் படங்களின் அப்பட்டமான யதார்த்தமின்மை என்று அடுக்கலாம்.
ஆனாலும், உங்கள் வீட்டில் பதின்ம வயதில் விளையாட்டில் ஆர்வமுடைய, ஈடுபடுவதில் வெல்ல நினைக்கிற குழந்தைகள் இருக்குமானால், அவர்கள் ஒருமுறை இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். படுக்கையறை காட்சிகளும், குடிக்கும் காட்சிகளும் சில இடங்களில் வருகின்றன. படம் PG-13. ஆனால், அவை அப்பட்டமானவை எனச் சொல்ல இயலாது.இக்காட்சிகளை உங்கள் குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்றால், அக்காட்சிகள் வரும்போது அவற்றைத் தாண்டிச் செல்லும்படி பார்த்துக் கொள்ளவும்.
இப்படத்தில் வரும் வசன மேற்கோள்களை http://www.imdb.com/title/tt0438315/quotes> என்ற முகவரியில் தொகுத்திருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை நம் குழந்தைகள் ஏற்கனவே நம் மூலமோ, பள்ளியிலோ அறிந்தவைதான். இவற்றை நாம் சொல்லும்போது குழந்தைகளுக்கு அவற்றைக் கேட்பதில் ஓர் அலுப்பும்கூட வரலாம். ஆனால், திரைப்படமாகப் பார்க்கும்போது அவர்கள் மனதில் பதியும் வாய்ப்பு உருவாகலாம்.
என் குழந்தைகள் இனிமேல்தான் பார்க்கப் போகிறார்கள். பார்த்துவிட்டு ஏதும் சுவாரஸ்மாகச் சொன்னால் எழுதுகிறேன்.
பரிசோதனை முயற்சிகள்
தினம் சில வரிகள் - 23
1. மரத்தடி இணையக் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். ஒருநாள் பிற்பகல் ஓர் இணைய நண்பருடன் இணைய அரட்டை. அவர் நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். பொதுவாக அவர் அதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். நான் பெரிய அபிப்பிராயம் வைத்திராத ஓர் எழுத்தாளரைச் சொல்லி, அவரைப்போல நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். அதனால், உந்தப்பட்டு, அது ஒன்றும் கடினமில்லை. தேர்ந்த நகைச்சுவையாக எழுதுவதுதான் கடினம் என்றேன். ஜாலியாக என்னைச் சீண்டும்விதமாய் எழுதிப் பார்த்தால்தான் தெரியும் என்றார் நண்பர் . அவருடன் அரட்டையை முடித்துவிட்டு, ஒருமணி நேரத்தில் ஒரு பகடியை எழுதினேன். மரத்தடி உறுப்பினர்களை மையமாக வைத்த பகடி. மூன்று பிரிவுகளாக எழுதிய அதைப் பெரும்பாலோர் ரசித்தார்கள். சிலர் வருந்தினார்கள்.
2. அப்புறம் டிவிட்டரில் வந்ததும் வெண்பாம். பா.ராகவன் புண்ணியத்தில் எழுதலானேன். இலவசம் உள்ளிட்ட நண்பர்கள் எதிர்ப்பா எழுதினார்கள். அப்படி எழுதிய பல வெண்பாம்களை எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது வ.ஸ்ரீநிவாசன், பாரதிமணி உள்ளிட்ட நண்பர்களுக்கு அவற்றில் பிடித்தவை இருந்தன என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. வெண்பாமுக்கு முன்னோடி பா.ராகவன். அதனாலேயே வெண்பாம் எழுதுகிறவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.
3. டிவிட்டரில் ரைட்டர்பேயோன் என்ற பெயரில் ஓர் அன்பர் எழுதுகிறார். அவர் டிவிட்களைப் பலரும் பாராட்டுகின்றனர். எனக்கும் அவரின் பல டிவிட்கள் கவனத்தைக் கவரும் வண்னம் இருக்கின்றன. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் ரைட்டர்பேயோனைப் பாராட்டினார். இப்படி எழுதுவது சிரமமில்லை என்றேன். சிரமமும் சிரமமற்ற தன்மையும் ஒவ்வொருவரைப் பொருத்தும் வேறுபடக் கூடியது. ஆகையால் ஒருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றக்கூடியது இன்னொருவருக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஒருவருக்கு சிரமமாகத் தோன்றக் கூடியது இன்னொருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றலாம். மேலும், என் தன்னம்பிக்கை என் பலமும் பலவீனமும். என்னால் முடியாதவற்றையும் சிலநேரங்களில் முடியும் என்று நினைக்கக் கூடியவன். நண்பர் முய்ற்சியுங்களேன் பார்க்கலாம் என்று தூண்டிவிட்டார். அதனடிப்படையில் சிலவற்றைச் சிலநாட்களாக எழுதி வருகிறேன். இந்த மாதிரி எழுதுவதற்கு ரைட்டர்பேயோன் ஒரு முன்மாதிரி. அந்தப் பெருமை கண்டிப்பாக அவருக்கு உண்டு. ஆனாலும், அவர் காட்டிய வடிவ அடிப்படையில் என் சிந்தனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தான் ரைட்டர்பேயோனா என்று டிவிட்டரில் நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவர் இல்லை. என் தனிவட்டார நண்பர்கள் இப்படி நான் எழுதுவதில் பல டிவிட்கள் பிடித்திருக்கின்றன என்கிறார்கள். எனக்கும்கூட ஒரு கட்டுரையோ சிறுகதையோ ஆகக் கூடிய விஷயத்தை இப்படிச் சீக்கிரம் சுருக்கமாக 140 எழுத்துகளில் எழுதிவிடுவது 1. எழுதிவிட்ட திருப்தியைத் தருகிறது, 2. நேர நெருக்கடியில் உதவுகிறது. அதனால் எனக்கே சலிப்படிக்கும் வரையில் தொடர்ந்து எழுதலாம் என்றே நினைக்கிறேன். டிவிட்டரில் நானறியாத சிலர் கொஞ்சம் மேலேபோய் நான் ரைட்டர்பேயோனைக் காப்பியடிக்கிறேன் என்கிறார்கள். சுஜாதா போன பின்னும் அவர் நடையை விடாமல் தொடர்ந்து பிடித்து எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கு மாங்கு மாங்கென்று பாராட்டிப் பின்னூட்டம் விழும் வலையுலகிலிருந்து இந்த மாதிரி கருத்துகளைக் கேட்பதில் எனக்கு வருத்தமில்லை. மேலும் இதையே நான் ரைட்டர்பிசாசோன் என்ற பெயரில் எழுதியிருந்தால் இப்படிப் சொல்கிறவர்களேகூட பாராட்டக்கூடும். முகம் மறைத்துக் கொண்டு எழுதுகிறவர்களையும், பிரபலங்கள் பாராட்டுகிறவர்களையும் பாராட்டும் உளவியல் தமிழ் வலையுலகில் உண்டு என அறிவேன். ரைட்டர்பேயோனே மேற்குலகில் டிவிட்டரில் செய்வதைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். அதற்காக அவரைக் காப்பி என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கவிதை எழுதுகிற ஒருவரால் உந்தப்பட்டு கவிதை எழுதுகிற இன்னொருவரைக் காப்பியடிக்கிறார் என்று சொல்வதும்.
நான் மேற்சொன்ன மூன்றுமெ, நேரம் இருப்பின் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில் எனக்கிருக்கும் ஆர்வத்தை மட்டுமே காட்டுகின்றன. அந்தப் பரிசோதனை முயற்சிகளுக்கு என்னைத் தூண்டுகிறவர்களுக்கு நன்றிகள். எந்த எழுத்தாளரை முந்தியும் நகைச்சுவையோ, வெண்பாமோ, டிவிட்டோ எழுதிவிட வேண்டும் என்ற அணையாநெருப்பு எதுவும் என்னுள் எரிவதில்லை. ஒரு புத்தகம் போட்டதுமே எழுத்தாள ஆசை போய்விட்டது. அது என்னளவில் நான் நினைப்பதை மிகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் அணுகவும் சொல்லவும் உதவுகிறது.
இந்த மாதிரி பரிசோதனைகளில் ஈடுபடும்போது அதுகுறித்துப் பிறர் சொல்லக் கேட்கும் கருத்துகள் தமிழ் இணையச் சூழலின் உளவியலைப் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் உதவுகின்றன என்பது கூடுதல் பலனும்கூட.
Saturday, May 22, 2010
Punishing in Chess - Kavinayan Sivakumar
தினம் சில வரிகள் - 22
Thanks to ChessGurukul.com, the article can be read at the following link.
Punishing in Chess by Kavinayan Sivakumar at ChessGurukul.com
நாளைக்காக எழுதிய இன்றைய டிவிட்டுகள்
தினம் சில வரிகள் - 21
கூட்டங்களில் காலணி அறையைப் பார்க்கும்போது எது எந்தக் காலுக்குப் பொருந்தும் எனக் கற்பனை.
வீட்டருகில் வயலில் ஒரு மானைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். அதுவும் என்னைப் பார்த்தது. பின் சாவதானமாக பெண்ணைப்போல தலையைத் திருப்பிக் கொண்டது.
குடிக்கும்போதெல்லாம் நிறைய அமைதி கிடைக்கிறது. அமைதியாக உணரும்போதெல்லாம் அந்தப் பதட்டத்தில் இன்னும் குடிக்கத் தோன்றுகிறது.
நண்பர் பறவையியல் ஆர்வலர். அவர் தொடர்பால் பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். சிலநாட்களில் எனக்கு இறக்கைகள் முளைத்திருப்பதை அறிந்தேன்.
வாரக்கடைசியில் பெய்கிற மழை வாரவிடுமுறையில் செய்கிற அலுவலக வேலைபோல என்று வருணபகவானுக்குத் தெரியவில்லை.
பெரிய மார்பகங்களுக்கு ஆசைப்படும் மனநிலை கொண்ட தமிழன், பெரிய கட்டுரைகளைக் கண்டு கேலிசெய்யும் மனநிலை வினோதமானது.
டிவிட்டுவம்
தினம் சில வரிகள் - 20
கவிதை என்றாலே பிடிக்காமல் போகும் தருணம் காதலில் நம்பிக்கை போய் புணர்ச்சியில் நம்பிக்கையுடவராக மாறும் தருணம்.
என்ன வித்தியாசம்.தொலைகாட்சித் தொடரில் நடிப்பவர், பார்ப்பவர் இருவருமே அழுகிறார்கள். வலைப்பதிவில் வாசிப்பவர் மட்டும் அழுகிறார்.
டிவிட்டரை என் இலக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த முடிவெடுத்துவிட்டேன். மேற்குலகில் அதைத்தான் செய்கிறார்களாம்.
நாள் முழுக்கக் குழந்தைகளின் கர்நாடக சங்கீதக் கச்சேரி. கேட்டபோது புரிந்தமாதிரி இருந்தது. வெளிவந்தவுடன் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கிறது.
சங்கீதக் கச்சேரியில் நிகழ்ச்சி அறிவிப்பாளரின் அறிவிப்புப் பேச்சு என்ன ராகம் என்று கேட்டால் பக்கத்து இருக்கைக்காரர் ஏன் முறைக்கிறார்.
கச்சேரிக்கு வரும் இளவயது மாமிகளின் சேலைகளெங்கும் சங்கீதத் துகள்கள் பூத்திருக்கின்றன.
கச்சேரிக்கு இடையில் ஒலியின் அளவைக் கூட்டிக் குறைத்து வெறுப்பேற்றும் ஒலியமைப்பாளரை அடுத்தபடியாக மேடையேற்றிப் பாடச் சொல்ல வேண்டும்.
சில டிவிட்டுகள்
தினம் சில வரிகள் - 19
உயிரெழுத்துகளை அறியத் தொடங்கும்போது தமிழ் எழுத்தாளன் ஜனிக்கிறான். தங்கிலீஸ் தெரியவரும்போது அவன் பத்திரிகையாளனாக உருமாறுகிறான்.
மருந்தே போதையாகும் வஸ்துகளுக்கு இரண்டு உதாரணங்கள்: டிவிட்டர், வலைப்பதிவுகள்
நேர்க்கோடாய் ஒழுங்கினைத் தொடரும் மனிதர்கள் எறும்பாகிறார்கள். சுருக்குவழியில் முந்துவோர் அரசியல்வாதியாகவோ ஆட்டோ ஓட்டுநராகவோ ஆகிறார்கள்.
உடற்பயிற்சிக்காக வெயிலில் வியர்வையோடு ஓடிக் கொண்டிருந்தவரை, காரில் ஏசி ஓடப்பார்த்துப் பரிதாபப்பட்டேன். என் தொப்பையை அவரால் பார்க்க முடியாது.
டிவிட்டரில் Profound ஆக எழுத.தெரிந்த காட்சிகளையும்,இல்லையென்றால் பழமொழியையும்,மாற்றிப்போட்டு, கொஞ்சம் கவிதைத்தொனியைச் சேர்க்க வேண்டும்.
Tuesday, May 18, 2010
இன்றைய தமிழ்த் திரைப்பாடல்களில் கண்ணதாசன் தாக்கம் இருக்கிறதா?
தினம் சில வரிகள் - 18
மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் ஒரே கல்லூரியில் அதே வருடங்களில் இருவேறு முக்கியப் பாடங்களில் (மேஜர்) இளங்கலை பட்டப்படிப்புப் படித்தவர்கள். அவர் தின்ம் வீட்டிலிருந்து கல்லூரி வருபவர் (டே ஸ்காலர்). நான் விடுதியில் வாழ்ந்தவன் (ஹாஸ்டலர்). அவருடைய வகுப்பில் படித்த நண்பர் இரண்டாம் ஆண்டில் விடுதியில் என் அறைத் தோழர். ஆனால், அப்போதும் முத்தையாவை எனக்குத் தெரியாது. மூன்றாம் ஆண்டில் முத்தையா வகுப்பிலிருந்து கல்லூரி மாணவர் தலைவர் (சேர்மன்) பதவிக்கு ஒருவர் போட்டியிட்டார். அவரை என் நண்பர்களும் நானும் ஆதரித்தோம். அப்போது அந்த வேட்பாள நண்பருக்கு “ராஜகுரு” ரோலில் ஒருவரைப் பார்த்தேன். அவர்தான் முத்தையா. வாக்களிப்புக்கு முன் வேட்பாளர்கள் பேசவேண்டிய முக்கியமான பேச்சை முத்தையா எழுதித் தந்தார். “நீங்கள் நடக்கும் பாதையில் ரோஜா இதழ்களைத் தூவாவிட்டாலும், அங்கிருக்கும் முட்களை நீக்குவேன் என உறுதியளிக்கிறேன்” என்ற மாதிரியான கல்லூரி மாணவ,மாணவிகளைக் கவரும் பஞ்ச், கவிதை வரிகள் ஆகியன கொண்டிருந்தது அந்தப் பேச்சு. இப்படியாக,அத்தேர்தலில் முத்தையா எனக்கு அறிமுகமானார். நான் கல்லூரி சார்பாகப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. அதையறிந்த முத்தையா கோவை கம்பன் கழகம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தலைப்பைப் போட்டிக்கு ஐந்து நிமிடம் முன்னர்தான் தருவார்கள். உடனடியாகப் பேச்சைத் தயார் செய்து, உடனடியாகப் பேச வேண்டும். “கம்பனில் தெரிவது சமூக உணர்வா,...” என்ற மாதிரி இன்னும் இரண்டு உணர்வுகளைச் சேர்த்துக் கொடுத்து, பேசுபவர் ஏதேனும் ஓர் உணர்வை ஆதரித்துப் பேசவேண்டும் என்று தலைப்பு கொடுத்தார்கள். கம்பனில் தெரிவது சமூக உணர்வு என்று எதையோ பேசி மூன்றாம் பரிசு வாங்கினேன். நன்றாகப் பேசுகிறீர்கள், கம்பன் கழகக் குழுவினருடன் அறிமுகம் செய்கிறேன், மேடைகளில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்றார் முத்தையா. சரி என்று தலையாட்டிவிட்டு அப்புறம் அதைக் கல்லூரி வாழ்க்கை தரும் பிற சந்தோஷங்களில் மறந்துபோனேன். அந்த ஆண்டு மாணவர் தேர்தலில் நாங்கள் ஆதரித்த நண்பர் வென்றதால், கல்லூரி ஆண்டுமலருக்கு முத்தையா பொறுப்பாளராக இருந்தார். அவர் என்னிடம் கேட்டு வாங்கி என்னுடைய புகைப்படத்தைக் கல்லூரி சார்பாகப் போட்டிகளில் பங்கெடுப்போர் புகைப்படங்களுடன் இணைத்துப் போட்டார். அப்போது கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கு என்று சிந்தனை மன்றம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அதில் தட்ட்சச்சு செய்து பின்னர் அதில் சைக்ளோஸ்டைல் செய்து பிரதியெடுக்கும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தோம். குயிலிசையோ என்னவோ பெயர். தட்டச்சு உதவிகள் செய்கிற நண்பர் இந்தப் பெயர் வைத்தால்தான் உதவி செய்வேன் என்று சொன்னதால் அவர் சொன்ன பெயரை வைத்துவிட்டோம். அதற்காக உள்ளுக்கு வெளியே என்று ஒரு சிறுகதை எழுதினேன். அதில் பெண் கதாபாத்திரத்தை அது, இது என்று விளிக்கிற மாதிரி வாக்கியங்கள் வந்தன. பொறுப்பாளராக இருந்த தமிழாசிரியர் உயர்திணைக்கு அஃறிணைச் சொல் போடக்கூடாது. திருத்திக் கொடு, பிரசுரிக்கலாம் என்றார். ஐயா, அது உறவின் நெருக்கத்தில் சொல்வதாக எழுதியது. இப்படி எழுதினால்தான் இயல்பாக இருக்கிறது என்று சொன்னதைக் கேட்கவில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே வைத்திருந்தேன். இதைக் கேள்விப்ப்ட்ட முத்தையா, அவர் பிரசுரிக்க மறுத்தால் என்ன, கொடுங்கள், கல்லூரி மலரிலேயே போட்டுவிடலாம் என்று அந்தக் கதையையும், அந்தக் காலத்தில் அச்சுபிச்சென்று எழுதிய காதல் கவிதையொன்றையும் கல்லூரி மலரில் பிரசுரித்தார். காலப்போக்கில் இடப்பெயர்ச்சிகளில் அக்கல்லூரி மலர் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. இளங்கலைப் படிப்பை முடித்தபிறகு முத்தையாவிடம் தொடர்பு விட்டுப் போனது. அவ்வப்போது பத்திரிகைகளில் மரபின் மைந்தன் முத்தையா என்று படித்தபோது, இவர் நம்முடன் படித்தவராயிற்றே என்று நினைத்துக் கொள்வேன். ஜெயமோகன் மூலம் இயக்குநர் சுகா அறிமுகமாகி நல்ல நண்பரானபோது, ”எனக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் வைத்தது மரபின் மைந்தன் முத்தையாதான், அவர் எனக்கு உறவுமுறை” என்றாரே பார்க்கலாம். அடடே, அவரை எனக்கு நன்றாகத் தெரியுமே என்றேன். முத்தையாவுக்கு கவிதை, பேச்சு, இலக்கியம், நடிப்பு ஆகியவற்றோடு கல்யாண புரோக்கர் என்ற முகமும் இருப்பது அப்போது தெரிய வந்தது. எதில் நுழைந்தாலும் பேரை நாட்டிவிடும் திறமையும் மிக்கவர் அவர். 2008-ல் இந்தியா சென்றபோது பலவருடங்களுக்குப் பின் அவரை நேரில் சந்தித்தேன்.
முத்தையாவுக்கு கண்ணதாசனும் வைரமுத்துவும் மிகவும் பிடித்தமான கவிஞர்கள். அவர் வலைப்பதிவில் “இப்படித்தான் ஆரம்பம்” என்ற தலைப்பில் கண்ணதாசன் குறித்த தன் மனப்பதிவுகளைத் தொடராக எழுதி வருகிறார். பலரும் பாராட்டுகிற, விரும்பிப் படிக்கிற தொடர் அது. அத்தொடரைப் பாராட்டி “எழுத்தும் எண்ணமும்” குழுமத்தில் முத்தையாவுக்கு எழுதிய மடலில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் பின்வருமாறு குறிப்பிட்டார். “இன்றைய தமிழ் சினிமா கலைஞரின் வசனத்தைத் தாண்டி வந்து விட்டது. சிவாஜி
கணேசனின் நடிப்புப் பாணியைத் தாண்டி வந்து விட்டது. பீம்சிங்,பாலசந்தரின் இயக்கமுறைகளைத் தாண்டி வந்து விட்டது ஆனால், தமிழ்சினிமாப்பாடல்கள் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக் குறிப்புகளாகவே உள்ளன என்பது கண்ணதாசனின் மேதைமைக்கு ஒரு சான்று.”
கண்ணதாசனிடம் மரபின் நீட்சி இருந்தது. அவர் நவீனம் மரபின் மீது ஏறி நின்று வளர்ந்த நவீனம். உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் மாதிரி. 90க்கு அப்புறம் திரைப்பாடல்களில் நவீனம் இருக்கிறது. ஆனால் அவற்றில் மரபின் நீட்சி இல்லை. இருக்கிறதெனில் தெரிந்தவர்கள் சொல்லலாம். 90க்கு அப்புறமான திரைப்பாடல்கள் உதாரணத்துக்கு சுந்தர ராமசாமி எழுத்துகள் போன்றவை. நவீனமானவை. அவற்றில் மரபின் அடையாளமே இருக்காது. அந்தவகையில், அப்பாடல்கள், கண்ணதாசனின் நீட்சி இல்லை. அதனால், தமிழ் சினிமாப்பாடல்கள் இன்னும் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புகளாகவே உள்ளன என்பது சரியா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.
இரண்டாவதாக, எம்.எஸ்.வி, இளையராஜா இசைக்கு எழுதிய கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் இசைக்கருவிகளும் வாத்தியங்களும் ஆட்சிபுரிந்து வார்த்தைகள் பின் தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோர் இசைக்கு எவ்விதமான பாடல்கள் எழுதியிருப்பார் என்ற கற்பனையும் ஓடுகிறது. அப்படிப்பட்ட இசை அவருக்கு இசைந்ததாக இருந்திருக்குமா என்ற கேள்வியும் பிறக்கிறது.
ஆர்லேண்டோ மேஜிக் Vs பாஸ்டன் செல்டிக்ஸ்
தினம் சில வரிகள் - 17
இத்தொடரின் இரண்டாம் ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதி நடந்து கொண்டிருக்கும்போது இதை எழுதுகிறேன்.
மேஜிக் அணி ஆறு ஆட்டங்களில் செல்டிக்ஸை வெல்லும் என தொடர் தொடங்கும்முன் நினைத்தேன். செல்டிக்ஸ் அணி ஆடுகிறவிதத்தைப் பார்த்தால் அதற்கு எதிர்மாறாக அது ஆறு ஆட்டங்களில் வெல்லலாம் எனத் தோன்றுகிறது. க்ளீவ்லாண்ட் கவாலியர்ஸ் அணியை வென்றதில் இருந்து செல்டிக்ஸ் அணியின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. மேஜிக்குடனான இப்போது நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் ஆட்டம் வரை செல்டிக்ஸ்ஸின் கையே மேலோங்கியுள்ளது. முதல் ஆட்டத்தைவிட மேஜிக் அணி இரண்டாம் ஆட்டத்தில் முன்னேற்றம் காட்டுகிறது என்றாலும் வெல்வதற்கு இது போதுமா எனத் தெரியவில்லை. மேஜிக் அணியின் கோச் ஸ்டேன் வான் கண்டி திறமையான கோச் என்று பெயரெடுத்தவர். அவருடைய இளைய சகோதரரும், நெடுங்காலம் நியூயார்க் நிக்ஸ் அணியின் கோச்சாக இருந்தவரும், பின்னர் ஹூஸ்டன் ராக்கெட்ஸ் கோச்சாக இருந்து இப்போது NBA கூடைப்பந்து ஆட்டங்களின் வர்ணனையாளராக இருக்கிற ஜெப் வான் கண்டி தன்னைவிட தன் சகோதரர் திறமையானவர் என்று சொல்லி அவருக்கு தன் முந்தைய ஹெட்கோச் பேட் ரெய்லியிடம் அஸிஸ்டெண்ட் கோச் வேலை வாங்கித் தந்தார். பின்னர் ஸ்டேன் ஹீட் அணிக்குக் கோச்சாக இருந்து இப்போது மேஜிக் அணிக்குக் கோச்சாக இருக்கிறார். ஸ்டேன் கோச் செய்யும் அணிகளில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவருபவர். இவர் ஒரு பர்பக்ஷனிஸ்டும் கூட. எப்போதும் கொஞ்சம் டென்ஷனுடன் இருப்பவர். தன்னுடைய அணி மிகவும் சுலபமாக ஜெயித்த ஆட்டங்களில்கூட ”இன்னும் நன்றாக ஆட வேண்டும், இந்தத் தவறுகளைக் களைய வேண்டும்” என்று சொல்கிறவர். ஆகையால் ஸ்டேன் வான் கண்டி மேஜிக் அணி சார்பாக ஆட்டமுறையில் நிறைய சிறுசிறு மாறுதல்களை (அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்) கொண்டுவருவார். செல்டிக்ஸ் அணியின் கோச் டாக் ரிவர்ஸ்-ஐ விட இவர் திறமையான கோச்தான். ஆனாலும் வின்ஸ் கார்ட்டரும், ரஷார்ட் லுயிஸும் இதுவரை இத்தொடரில் சரியாக ஆடவில்லை. அவர்கள் டிவைட் ஹொவர்டுக்குக் கைகொடுக்காமல் மேஜிக் அணி இத்தொடரில் வெல்ல வாய்ப்பில்லை. மேஜிக் அணி இதுவரை த்ரீ பாயிண்டர்களும் சரியாகப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், செல்டிக்ஸ் அணியில் ராண்டொ, கார்னெட்,பியர்ஸ், ரே ஆலன் என்ற நான்கு முக்கிய ஆட்டக்காரர்கள் மட்டுமில்லாமல் உதவி ஆட்டக்காரர்களும் (ரோல் ப்ளேயர்ஸ்) இத்தொடரில் இதுவரை நன்றாக ஆடுகிறார்கள். இவர்களில் யார் ஜெயித்தாலும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்க்கு ஈடுகொடுப்பார்களா என்பது இன்னொரு நாளுக்கான பதிவாக வேண்டிய விஷயம்.
Sunday, May 16, 2010
விசிலடிச்சான் குஞ்சுவாக இருக்க விருப்பம்
தினம் சில வரிகள் - 16
நான் வருடத்துக்குக் குறைந்த பட்சம் 30லிருந்து அதிகபட்சம் 60 ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கிறேன். இவற்றுள் பிறமொழிப் படங்களாக இருந்து ஆங்கில உதவிஎழுத்துடன் (சப்-டைட்டில்) ஓடுகிற படங்களும் அடங்கும். ப்ளாக்பஸ்டர் புண்ணியத்தில் வீட்டில் இருந்தபடி பார்க்கிற படங்களே பெரும்பாலும். என்னைத் தியேட்டருக்கு இழுத்துச் செல்ல அவதார் போன்ற படங்கள் வரவேண்டும், குழந்தைகள் படமாக இருக்க வேண்டும், அல்லது குடும்பத்தினர் ஊருக்குப் போயிருக்க வேண்டும்.
பார்த்தவுடன் அவற்றுக்கு IMDB இணையதளத்தில் மதிப்பெண் கொடுத்து விடுவேன். நான் பார்த்த படங்களின் பட்டியலை வைத்திருக்கவும் இது உதவுகிறது. என்னுடைய voting history எடுத்துப் பார்க்கும்போது அந்தந்த நேரத்து மனநிலைக்கு ஏற்ப மதிப்பெண்களைச் சிறிது கூட்டியோ குறைத்தோ இருக்கிறேன் என்று தெரிகிறது. மேலும் IMDB இணையதளத்தில் வாக்களிக்கும்போது முழு எண்களாக மட்டுமே வாக்களிக்க முடியும். 6, 7, 8 என்று. தசம எண்களாக 6.5, 7.75 என்பதுபோல வாக்களிக்க இயலாது. ஆதலால் பெரும்பாலும் என் மதிப்பெண்ணை அடுத்த முழுஎண்ணுக்குத் தாராளமாக round off செய்துவிடுவேன். கலைப்படம், வணிகப்படம் என்ற பாரபட்சமும் எனக்குக் கிடைக்காது. படம் எனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்ற ரசனையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுகிறேன்.
சிலவருடங்கள் முன்பு “எழுத்தும் எண்ணமும்” இணையதளத்தில் இப்படிப் பார்க்கிற படங்கள் பற்றிச் சிலவரிகள் எழுதுவேன். அப்புறம் அதுவும் விட்டுப் போயிற்று. நண்பர்கள் பார்க்கிற படங்களைப் பற்றியும், படிக்கிற புத்தகங்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அலுவல் தொடர்பான புத்தகங்களையே இப்போது அதிகம் படிக்கிறேன். என்னைவிட நன்றாக எழுதுகிறவர்கள் எழுதி, அவை அமேசான்.காமில் அமோகமாக விற்கின்றன. அதனால் அந்தச் சக்கரத்தைத் திரும்பக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவமும் இல்லை, விருப்பமும் இல்லை.
திரைப்படங்கள் பற்றி எழுதுவதற்குக் கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது.
1. திரைப்படங்கள் பற்றித் தொடர்ந்து நிஜமான ஆர்வத்துடன் எழுதுகிறவர்கள் இங்கே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன், பிச்சைப்பாத்திரம் பதிவு சுரேஷ் கண்ணன் ஆகியோர் உடனே நினைவுக்கு வருகிறார்கள். இதில் சுரேஷ் கண்ணன் விமர்சனங்களைச் சிலர் டெம்ப்ளேட் விமர்சனங்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை வாசிப்பதிலும், திரைப்படம் பார்ப்பதிலும், விமர்சனம் குறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதிலும் அவர் காட்டுகிற ஊக்கம் பாராட்டுக்குரியது. எழுதிப் பார்த்தால்தான் டெம்ப்ளேட் விமர்சனம்கூட பலருக்கு எழுத வரவில்லை என்பது தெரியும்.
2. அடிப்படையில் பொழுதுபோகவும்,ரசனை சார்ந்தும் நான் படம் பார்க்கிறேன். அவற்றைக் கட்டுரையாக விரிப்பது படம் குறித்த சார்பற்ற பார்வையைத் தருமா என்ற கேள்வி இருக்கிறது.
3. நான் உலக திரைப்படங்களில் நிபுணன் இல்லை. நண்பர்கள் இங்கே குறும்பட விழாக்களை நடத்தியபோது, அதில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மட்டுமே உண்டு.
4. இரண்டு மூன்று உலகத் திரைப்படங்களைத் திருட்டு டிவிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்டு அதில் நிபுணர்கள் மாதிரி எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். வலைப்பதிவில் வாசகர்கள் இப்படி எழுதுகிறவர்களைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். அதனால், எனக்கு இப்படங்களில் உண்மையான ஆர்வம் உண்டு என்பதைச் சொல்வதற்கும்கூட கூச்சமாக இருக்கிறது. நாமும் அந்தப் பட்டியலில் அடங்கிவிடுவோமா என்று. இமேஜ் பார்க்கிறாயா என்று கேட்கிறீர்களா? இது இமேஜ் தொடர்பான விஷயம் இல்லை. ஜெயமோகனின் நினைவின் நதியில் புத்தகத்தில் என்று நினைக்கிறேன். சு.ரா.வின் சில உண்மையான உணர்வுகளை - அவ்வுணர்வுகள் சமூகத்தில் பிறரால் கோஷமாக முன்னெடுக்கப்பட்டபின் - அவர் வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கினார் என்று எழுதியிருப்பார். அந்த மாதிரி விஷயம் இது.
5. புத்தகங்களுக்கு வாசக அனுபவத்தை எழுதுவதைவிட, திரைப்படத்துக்கு எழுதுவது சவாலான விஷயம். புத்தகம் எனில் உள்ளடக்கம் ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால் போதும். திரைப்படத்தில், முதலில், கதையையும் சொல்லவேண்டும், spoilerம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்புறம் திரைக்கதை,ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்ப உள்ளிட்ட திரைப்படத்தின் முக்கிய பகுதிகள் குறித்து நிபுணத்துவம் இல்லையென்றாலும் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், ஒரு படத்தில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற் ஓரிரு வரிகளாவது எழுத முடியும். இவற்றில் பலவற்றின் அடிப்படை அறிவுகூட எனக்கு இல்லை.
6. திரைப்படம் குறித்து எழுதி, அறிவை வளர்த்துக் கொண்டு, திரைத்துறையில் இறங்கும் ஆசை எதுவும் எனக்கு இதுவரை இல்லை. திரைத்துறையில் இருக்கிற என் நண்பர்கள் பிரபலம் ஆக ஆக, அவர்களுடனான நெருக்கத்தை நான் விரும்பியே குறைத்துக் கொண்டு, தூர நின்று அவர்களின் வளர்ச்சியையும் வெற்றியையும் வேடிக்கை பார்த்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஆனாலும், திரைப்படம் பார்த்து முடித்தபின் என்னுடைய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நான் அதற்குக் கொடுக்கிற் மதிப்பெண்ணைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அதோடு ஒரு சிறு பத்தியாவது சேர்த்து எழுதி இனி வலைப்பதிவில் இடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இயன்றவரை இதைச் செய்யப் பார்க்கிறேன்.
செக்ஸ் அண்ட் லூசியா
தினம் சில வரிகள் - 15
பதிவர் பட்டர்ப்ளை சூர்யா ஏற்கனவே இப்படம் பற்றிப் பதிவில் எழுதியிருக்கிறார். IMDB இணையதளத்திலும், உலக சினிமா ஆர்வலர்களிடமும் செக்ஸும் நிர்வாணமும் தூக்கலாக இருக்கிற படங்களைச் சாதகமாக மதிப்பிடுகிற சாய்வு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பதில் விருப்பமில்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். அக்காட்சிகளுடன் கூடிய படத்தை மதிப்பிட, பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்வது என் வழக்கம். 1. திரைக்கதைக்கு அக்காட்சிகள் எவ்வளவு தேவையாக இருக்கின்றன. 2. அக்காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தை மனதில் ஓட்டினால் படத்தைக் குறித்த மதிப்பீடு என்னவாக இருக்கும்? இக்கேள்விகளுக்குப் பதில் தேடும்போது இத்தகைய காட்சிகளைக் கொண்ட படத்துக்கு முதல் மதிப்பீட்டில் மனச்சாய்வில் பத்துக்கு ஒன்றிரண்டு மதிப்பெண்கள் கூடுதலாகத் தருகிறேனோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆதலால், படத்தைப் பார்த்து முடித்ததும், மனதில் தோன்றுகிற மதிப்பெண்ணில் இருந்து, குறைத்தே இம்மாதிரிப் படங்களை நான் மதிப்பிடுகிறேன். செக்ஸ் மற்றும் நிர்வாணக் காட்சிகள்தான் நோக்கமெனில், அவற்றை உரித்து உரித்துத் தருவதென்ற்கென்றே பல சிறந்த இணையதளங்கள் உள்ளன. ஆதலால், செக்ஸை வைத்துப் படத்தின் இயக்குநர் என்னை ஏமாற்றிவிட முடியாது. செக்ஸ் இருக்கிற படத்தை ரசித்துப் பார்ப்பேன். மதிப்பிடும்போது சரியாக மதிப்பிட முயல்வேன். அரசியல்வாதிகள் கொடுக்கிற காசை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நமக்குப் பிடித்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே. அதுமாதிரிதான் இதுவும். இப்படத்துக்கு நான் பத்துக்கு ஆறு மதிப்பெண்கள் கொடுத்தேன்.
Friday, May 14, 2010
தினம் சில வரிகள் - 14
இன்று டிவிட்டரில் ரைட்டர்பேயோன் என்ற பெயரில் இருக்கும் அன்பருடன் டிவிட்டரில் ஓர் சிறு உரையாடல். அவர் டிவிட்டுகள் புத்தகமாக வந்திருக்கின்றன என படித்தேன். வாழ்த்துகள். அவர் யாரென்று எனக்குத் தெரியாது. இணையத்தில் எந்தப் பெயரில் எழுதுகிறவர் யாரென்று அறிந்து கொள்கிற ஆர்வம் இப்போது பெருமளவு எனக்குக் குறைந்துவிட்டது. ஆதலால், அவர் யாரென்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவரிடமே கேட்கவும். உரையாடல் வானம்பாடி இயக்கத்தில் தொடங்கி டிவிட்டரில் எழுதுவது இலக்கியமா என்பதில் வந்தது. ”டிவிட் ஒரு புதிய தனித்துவ இலக்கிய வடிவம், இலக்கிய வடிவங்கள் காலப்போக்கில் உருவாகின்றன” என்றார் அவர். இலக்கிய வடிவங்கள் காலப்போக்கில் உருவாகின்றன என்பது எனக்கும் ஏற்புடையதே. புதுக்கவிதை அப்படி வந்ததுதானே.
டிவிட் இலக்கிய வடிவமா என்பதுதான் பற்றி எனக்குக் கேள்வி எழுகிறது. இது குறித்து உரத்துச் சிந்திக்க டிவிட்டரைவிட வலைப்பதிவு மேலென்பதால் இங்கே எழுதுகிறேன். டிவிட்டரேச்சர் என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா என்றெல்லாம் ரைட்டர்பேயோன் கேட்டார். 20 டிவிட்களில் நான் இராமாயணத்தையோ,மகாபாரதத்தையோ சொல்லிவிட்டால் அது இலக்கியம் ஆகிவிடுமா? 2000 பக்கங்களில் சிலர் சொல்லியும் அது இலக்கியம் ஆகவில்லையே. சோஷியல் நெட்வொர்க்கிங் இணைய வடிவங்களில் வலைப்பதிவு பல இலக்கிய வடிவங்களைச் செயல்படுத்தும் கருவியாக உள்ளது. ஆனாலும் வலைப்பதிவு இலக்கிய வடிவம் என்று பலரும் அவற்றை வகைப்படுத்துவதில்லை.வலைப்பதிவில் வந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்றே தனித்தனியாகத் தொகுக்கிறார்கள். அவை இலக்கியம் ஆகுமா என்பது வேறு கேள்வி. ஆகும், ஆகாமல் போகலாம். அப்படி டிவிட்டரில் என்ன எழுதலாம்? 140 எழுத்துகளுக்குள் குறும்பா, குறள், புதுக்கவிதை, சிறுகதை,உரைநடை என இலக்கிய வடிவங்களைக் கொணரலாம். அப்போதும் அவை அவற்றின் மூலப் பெயர்களைக் கொண்டிருக்குமா (குறும்பா, குறள், புதுக்கதை, உரைநடை, சிறுசிறுகதை) அல்லது டிவிட்டிலக்கியம் எனப்படுமா என்பது இன்னொரு கேள்வி.ஒப்பிட்டு பார்க்கும்போது இணைய இதழ்கள், வலைப்பதிவு, டிவிட்டர் ஆகியன ஒப்பீட்டளவில் ஊடகங்கள். உதாரணத்துக்கு, செய்தித்தாள்,வார இதழ், மாத இதழ் போன்றவை. அவற்றின் பெயரில் இலக்கிய வடிவம் என்று அழைக்க ஆரம்பித்தால், செய்தித்தாள் இலக்கிய வடிவம், வார இதழ் இலக்கிய வடிவம், மாத இதழ் இலக்கிய வடிவம் என்று சொல்லியிருப்போம். அப்படி நாம் சொன்னதில்லை. ஊடகம் எதுவாக இருப்பினும் வடிவமென்பது ஊடகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. அப்படித்தான் டிவிட்டர் ஊடகத்தில் எழுதுவதையும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஆதலால், டிவிட் ஓர் இலக்கிய வடிவம் என்கிற கருத்து எனக்கு இப்போது ஏற்புடையதில்லை. டிவிட்டர் ஓர் இலக்கிய ஊடகம் என்று சொல்லலாம். அதில் வருகிற டிவிட்கள் பல இலக்கிய வடிவங்களைக் கொண்டிருக்கலாம். (கதை,கவிதை,உரைநடை).அனைத்தையும் டிவிட் என்ற பொதுவடிவின் கீழ் அடக்குவதும் சரியாக இருக்காது.
என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன். அம்மாற்றுக் கருத்துகள் கன்வின்ஸிங்காக இருக்கும் பட்சத்தில் என் கருத்துகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
தினம் சில வரிகள் - 13
சாமியார்கள் மீது எனக்குப் பெரும் அவநம்பிக்கை. அதை அடிக்கடி மெய்ப்பிக்க அவர்களும் தயங்குவதில்லை. என் ஆன்மீகத் தேடலுக்கு வாழ்க்கையும், தமிழின் பக்தி இலக்கியமும் உதவுகிற அளவுக்கு எந்தச் சாமியாரும் உதவ முடியுமா என்ற சந்தேகம் இருப்பதும் ஒரு காரணம். மூன்றாவதாக, குரு என்று சொல்லிக் கொள்கிறவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லித் தந்திருக்கிறார். இவற்றை மீறி நான் மதிக்கிற மற்றும் சந்திக்காமல் போய்விட்டேனே என்று நினைக்கிற சாமியார்கள் சிலரும் உண்டு. என் எழுத்தில் அப்படி யாரையும் பரிந்துரைக்கப் போவதில்லை. அப்படி யாரையும் பரிந்துரைத்தால் வெகுவிரைவிலேயே I have to eat my own words என்ற பயம் இருக்கிறது. அதனால் இப்பதிவில் நான் சொல்வதை என் தனியனுபவமாக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்திக்கிற ஆர்வம் இதுவரை வரவில்லை. இத்தனைக்கும் Guru of Joy என்கிற இவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். ஸ்ரீஸ்ரீயின் ஆர்ட் ஆஃப் லிவிங்கில் சுதர்சன் க்ரியா உள்ளிட்ட பயிற்சிகளை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பயிற்சிகளை யோகா,தியானம், சுவாசப் பயிற்சிகள் வகையிலேயே அடக்குவேன். அப்பயிற்சிகள் என் உடல்,மன நலனுக்கு மிகவும் உதவுகின்றன என்று நிச்சயம் சொல்வென். இன்னும் சில வகுப்புகளுக்கு அவை குறித்துக் கற்கும் ஆர்வத்தில் செல்வதுண்டு. அப்படிச் சமீபத்தில் அவருடைய அஷ்டவக்ர கீதா வகுப்புகளுக்குச் செல்கிறேன். அஷ்டவக்ர கீதா குறித்து அவர் பேசிய உரைகளைகளின் காட்சிப் பதிவை 11 வாரங்களாக பார்த்துப் பின் அதுகுறித்து உடன் பார்வையிடுவோருடன் கலந்துரையாடும் நிகழ்வு. ஏறக்குறைய இரண்டு வகுப்புகள் முடிந்துள்ளன. அடுத்துப் பதஞ்சலி யோகம் வகுப்புக்குப் போகலாமா என யோசனை.
அஷ்டவக்ர கீதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்திலேயே பலர் எழுதிக் கிடைக்கிறது. Bart Marshall என்றவரின் மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது. ஆங்கிலத்தில் அதைப் படிக்கும்போது அதில் தெரிகிற கவிதையுணர்வு,மொழியின் அழகு ஆகியன ஸ்ரீஸ்ரீயின் பேச்சில் இல்லை. மேலும், தத்துவத்தை விளக்குவதை இரண்டாகப் பிரிக்கலாம். வெகுஜனங்களுக்குப் புரியும்வகையில் மேலோட்டமாக, நகைச்சுவைத் துணுக்குகள் சேர்த்து விளக்குவது. ஆழ்ந்து கற்க விரும்புவோருக்காக உள்ளே சென்று விளக்குவது. ஸ்ரீஸ்ரீ உள்ளிட்ட எனக்குத் தெரிந்த சில சாமியார்கள் வெகுஜனங்களுக்குப் புரியும்வகையில் விளக்குகிற விதத்தைக் கையாளுகிறார்கள். ஆகையால், இவ்வகுப்புகளில் எனக்கு எளிய பொழிப்புரை தவிர பெரிதாக ஒன்றிரண்டு கிடைத்தால் பெரிய விஷயமாக இருக்கிறது. என்னின் இக்கருத்து பற்றியல்ல நான் பேச வருவது. ஸ்ரீஸ்ரீ போன்றவர்கள் இப்படி எளிமையாகப் பேசுவதன் மூலம் அவர்கள் கேட்போரிடம் கனெக்ட் ஆகிறார்கள், விஷயத்தை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைக் கேட்போர் சொல்லத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். எனக்குப் புரிகிற மாதிரி சொன்னார், என்னால் அவர் சொல்வதோடு ஒத்துப் போக முடிகிறது, அவர் சொல்கிற மாதிரி உதாரணம் எனக்கும் தெரியும் என்ற வகையில் பார்வையாளர்கள் உண்மையாகவே பேசுகிறார்கள்.
ஸ்ரீஸ்ரீயின் பலம் எதுவென்றால், மிகவும் நிதானமாகப் பேசுகிறார். கருத்தைச் சொல்ல அவசரமே படுவதில்லை. எப்போதும் சிரித்த முகம். சாதாரணமான விஷயங்களைக் கூட கேட்பவர் நகைச்சுவை என்று நினைத்துச் சிரிக்கிற் மாதிரி சொல்கிற டெலிவரி. இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும், நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறவர்களும் எளிமையுடன் சொல்லவந்ததை எப்படி pleasant ஆகச்சொல்வது என்று இப்படிப்பட்ட கார்பரேட் சாமியார்களிடம் கற்றுக் கொள்ளலாம்.
அடுத்ததாக,இணையத்தில் எழுதுகிற சுவாமி இவர். இவர் எழுதுகிற எல்லாப் பதிவுகளையும் நான் படித்ததில்லை. சோதிடம் குறித்த பதிவுகள் பக்கம் போவதில்லை. நம்பிக்கையின்மையினால் மட்டும் அல்ல. அவற்றைப் பொறுமையாகப் படித்துக் கற்க நேரமில்லாத வாழ்க்கை என்னுடையது. யாரும் நேரடி வகுப்பெடுத்தால் சோதிடம் கற்றுக் கொள்ள ஆசைதான். இவர் பின்னூட்டங்களில் பதில் சொல்கிற விதத்தில் முதலில் என்னைக் கவனிக்க வைத்தார். யார் எவ்வளவு உசுப்பேற்றினாலும், கிண்டல் செய்தாலும் நிதானமும் பண்பும் முதிர்ச்சியும் அடக்கமும் தவறாது பதிலளிக்கிறார். இவையெல்லாம் வெளிவேடங்களாக இருந்தால் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்திருக்கிறது. எவ்வளவு நாள் ஒருவர் இப்படி நடிக்க முடியும் என்று சொல்லிக் கொள்வேன். நான் படித்தவரை அதே நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்கிறார். அறிவியல் வளர்ச்சி, நவீன உலகம் என்று காலத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடைய சாமியார்கள் மீது, they have sense of time என்ற எண்ணம் எனக்கு உண்டு. தான் பார்த்த,படித்த சாமியார்களிலேயே ஜக்கி வாசுதேவுக்குத்தான் sense of time இருக்கிறது என்று சுந்தர ராமசாமி ஓர் அமெரிக்கச் சந்திப்பில் சொன்னார். இங்கே தயானந்த சரஸ்வதியின் சீடரொருவர் குழந்தைகளுக்கான பாலவிஹாரில் மடிக்கணினி வைத்து ஸ்லைடு ஷோ போட்டு சம்ஸ்கிருதப் பாடல்களை அவற்றின் ஆங்கில மொழியாக்கத்துடன் கிடாரில் இசைத்துச் சொல்லித் தருகிறார். தெரியாத சம்ஸ்கிருத மொழியில் அப்பாடல்களைக் கற்பதில் பயனில்லை.ஆங்கில மொழியாக்கம் பொருளறிய உதவும் என்று அவர் சொல்லுவார். இந்தச் சாமியார் வலைப்பதிவில் எழுதுவது அவருக்கு அறிவியல் வளர்ச்சியின் மீது இருக்கிற கவனிப்பைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். முக்கியமாக, இந்தச் சாமியாருக்கு மதநல்லிணக்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இது இவரை நான் கவனிக்க இன்னொரு முக்கியக் காரணம். இணையத்தில் ஹிந்து மதத்தின் பெயரில் செயற்படும் அடிப்படைவாத இணையதளங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிற விபத்தில் இதுவரை இவர் சிக்கவில்லை என நினைக்கிறேன். இந்தச் சாமியாரை வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து அவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று இருக்கிறேன். அவர் சுவாமி ஓம்கார்.
தினம் சில வரிகள் - 12
பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் சண்டைக்குள் கருத்து கந்தசாமியாக நுழையக் கூடாது என்று இப்போது விவேகம் வந்திருக்கிறது.விவேகத்தைப் பயன்படுத்தவிடாமல் சிலநேரம் உணர்வுகளின் வேகம் தடுக்கத்தான் செய்கிறது. நண்பர்களுக்கிடையேயான தனியுரையாடல்கள் நம் கருத்தைச் சொல்லவும், அவ்வேகத்தைத் தணிக்கவும் பெருமளவு உதவுகின்றன.
இப்படிப்பட்ட சண்டைக்குள் ஏன் நுழையக் கூடாது?
1. சண்டையிடுகிற இரண்டுபேரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்குகிற அளவுக்குத்தான் நம் கருத்துகள் இருதரப்பையும் விமர்சிப்பதாக அமையும். நம்மைத் தாக்கும்பொருட்டு அவர்கள் தமக்குள் சமாதானம் ஆவது நல்லதில்லை.
2. இருதரப்புக்காகவும் ஆயுதம் தாங்க, போரிட ஆதரவாளர்கள் குழு இருக்கிறது. நாம் இதில் நுழைவது, ஆபத்தானது மட்டுமில்லை நம் நேர வீணடிப்பும் கூட.
3. இருதரப்பும் இலக்கியம், சமூக அக்கறை என்ற பல்வேறு பெயர்களில் எதிராளியின் அழுக்குத் துணிகளையே துவைக்கிறார்கள் என்பதை நுட்பமாகக் கவனிப்போர் உணர முடியும்.
4. மனுஷ்ய புத்திரன் முன்பொருமுறை சொன்ன ஞாபகம். நண்பர்களுக்கிடையேயான மோதல்களில் அவர் கருத்து சொல்லாமல் மௌனம் சாதிக்கிற முறையைக் கடைபிடிப்பதாக. இருதரப்பும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கும்பட்சத்தில், இதுவும் ஒரு காரணமாக உதவும்.
5. தமிழ்ச் சூழலில் இவை பரபரப்புக்காக சிலகாலம் பேசப்படும்.பின்னர் பல்வேறு காரணங்களில் சண்டையிட்டோரே சமாதானம் ஆகி, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியவர்களோடு சண்டையிடுவர். பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் மாறுகிற கூட்டணி பா.ம.க.வுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. உதாரணமாக, இது வம்பை விலைக்கு வாங்கும் வேலை. அதனால் உதாரணம் வேண்டாம்.
6. இவர்கள் வெளியில் போடுகிற சண்டை மிகவும் மேன்மையானதாகவும், உள்ளுக்குள் செய்கிற திரைமறைவு பரஸ்பர குழிபறிப்பு வேலைகள் மிகவும் அசிங்கமானதாகவும் இருப்பதால் வெளிவேடத்தை நம்பி ஏமாந்துவிட முடியாது.
7. இந்தச் சண்டைகளில் தொடர்புடையவர் தவிர இலக்கியமோ, எழுத்தோ, சமூகமோ பயனடைவது இல்லை.
8. சண்டையை வேடிக்கை பார்ப்பதில் இருக்கிற சுவாரஸ்யம் அதில் பங்குபெறுவதில் இல்லை.
வேறு காரணங்கள் உங்களுக்குத் தெரிந்தால் உங்கள் பதிவில் எழுதுங்கள்.
Tuesday, May 11, 2010
தினம் சில வரிகள் - 11
Initiative in Chess - Kavinayan P. Sivakumar, thanks to ChessGurukul.com
Initiative is an important factor in chess. Whether you are playing the drawish Petroff, or the exciting Dragon, initiative is needed to pile up the pressure on your opponent. But what really is initiative? To fully understand this concept, we turn to the 4th round game of the World Championship match between Anand and Topalov.
White: Anand, V
Black: Topalov, V
Game 4: FIDE World Chess Championship. Apr 28, 2010
[http://www.anand-topalov.com/en/game4.html]
1. d4 Nf6 2. c4 e6 3. Nf3 d5 We shall not play close attention to the opening. This is not our main area of focus.
4. g3 dxc4 5. Bg2 Bb4 6. Bd2 a5 7. Qc2 As of now, White has developed 4 pieces, while Black has only developed 2 pieces…
7. …Bxd2+ 8. Qxd2 c6 This move helps in 3 ways: 1. It supports b5. 2. It supports d5, possibly a potential outpost in the future. 3. It blocks White’s light square bishop’s scope of the a8-h1 diagonal. However, after this move, Black keeps yet another pawn on his bishop color.
9. a4 As mentioned above, White is pressuring the b5 square, which Black had supported the previous move.
9. …b5 A pawn break. Very energetic play from Topalov. Instead of being crunched for space, he breaks out. However, now White’s g2 bishop is a little bit more powerful.
10. Na3 Bd7 11. Ne5 Nd5 12. e4 Nb4 13. 0-0 0-0 14. Rfd1 Be8 Over this period of time, both players are developing pieces to what they think are best squares. However, it is White that is now more developed. In fact, his a1 rook is the only one not in play. But for Black, only his knight seems useful. Everything else is sleeping in the 8th rank!

15. d5! Anand lashes out with a pawn break. Due to the activity of his pieces, Black must be careful here. Anand has initiative here, because he is punishing Black’s late development.
15. …Qd6 (15. …cxd5 16. exd5 followed by taking on b5; 15. …exd5 16. exd5 cxd5 [16. …f6 17. Nxc6 N8xc6 18. dxc6 Qxd2 19. Rxd2 and if Bxc6 or Nxc6 axb5 followed by taking the c4 pawn.]17. axb5 +/- ; 15. …f6 16. Nxc6 N8xc6 17. dxc6 The difference between this variation and the past one was that now the g2 bishop is blocked by the e4 pawn. 17. …Qxd2 18. Rxd2 and if Bxc6 or Nxc6, axb5 with the c4 pawn hanging.)
16. Ng4 Qc5 17. Ne3 Anand realizes that sooner or later, then tension at d5 will burst. This is why he is reinforcing it. Also, you should notice that it pressures c4 as well…
17. …N8a6 18. dxc6 Anand understands that Black is going to get his pieces out quickly. He seeks to open the position up for his well placed pieces.
19. Naxc4 Bxc6 20. Rac1! This may not seem like a rare move. Most people would play this without thinking. But the exclamation mark applauds the vigor this move has. This is initiative. Black now has to worry about a discovered attack. All of white’s pieces are developed actively, while Black’s rooks still need to find good squares.
20. …h6 Topalov does not want to move his queen away. This move also removes any back rank surprises later in the game.
21. Nd6 Here it is. The discovery. Where will Black’s queen go?
21. …Qa7 22. Ng4! The knight on e3 has served his purpose. It goes back to g4, targeting e5…and something else as well…
22. …Rad8? Topalov does not see the smashing move Anand delivers…
23. Nxh6+! Anand converts his more active piece placement into an attack.

23. …gxh6 Topalov has to take. If he does not, he will be down a pawn with a worse position.
24. Qxh6 f6 25. e5! Now White’s bishop is looking down. Now exf6 is threatened.
25. …Bxg2 26. exf6 It is over. Black’s pieces are all huddled in the queenside, only seeing the disaster.
26. …Rxd6 Topalov tries to stop the attack, but it is hopeless. Now white’s rook comes into the attack. Since Anand has the initiative, he knows he must play precisely, or else Black can defend.
27. Rxd6 Be4 28. Rxe6 Nd3 The f2 pawn is threatened with mate.
29. Rc2 Qh7 Can Black defend?
30. f7+! No, he cannot! ...Qxf7 31. Rxe4 Qf5 32. Re7 Resigns 1-0

During this game, White was more developed. In fact, the knight on a6 only made one move: from b8 to a6. The rook on f8 only got there from castling. Anand understood this, and so quickly opened up the center, allowing his rooks to dominate. Black could only counter passively against White’s play. This is no help against the attack Anand eventually had.
This game should have given you a reasonable idea of what initiative is. It doesn’t mean you should just start attacking the king. Far from it. Initiative comes from developing your pieces to active squares. Anand gave a pawn in the opening, but he got strong development. This is what allowed him to attack, and win an important game.
தினம் சில வரிகள் - 10
”இணைய தளத்தில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்தே இதுதான். எடுத்த எடுப்பில் எழுத ஆரம்பித்து விடும் சாத்தியத்தை இது அளிக்கிறது. ஆண் குழந்தைகளுக்கு சமயங்களில் குறி விறைத்துக் கொண்டு விடும். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூன்று வயதுக் குழந்தைக்குக் கூட சமயத்தில் அப்படி விறைக்கும். அதற்காக அந்தக் குழந்தை நான் வாலிபத்தை அடைந்து விட்டேன், எனக்குத் திருமணம் செய்து வை என்று சொல்லாது அல்லவா? அதேதான் இதுவும்.”
- சாரு நிவேதிதா.காம் இணையதளத்தில் சாரு தன் வாசகர் கடிதத்துக்கு விபரீத ஆசை (2) என்ற தலைப்பில் எழுதிய பதிலில் இருந்து.
படித்தவுடன் ரசித்துச் சிரித்துவிட்டேன். எதிர்பாரா நேரங்களில் சாரு அடிக்கிற இப்படிப்பட்ட சிக்ஸர்களுக்காக பெரும்பாலான நேரங்களில் அவர் மொக்கையையும், சுயபுராணத்தையும், அறிவுரைகளையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தினம் சில வரிகள் - 9
நேற்று ஜார்ஜ் க்ளூனியின் Up in the air பார்த்தேன். இந்தப் படம் டிவிடியில் வந்த புதிதில் சிலநாட்களுக்கு ப்ளாக்பஸ்டரில் கிடைக்கவே இல்லை. இருக்கிற பிரதிகளை எல்லாம் யாரும் எடுத்துச் சென்று விட்டிருப்பார்கள். க்ளூனிக்குப் பெண்களிடம் இருக்கிற கிராக்கி ஆஸ்கார் வரை நகைச்சுவையாகப் பேசப்படுகிற விஷயம். க்ளூனியை எனக்கும் பிடிக்கும். அவருடைய சிரியானா, பர்பெக்ட் ஸ்ட்ராம் வகை சீரியஸ் படங்களுக்காகவும், அவருடைய ஓஷன் லெவன் வரிசை ஜாலி படங்களுக்காகவும். பிராட் பிட்,டாம் க்ரூஸ், லியோனார்டொ டிகாப்ரியோ போன்றவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களைப் பெண்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று சொல்லிவிடலாம். ஒரு ஸ்வீட் பாயிஷ் இமேஜ் அவர்களுக்க் உண்டு. எந்தவகையில் பெண்களைக் கவரும் வகையில் க்ளூனியின் தோற்றம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்ததில் விடை தெரிய மாட்டேன் என்கிறது.
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த முதன்மை நடிகர், சிறந்த துணை நடிகைக்காக இரண்டு முறை, சிறந்த திரைக்கதை என்று இப்படம் ஆறுபிரிவுகளில் இவ்வருட ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப் பட்டது. அதிக எதிர்பார்ப்புகளுடன் பார்த்ததாலோ என்னவோ ஆறுபிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்று யோசித்தேன். படம் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகப் போனது. என்னைப் பொருத்தவரை தொய்வில்லாமல் நேரம் போக்க உதவுகிற படங்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் தருவேன். அதன் அடிப்படையில் பத்துக்கு ஏழு கொடுத்தேன்.
அமெரிக்காவில் வேலையை விட்டு அனுப்புவதைக் கூட அவுட்சோர்ஸிங் செய்கிறார்கள் என்றும், அதில் உணர்வுகளற்ற தொழில்முறையே மேலோங்கி இருக்கிறது என்பதையும் படம் நன்றாக அறிமுகப்படுத்துகிறது. வேலையின் பொருட்டு, தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்து நவீன நாடோடியாக வாழ்கிற, அதில் சுகம் காணுகிற கதாநாயகனைச் சுற்றிய கதை. இது படத்துக்கு ஒரு புதுமையைத் தருகிறது. நடாலி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டதாக தோன்றுகிறது. சப்பென்று முடிந்துவிடுகிற கதாபாத்திரம். அலெக்ஸ் பாத்திரம் இறுதியில் வருகிற திருப்பத்தால் உயிர் பெறுகிறது.ஆஸ்காருக்குப் பரிந்துரை செய்கிறவர்களில் ஜார்ஜ் க்ளூனி ரசிகைகள் நிறைய இருப்பார்கள் என்று தெரிகிறது.
Sunday, May 09, 2010
Friday, May 07, 2010
தினம் சில வரிகள் - 7
நண்பரும் எழுத்தாளருமான இரா.முருகன் இணையத்தில் முன்பொருமுறை இப்பாடலில் முதலிரண்டு பத்திகளை நினைவிலிருந்து எடுத்தெழுதிய ஞாபகம். இப்பாடலைப் பார்க்கும்போதெல்லாம் இப்போது இரா.முருகனும் நினைவுக்கு வருகிறார். முழுமையான பாடலைப் பார்த்ததும், இங்கே பகிரத் தோன்றியது.
சென்று நீராடிய துறைகளெலாம் - நான்
...திரும்பிவந் தாட விரும்புகின்றேன்!
அன்று கட்டிய சிறுமணல் வீட்டினை
...ஆற்றின் கரையெலாம் தேடுகிறேன்.
என்னோ டாடிய சிறுவர் சிறுமியர்
...எங்கே எனநான் தேடுகிறேன் - அவர்
அன்னையர் தந்தையர் ஆன கதைகளை
...அறிந்து மகிழ்ந்து பாடுகிறேன்!
நண்பர்கள் செய்த நல்லவைக் கெல்லாம்
...நன்றிகள் கூறத் திரும்புகிறேன்.
பெண்களின் வாழ்வில் என் பேதைமையால் செய்த
...பிழைகள் பொறுத்திட வேண்டுகிறேன்.
- ஜெயகாந்தன்
Thursday, May 06, 2010
தினம் சில வரிகள் - 6
கேபிள் சங்கர் பதிவில் வரும் “சாபாட்டுக் கடை” களின் பெயர்களைத் தொகுத்து தனிப்பதிவாக இட்டால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எழுதியிருந்தேன். “யாரோ ஒருவன்” என்ற பெயரில் எழுதும் அன்பர், அவற்றைத் தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றிகள்.
இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் எதையும் எழுத மனம் வரவில்லை. என்னுடன் பணிபுரிந்த நல்ல நண்பர் ஒருவரின் 31 வயது மனைவி பிரசவத்துக்குச் சிலநாட்கள் முன்னர், செவ்வாய் இரவு எதிர்பாராவிதமாக அகால மரணமடைந்தார்.ஏறக்குறைய மூன்று வாரங்கள் முன்னர்தான் அவர் வளைகாப்பில் அவரின் சந்தோஷமான தருணங்களைப் பார்த்தேன். இன்னமும் இதை நம்ப முடியவில்லை. 2010-ல் நான் பார்க்கிற இரண்டாவது திடீர் மரணம் இது. இத்தோடு இது முடியட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
வெளிநாடுகளில் என்னதான் வசதியுடன் வாழ்ந்தாலும், மரணங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில், இவ்வளவு தொலைவில், கையறு நிலையில் இருக்கிற மாதிரியான துக்கம் பொங்குகிறது. என்னதான் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் அருகில் இருந்தாலும், இங்கே தெரிந்தவர்களின் மரணத்தை எதிர்கொள்கிற வலிமிக்க தருணங்களில், ஊரில் இல்லாமல் போன சுமையும் சேர்ந்து கொள்கிறது. பார்க்கிற நமக்கே இப்படியெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்?
Tuesday, May 04, 2010
தினம் சில வரிகள் - 5
புறம்காண அகம்காணப் பொதுமுகத்தின் அருள்நோக்கம்
இறங்காத தாமரைக்கண் எம்பெருமாஅன் இயம்புதியால்
அறம்காத்தற்கு உனக்கொருவர் ஆரும்ஒரு துணையின்றி
கறங்குஆகும் எனத்திரிய நீயேயோ க்டவாய்தான்?
செந்தாமரை கண்களுடன் அருட்பார்வை நீங்காமல் நடுநிலையில் நின்றருளும் பெருமானே! காற்றாடிபோல சுற்றித் திரிந்து,உனக்கு வேறெந்த சிறுதுணையும் இல்லாமல், ஒவ்வொன்றின் உள்ளும் புறமும் கண்டு, தர்மத்தைப் பாதுகாக்க, நீ கடமைப்பட்டாயோ. எனக்குச் சொல்வாயா?
(கம்பராமாயணம்)
Monday, May 03, 2010
தினம் சில வரிகள் - 4
NBA Playoffs நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது விட்டுவிட்டுப் பார்க்கிறேன். ஒரே ஆட்டத்தைக் கூட, சில நேரங்களில் இப்படிக் கணினி முன் அமர்ந்து வேலை செய்து கொண்டே பார்க்க நேரிடுவது உண்டு. யார் வென்றாலும் தோற்றாலும் பெரிதாய் பாதிப்பதில்லை. அமெரிக்கா வந்த புதிதில் NBA-ன் Regular Seasons ஆட்டங்களையே பின்னிரவு வரை விழித்திருந்து நான்கைந்து வருடங்கள் பார்த்தேன். கடந்த சில வருடங்களாக விளையாட்டுகளை முழுதாகப் பார்க்க முடிவதில்லை. நேரமில்லை என்பது ஒரு காரணம். முன்னைப் போல பெரிய ஆர்வம் இல்லை என்பது இன்னொரு காரணம். முக்கியமாக, இப்போது பிடித்த அணி என்று எதுவும் இல்லை. அப்படி ஒரு அணி இருக்கும் வரை பேயாய் ஆட்டங்களைப் பார்க்கத் தோன்றும் என நினைக்கிறேன். நான் கவனித்துப் பார்த்ததில் எனக்கு ஓரளவு பிடித்தமான விளையாட்டு வீரர் அல்லது கோச் உள்ள அணி ஆடாவிட்டால், இரண்டு அணிகளில் பலவீனமான அணி வென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். Underdogs வெல்லும்போது ஒரு சந்தோஷம் பிறக்கிறது. முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதருமென்பது நிரூபணம் ஆவதாலா?
Sunday, May 02, 2010
தினம் சில வரிகள் - 3
கமல்ஹாசன் முயற்சியில் மய்யம் பத்திரிகை மீண்டும் வரவிருக்கிறது என்று இரா.முருகன் எழுதியிருந்தார். வளர்மதி தலைமையிலான ஆசிரியர் குழு பத்திரிகையின் வடிவம், உள்ளடக்கம்,தொடர்ச்சியான வெளியீடு ஆகியவற்றைப் பார்த்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.
”கமல்ஹாசன் எழுத்தும் புரியாது, வளர்மதி எழுத்தும் புரியாது, ஆகையால் நல்ல கூட்டணிதான்” என்று நண்பரொருவர் ஜோக்கடித்தார். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் வலைப்பதிவு வழியாக,வளர்மதியை சொற்பமாகப் படித்திருக்கிறேன். அதில் தமிழில் தத்துவம்,மேலை இலக்கியம் உள்ளிட்ட விஷயங்களைத் தொட்டு எழுதியவர்களில் ஓரளவு நான் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எழுதியவர் வளர்மதி. மய்யம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்குப் பொறுப்பேற்கும் அளவுக்கு அறிவும், திறமையும் வளர்மதிக்கு நிச்சயம் உண்டு. உரையாடல்களில் பொறுமை,ஆசிரியர் குழுவை நெளிவு சுளிவுடன் நிர்வகிக்கும் மேலாண்மை, தனக்கு அதிகம் தெரியும் என்ற அதீத நம்பிக்கையைச் சற்றுத் தள்ளி வைத்தல், தான் சுமக்கும் கடந்தகால அரசியல் மற்றும் இலக்கிய சர்ச்சை சிலுவைகள் மய்யத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளல் ஆகியவற்றில் வளர்மதி கவனம் செலுத்தினால் மய்யம் பத்திரிகையில் நிறைய எதிர்பார்க்கலாம்.
மேலாண்மை, நிர்வகித்தல் உள்ளிட்டவற்றை என் வேலை, ஈடுபட்ட தன்னார்வலப் பணிகள் தொடர்பாக நான் இங்கே நிறைய செய்த அனுபம் உண்டு. அது ‘வார்த்தை’ இதழை நடத்த பெரிதும் உதவியது. என்றாலும், ஆசிரியப் பொறுப்பில் இருப்பவர்க்கு, பெருந்தன்மையும், பொறுமையும், உடன்படாக் கருத்துகளுக்கு இடம் கொடுக்கும் பக்குவமும்,கருத்துகளை மறுப்பதில் நாகரீகமும் வேண்டும் என்பதை அப்போது இன்னும் உணர்ந்தேன். ஆகையால், மய்யம் பத்திரிகைப் பொறுப்பு வளர்மதிக்கு ஒரு சவால். அந்தச் சவாலில் வெல்வது அவர் கைகளில் மட்டுமே உள்ளது.
கமல்ஹாசனுடன் சேர்ந்து பணிபுரிவதற்கே வளர்மதிக்கு எதிராக கருத்துகள் அவருக்கு ஆகாதோரால் இங்கே வைக்கப்படும். தூண்டப்படினும் எதிர்வினையாற்றாமல், அவற்றைப் புறக்கணிப்பதில் வளர்மதியின் வளர்ச்சி உள்ளது.
தினம் சில வரிகள் - 2
கேபிள் சங்கரின் கொத்துப் பரோட்டா தொடரைப் பார்க்கும் போதெல்லாம் படிக்கிறேன். அவர் சொல்கிற குறும்படம் எதையும் பார்த்ததில்லை. அவர் பதிவைப் படிக்கும்போது குறும்படம் பார்க்கிற சூழலில் நான் இருப்பதில்லை. அதனால்தான். அத்தொடரில் சென்னையில் எங்கே சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அவர் எழுதுகிறார். அத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது. அதைப் படிக்கும்போது ஒருவகையான ஏக்கம் பிறக்கிறது. சென்னை செல்லும்போது அங்கெல்லாம் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இந்தச் சாப்பாட்டு இடம் பற்றிய பத்திகளை மட்டும் மொத்தமாகத் தொகுத்து அவர் தனிப் பதிவாக இடலாம். என்னைப் போன்ற வெளியூர்க்காரர்களுக்கு உதவியாக இருக்கும். அவ்விடங்களில் ஒன்றிரண்டையாவது அடுத்த சென்னை விஜயத்தில் பார்க்க உதவும். வலைப்பதிவாளர்கள் சந்திப்பை இப்படிப்பட்ட இடங்களில் நடத்தினால், நல்ல சாப்பாடும் ஆச்சு. எல்லாரும் சாப்பிட்டில் பிஸியாக இருப்பதால் அநாவசிய சச்சரவுகளும் வராது. அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர் காசு என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிற வலைப்பதிவர்களும் வருவார்கள். பில்லிலும் பிரச்னை வராது.
சாப்பாட்டுக்கு அடுத்தபடி கேபிள் சங்கரின் கொத்துப் பரோட்டாவில் படிப்பது அவருடைய அடல்ட்ஸ் ஒன்லி ஜோக். ஒன்றிரண்டு நன்றாக இருந்தன. பெரும்பாலும் சுமார் ரகம்தான். கூகிலிட்டாலே முத்துகள் கொட்டும் கரு இது. கேபிள் சங்கர் இன்னும் கவனம் செலுத்தலாம்.
கேபிள் சங்கர் பதிவு அளவுக்கு இவர் பதிவுகளுக்குப் பின்னூட்டம் வருவதில்லை. அழகியசிங்கர் அதற்கெல்லாம் கவலைப்படுபவரும் இல்லை. ஆனாலும் அழகியசிங்கரின், எதையாவது சொல்லட்டுமா தொடர் எனக்குப் பிடித்திருக்கிறது. நடையின் போக்கில் அசோகமித்திரனை நினைவுபடுத்தும் எளிய நடை. ஆனால் அசோகமித்திரனுக்கே உரித்தான நுணுக்கமான நகைச்சுவை இல்லை. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழகியசிங்கர் நினைப்பதை அப்படியே எழுதுகிறார். அந்த வெளிப்ப்டைத்தன்மையால் இத்தொடர் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. பெரும்பாலும் அவர் தொடர்பான விஷயங்களை எழுதுகிறார். அதில் மிகையோ அலட்டலோ தென்படாத தொனி அவர் எழுத்துக்குப் பலம். அவர் பதிவில் அவர் இடுகிற கவிதைகள் பக்கம் சிலமுறை சென்று பார்த்தேன். என் தலைக்குமேல் போகிற விஷயம் என்று தோன்றியது. அதற்கப்புறம், அந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை. ஒருவிதமான பிடிவாதத்துடன் எவ்வளவு கஷ்டம் வந்தபோதும் நவீன விருட்சம் இதழைத் தொடர்ந்து நடத்திவருகிறார் அழகியசிங்கர். அவர்மீது மரியாதையும் அனுதாபமும் ஒருசேரப் பிறக்கின்றன.
தினம் சில வரிகள் - 1
தினம் நாலுவரி எழுத வேண்டும். நாலுவரிக்கு மேலிருந்தால்? நீங்கள் படிக்காமல் விட்டுவிடலாம். டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் பேசுவதை வடிகட்டி உருப்படியானவற்றை இங்கே இட்டால்கூட தினம் நாலுவரி தேறிவிடும். நேரமில்லை என்று எத்தனை நாள் இழுப்பது? முன்னுரை இத்துடன் முற்றும். நாலுவரியில் இவை சேரா.
Run away bride திரைப்படத்தில் Richard Gere பேசுகிற வசனம், “Journalism is literature in hurry." இவ்வசனம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்குத் தமிழ் வலைப்பதிவு உலகமும் நினைவுக்கு வருகிறது. தமிழ் வலைப்பதிவு உலகின் எழுத்துத் தரம் பற்றி சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று பலர் எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஆதலால் அந்தப் பக்கம் போகும் ஆசையில்லை. தமிழ் வலைப்பதிவுகளீல் பெரும்பாலானவை அவசரத்தில் எழுதப்படுவதாலும், எழுதப்படுபவையில் பெரும்பாலும் Journalism என்ற வகைக்குள் அடங்கும் என்பதாலும், “Tamil Blogs are mostly literature in hurry." என்று சொல்லத் தோன்றுகிறது. Tamil blogs are mostly journalism in hurry என்று சொல்கிறவர்களும் இருக்கலாம்.
Run away bride திரைப்படத்தில் Richard Gere பேசுகிற வசனம், “Journalism is literature in hurry." இவ்வசனம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்குத் தமிழ் வலைப்பதிவு உலகமும் நினைவுக்கு வருகிறது. தமிழ் வலைப்பதிவு உலகின் எழுத்துத் தரம் பற்றி சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று பலர் எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஆதலால் அந்தப் பக்கம் போகும் ஆசையில்லை. தமிழ் வலைப்பதிவுகளீல் பெரும்பாலானவை அவசரத்தில் எழுதப்படுவதாலும், எழுதப்படுபவையில் பெரும்பாலும் Journalism என்ற வகைக்குள் அடங்கும் என்பதாலும், “Tamil Blogs are mostly literature in hurry." என்று சொல்லத் தோன்றுகிறது. Tamil blogs are mostly journalism in hurry என்று சொல்கிறவர்களும் இருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)