Sunday, June 11, 2023

ஜெயமோகனின் பொய்கள் – பி.கே. சிவகுமார்

ஜெயமோகனின் பொய்கள்பி.கே. சிவகுமார்

ஜெயமோகனின் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு ஆதாரங்களுடன் பதில்கள்


எச்சரிக்கை:

இது திரைச்சொட்டுகளும் கடந்த கால நிகழ்வுகளும் தொகுக்கப்பட்ட ஒரு நீண்ட பதில் கட்டுரை. நீங்கள் இலக்கியத்தை மட்டுமே உண்டு, உய்த்து, சுவாசிக்கிற, வம்பை விரும்பாத அல்லது ஜெயமோகன் இலக்கியம் என்கிற பெயரில் பேசுகிற வம்புகளை விரும்புகிற உன்னத ஜீவி என்றால், இந்தக் கட்டுரையைப் படித்து நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். அமைப்பு பலமும், ஆள் பலமும், சமூகம் கொடுத்துள்ள எழுத்தாளர் அந்தஸ்து புகழ் பலமும் கொண்ட ஜெயமோகனும் அவர் பின்னே நிற்கிறார்கள் என ஜெயமோகன் சொல்லிக் கொள்கிறவர்களும்  ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் மீது எத்தகைய பொய்களையும் அவதூறுகளையும் பரப்புகிறார்கள் என்பதை என்னை உதாரணமாகக் கொண்டு  நீங்கள் அறிய விரும்பினால் இதை மேற்கொண்டு வாசிக்கலாம்.


இந்தப் பதிலை எழுதி முடித்துப் பிரசுரிப்பதற்கு முன், திண்ணை.காம் ஆசிரியர் கோபால் ராஜாராம் ஜெயமோகனுக்கு எழுதிய மறுப்புக் கடிதம் திண்ணை.காமில் பிரசுரமாகி இருப்பதைப் பார்த்தேன். அது மட்டுமே கூட ஜெயமோகனின் என்னைப் பற்றிய பொய்களை அம்பலப்படுத்தப் போதும். ஆனாலும் இதை இப்படியே விட்டால் ஜெயமோகன் மேலும் என்னைப் பற்றிய பொய்ப்புனைவுகளை எதிர்காலத்திலும் தொடரும் வாய்ப்பு உள்ளதால், கோபால் ராஜாராமின் மறுப்பையும் இந்தப் பதிலில் இணைத்து, தேவையான இடங்களில் சுட்டி, இந்தப் பதிலைப் பிரசுரிக்க முடிவு செய்தேன்.


பின்புலம்:

 ஜுன் 7, 2023 தேதியிட்டு ஜெயமோகன் இணையதளத்தில் (jeyamohan.in), https://www.jeyamohan.in/184068/ என்ற முகவரியில்அம்ம நாம் அஞ்சுமாறேஎன்ற தலைப்பில் வெளியான கேள்வி-பதிலில் ஜெயமோகன் என்னைப் பற்றிப் பல பொய்களையும் அவதூறுகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.


அவர் இணையதளத்தில் எழுதுவதை சில நேரம் நீக்கி விடுகிறார் அல்லது சர்ச்சைக்குரிய இடங்களை எடிட் செய்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு ஜெயமோகன் மீது பரவலாக இணையத்தில் வைக்கப்படுகிறது. அந்தக் காரணத்தாலும், படிக்கிறவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் மேற்குறிப்பிட்ட ஜெயமோகன் பதிவில் வெளிவந்த என்னைப் பற்றிய கேள்வியையும் அதற்கான ஜெயமோகன் பதிலையும் இங்கேயும் கொடுக்கிறேன்.

 

பின்வரும் திரைச்சொட்டுகளில் என்னைப் பற்றி வரும் பகுதிகளை முழுமையாகத் தொகுத்து அளிப்பதே நோக்கம். பிறரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய சில வரிகள் தவிர்க்க இயலாமல் திரைச்சொட்டின் பகுதியாக இடம் பெற்று இருக்கின்றன. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகன் சொல்கிற அந்தப் பிறரை அவமதிப்பதோ, அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை ஆதரிப்பதோ இத்திரைச் சொட்டுகளின் நோக்கம் அல்ல



ஜெயமோகனுக்குத் திண்ணை.காம். ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்களின் மறுப்பு:

திண்ணை.காம், அதன் ஆசிரியர்கள் கோபால் ராஜாரம், துகாராம் ஆகியோர் பெயர்களைப் பயன்படுத்தி, ஜெயமோகன் என்னைக் குறித்து எழுதிய அவதூறுகளில் உண்மையில்லை என்பதை அவருக்கே உரிய நாசூக்குடனும் நாகரீகத்துடனும் ஜெயமோகனுக்குச்சொல்கிறார் கோபால் ராஜாராம். சொன்னதுடன் இல்லாமல் ஜெயமோகன் அவற்றைச் சரி செய்ய வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். அதன் சுட்டி: https://puthu.thinnai.com/archives/47361

 

ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள்” என்ற தலைப்பிலான கோபால் ராஜாராமின் முழுக் கட்டுரையையும் இங்கே கொடுக்கிறேன்.

*******

ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது.

 

பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர். அவருடைய தந்தை பி.குப்புசாமி ஜெயகாந்தனின் நண்பர் என்பதனால் குப்புசாமியை சிலமுறை சந்தித்துள்ளேன். எனக்கு குப்புசாமி மேல் மதிப்பு அதிகம்.

 

திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் – நேரில் பார்க்காமலேயே. திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள் வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர். அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.’

 

இதில் உள்ள சில தகவல் பிழைகள் :

 

  1. 1.     பி கே சிவகுமாரை நானோ அல்லது துகாராமோ ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்விக்கவில்லை.
  2. 2.     திண்ணையின் சார்பில் எனி இந்தியன் புத்தக விற்பனை மையம் மற்றும் பதிப்பகம் தொடங்கப் படவில்லை. திண்ணை பொறுப்பாளர்களான நானும் துகாராம் கோபால்ராவும் அல்லாமல் பி கே சிவகுமாரும், பாரி பூபாலனும் எனி இந்தியன் பதிப்பகத்தின் பங்குதாரர்கள்.
  3. 3.     பி கே சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் எனி இந்தியன் இணைய வழி புத்தக விற்பனை மையம் தொடங்கப் பட்டது. புத்தக வெளியீடு மற்றும் வார்த்தை இதழ் வெளியீடு அதன் தொடர்ச்சியே.
  4. 4.     எனி இந்தியன் பதிப்பகத்தின் வெளியீட்டு நூல்களுக்கு பதிப்பகத்தின் சார்பில் நான் பதிப்புரை எழுதியிருக்கிறேன். முன்னுரை, அணிந்துரை, பின்னுரை முதலியன ஆசிரியரின் பொறுப்பு. அதனால் அதற்கான பரிந்துரை நான் செய்திருக்க வாய்ப்பே இல்லை.

ஜெயமோகன் இந்த தகவல் பிழைகளை சரி செய்வார் என்று நம்புகிறேன்.

*******


உள்ளே நுழைவதற்கு முன்:

ஜெயமோகனின் பொய்கள் என்ற இந்தத் தலைப்பை வைக்கும்போது எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தனின்அம்மாவின் பொய்கள்கவிதை நினைவுக்கு வந்தது. அம்மாவின் பொய்கள் மாதிரி ஆபத்தில்லாத பொய்களோ, பாசத்தினால் பிறக்கிற பொய்களோ அல்ல ஜெயமோகன் பொய்கள். பலநேரங்களில் அவை பொய்கள் என்ற எல்லையைக் கடந்து அவதூறு என்ற நிலையையும் எட்டுகின்றன. அவருக்கு எதிரான கருத்துகள் சொல்வோரையும், அவர்களின் நல்ல குணாதசியங்களையும் நற்செய்கைகளையும் ஜெயமோகன்போல திட்டமிட்டுச் சிறுமைப்படுத்துகிற இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் பார்த்ததில்லை.


ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும், புரிதலுக்கும், பெருந்தன்மைக்கும், மன்னிக்கும் குணத்துக்கும் உதவுவதில் கலைகளுக்குஇந்த இடத்தில் இலக்கியத்துக்குமுக்கிய இடம் உண்டு என நம்புகிறவன் நான். அதனாலேயே, ஜெயமோகனுக்கான இந்த பதிலில்பொய்க்குப் பதில் பொய், அவதூறுக்குப் பதில் அவதூறு என்று இல்லாமல் தரவுகள் அடிப்படையில் பொறுப்புணர்வுடன் பதில் சொல்ல முயல்கிறேன்.

 

உணர்ச்சிகரமான ஆள் என ஜெயமோகனால் சொல்லப்படுகிற நான் மிக நிதானமாகவே, ஜெயமோகனுடன் எனக்கிருந்த கடந்தகால தொடர்பு, அவர் எழுத்துகளால் நான் அடைந்த வாசக பலன் ஆகியவற்றை மனதில் கொண்டு, கசப்புகள் தவிர்த்த பதிலை எழுத முயல்கிறேன். கிண்டலும் கேலியும் நகைச்சுவையின் ஒரு பகுதிதானே. தன்னளவு நகைச்சுவையை ரசிப்பவர் இல்லை என ஜெயமோகன் சொல்லிக் கொள்வார், அதனால் என் பதிலில் அங்கங்கே தெரியும் பகடியையும் கிண்டலையும் கூட ரசிப்பார் என நம்புவோம்.


நான் ஆதாரமாகக் கொடுத்திருக்கும் மின்னஞ்சல்களின் திரைச்சொட்டுகள் (ஸ்க்ரீன்ஷாட்ஸ்) சில இடங்களில் முழு மின்னஞ்சலும், சில இடங்களில் தேவையான பகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான மின்னஞ்சல்களையும் தருவதில் எனக்கு ஏதும் பிரச்னையில்லை. இதையும்கூட ஜெமோவின் மீது எழுத்தாளர் என்பதால் இன்னமும் மிச்சம் இருக்கிற கொஞ்சம் நல்லெண்ணத்தாலேயே முன்யோசனையுடன் செய்கிறேன். நான் தராமல் விட்ட பகுதிகளில் ஜெமோ பிறரைப் பற்றிப் பேசியிருக்கக் கூடும். அவற்றை நான் வெளியிடுவதால் ஜெயமோகனுக்கு உறவுச் சிக்கல்கள் வரலாம் என்பதால். மேலும், அவற்றை நான் வெளியிட்டால், திட்டமிட்டு ஜெமோவுக்கும் பிறருக்கும் நான் சிண்டு முடிவதாக ஜெமோ புதிய கதை கட்டுவார். அதனால் அவற்றை இப்போது வெளியிடவில்லை. என் திரைச்சொட்டுகளின் நம்பகத்தன்மை மீது ஜெயமோகனுக்கோ, ஜெயமோகனிடம் சென்று என்னைப் பற்றிக் கேட்கிற அருண்குமார்களுக்கோ சந்தேகம் இருந்தால் எழுப்பட்டும். அப்போது முழுமையாக அம்மின்னஞ்சல்களை வெளியிடுகிறேன்.

 

அப்புறம் ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதி அடுத்தவர் குறித்துக் கருத்து கேட்கிற அருண்குமார் போன்ற வம்பிலே ஆர்வமே இல்லாத சீலர்களுக்கு:


ஜெயமொகன் சொல்கிற வம்பு என்பதன் சரியான உதாரணம் உங்களைப் போன்றோரின் கேள்விகள் தான். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் எனில், அதில் உங்களுக்கு ஆர்வமோ கேள்வியோ அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகமோ இருக்கிறதோ எனில் தங்களைப் போன்றவர்கள் முதலில் கருத்துச் சொன்னவரை நேரடியாகக் கேட்க வேண்டும். உங்களுக்குப் பதில் வரவில்லை என்றோலோ அல்லது பதிலில் திருப்தியில்லை என்றோலோ எல்லாரைப் பற்றியும் எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிற ஜெயமோகனிடம் கேட்கலாம். இதுதான் சரியான வழி.


இந்த மாதிரி கேள்விகளுக்கு வம்பையே விரும்பாத, வேறு வழியில்லாமல் இத்தகைய கேள்விகளுக்கு இறுதியாகப் பலமுறை பதில் சொல்லி வருகிற ஜெயமோகன் என்ன செய்ய வேண்டும்?  பதில் சொல்லாமல் கடக்கலாம். ஆனால் இலக்கியச் சேவை ஆற்றுகிற துடிப்பிலோ அல்லது எதிர்க்கருத்துச் சொன்னவனை அடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்று சந்தோஷத்தில் துள்ளுவதற்கு முன்னரோ, கொஞ்சமும் நேர்மை இருந்தால் - இந்தக் கேள்வியைத் தொடர்புடையவரிடம் கேட்டாயா எனக் கேட்க வேண்டும். கேள்வி கேட்பவர் சொல்வதைச் சரி பார்க்க வேண்டும். அப்புறம் தொடர்புடையவர் அப்படிச் சொன்னதன் வரிவடிவத்தை கேட்டு அதைக் கேள்வியின் பகுதியாகவோ பதிலின் பகுதியாகவோ பிரசுரிக்க வேண்டும்.

 

இவையெல்லாம் தான் ஒரு நேர்மையான மனிதர் கடைபிடிக்கக் கூடிய இதழியல் அல்லது பத்திரிகைத் துறை அடிப்படையாக இருக்கும். இதையெல்லாம் ஜெயமோகன் மற்றவர்கள் தனக்குச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார். ஆனால் அவர் மற்றவர்களுக்குச் செய்யமாட்டார். ஆனாலும், இவ்விஷயத்திலும், நான் அவர் என்னைப் பற்றி எழுதியிருப்பதை முதலில் பகிர்ந்து பதில் சொல்வதன் மூலமும், ஜெயமோகன் பொய்களுக்குத் தரவுகள் தருவதன் மூலமும், அவரை விட மேலான நாகரீகத்தைப் பயில முயல்கிறேன்.

 

குற்றச்சாட்டுகளும் பழிகளும் சொல்லும்போது தரவுகள் மிகவும் முக்கியம். ஜெயமோகனிடம் இவ்விஷயத்தில் ஒரு பொறுப்பற்ற தனமும், தான் நினைத்ததை எந்தவித உறுதிப்படுத்தலும் செய்து கொள்ளாமல் சொல்லலாம் என்கிற அலட்சியமும், அடிப்படையான நேர்மையின்மையும் இருந்து வருகின்றன. இதை பிறரின் அனுபவங்களை விட ஜெயமோகனுடனான என் அனுபவங்களை வைத்தே ஆதாரத்துடன் சொல்ல முயல்கிறேன்.


இந்த இடத்தில் ஜெயகாந்தனைக் குறித்து சின்னக்குத்தூசி (அரசியலில் எதிரெதிர் துருவங்கள்) எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஜெயகாந்தனிடம் ஒருவர் சென்று இன்னொருவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டாராம். ஜெயகாந்தன், “கொஞ்சம் பொறுங்கள். அவரே இங்கே இன்னும் சில நிமிடத்தில் வருவார். அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்என்றாராம்.  


அந்த ஜெயகாந்தன் எங்கே? இந்த ஜெயமோகன் எங்கே? என்று இதைப் படிக்கிற அருண்குமார் ஜெயமோகனைக் கேட்பாரா?


இப்படியெல்லாமான அடிப்படை நேர்மையை, நாகரிகத்தை ஜெயமோகனிடம் கேள்வி கேட்பவர்களோ கேள்விக்குப் பதிலளிக்கிற ஜெயமோகனோ பின்பற்றுவதில்லை. ஆதலால், இவர்களே இத்தகைய கேள்வி பதில்களைப் பிறரைப் பற்றி வம்பு பேசுவதற்கான வாய்ப்பாகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. ஆனால் இவர்கள்தான் அடுத்தவர்களை வம்பு பேசுவதாகப் பரப்புகிறார்கள்.


 ஒன்று:

அருண்குமாரின் கேள்விபி.கே. சிவகுமார் உங்களுக்கு மிக நெருக்கமாக இருந்தாராஎன்கிறது. ஜெயமோகன் அதை வசதியாக இப்போது ஏன் நெருக்கம் கொள்கிறார் எனத் திரிக்கிறார். கேள்வி கேட்டவருக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறம்கூட பதில் சொன்ன ஜெயமோகனுக்கு இல்லை.


எந்த வலைத்தளத்தில் நான் ஜெயமோகனைப் பற்றி சமீபத்தில் எழுதினேன் என யோசித்தேன். நான் வலைத்தளங்களில் சில ஆண்டுகளாக எழுதுவதே இல்லை. அதனால் அருண்குமாரின் கேள்வியின் மூலம் என்ன என்று தெரியாமல் கடைசியாக இதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். தமிழ்க் கலைச்சொல்லாக்கத்துக்குப் பங்களித்தவரான  ஜெயமோகன் பேஸ்புக் என்கிற சமூக ஊடகத்தை கேள்வி கேட்டவர் வலைத்தளம் என்றதும் என்ன சொன்னேன் எனச் சரி பார்க்காமல் பதில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். சமூக ஊடகம் என்ற கலைச்சொல் இருக்க வலைத்தளம் என ஒருவர் பொதுமைப்படுத்திக் கேட்டிருக்கிறார். எவ்வளவு கலைச்சொற்கள் வந்து என்ன பிரயோசனம். ஆசான் ஜெயமோகனின் அத்யந்த சீடர்கள் கூட பின்பற்றுவதில்லை போலிருக்கிறதே.


சரி, அந்த பேஸ்புக் பதிவில் என்ன சொன்னேன். போகன் சங்கருக்குப் பதிலாக நான் எழுதிய பதிவு அது. மார்ச் 4, 2023 அன்று பேஸ்புக்கில் போகன் சங்கருக்கு நான் எழுதிய பதிலில் சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டோ திரித்தோ எழுப்பப்பட்ட கேள்வி என்று நினைக்கிறேன். (என்னால் இப்படித் தவறாகப் புரிந்து கொண்டோ என்று சந்தேகத்தின் பலனையும் ஒருவருக்குக் கொடுத்தே எழுத முடிகிறது. அதுதான் இலக்கியம் எனக்குக் கொடுத்திருக்கிற நற்பண்பு). இந்தப் பதிவு எழுதப்பட்ட நாள் முதல் என் பேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இல்லாதவர் கூட வாசிக்கும் வசதியிலேயே இருக்கிறது.  


தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மூலமும் தரவுகளும் தராமல் ஒருவரைப் பற்றிய அதிரடித் தீர்ப்புகளைப் பரப்புவதன் மூலம் ஜெயமோகன் ஒரு கொடிய சர்வாதிகாரியைவிட மோசமாக, சமூகம் தனக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

 நான் எழுதிய பேஸ்புக் பதிவின் முழுவடிவத்தை இங்கேயும் கொடுக்கிறேன். (அந்தப் பதிவின் சுட்டி இங்கே: https://www.facebook.com/574012146/posts/pfbid034JPYzFFDKCoD3Miqy2NwZPDFoj4TFzxe5GMRzd7ELSzkRGo7GQeh7vxJEwPNxo8dl/?d=w&mibextid=qC1gEa):

*******

மார்ச் 4, 2023ல் பி.கே. சிவகுமார் பேஸ்புக்கில் எழுதியது:

ஜெயமோகன் கருத்துகளும் நானும்:

ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிராகக் கருத்து சொல்றத தவிர நான் கருத்து சொல்வதில்லை என போகன் இன்று எழுதியிருந்தார். (மேலும் விவரங்களுக்கு என் முந்தைய பதிவு காண்க)

 I like to self-reflect. அதனால் - ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிரா நான் சமீப காலங்களில் எத்தனை கருத்துகள் சொல்லியிருக்கேன் என்பதை நினைவுகூரும் பதிவா இதை வைத்துக் கொள்ளலாம்.

 இடையில் அக்டோடர் 17, 2022 முதல் 110க்கும் மேற்பட்ட நாட்கள் - பிப்ரவரி 2023 முதல் வாரம் வரை நான் சமூக ஊடகத்திலேயே இல்லை. அதனால் அந்தக் காலத்தில் ஜெமோ கருத்துக்கு எதிரா எந்தக் கருத்தும் சொல்லியிருக்க முடியாதுதானே. இதுவே போகன் சங்கரின் அவதானிப்பின் போதாமையைக் குறிக்க உதவும்.

 அதற்கு முன்னும் பின்னும் நான் சொன்ன கருத்துகளாக என் நினைவில் நிற்பவை:

 சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய போது விஷ்ணுபுரம் விருது செத்து விட்டது என போகன் சங்கர் பதிவில் எழுதிய பின்னூட்டம். அதை எழுதுவதற்கும் ஜெமோவே என் முன்னோடி. இயல் விருது ஜெமோ தகுதியற்றவர் என நினைக்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டபோது, இயல் விருது செத்துவிட்டது என ஜெமோ எழுதினார். அதை அவருக்கே நான் திருப்பிச் சொன்னேன் - சாருவுக்கு ஜெமோ விருது கொடுத்தபோது. ஜெமோவிடம் நான் கற்றுக் கொண்டவை அதிகம். அதனால் சீடன் குருவிடம் தான் முதலில் கூர்பார்ப்பான் என்கிற உவமையை முன்னரே எழுதியிருக்கிறேன். அப்படிக் கூர்பார்த்து வளர்ந்த சீடர்தான் ஜெமோவும். இதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை.

 போகன் ஜெமோவைச் செய்யாத பகடியா? தனக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என போகன் நினைக்கிறாரா?

இன்றுவரை என்னிடம் ஜெமோவின் செல்போன் எண்ணும் மின்னஞ்சலும் இருவருக்கும் பொதுவான நெருக்கமான நண்பர்களும் உண்டு. அவருடைய 60 ஆம் ஆண்டு மணிவிழாவின் போது, அவருக்குச் சிறப்புகள் சேரும்போது என, தனிப்பட நான் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவதுண்டு. ஜெமோ சொல்வதை எல்லாம் எதிர்க்கிறேன் எனில் இதைச் செய்ய வேண்டாமே.

 ஜெமோவை எனக்கு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தெரியும். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தபோதே, ஆர் பி ராஜநாயஹம் பிரச்னையில், ராஜநாயஹம் தளைய சிங்கம் கதை விஷயமாகச் சொன்னதே சரி எனப் பொதுவில் (அப்போது திண்ணை.காம் உரையாடல்தளம்) சொல்லியிருக்கிறேன். ஜெயமோகன் கருத்துகள் சிலவற்றில் அவரிடம் நேரிடையாக முரண்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் அவற்றைத் தவறாக எடுத்துக் கொண்டதில்லை.

 சமீபத்தில் கூட, அஜிதனின் மைத்ரி நாவல் குறித்த என் எண்ணங்களை மிகவும் பாராட்டாகவே பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறேன். அவற்றைத் தனியாகவும் ஜெமோவுக்கு அனுப்பி அஜிதனிடம் சேர்க்க வேண்டிக் கொண்டதுண்டு - அஜிதன் மின்னஞ்சல் என்னிடம் இல்லாததால்.

அப்புறம் லஷ்மி சரவணகுமார் பாராட்டு விழாவில் - தான் இப்போது கடுமையான விமர்சனத்தை விட்டு விட்டதாகவும், பாராட்டிச் சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவதாகவும், பேசுவதாகவும் என்ற பொருளில் ஜெமோ பேசிய காணொளி பார்த்தேன். ஜெமோவிடம் நிறைய தொடர்பில் இருந்த காலங்களில் இருந்து இதுதான் என் நிலைப்பாடு. ஆனால் ஜெமோ அப்போது இதற்கு நேரெதிர் நிலைப்பாடு கொண்டிருந்தார். அஞ்சலிக் குறிப்புகளில் கூட, கடுமையான விமர்சனம் இருந்தால் வைக்க வேண்டும் என நியாயப்படுத்துவார். கமலாதாஸுக்கு அவர் அப்படி எழுதிய அஞ்சலிக் குறிப்பு நிறைய கண்டனங்கள் கொணர்ந்தது என நினைவு. அப்படிப்பட்ட ஜெமோ இப்படி நெகிழ்ந்துபோனதை வளர்ச்சி என்றோ, கருத்து மாற்றம் என்றோ பதிவு செய்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. இந்த நேரத்தில் கே.என். செந்தில் இதைப்பற்றி எழுதிய பதிவில் விளையாட்டாக, “ அஞ்சலிக் குறிப்பிலும் காட்டமான விமர்சனம் இருந்தால் முன்வைக்கலாம் என்றவரின் பரிணாம வளர்ச்சிஎன்ற பொருளில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

 இதைத்தவிர - செலக்டிவ் அறம் கொண்டவர் என்ற தீபு ஹரியின் கேள்விக்கு ஜெயமோகனா எனக் கேட்டிருந்தேன். ஜெயமோகன் நியாயங்கள் சமீப காலங்களாக பெரும்பாலும் அத்தகையவை என்பது என் எண்ணம். மேலும் அவருக்கு எதிரான கருத்துகளை அவர் இடக்கையால் ஒதுக்குவதும், அவை இலக்கிய நுண்ணுணர்வு இல்லாதவர்களால் சொல்லப்படுகின்றன என்ற ஒற்றை லேபிளால் அடக்குவதும் எனக்கு ஏற்புடையவை அல்ல. ஆனாலும் இவை குறித்து எங்கும் விரிவாக எழுதியது இல்லை.

 இணையத்திலேயே மாமல்லன், சுரேஷ் வெங்கடாத்திரி என ஜெமோ கருத்துகள் மீது தொடர்ந்து விமர்சனம் வைப்பவர் உண்டு. அது அவர்கள் உரிமை. அந்த மாதிரி கூட நான் ஜெமோ குறித்துத் தொடர் விமர்சனம் எழுதியதில்லை.

 ஜெமோ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர் கருத்துகள் சமூகத்தில் சலனங்கள் ஏற்படுத்தத் தான் செய்யும். அதற்கு எதிர்வினைகள் வருவதும் இயல்பு. எதிர்க்கருத்துகள் சொன்னாலேயே, ஜெமோவுக்கு எதிர் என நிறுவப் பார்ப்பது சரியில்லை.

 சொல்லப்போனால், இணையத்தில் ஜெமோவை அவர் எதிரிகளை விட அதிகம் கலாய்ப்பதும், வாருவதும் (அவை ரசிக்கத்தக்க விதத்திலும் உள்ளன) போகன் சங்கர் தான். போகனுக்கு ஜெமோவைப் பிடிக்காது என யாரும் நினைப்பதில்லை.

 இந்தக் கோணங்கி விவகாரத்திலேயே - ஜெமோவின் கட்டுரைகளில் இருக்கிற வாசகங்கள் சிலவற்றைக் கட்டுடைத்து என்னால் விரிவாக எழுத முடியும். நெருங்கிய நண்பர்களின் உள்வட்ட உரையாடல்களில் என் விரிவான காரணங்களைச் சிலநேரம் பகிர்ந்து கொள்வதுண்டு. அவற்றைக் காபி பேஸ்ட் செய்து, கொஞ்சம் சேர்த்து இணையத்தில் இட்டாலே, அவை ஜெமோ கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளாக அமையும். அதையே நான் செய்வதில்லை. காரணம் - அடுத்தவரிடம் குறை கண்டு பேர் வாங்குகிற பிசினஸில் எனக்கு ஆர்வமில்லை. அதேநேரம் ஓரிரு வரிகளில் நம் எண்ணத்தைத் தொடர்புடைய பதிவுகளில் சொல்வதும் தவறில்லை. இதையெல்லாம் ஜெமோவுக்கு எதிரான அஜெண்டா என எடுத்துக் கொண்டால், ஒன்றும் சொல்வதற்கில்லை.

 சாரு விஷயத்திலேயே - சாரு ஆபிதின் எழுத்துகளை எடுத்துத் தன் பெயரில் போட்டுக் கொண்டது, சாரு மீது முன்னர் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஜெமோ அறியாமல் இருக்க முடியாது. அவற்றைப் பொருட்படுத்தாமல் சாருவுக்கு விஷ்ணுபுரம் விருதைக் கொடுக்க ஜெமோவால் முடிந்தது. ஆனால் ஜெமோவை விமர்சிக்கிற முன்னாள் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் (நான் செந்தூரம் ஜெகதீசை இவ்விஷயத்தில் ஆதரிக்கவில்லை) என்றதும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி ஜெமோவால் தயக்கமின்றி எழுத முடிகிறது.

 பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் எனில் விருது கொடுப்பதற்கு முன் யோசிப்பார்கள். கொடுத்த விருதைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால் ஜெமோ சாருவின் பழைய தவறுகளைக் கண்டிக்கக் கூட செய்யாமல் விருது கொடுத்தவர். கேட்டால் எல்லாவற்றையும் கண்டித்துக் கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனின் வேலை அல்ல என பதில் வரும்.

அப்போ - சாருவுக்கு அமைதியாக இருந்த மாதிரி - கோணங்கி விஷயத்திலும் ஜெமோ அமைதியாக இருந்து இருக்கலாமே. அது கன்சிஸ்டன்சியாகவும் இருந்து இருக்குமே.

 இப்படி ஜெமோவின் ஆளுக்கேற்ற நியாயத்துக்கு உதாரணம் உண்டு. அதையும் இவ்வளவு நாள் எழுதாமல் தான் இருந்தேன். இப்போது இதை எழுத வைத்த பெருமை போகன் சங்கரையே சாரும்.

கோணங்கி விஷயத்தில் ஜெமோ கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் ஜெமோவுக்கு இல்லை. ஆனால் கருத்துச் சொன்னால் அதற்கு வரும் எதிர்வினைகளுக்குச் சார்பு கற்பிப்பது அபாயகரமானது. எதிர்வினைகளுக்குப் பிடித்தால் பதில் சொல்லலாம். அல்லது அலட்சியப்படுத்தலாம்.

 மற்றபடி - அவர் எழுதும் புனைவுகளில், தனிமனித சந்திப்புகளிலும் நான் பார்த்த, பார்க்கிற ஜெமோ வேறு. அந்த ஜெமோ மிகவும் பெருந்தன்மையும், மன்னிக்கும் குணமும், எதிர்த்தரப்புடன் உரையாட விழையும் பண்பும், கடுமையான கேள்விகளையும் பொறுமையுடன் எதிர்கொள்ளும் குணமும் நிறைந்தவர். அதே ஜெமோ - எழுத்தில் அவர் குறித்து வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் காட்டும் பதட்டமும், விமர்சனம் செய்வோர் மீது கொள்ளும் சந்தேகமும், வைக்கும் குற்றச்சாட்டும் - என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை.

 ஜெமோ நிச்சயம் என் ஆசான்களில் ஒருவர். அவரிடம் கற்றுக் கொண்டதை அவரிடமே கேள்வியாகக் கேட்பதால் நான் அவருக்கு எதிரியாக ஆகிவிடுவேன் என்றால் - அதற்காக முடியும்போது சுருக்கமாகவேனும் என் கருத்துச் சொல்லாமலா இருக்க முடியும்.

 இப்போது போகனோ ஜெமோவோ என் கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை என நினைக்கிறார்கள் எனில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பொதுவாகவே, நான் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனுமே எழுதி வருகிறேன். என் கருத்துகளில் வசையை அனுமதிப்பதில்லை என்பது படிப்பவர்க்குப் புரியும்.

 இந்த விளக்கங்களை எழுதுவதால் போகன் மீது எனக்கு இருக்கிற மரியாதை கொஞ்சமும் குறையவும் போவதில்லை.

நன்றி.

- பி.கே. சிவகுமார்

 *******


மேலே உள்ள என் பதிவைப் பார்த்தாலேயே தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் புரியும்.  “ஜெமோவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தபோதுஎன்றும், ”நிறைய தொடர்பில் இருந்தபோதும் என வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறேன். நெருங்கிய நட்பில் இருந்தபோது என்றோ நிறைய நட்பில் இருந்தபோது என்றோ எழுதவில்லை. ஆனாலும் என்னையும் ஜெமோவையும் நண்பர்கள் என்றழைத்த பிறரின் மின்னஞ்சல்களையும், ஜெயமோகன் எனக்கு எழுதிய தனிப்பட்ட மின்னஞ்சல்களில் சிலவற்றையும் பின்னர் பார்க்கத்தான் போகிறீர்கள்.  இப்பதிவில் நான் கொடுக்கிற ஆதாரங்களை வைத்து வைத்து ஜெயமோகனுடன் எனக்கு இருந்தது நெருங்கிய தொடர்பா, வெறும் நட்பா, நெருங்கிய நட்பா அல்லது ஜெயமோகன் சொல்வது போல ஹலோ சொல்கிற அளவுக்கு மட்டும் அறிமுகமா என நீங்களே முடிவு செய்யுங்கள்.


அதேபோல ஜெயமோகனுக்கும் எனக்கும் நெருக்கமான பொதுவான நண்பர்கள் உண்டு எனக் குறிப்பிட்டு இருக்கிறேன். சுகா,  பாட்டையா எனப் பலரை இப்படிச் சொல்ல முடியும். ஆமாம், பாட்டையா பாரதி மணி நெடுங்காலம் ஜெமோவின் பிரியத்துக்கு உரியவராக இருந்தார். ஜெமோ குறித்த விவகாரம் ஒன்றில் அவர் அப்பாவியாக தனக்குக் கிடைத்த செய்தியைப் பகிரப் போக, ஜெயமோகன் அவரைப் போட்டுத் தாக்கித் தூக்கிக் கடாசினார். அப்படி ஜெமோவிடம் அடிபட்ட பெருந்தலைகள் பல உண்டு. அதனாலேயே நான் ஜெயமோகன் இப்படி என்னைப் பற்றி எழுதாவிட்டால்தான் ஆச்சரியம் என எடுத்துக் கொள்கிறேன். ஆனாலும், என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.


 இந்த விஷயத்தில் இன்னொரு முக்கியமான உத்தியை ஜெயமோகனும் அவர் ஆதரவாளர்களும் பயன்படுத்துவதை கவனிக்க வேண்டும். ஜெயமோகன் கருத்துகளை விமர்சித்து எழுதினால் அவர் கருத்துகளுக்கு எதிராக எழுதுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை என்கிற முத்திரை முதலில் வரும். அப்படியெல்லாம் இல்லை, அவர் சரியான கருத்துகள் சொல்லும்போது, நல்ல படைப்புகள் தரும்போது பாராட்டியும் வந்திருக்கிறேன். அவருடன் தொடர்பில் இருந்த காலத்தில் இருந்தே இதைச் செய்திருக்கிறேன் என்று சொன்னால், ஜெயமோகனுடன் நெருக்கம் காட்டிக் கொள்ள முயல்கிறேன் என்ற பெயர் வரும். இப்படியாக, பிடிக்காதவர் எனில் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அடி என்கிற தர்க்கத்தைத் தாண்டி ஜெயமோகனும் அவர் ஆதரவாளர்களும் செய்வது வேறு என்ன?


ஜெயமோகனிடம் நெருக்கம் எனச் சொல்லி நான் என்ன ஆதாயம் அடைந்தேன், அடைகிறேன் என்பதை ஜெயமோகன் வெளிப்படையாக  தெரிவிக்க வேண்டும். அவரிடம் பண உதவி பெற்றேனா, சினிமா சான்ஸ் கேட்டேனா, அல்லது பிரபலம் யாரையாவது அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தேனா? ஜெயமோகனைத் தெரிவதற்கு முன்னரே, என் பாட்டனார் வழியாக மு.. உள்ளிட்டோரையும், என் தந்தையார் வழியாக ஜெயகாந்தன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் அறிமுகமும் எனக்கு இருந்தே வந்தது. இதையெல்லாம் பெருமையாகவோ சலுகையாகவோ இலக்கிய இடம் கேட்டோ நானாக எங்கும் பயன்படுத்திக் கொண்டதில்லை. ஜெயமோகனே அவர் பதிவிலும் என் தந்தையாரைக் குறித்துச் சொல்லியிருப்பதால் சொல்கிறேன்எனக்கு இலக்கியவாதியாக ஆகிற பெரிய ஆசைகளும் ஆரம்பம் முதலே இல்லை. ஆரம்பம் முதலே எழுதுவதைவிட வாசிப்பதே பிடித்த விஷயம் என்று சொல்லி வருபவன் நான்.


 பள்ளிக்கூடம் முதல் எனக்குத் தமிழிலும் இலக்கியத்திலும் இருக்கிற ஆர்வத்தை என்னை அறிந்தவர்கள், பழகியவர்கள் அறிவார்கள். அதனால், ஜெயமோகன் என்னை இலக்கியத்துக்கும் வாசிப்புக்கும்கூட  அறிமுகப்படுத்தவில்லை. என் வாசிப்பை மேம்படுத்தினார். புதிய வாசல்களைக், கோணங்களைக் காட்டினார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக பலமுறை அவரைப் பாராட்டி பல இடங்களில் எழுதியே வருகிறேன்.


 ஜெயமோகன் எனக்குச் செய்த உதவி நான் அவரை மதித்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என் கட்டுரைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியதுதான். அதற்கு நான் நன்றியுடையவன். அதைக் கூட திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் அவர் செய்ததாக எழுதியிருக்கும் பொய்க்குப் பின்னர் வருவோம்கோபால் ராஜாராமும் அப்படி ஜெயமோகனைத் தான் கேட்கவில்லை என்று எழுதியிருக்கும் கட்டுரையின் சுட்டியையும் விரிவையும் முன்னேரே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

 மற்றபடி ஜெயமோகனால் நான் அடைந்த பெரிய ஆதாயம் எது என்றால், நண்பர் சுகாவின் நட்பைச் சொல்லலாம். சுகாவின் நட்பு ஜெயமோகனால் கிடைத்தது என்பதை நான் முன்னரே இணையத்தில் பதிவு செய்து இருக்கிறேன். இதற்குக் கூட ஜெயமோகனுக்கு கிரிடிட் கொடுக்க வேண்டியதில்லை. அப்படிச் சொல்வது என்னுடைய பெருந்தன்மையால்தான். பலர் நமக்குப் பலரை அறிமுகம் செய்கிறார்கள். அவர்களில் சிலரே சில காரணங்களால் நமக்கு நெருக்கமாகிறார்கள். சுகாவும் நானும் நெருக்கமானது ஒத்த ரசனைகளால் என்று சொல்லமுடியும். அதுதான் உண்மையும் கூட.


 இதோ நண்பர் இயக்குநரும் எழுத்தாளருமான சுகாவே எனக்கு எழுதிய செப்டம்பர் 5, 2010ல் எழுதிய மின்னஞ்சலில் அதையே சொல்கிறார் பாருங்கள்.

 



என்னது, ஜெயமோகன் என்னை அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.” என்று சொல்கிறார். ஆனால் சுகா சென்னையில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஜெயமோகனை நான் சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறாரே என்ற கேள்வி ஜெயமோகனை ஆழ்ந்து படிக்கிற அருண்குமார்களுக்கு  இப்போது எழ வேண்டும். ஜெயமோகனின் அந்தப் பொய்யையும் பின்னர் கவனிப்போம். ஆதாரமாக இதை இப்போதே வைத்துக் கொள்ளுங்கள்.


மாறாக ஜெயமோகனுக்கே நான் உதவிகள் செய்து வந்திருக்கிறேன் என்கிற உண்மையை எழுத எனக்குச் சில நிமிடங்களே தேவைப்படும். அப்படி நான் எழுதினால் அது பொய்யாகவும் இருக்காது. இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கிற ஆதாரங்கள் பொதுவில் பலர் அறியாதவை. இப்போதே முதன்முறையாக்ப் பொதுவில் வைக்கிறேன்.   இதையெல்லாம் எழுதுகிற விருப்பமும் இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது எழுத வைக்கிற அருண்குமார்களுக்கும் ஜெயமோகனுக்கும் நன்றி.


உதாரணமாக, அவர் முதலில் ஆரம்பித்து நடத்திய மாத இதழ் (மருதம் என நினைவு) சில இதழ்களில் நின்று போனது. அதற்கு நான் செய்த நிதியுதவியைத் திருப்பித் தந்து விடுகிறேன் என ஜெயமோகன் எனக்கு எழுதிய மின்னஞ்சலில் எனக்கு முதலில் அவர் மீது மதிப்பு வந்தது. இதை ஜெயமோகன் குறித்து நல்லவிதமாகவே குறிப்பிடுகிறேன். அதன் பின்னர்அவர் நடத்திய சொல் புதிது இதழில் இருந்து அவர் பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டி ஆதரித்து இருக்கிறேன். அவருடைய 2015 அமெரிக்கப் பயணத்தின்போது நியூ ஜெர்ஸியில் அவர் கூட்டம் நடக்க நான் செய்தவை குறித்தும் பின்னர் தரவுகளுடன் பார்ப்போம்.


அமெரிக்காவிற்கு எந்த எழுத்தாளர் வந்தாலும் இயன்றால் சந்திப்பதும், அவர்கள் வருகைக்கு ஏதும் உதவி தேவையென்றால் இயன்றால் செய்வதும், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி செய்யச் சொல்லி நம்பகமான நண்பர்களிடம் இருந்து வருகிற வேண்டுகோள்களுக்கு இயலும்போதெல்லாம் செவிசாய்ப்பதும் என்றே நான் இருந்து வருகிறேன். அவை குறித்தெல்லாம் எங்கும் நான் வெளிப்படையாக எழுதிக் கொள்வதில்லை. உதவி பெற்றவர்கள் அவர்களாகக் கூறினால் உண்டுஅதனால் கடவுள் புண்ணியத்தால், ஜெயமோகனிடம் இல்லை, எந்த எழுத்தாளரிடமும் நெருக்கம் எனக் காட்டிக் கொண்டு எதையும் நிறைவேற்றிக் கொள்கிற தேவையும் எனக்கு இல்லை.


ஜெயமோகனுக்கு இப்போது இருக்கிற சீடர் குழாம் அமைவதற்கு முன்னர், அவருடன் நண்பர்களும் நானும் எண்ணும் எழுத்தும் இணைய மடலாடற் குழுமத்தில் கழித்த நாட்கள் மிக இனிமையானவைஅந்த நினைவுகளின் நன்றியுணர்வின் பொருட்டே ஜெயமோகனைப் போல் பொய்கள் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்கிற எழுத்தும் எண்ணமும் குழுமத்தின் நிறுவனரே நான் தான். என்னையே அறியாதவர் அந்தக் குழுமத்தில் சேர்ந்ததும் அதில் என்னுடன் கேலி, கிண்டல், கோபம், வாதம், பிரதிவாதம் என உரையாடியதற்கு எல்லாம் சுகா, பாவண்ணன், கோபால் ராஜாராம், துகாராம், வழக்குரைஞர் கே.எம். விஜயன், என் இணைய நண்பர்கள், இன்னும் பல எழுத்தாளர் நண்பர்கள் என அக்குழுமத்தில் உறுப்பினராக இருந்த பல பார்வையாளர்கள் உண்டு. ஆனாலும், ஜெயமோகனைக் குறித்து எழுதும்போது மிகவும் ஜாக்கிரதையாக நட்பு என்கிற பதத்தை அவர் இத்தகைய அபவாதங்களைச் சொல்லக் கூடியவர் என்பதாலேயே உபயோகிப்பதில்லை. ஆனாலும், ஜெயமோகனால் என் மீது அபவாதம் சொல்லாமல் இருக்க முடியவில்லை


இரண்டு:

 ஜெயமோகன் தான் எவ்வளவு பெரிய எழுத்தாளர் எனத் தன்னைப் பற்றி நினைத்தும் எழுதியும் கொள்பவர். அவர் கருத்தின்படி இலக்கியச் செயல்பாட்டைத் தனிநபர் வம்பாகப் பார்க்கிற நான் அவருடைய கால் தூசிக்குக் கூட சமம் ஆகக் கூடாது. மேலும், ஜெயமோகன் கருத்தின்படி, நான் அவருக்கு நெருக்கமும் கிடையாது. ஆனாலும் அருண்குமார் என்பவர் என்னைப் பற்றிக் கேட்டதும், ஜெயமோகனால் 4 பத்திகள் என்னைப் பற்றிப் பல பொய்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஜெயமோகன் அடைகிற உணர்ச்சிகரத்துக்கும் பதட்டத்துக்கும் இதுவே மிகச் சிறந்த உதாரணம். நெருக்கம் இல்லாதவர்களைப் பற்றியே நிறைய பேசுகிறீர்களே ஜெயமோகன்?


டிசம்பர் 9, 2007-ல் எழுத்தும் எண்ணமும் இணையக் குழுமத்தில் நான் ஜெயமோகனுக்கு எழுதிய மடல் ஒன்றைப் பாருங்கள்: ஜெயமோகன் எப்படிக் கேள்வி கேட்டு வளர்ந்தார் என்று சொல்லிவிட்டு , அப்படிக் கேள்விகள் கேட்கிற சலுகையை நான் சு.ரா., கோ. ராஜாராம் ஆகியோரிடம் பெற்றிருந்தேன் என்பதையும் தெரிவித்து, ஜெயமோகனைக் கேள்விகள் கேட்டால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவேனோ என்ற ஐயத்தையும் எழுதியிருக்கிறேன். அதேநேரத்தில், அந்தக் கேள்விகள், எதையும் நிரூபிக்க அல்ல என்னை வளர்த்துக் கொள்ள என்று சொல்லியிருக்கிறேன். மாற்றுக் கருத்துகள் வரும்போது சிலநேரம் ஜெயமோகன் விரும்புவதில்லையோ என்ற யோசனையில் நான் எழுதிய மடல் இது.





மேற்கண்ட மின்மடலுக்கு எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் ஜெயமோகன் எழுதிய பதில். என் மடல் சென்ற அதே நாள் ஜெயமோகன் எழுதிய பதில் இது: அவரிடம் எதையும் எப்படியும் கேட்கலாம் என்றும் சிலநேரம் அவர் குரல் கடுமையாக ஆகிவிடுவதுண்டு என்றும், அவர் எதும் கடுமையாக என்னைச் சொல்லியிருந்தால் மன்னிப்பு கேட்டும் (அதற்கெல்லாம் அவசியமில்லை என நான் பதில் எழுதினேன்.) ஜெயமோகன் எழுதிய பதில்.


ஜெயமோகன் இப்படி எழுத்தில் சொல்லியதை நம்பி அவர் கருத்துகளை கேள்விகேட்கப் போய்தான் இப்போது இணைய வம்பர் என்றும், என்னுடைய தனிப்பட்ட குணங்கள் மேல் மதிப்பில்லை என்றும், அவர் பெயரை ஏதோ தவறாக நான் பயன்படுத்துவதாகவும் ஜெயமோகன் என்னை அவதூறு செய்கிறார்அருண்குமார்கள் போன்ற மேய்ப்பரைத் தேடுகிற ஆடுகளுக்கு இது எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்கிறேன்.

 




ஜெயமோகனின் பொய்:

ஜெயமோகன் எழுதுகிறார்பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர்.”


என் பதில்: 

திண்ணை ஆசிரியர் குழு யாரையும் யாருக்கும் அறிமுகம் செய்து வைப்பது இல்லைகோபால் ராஜாராமோ துகாராமோ என்னை ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை என்று கோபால் ராஜாராம் எழுதியிருக்கும் பதிவின் சுட்டியையும் விரிவையும் முன்னரே கொடுத்திருக்கிறேன். பின், ஜெயமோகன் எனக்கு எப்படி அறிமுகமானார்?


ஜெயமோகன் இணையத்தில் வந்த புதிதில் போரம்ஹப் என்கிற உரையாடல்தளத்தில் எழுதிக் கொண்டிருந்தார். மட்டுறுத்துதல் (மாடரேஷன்) இல்லாத அத்தளத்தில்  ஜெயமோகன் எழுத்துகளைக் குறித்துக் குறைகள் கேள்விகள் கேட்டு உரையாடல்கள் நிகழும் – அவற்றில் பங்கெடுக்காமல் படித்து வந்திருக்கிறேன். நியூ ஜெர்ஸியில் இருக்கும் நண்பர்  PG என்கிற பத்மநாபன் கணேசனுக்கு இது தெரியும். உதாரணமாக, அவர் எழுத்தில் இருக்கிற ஒற்றுப் பிழைகள், சங்க சித்திரங்கள் நூலில் இருக்கும் பிழைகள் என விவாதங்கள் நிகழும்.  அப்போதிருந்தே அங்கே நான் ஜெயமோகன் எழுத்துகளை வாசித்தது உண்டு. பின்னர் திண்ணை இணையதளம் 1999ன் இறுதியில் தொடங்கப்பட்டதையும் நான் அறியவில்லை. ஜெயகாந்தனின் 2000ஆம் வருடத்தய ஜூன் மாத அமெரிக்க வருகை ராஜாராம், துகாராம் ஆகியோரை அறிமுகப்படுத்தியதுகனெக்டிகட்டில் ராஜாராம் வீட்டுக்கு எழுத்தாளர்கள் வரும்போது அவர் வைக்கிற இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொள்ள அதற்குப் பின்னரே ஆரம்பித்தேன். அப்படி, சு.ரா., சலபதி, கண்ணன் உள்ளிட்ட பலரைச் சந்தித்து இருக்கிறேன். ஜெயமோகன் முதன்முறையாக 2009ல் தான் அமெரிக்கா வந்தார். அதனால், ராஜாராம் வீட்டில் வைத்துச் சந்தித்தன் மூலம் அறிமுகம் என்கிற பொய்யையும் ஜெயமோகன் சொல்ல முடியாது.  திண்ணை இணையதளத்திலும், திண்ணை நடத்திய உரையாடல் களத்தில் ஜெயமோகன் எழுதுவதை 2000 ஜூனுக்குப் பின்னர் வாசிக்க ஆரம்பித்தேன். உரையாடல் தளங்களில் நானும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தேன். ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும் உண்டு. உரையாடல் தளம் பலரும் பேசிக் கொள்ள உதவும் ஒரு தளம். திண்ணை ஆசிரியர் குழு  அங்கே யாரையும் எந்த எழுத்தாளருக்கும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அப்படித்தான் ஜெயமோகன் எனக்கு அறிமுகம். ஆக இது ஜெயமோகனின் முதல் பொய்.


இதே நேரம் இடையில் யாஹூ இணைய மடலாடற் குழுக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. கவனம் பெற்றன. அப்படி 2003 வாக்கில் மரத்தடி என்னும் யாஹூ இணையக் குழுமத்தில் சேர்ந்தேன். ராயர் காபி கிளப் (எழுத்தாளர் இரா. முருகன் நடத்தியது), தமிழ்-உலகம் என்கிற இணையக் குழுமங்களிலும் அப்போது உறுப்பினராக இருந்தேன்.  சேர்ந்த கொஞ்ச காலத்தில் அறியப்பட்ட இலக்கிய எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கிறஎழுத்தாளரைக் கேளுங்கள்என்கிற நிகழ்ச்சி நடத்தலாம் என்கிற என் யோசனையை ஏற்று, எழுத்தாளர் பெயர்களைச் சொல்லி அழைத்து வாருங்கள் எனச் சொன்னபோது, நான் பரிந்துரைத்த ஜெயமோகன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. என் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஜெயமோகன் மரத்தடி குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மின்மடல் கேள்விகளுக்கு மின்மடல் மூலம் பதிலளித்தார்.  அப்போது மரத்தடி யாஹூ குழுமம் மூலம் அறிமுகமான நண்பர் ஹரன் பிரசன்னா, ஜெயமோகனின் தீவிர வாசகர். ஆனால் ஜெயமோகனுடன் அவருக்கு அப்போது தொடர்பு இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு என் வழியாக ஜெயமோகன் சம்மதம் சொன்னதும், கேள்விகளை ஒருங்கிணைத்து ஜெயமோகனிடம் இருந்து பதில்களைப் பெற்றுப் பகிர்கிற வேலையைச் செய்ய அவர் ஆசைப்பட்டுக் கேட்டார். அதன்படியே நடந்தது. இந்தக் கேள்வி பதில்கள் பின்னர் புத்தகமாகவும் வந்தன. இன்றுவரை ஜெயமோகன் தளத்திலேயே நான் அப்போது கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் உள்ளன. அவற்றின் சில சுட்டிகள்: https://www.jeyamohan.in/109/ https://www.jeyamohan.in/110/ https://www.jeyamohan.in/112/ https://www.jeyamohan.in/97/


இவற்றில் இருந்து ஜெயமோகன் இந்தக் காலகட்டத்திலேயே என் இலக்கிய வேண்டுகோள்களை ஏற்றுச் சம்மதிக்கிற அளவுக்கான தொடர்பிலும் இருந்தார் என்பது புலனாகிறது அல்லவா?


என்னுடன் ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொதுவெளி உரையாடல்கள் மட்டுமே என ஜெயமோகன் சொல்லியிருக்கிற பொய்க்கு மாற்றான பல ஆதாரங்களில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.


நவம்பர் 27, 2007ல் ஜெயமோகன் எனக்குத் தனிப்பட எழுதிய பின்வரும் மின்னஞ்சல் அவர் கணினி தொழில்நுட்பப் பிரச்னை குறித்து உதவி கேட்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஜெயமோகன் தளம் உருவாகி அவர் தனக்குப் பின்னால் ஆள் பலத்தைச் சேர்த்துக் கொள்ளாத காலம் அது. அப்போதெல்லாம் எந்தப் பிரச்னை என்றாலும் என்னைப் போன்றவர்கள்தான் நினைவுக்கு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அணுக்கமாக இருந்ததாக ஜெயமோகன் சொல்லிக் கொள்கிற கோ ராஜாராம், துகாராம் ஆகியோரிடம் இதை அவர் கேட்டிருக்கலாமே? அதிகம் தெரியாத என்னிடம் ஏன் கேட்டார் என அருண்குமார்கள் ஜெயமோகனைக் கேட்பார்களா?











ஜெயமோகன் ஜனவரி 27, 2008ல் எனக்கு எழுதிய மடல் கீழே. என் மிஸ்டு காலைப் பார்த்துவிட்டுப் பொறுப்பாக தன் விடுமுறை விஜய விவரங்களையும் பகிர்ந்து கொண்டு, தகவல் தெரியப்படுத்துகிறார். என்னுடன் பொதுவெளி உரையாடல்கள் மட்டுமே என்கிற பொய்க்கு மாற்றாக ஜெயமோகன் என்னுடன் தொலைபேசியிலும் உரையாடுகிறவராக இருந்திருக்கிறார் என்ற உண்மையை அவரின் இம்மடல் காட்டுகிறது.











நான் நடத்திய எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல்கள் ஜெயமோகனுக்கு படைப்பூக்கம் தந்தன. அவரின் பல கட்டுரைகள் அக்குழும உரையாடல்கள் வழி பிறந்தவை. ஓர் உதாரணமாக,  ஜெயமோகன் எழுதி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட தொப்பித் திலகம் போன்ற பகடி கட்டுரைகள் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதப்பட்டவைதான். அப்படி அந்தக் கட்டுரை சர்ச்சை ஆகி, ஜெயமோகன் மீதான அக்கறையில் சுகாவுக்கு நான் எழுதிய மடல் ஒன்றுக்கு ஜெயமோகன் எழுதிய பதில் கீழே. மார்ச் 11, 2008 அன்று ஜெயமோகன் அக்கட்டுரைக்காகத் தாக்கப்பட்டபோது, பிப்ரவரி 16, 2008ல் ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்கிறது என்ற புகாரை எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் விகடனுக்கு அனுப்பிய பிறகு (அதில் நானும் கையெழுத்திட்டேன்), பாதுகாப்புக்காக ஜெயமோகன் சிலகாலம் வீட்டுக்கு வெளியே இருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பது பொதுவில் யாருக்கும் தெரியாது. அந்தச் சூழ்நிலையிலும் ஜெயமோகன் யாரைச் சந்திக்கப் போகிறேன் என்று எனக்கு எழுதியிருப்பதைப் பாருங்கள். நெருங்கிய தொடர்போ, நட்போ இல்லாதவர்கள் எல்லாரிடமும் ஜெயமோகன் இப்படித்தான் சொல்லிக் கொள்வாரா என்ற கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். பிரச்னை தீவிரமானால் திரைத்துரையை விட்டே விலகி விடுவதான தன்னுடைய தனிப்பட்ட முடிவையும் பகிர்ந்து கோண்டிருக்கிறாரே எனக் கேட்கிறீர்களா, ஆமாம், இந்த அளவுக்குத்தான் ஜெயமோகனுக்கு நெருக்கமாக இருந்தேன். ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்தி எந்த தனிப்பட்ட ஆதாயமும் அடைந்ததில்லை. அவருடன் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் வந்த போதும், அவர் மீது எப்போதும் அவர் ஒரு கரிசனமும் நல்லெண்ணமுமே மிஞ்சும். “எவ்வளவு பட்டாலும் உங்களுக்குப் புத்தி வராதுஎனச் சில நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட முறையில் என்னைக் கிண்டல் செய்வதும் உண்டு.











இன்னொரு ஆதாரமாக, விகடனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஜெயமோகன் தளத்திலேயே https://www.jeyamohan.in/456/ என்கிற சுட்டியில் இப்போது இருக்கிறது. அருண்குமார்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தச் சுட்டி இதை எழுதுகிற இந்த நேரம் வேலை செய்கிறது. பின்னர் வேலை செய்யவில்லையெனில், ஜெயமோகன் அவர்களை அணுகிக் கேட்கவும். எதற்கும் இருக்கட்டும் என திரைச்சொட்டும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லாததை எழுதினேன் என்ற குற்றச்சாட்டு வருமெனில்.

 

ஜெயமோகன் நவம்பர் 5, 2008-ல் எனக்கு அனுப்பிய மடல் திண்ணை தளத்தில் இருந்து ஒரு கட்டுரையை எடுத்துத் தரச் சொன்னது. அதை எடுத்துத் தந்து அவர் எனக்கு நன்றி மடலும் அனுப்பினார். ஓர் உதாரணமாக ஜெயமோகனின் முதல் மடலை மட்டும் கொடுக்கிறேன். திண்ணை நடத்துகிற கோ. ராஜாராம், துகாராம் மூலம் நான் அறிமுகமாகி இருந்தால், ஜெயமோகன் இதை ஏன் அவர்களிடமே கேட்கவில்லை. அவர்களிடம் கொள்ளாத உரிமையில் என்னிடம் கேட்கிறார் என்று அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் அருண்குமார்கள் யோசிப்பார்களா?. ஜெயமோகன் என்கிற எழுத்தாளர் என் மீது வைத்த நம்பிக்கையாலும் மதிப்பாலும் இப்படி அவர் சிறு உதவிகளையும் நம்பிக் கேட்டால் அதைச் சிரமேற்கொண்டு செய்து கொடுக்கிறவனாக நான் இருந்தேன் என்பதற்கு இது ஓர் உதாரணம்.











ஜூன் 5, 2009ல் நண்பர் சுகா எனக்கு எழுதிய மடல் கீழே. இலக்கியச் செயற்பாட்டைத் தனிநபர் வம்பாக மட்டுமே நான் எடுத்துக் கொள்வதாக இப்போது எழுதும் ஜெயமோகன்,  நான் ஜூன் 20009 வார்த்தை இதழ் தலையங்கத்தை வெகு சிறப்பாக எழுதியிருந்ததாக சுகாவிடம் சொன்னது.


 







எழுத்தும் எண்ணமும் இணையக் குழுமத்தில் தமிழில் பதிப்புத்துறை, புத்தக விற்பனை குறித்த உரையாடல் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஜெயமோகன் எழுதிய மடலில் குறிப்பிட்டது. பதிப்புத்துறை, புத்தக விற்பனை குறித்த என் கனவுகள், திட்டங்கள் குறித்துத் தனக்கு முழு உடன்பாடு என்கிறார் ஜெயமோகன். ஆனால், நான் கனவு வேகத்தில் இருப்பதாகவும் சொல்கிறார். ஆக என்னை அதிகமும் தெரியாது என இப்போது சொல்லிக் கொள்கிற ஜெயமோகனுக்கு 2007ல் என் கனவுகள், திட்டங்கள் தெரிந்திருந்ததும், அவற்றில் அவர் முழு உடன்பாடு கொண்டு, என்னை மேம்படுத்த மேலும் கருத்துகள் சொன்னதும் பொய்யா என அருண்குமார்கள் ஜெயமோகனைக் கேட்பார்களா?















எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நடைபெற்ற இயல் விருது குறித்த உரையாடல் ஒன்றில் நான் திருமதி அருண்மொழி அவர்களை அருண்மொழி ஆச்சி என விளித்து எழுதுவதை ஜெயமோகன் அனுமதித்ததும், நான் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை என எழுதியதும் கீழே. இதே ஜெயமோகன் இப்போது வந்து என்னைப் பற்றி மோசமாகச் சொல்கிற பொய்களைக் குறித்துக் கேட்கவும் ஆதரிக்கவும் அருண்குமார்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஆச்சரியமில்லை. ஜெயமோகனின் இந்த மடல் ஜனவரி 3, 2008 தேதியிடப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஜெயமோகன் சர்ச்சைகளில் ஈடுபட்டுப் பெயரைக் கெடுத்துக் கொள்ளும்போது, வேண்டாமே என்று அவர்பால் அக்கறையுடன் சொல்கிற நபர்களில் ஒருவனாக நான் இருந்தேன் என்பதும், அதை அவர் அனுமதித்து இருக்கிறார் என்பதும், நான் சொல்வது சரி என ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதும் பின்வரும் மடலில் தெரியவரும்.


















ஜூன் 1, 2008ல் இதே ஜெயமோகன் என்னுடையஆட்டியூட் வெரி குட்என எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதிய மடல் கீழே. அவரின் ஒரு கட்டுரையைத் தமிழில் எவரும் வெளியிட மாட்டார்கள் என்பதற்கு நான் எழுதிய பதிலுக்கு ஜெயமோகன் கொடுத்த சர்டிபிகேட் இது. இதே ஜெயமோகன் தான் இப்போது அவர் கருத்துகளுக்கு எதிர்க் கருத்து சொல்லும்போது வம்பர் என்கிறார் என்பதும் ஆச்சரியமில்லை.















ஜெயமோகன் என்னைக் கிண்டல்/கேலி செய்கிற அளவுக்கு இருந்திருக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணமும் தந்துவிடுவோமே. ஜனவரி 27, 2008ல் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் ஜெயமோகன் எழுதிய மடல் கீழே: சிவகுமார் வெள்ளைக்காரிகளை சப்ளை செய்கிறாரா சினிமாவுக்கு என ஜெயமோகன் என்னிடம் ஜாலியாகக் கேட்டிருக்கிறார். இப்படி என்னிடம் பேசுகிற உரிமை அவருக்கு இருந்தது.



ஆக, இணையத்தில் மூலம் தெரியவந்த பலரில் நானும் ஒருவர், ஹலோ சொல்லும் அளவே என்னை அறிமுகம், அமெரிக்கா செல்லும்போது ஒரே முறைதான் என்னைப் பார்த்திருக்கிறேன் என ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்வதெல்லாம் பொய் என்பதற்கு இவை சாட்சி.


ஜெயமோகனின் அடுத்த பொய்:

திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன்நேரில் பார்க்காமலேயே.”


என் பதில்

திண்ணை ஆசிரியர் எனக்கு மட்டுமல்ல யாருக்கும் முன்னுரை எழுதித் தரும்படி எந்த எழுத்தாளரையும் கேட்டுக் கொண்டதில்லைகோபால் ராஜாராமும் இதை இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். இது ஜெயமோகனின் பொய்க்கு முதல் ஆதாரம்.


ஜெயமோகன் சொல்கிற இந்த என்னுடைய கட்டுரைத் தொகுதிஅட்லாண்டிக்குக்கு அப்பால்ஜனவரி 2005-ல் வெளிவந்தது. அதில் ஜெயமோகன் என் எழுத்துகள் குறித்தும், என்னைப் பற்றியும் எழுதியிருக்கிற முன்னுரையை எடுத்துப் போட்டாலோ, இப்போது ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்வதற்கு எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது எனத் தெரியவரும்.  அவரின் அந்த முன்னுரையை அப்படியே எடுத்து இணையத்தில் இடுகிற எதிர்கால திட்டமும் இருக்கிறது.  முதல் பதிப்பில் 1200 பிரதிகள் பதிப்பிக்கப்பட்ட அந்த நூல் இப்போது விற்பனையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. நான் சமீபத்தில் நண்பர்களுக்காகத் தேடியபோது கிடைக்கவில்லை.

 

அந்த நூலின் என்னுரை பகுதியில் நான் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்.


“1997க்கு அப்புறம் என் ரசனை, அறிவு, வாசிப்பு ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளில் ஜெயமோகன் எழுத்துகளுக்கு முக்கிய இடம் உண்டு.  “அவரைப் போல எழுத முடியவில்லையேஎன்று நான் ஏக்கப்படுகிற சில எழுத்தாளர்களில் ஜெயமோகனும் ஒருவர். அவருடைய வாசிப்பின் விரிவு நான் பொறாமைப்படுவது. என் முதல் புத்தகத்துக்கு முன்னுரை அளிக்க முன்வந்ததற்கு அவருக்கு நன்றிகள். கொற்றவை என்கிற தன்னுடைய புத்தகத்தை எழுதுவதில் மும்முரமாக இருந்த அவர், நான் கேட்டதும்எனக்கு முன்னுரை எழுதித் தருவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்புறம் காலம் முழுக்க உங்களை ஜெயமோகள் ஆள் என்று சொல்வார்களே! பரவாயில்லையா? என்று அக்கறையுடன் எதிர்க்கேள்வி கேட்டார். “இப்போதே அப்படித்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லைஎன்று சொன்னேன்.”

 

இதற்கான ஆதாரமான திரைச்சொட்டை நான் கைவசம் இருந்தும் இந்தப் பதிலின் நீளம் கருதி இப்போதைக்குப் பகிர்ந்து கொள்ளவில்லை. என் கட்டுரைத் தொகுதியைப் படித்தோர் இதற்கு சாட்சி.

 

இப்போதும் ஜெயமோகன் என்மீது அடுக்கடுக்காகப் பொய்களைக் கட்டவிழ்த்துவிடும்போதும், அவரிடம் கற்றுக் கொண்டதாக நான் 2005ல் சொன்னவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அவரைப் போல எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதோ தீர்ந்து போயிற்று. அவரைப் போல ஆதாரமில்லாமல் எதையெல்லாம் எழுதக் கூடாது என்றே சொல்ல இருக்கிறது.

 

திண்ணை ஆசிரியர் கேட்க ஜெயமோகன் முன்னுரை எழுதியதாகச் சொன்ன பொய்க்கு இரண்டாவது ஆதாரம் இது. கொற்றவை என்கிற தன்னுடைய நாவலை எழுதுகிற மும்முரமான நேரத்திலும் என் வேண்டுகோளுக்கு இணங்கி, நாவலை எழுதுகிற நேரத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி, ஏறக்குறைய 6 பக்கங்கள் விரிவான முன்னுரை எழுதித் தருகிற அளவுக்கு ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு இருந்திருக்கிறது என்பது புரிகிறதா அருண்குமார்களே.

 

அருண்குமார்களே, உங்கள் கேள்வியை என்னிடமே நேரடியாகக் கேட்டிருந்தால் இதையெல்லாம் தனிப்பட்ட முறையில் விளக்க்கிவிட்டுச் சென்றிருப்பேனே. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஜெயமோகனிடம் கேட்டு, அவர் வழக்கம்போல் அதிரடியாக என்னைக் குறித்துப் பொய்களைப் பொதுவில் எழுத, இப்போது நான் அவர் பொய்க்கு ஆதாரங்களாகப் பொதுவில் எடுத்துப் போடுவதால், ஜெயமோகனுக்குத் தர்மசங்கடம் அல்லவா உருவாக்கி விட்டீர்கள். அடுத்தமுறை, கொஞ்சம் யோசித்துச் செயல்படுங்கள்


ஜெயமோகனின் பொய்: 

திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள் வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர்.”

 

என் பதில்: 

ஒருவரைப் பிடிக்கவில்லையெனில் அவரைச் சிறுமைப்படுத்த அவர் ஒன்றுமேயில்லை, இன்னொருவர்தான் காரணம், இவர் அந்த இன்னொருவருடன் இருந்த உபரி என்கிற பொய்யைத் தூக்கி வீசுவது ஜெயமோகனுக்குக் கைவந்த கலை. அப்படித்தான் இங்கேயும் எனி இந்தியன் பதிப்பகம் தொடங்கியது திண்ணை.காம் என எழுதுகிறார்.

 

எனி இந்தியன் ஆன்லைன் புத்தகக் கடை யோசனையே என்னால் முன்மொழியப்பட்டதுகோபால் ராஜாராமும் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள மறுப்புரையில் இதையே சொல்லியிருக்கிறார்.


அதை நான் நண்பர்கள் திண்ணை கோ.ராஜாராம், துகாராம், மற்றும் துகாராமின் நண்பர் பாரி பூபாலன் ஆகியோருடன் விவாதித்து அவர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. அரபு நாட்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை குடும்ப உறுப்பினர் உடல்நலம் காரணமாக விட்டுவிட்டு இந்தியா வந்திருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவை எனி இண்டியனில் சேரச் சொல்லி நான் கேட்டு அவர் சேர்ந்தார். ஜெயமோகன் சொல்வது போல முதலில் எனிஇந்தியன் பதிப்பகம் தொடங்கப்படவில்லைமுதலில் ஆன்லைன் புத்தகக் கடை தொடங்கப்பட்டது. தி. நகரில் ஒரு கடையும் வாடகைக்கு எடுக்கப்பட்டது.


பின்னரே 2005 ஜனவரியில் எனி இந்தியன் பதிப்பகம் தொடங்கப்பட்டது. பதிப்பகமும், மாத இதழும் நான்கு நண்பர்களும் கலந்து பேசிய பின்னரே முடிவாயின. பின்னர் ஏப்ரல் 2008ல் வார்த்தை இதழ் தொடங்கப்பட்டது. அதனால் ஜெயமோகன் சொல்கிற மாதிரி நான் பணம் போட்ட ஒரு பங்குதாரர் மட்டும் அல்ல. எனி இந்தியன் புத்தககடை நிர்வாகம், பதிப்பக நிர்வாகம், வார்த்தை இதழின் இணையாசிரியர் / மாத இதழ் தயாரிப்பு நிர்வாகம் இவற்றை நான் பார்த்துக் கொண்டேன். நண்பர் பாரி பூபாலன் ஆரம்பத்தில் இணையதள வடிவமைப்பைத் தொடங்கினார். தமிழ்ப்படுத்துதல் புத்தகங்களுக்கு ப்ளர்ப் எழுதுதல் ஆகியவற்றை நான் செய்தேன். பின்னர் துகாரம் கணினி மென்பொருள் எழுதுவதை முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பாரி நிதி நிர்வாகத்தைப் பார்த்தார். கோபால் ராஜாராம் எல்லா இடங்களிலும் தேவையான உதவிகள் செய்தும் ஆலோசனைகள் சொல்லியும் வந்தார். வார்த்தையின் இணையாசிரியராக நான் மாதாந்திரத் தலையங்கமும் எழுதினேன். வார்த்தை முதல் இதழ் வெளியீட்டு விழாவுக்கு ஜெயகாந்தன் எங்கள் அழைப்பின் பேரில் வந்து சிறப்பித்தார்.

 

வார்த்தை முதல் இதழில் தலையங்கத்திலேயே நான்இதழ் ஆரம்பிப்பதன் சவால்களை மென்று கொண்டிருந்தபோது ஊக்கம் அளித்தார் ஜெயமோகன். அவருக்கும் உதவுகிற நண்பர்களுக்கும் நன்றிஎனக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

ஜெயமோகனுக்குள் அவரை மீறி வேலை செய்கிற குரூரம் ஒன்று இப்படித்தான் அடுத்தவரின் பங்களிப்புகளை அவர் நன்றாக அறிந்திருந்தாலும் ஒருவரைப் பிடிக்காவிட்டால் தொடர்ந்து சிறுமைப்படுத்தி எழுதிவரும். அதைச் சுட்டிக் காட்டவே ஜெயமோகன் ஏற்கனவே நன்கறிந்த இவற்றை மீண்டும் பதிவு செய்கிறேன்


ஜெயமோகனின் அடுத்த பொய்: 

அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.”


என் பதில்

ஜெயமோகனை பிரசன்னாவுடனும் சுகாவுடனும் சேர்ந்து சென்னை உட்லண்ட்ஸில் முதலில் சந்தித்தேன். அப்போது அவர் நான் கடவுள் படத்துக்காக எழுதுவதற்காக அங்கே தங்கியிருந்தார். மதியச் சாப்பாட்டை உட்லண்ட்ஸில் உள்ள ஹோட்டலில் அவருடன் சாப்பிட்டோம். ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரைச் சந்திக்க வந்த சுகாவை ஜெயமோகன் அறிமுகப்படுத்தி வைத்தார்இதற்கான ஆதாரமாக சுகாவின் மின்னஞ்சலையே இப்பதிவில் இதற்கு முன்னால் கொடுத்திருக்கிறேன்.

 

என்னுடைய 2008 இந்தியப் பயணத்தில் ஜெயமோகனையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்தேன். இதற்கான ஆதாரமாக மே 22, 2008ல் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மின்மடலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.








பின்னர் ஜெயமோகன் 2009ல் முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது அவரை நியூ ஜெர்ஸியில் சந்திக்க இயலாது என்பதால், கனெக்டிகட் சென்று கோ. ராஜாராம் வீட்டில் ஜெயமோகனையும் . முத்துலிங்கம் ஐயாவையும் சந்தித்தேன்.

 

அப்புறம், 2015ல் ஜெயமோகனின் அமெரிக்கப் பயணத்தில் பாஸ்டன் பாலாஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நியூ ஜெர்ஸியில் கூட்டம் ஏற்பாடு செய்ய உதவி செய்து ஜெயமோகனைப் பேசவைத்தபோது  சந்தித்தேன்.

 

இப்படி என் நினைவுகளிலேயே, ஜெயமோகனைக் குறைந்தது 4 முறை சந்தித்து இருக்கிறேன். அதில் ஒரு சந்திப்பில் அவர் குடும்பத்தினரையும் சந்தித்து இருக்கிறேன்.

 

2008 இந்தியச் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா போய் சேர்ந்துவிட்டீர்களா என ஜெயமோகன் எனக்கு எழுதிய மடலும் இருக்கிறது.

 

ஆனால் என்னை அமெரிக்காவில் ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவே சந்தித்து இருக்கிறேன் என்கிற பொய்யை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஜெயமோகனால் மட்டுமே மனதறிந்து சொல்ல முடியும்.


யோசிக்க இடைவெளி:

 சரி, இப்போது கொஞ்சம் இடைவெளி விட்டு யோசிப்போம். இதுவரை இதைப் படித்து வந்த உங்களுக்கு நான் சொல்வதைப் பார்த்தால், எனக்கும் ஜெயமோகனுக்கும் இடையே உரையாடல்கள், சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல உறவும், நெருங்கிய தொடர்பும் இருந்ததாகத் தெரிகிறதல்லவா.  ஆக, ஜெயமோகன் எவ்வளவு பச்சைப் புளுகர் என்பதை நிரூபிக்க இவை மட்டுமே கூட போதும். ஆனாலும் அவரின் மற்ற பொய்களையும் பார்த்துவிடுவோம்.

 

தேவைப்படும்போது நெருங்கிக் கொள்வதும் தேவைப்படாத போது ஆளையே தெரியாது என்பதும் ஜெயமோகனின் இயல்பு. ஆனாலும், ஜெயமோகன் விஷயத்தில் நானாகத்தான் அவரிடம் இருந்து இடைவெளியை வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பின்னால் வருகிறேன்.

 

அப்படி நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெயமோகனுடன் முதல் பெரிய கருத்து வேறுபாடு எப்போது வந்தது.

 

வார்த்தை முதல் இதழில் எழுதுகிற படைப்பாளிகளின் பெயரை இணைய விளம்பரத்தில் வெளியிடும்போது, பெண் படைப்பாளிகள் பெயரை முதலில் வெளியிட்டு இருந்தோம். Ladies First என்கிற நாகரீகம் காரணம். லதா ராமகிருஷ்ணன், சல்மா, தமிழச்சி பெயர்கள் முதலில் இடம்பெற்று இருந்தன. உடனே நாங்கள் சமரசம் செய்து கொண்டதாகக் கருதி, அவர் தளத்தில்கனிமொழி வணக்கம்என்ற கட்டுரையை பிப்ரவரி 4, 2008-ல் எழுதினார். ஜெயமோகனின் அந்தக் கட்டுரையின் முகவரி: https://www.jeyamohan.in/231/

 

அந்தக் கட்டுரையில் கூட என்னை இப்போது தெரியாது என்கிறவர், நண்பர் என்றே விளித்து எழுதியிருப்பதைக் கீழே காண்க.





நான் இதற்கு ஒரு பதிலை என் வலைப்பதிவில் எழுதிய பதில் இந்தச் சுட்டியில் இருக்கிறது. http://pksivakumar.blogspot.com/2008/02/blog-post.html இந்த விரிவான பதிலில் சொன்ன பல விஷயங்களை நான் இந்தப் பதிவிலும் சுருக்கமாகச் சொல்லியிருப்பதைக் காணலாம். மேலும், அவர் சொல்வதுபோல சல்மாவின் பெயரும் தமிழச்சியின் பெயரும் முதலில் இல்லை. பெண்களின் பட்டியலிலும் லதா ராமகிருஷ்ணனின் பெயர் முதலில் இருந்தது என்பதை இந்தப் பதிலில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

 

பிப்ரவரி 4, 2008 ஆம் தேதி கனிமொழி வணக்கம் என்கிற கட்டுரையை எழுதுவதற்கு முன் பிப்ரவரி 3, 2008 அன்று இதுவிஷயமாகத் தனிமடல் உரையாடல்களின் முடிவாக ஜெயமோகன் எழுதிய மடல் கீழே உள்ளது.


அதில் ஜெயமோகன் சம்மதத்துடனேயே இதழில் எழுதுகிறவர் பெயர்களில் அவர் பெயர் வெளியிடப்பட்டது என்பதையும், என் மீது கொண்ட தனிப்பட்ட நம்பிக்கையால் அவர் வார்த்தையில் எழுத ஒப்புக் கொண்டார் என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். என்னை யாரென்றே தெரியாத, என் தனிப்பட்ட குணங்கள் பலவற்றின் மீது மதிப்பு இல்லை என்று இப்போது சொல்கிற ஜெயமோகன் இந்தப் பிரச்னையின்போதும் எனக்குக் கொடுத்த நல்ல சர்டிபிகேட் இது. இதுதான் அதுவரையான பெரிய மோதல் என்னளவில்.. அதற்கப்புறமும் ஜெயமோகனிடம் நான் உட்பட எனி இந்தியன் நண்பர்கள் அனைவரும் நட்பு பாராட்டிக் கொண்டு இருந்ததும், பின்னர் அவர் படைப்புகள் சில அவர் சம்மதத்துடன் வார்த்தையில் வெளிவந்ததும் நடந்தது. ஜெயமோகன் எங்களைக் குறித்துச் சொன்ன எந்தக் குற்றச்சாட்டுக்கும் நாங்கள் அப்படிச் செய்வதற்கான காரணத்தை விளக்கிவிட்டு எங்கள் பாதையில் போய்க்கொண்டு இருந்தோம்.

 

பிப்ரவரி 3, 2008 அன்று முடிவாகப் பின்வரும் நட்பிலான மடலை அனுப்பிய ஜெயமோகனின் தோரணை, பிப்ரவரி 4, 2008 அன்று பொதுவில் கனிமொழி வணக்கம் தலைப்பிலான கட்டுரையில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். நாங்கள் பயப்படுகிறோமா, லாபம் பார்க்க ஆசைப்படுகிறோமா என்றெல்லாம் கேட்கிறார். இதே மடலில் என் நண்பர்கள் பலருடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்று சொல்லும்போது என்னையும் நண்பராகவே நினைத்துச் சொல்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

 



எனி இந்தியன் பதிப்பகமும், வார்த்தை இதழும் அவர் அபிலாஷைகள் படி நடக்க வேண்டும் என ஜெயமோகன் விரும்பி இருக்கலாம். அப்படி நடக்கவில்லை என நினைத்தபோது அவர் பொதுவில்கனிமொழி வணக்கம்: என்ற பதிவில் வைத்த குற்றச்சாட்டுகளுக்குஇணையம் நிலைத்த தன்மையைத் தந்துவிடக் கூடும், நாளை மற்றவர் இதை உண்மையென நினைக்கக் கூடுமென உணர்ந்து, நான் பொதுவிலேயே பதில் சொன்னேன்.  அதே காரணத்தினாலேயே, ஜெயமோகன் என்னைப் பற்றி எழுதுவதற்கும் நான் இப்போது ஆதாரங்களுடன் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையெனில் ஜெயமோகனின் இத்தகைய கல்யாண குணங்களை அவர் நண்பர்களாக இருந்தவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் நன்கு அறிவர்.


ஜெயமோகனின் அடுத்த பொய்: 

என் அமெரிக்க பயணங்களில் தான் வேறு பயணங்களை திட்டமிட்டுவிட்டு அதை இணையத்தில் வெளிப்படுத்தி தன் வேறு நண்பர்களை தக்கவைக்குமளவுக்கே இருந்துகொண்டிருக்கிறார்.”

 

என் பதில்:

ஜெயமோகனுக்கு ஹலோ மட்டும் சொல்லும் அளவு அறிமுகம், இணையம் மூலம் தெரியவந்த பலரில் ஒருவன் நான் என ஜெயமோகன் சொல்வது உண்மையானால், அவர் அமெரிக்கா வரும்போது நான் வேறு பயணங்களைத் திட்டமிட்டு இருந்தால் என்ன? அவரை அது பாதிக்கக் கூடாது. இப்படி இவ்வளவு வருடம் கழித்துப் பொய் எழுத வைக்கக் கூடாது அல்லவா? அதனால் இந்தப் பொய்யையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.


சுருக்கமாகச் சொல்வதானால், ஜெயமோகனின்  2009 அமெரிக்கப் பயணத்தில் ஜெயமோகனை என் வீட்டில் தங்க வைத்து உபசரிக்கிறேன் எனச் சொல்லியோ, கவனித்துக் கொள்கிறேன் எனச் சொல்லியோ நான் அதில் இருந்து பின்வாங்கிவிடவில்லை. ஜெயமோகன் அமெரிக்கப் பயணம் குறித்துத் தெரிந்தும் நான் அவர் என் ஊருக்கு அருகில் வந்தால், என்னால் இயன்றால் நான் ஊரில் இருந்தால் சந்திக்கலாம் என்றே இருந்தேன். ஆனால், அந்தப் பயண ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாஸ்டன் பாலாஜிதான் என்னிடம் வந்து ஜெயமோகனை நியூ ஜெர்ஸியில் தங்க வைத்து, ஊர் சுற்றிக் காட்ட முடியுமா எனக் கேட்டார். என்னால் முடியாது எனச் சொல்லி அதற்கான காரணங்களையும் முன்கூட்டியே சொல்லி, அந்தப் பதிலை ஜெயமோகனுக்கும் இணைத்திருந்தேன். ஆனால், அவரை நான் திட்டமிட்டே 2009ல் இருந்து சந்திக்கவில்லை என்ற பழியை, பொய்யை ஜெயமோகன் 2009ல் இருந்தே சொல்லிவருகிறார். ஆனாலும் இந்த 2009 பயணத்தில் அவரை கனெக்டிகட் மாநிலம் சென்று கோபால் ராஜாராம் வீட்டில் சந்தித்தேன்.

 

இனி விவரமாக மேற்சொன்னதன் ஆதாரங்களைப் பார்ப்போம்.

 

ஏப்ரல் 12, 2009ல் பாஸ்டன் பாலாஜி (நண்பர்கள் இவரை பாபா என்று அழைப்போம்) பின்வரும் மின்மடலை அனுப்பி இருந்தார். அதில் ஜெயமோகன் 2009 ஜூலை முதல் 2009 செப்டம்பர் வரையான அமெரிக்கப் பயணத்தைத் திட்டமிட்டு இருப்பதாகவும், நான் அவரை நியூ ஜெர்ஸி பயணத்தில் தங்கவைத்து, கவனித்துக் கொள்ள முடியுமா எனவும் கேட்டிருந்தார். இதில் கவனியுங்கள், நியூ ஜெர்ஸிக்கு எந்தத் தேதியில் வருவார் என்கிற விவரமும், ஏன் எந்தத் தேதிகளில் இருந்து எந்தத் தேதிகளில் அமெரிக்காவில் இருப்பார் என்கிற விவரம் எதுவும் இல்லை.













இதற்கு நான் பின்வரும் பதிலை பாஸ்டன் பாலாஜிக்குஜெயமோகனை பதிலில் காபி செய்துஅனுப்பினேன். அதன் வடிவம் கீழே:

 

என்னுடைய இந்த மடலில் ஜெமோவின் அமெரிக்க விஜயத்தை கலிபோர்னியாவில் இருக்கும் திருமலை ராஜன் ஏற்பாடு செய்கிறார் என்பதை நான் சிலநாட்கள் முன்பு துகாராம் மூலம் மகிழ்ச்சியுடன் அறிந்தேன். ஜெயமோகன் மாதிரியான தமிழ் எழுத்தாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைப்பதும் அவர்களைக் கௌரவப்படுத்துவதும் நம் கடமை. ஆனால் என்னுடைய அப்போதைய வேலை நிலை, அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த வேலையிழப்பு / பொருளாதார நிலை (2008-ல் அமெரிக்கப் பொருளாதாரம் வாங்கிய பெரு அடி உங்களுக்கு இப்போது நினைவு வர வேண்டும்), வாராவாரம் என் மகனுடன் வெளியூருக்குச் சதுரங்கப் போட்டிகளுக்குச் செல்ல வேண்டி இருக்கிற நிலை ஆகியவற்றால் என்னால் ஜெயமோகனை நியூ ஜெர்ஸியில் பார்த்துக் கொள்ள இயலாத நிலை என்றும் எழுதியுள்ளேன். அதுமட்டுமல்ல, நியூ ஜெர்ஸியில் ஜெயமோகன் என்னுடன் தங்குவது எனக்குப் பெருமைதான் ஆனாலும் கோடை விடுமுறை காலத்தில் மகனின் சதுரங்கப் போட்டிகள் நிறைய நடைபெறும். அவற்றுக்கு நாங்கள் ஊர் ஊராகப் போவது வழக்கம் எனவும் எழுதினேன். மேலும் ஜெயமோகனின் நிகழ்ச்சியை வாரயிறுதியில் வைத்துக் கொண்டாலேயே மக்கள் வருவார்கள் எனவும், நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு உதவக் கூடும் எனவும் எழுதினேன். அதுமட்டுமில்லாமல் என்னால் ஜெயமோகனை நியூ ஜெர்ஸியில் சந்திக்க இயலாவிட்டால், என் நேரத்தைப் பொறுத்து அவரை நியூ ஜெர்ஸிக்கு வெளியேயும் சென்று சந்தித்துக் கொள்கிறேன் என எழுதினேன்.

 

வாசகர்களுக்கு மேலும் விவரங்கள்: என் மகன் சதுரங்கம் ஆட ஆரம்பித்த பின்னர், 2003க்கு அப்புறம் நான் நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியின் தன்னார்வலர் வேலைக்குச் செல்லவில்லை மட்டுமல்ல ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கே செல்லவில்லை. 2014ல் நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது, பழைய உறுப்பினர்களை அழைத்து, என்னை வெள்ளி விழா மலர்க் குழுவில் இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டபோதே எனக்கு நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களுடன் மீண்டும் தொடர்பு உண்டானது. 2014-ல் என் மகன் கல்லூரிக்கும் செல்ல விருந்தார். சதுரங்கம் ஆடுவதை பள்ளி இறுதி ஆண்டுகளில் கல்லூரிக்குத் தயார் செய்ய குறைத்துக் கொண்டார்.  சில நாட்களுக்கு முன், என் மகள் அவரின் 10, 11, 12 ஆம் பிறந்த நாட்களை மகன் சதுரங்கம் ஆடிய பிற ஊர்களின் ஹோட்டல் ரூம்களில் கொண்டாடி இருக்கிறோம் என நினைவுபடுத்தினார். 2004ல் இருந்து 2012 வரை வருடத்தில் குறைந்தது 40+ வாரவிடுமுறைகள் மகனின் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்வோம். 2006ல் என் அம்மா அமெரிக்காவுக்கு வந்த போதே பாஸ்டனுக்கு அருகில் ஒரு சதுரங்கப் போட்டிக்கு வந்து ஹோட்டலில் தங்கிவிட்டுத் திரும்புவதாக இருந்தது. பாஸ்டன் பாலாஜி வற்புறுத்தலில் அவர் வீட்டில் சென்று தங்கி, நான் மகனை சதுரங்கப் போட்டிக்கு அழைத்துச் சென்றுவிட, பாஸ்டன் பாலாஜிதான் என் அம்மாவை பாஸ்டன் நகரைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்று வந்து உதவினார். பாஸ்டன் பாலாஜி அப்படிச் செய்யாவிட்டால், என் அம்மாவுக்கு பாஸ்டனைச் சுற்றிக் காட்டுகிற திட்டமே என்னிடம் இல்லை. எங்களுடன் அம்மாவும் ஹோட்டலில் தங்கி செஸ் டோர்ணமெண்டைப் பார்த்திருப்பார்கள். அதுவுமில்லாமல் பொருளாதார நிலை மந்தத்தில் என்னை மாதிரியான கன்சல்ட்டண்ட் வேலை செய்கிறவர்கள் வேலை எப்போது வேண்டுமானாலும் போகலாம், அதைத் தக்க வைத்துக் கொள்ள அலுவலக நேரத்தில் நிறைய உழைக்க வேண்டும் என இருந்தது. அமெரிக்காவில் கன்சல்ட்டண்டாக, ரிசஷன் பொருளாதாரச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

 

இந்தச் சூழ்நிலையில் ஜெயமோகனை நியூ ஜெர்ஸியில் தங்க வைக்க ஒத்துக் கொண்டு, அந்த நேரம் பார்த்து ஏதும் வெளியூர் செஸ் டோர்னமெண்ட் வந்துவிட்டால் அல்லது அவரைச் சரியாகக் கவனிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, அதனால் அவர் சங்கடப்பட்டு விடக்கூடாது, எனக்கும் குற்றவுணர்வு வந்துவிடக் கூடாது என என்னைவிடச் சிறப்பாக செய்யக் கூடிய யாருடனாவது ஜெயமோகன் தங்குவது நல்லது என நினைத்தேன். நான் ஒன்றை ஒத்துக் கொண்டு களமிறங்கினால் அதில் 100%க்கும் மேல் ஈடுபாட்டுடன் செய்து கொடுப்பேன். என்னால் 100% பங்களிக்க இயலாது எனில் அதில் களமிறங்கி அடுத்தவருக்கு ஏமாற்றம் தர மாட்டேன். இதுதான் என் இயல்பும். என்னை அறிந்தவர்களுக்கு இது தெரியும். இந்தக் காரணத்தினாலேயே இந்த மடலை பாஸ்டன் பாலாஜிக்கும் ஜெயமோகனுக்கும் அனுப்பினேன்.

 



மேற்கண்ட மடலை நான் ஜெயமோகனுக்குக் காபி செய்து அனுப்பினாலும், ஜெயமோகனுடனான இத்தனை ஆண்டு அனுபவங்களில், அவர் நான் அவரைத் தவிர்க்கிறேன் என்றே தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என உணர்ந்தேன். அதனால் உடனடியாக அதே நாளில் நண்பர் சுகாவுக்குப் பின்வரும் மின்னஞ்சலை அனுப்பினேன். இந்த மின்மடலிலேநாளைக்கு ஜெயமோகனை நியூஜெர்ஸியில் உபசரிக்க மறுத்தார் பி.கே.எஸ். என்ற அபவாதக் குற்றச்சாட்டு வரக்கூடுமென்ற பயத்தில் சாட்சியாக நான் அவருக்கு (சுகாவுக்கு) எழுதிய மடல்என்று குறிப்பிட்டு இருக்கிறேன்



ஜெயமோகன் என்னுடைய கணிப்பில் தவறவில்லை. எழுத்தும் எண்ணமும் குழுமத்திலேயே அதைக் குறிப்பிட்டார். அவர் அப்படிக் குறிப்பிட டிசம்பர் 30, 2009 மடலில் பகுதி கீழே: அம்மடலில் அவர் பிற/பிறர் விஷயங்களும் பேசியிருப்பதால், குறிப்பிட்ட பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.



என்னால் ஜெயமோகனை 2009ல் ஹோஸ்ட் செய்யத்தான் முடியவில்லை. ஆனால் அவர் நியூ ஜெர்ஸிக்கு வருகிற தேதி தெரியவந்தபோது, நான் ஏற்கனவே கோடை விடுமுறைக்கு புக் செய்துவிட்டிருந்தேன். அதனால் அவரை கனெக்டிகட் மாநிலம் சென்று ராஜாராம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்  சந்தித்தேன். . முத்துலிங்கம் ஐயாவையும் அங்கே சந்தித்தேன். பின்னர் அவர் நான் விடுமுறை செல்கிற நாளுக்கு முந்தைய இரவு நியூஜெர்ஸி வருகிறார், நண்பர் துக்காராம் வீட்டில்தான் தங்குகிறார் என அறிந்து, இரவு 10 மணிக்கு மேல் வரை துகாராம் வீட்டில் அவருக்காகக் காத்திருந்தேன். ஜெயமோகன் வர மேலும் தாமதமாகியதால் சந்திக்க முடியவில்லை. இதற்கெல்லாம் பல சாட்சிகள் இருக்கிறார்கள்.  அதனால், ஜெயமோகன் 2009ல் இருந்து இது குறித்துச் சொல்லி வருவது பொய்யன்றி வேறு அல்ல.

 

மேலும் என் விடுமுறைப் பயணம் தவிர்த்த தேதிகளில் ஜெயமோகன் நியூஜெர்ஸிக்கு வருகிறார் எனில் ஊர் சுற்றிக் காட்டுவதும் எனக்குப் பிரச்னை இல்லை என சிறில் அலெக்ஸுக்கும் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் (ஜெயமோகன் இருந்த அதே குழுமத்தில்) எழுதியிருந்தேன்ஆனாலும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து தன் வர்ஷனை, கற்பனையை எழுதுவது ஜெயமோகன் பாணி.

 

ஜெயமோகனின் மேற்கண்ட மடலுக்கு நான் எழுத்தும் எண்ணமும் குழுமத்திலேயே பின்கண்ட பதிலை எழுதினேன். அவற்றைப் படிக்க வசதியாகப் பல பகுதிகளாகக் கொடுத்திருக்கிறேன்.


















































இப்படி எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் என் மடலையும், ஜெயமோகனுக்கும் எனக்கும் ஓடிக்கொண்டிருந்த சூடான விவாதத்தையும் பார்த்த பாட்டையா பாரதிமணி பின்வரும் மடலை டிசம்பர் 31, 2009ல் எழுதினார். இதிலே பாட்டையா ஜெயமோகனையும் என்னையும் நண்பர்கள் என்றே குறிப்பிடுவதைக் காணலாம். அதை ஜெயமோகன் மறுத்து எதுவும் அங்கே எழுதவில்லை



ஜெயமோகனும் இருந்த எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் பாட்டையாவுக்கு நான் எழுதிய டிசம்பர் 31, 2009 பதிலின் விவரங்கள் கீழே பல பகுதிகளாக: ஆமாம், 2010 புத்தாண்டை எதிர்பார்த்து ஜாலியாக இல்லாமல் என்மீதான ஜெயமோகனின் பழிகளுக்குப் பொறுமையாகவும், விவரமாகவும், ஆதாரங்களுடனும் அன்றும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.






































எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் இருந்த நண்பர் டைனோபாயும் ஜெயமோகன் நினைப்பது தவறு என்று ஜெயமோகனுக்குப் பின்வரும் மடலை எழுதினார். அதை இருபகுதிகளாகத் தருகிறேன்.























இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம், பாட்டையாவிடம் மடலில் சொன்னதுபோல்தான் இருந்தேன். இருக்கிறேன். ஜெயமோகன் என்ற எழுத்தாளரை அவர் எழுத்துகள் மூலம் நெருங்கிப்படித்துக் கொண்டு, ஜெயமோகன் என்கிற தனிமனிதரிடம் ஜாக்கிரதையாக. அதனால், ஜெயமோகன் உடனான நெருங்கிய தொடர்பில் இருந்து நானாகத்தான் விலகிக் கொண்டேன் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட மடல்கள் உதவும்.  இம்மடல்கள் அனைத்தும் ஜெயமோகனும் இருந்த எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் பகிரப்பட்டவை.


ஒருவிஷயத்தில் எதிராளிக்கும்கூட சந்தேகத்தின் பலனைத் தந்து பார்ப்பதே என் இயல்பு. என்னை இத்தனை அறிந்த, என்னுடன் மின்மடல்களில் இத்தனை பழகிய, நேரில் அதற்கு முன்னே முதல் இருமுறையேனும் சந்த்தித்து இருந்த ஜெயமோகன், எங்களுக்கு இடையே இருவருக்கும் நெருக்கமான சுகா போன்ற நண்பர்கள் இருந்த ஜெயமோகன்,  நான் விளக்கியும், ஆதாரங்கள் சொல்லியும், என் நண்பர் டைனோ போன்றவர்கள் சொல்லியும், ஒரு சிறிய விஷயத்திலும்கூட ஒரு பெரிய பொய்யை இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறார்அதை நான் உணர்ந்த கணம் இனிமேல் இவரிடம் அடிபட எனக்குத் தெம்பு இல்லை என அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க, விலகி நிற்க ஆரம்பித்த கணம்.


இதற்கு இன்னொரு ஆதாரமாக ஜூன் 23, 2017ல் என்னுடைய ஜெயமோகன் கருத்துக் குறித்த பேஸ்புக் பதிவொன்றுக்கு நண்பர் அ. வெற்றிவேல் இட்ட பின்னூட்டத்துக்குப் பதிலாக இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறேன். இந்தப் பின்னூட்டம் இன்னமும் என் பேஸ்புக் பதிவில் இருக்கிறது. இந்தப் பின்னூட்டத்திலும் ஜெயமோகனைத் தூர நின்று வாசிப்பதோடு சரி எனப் பதிவு செய்திருப்பதைப் பாருங்கள்.

”ஜெயமோகனைச் சுற்றி இன்றைக்கு இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் அவர் என்ன சொன்னாலும், எழுதினாலும் ஆஹா ஓஹோ சொல்பவர்கள்தான். அவருடைய ஆசிரியர்களான சு.ரா, ஆற்றூர், நித்யா ஆகியோரிடம் விவாதித்தும், முரண்பட்டும், அவர்களின் கருத்துகளை ஏற்காவிட்டால் நிராகரித்தும் வளர்ந்தவர் ஜெமோ. அந்தச் சுதந்திரத்தை அவர்கள் அவருக்கு வழங்கி அவரை ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கு ஜெமோ அவர் ஆசிரியர்களிடம் முரண்பட்டு விவாதித்த மாதிரி அவரிடம் யாரும் முரண்பட்டு விவாதிக்க முயன்றால், ஜெமோ அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி என்பார், அவர்களுக்கு அஜெண்டா இருக்கிறது என்பார். இதை நீங்களும் நானும் நேரிலேயே பார்த்திருக்கிறோம். அதனால் ஜெமோவின் என்னை மாதிரியான நலம் விரும்பிகள் கூட அவரிடம் இதைச் சொல்வதில்லை. அவர் மனைவி சொன்னால் உண்டு. அடிபட்டுப் பலபேர் - நான் உட்பட - அவர் என் ஆசிரியர்களில் ஒருவர் என்றாலும் - தூர நின்று வாசிப்பதோடு சரி. அவர் புத்திசாலி. சீக்கிரமே இதை எல்லாம் உணரக்கூடியவர். ஆனால் இன்னும் ஏனோ உணரவில்லை. மேலும் இணையதளம் ஆரம்பித்த பின்னர் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்களை எல்லாம் தேடிப்போய் மென்மை காட்டி நட்பு கொண்டுவிட்டார். அதனாலும் யாரும் சொல்வதில்லை. மேலும் விமர்சித்தால், அவரும் அவர் சார்பாகவும் நின்று தாக்கப்போகிறவர்களுக்குப் பதில் சொல்ல நமக்கு நேரம் இருக்காது. அதனால் என்னைப் போன்றவர்கள் அவரைப் படிக்க மட்டும் செய்தபடி, போய்க்கொண்டே இருக்கிறோம். அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.எழுத்தின் வன்மையை வைத்தும், சீடர்களை வைத்தும் விரும்பியபடி இலக்கிய வரலாற்றை எழுதிவிடலாம் என்று. அரசர்களும் ஆண்டவர்களுமே இங்கே அவர்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிக்கொள்ள முடியவில்லை 🙂”


ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார்: “குரு ஒருவர்தான். ஆசிரியர்கள் பலர் இருக்கலாம்.” ஆக நான் திரும்பத் திரும்ப சொல்லியும் எழுதியும் வருவது மாதிரி, ஜெயகாந்தனே என் குரு. ஜெயமோகன் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் எனக்கு உண்டு. உதாரணமாக, கோபால் ராஜாராம் ஜெயமோகனைவிட பல மடங்கு உயர்ந்த இடத்தில் நான் வைத்திருக்கிற இன்னொரு ஆசிரியர். அதனால், ஜெயமோகன் என்னை அவரைத் தலைமேல் வைத்து எப்போதும் தூக்கக் கூடிய குருகுல சீடனாக இருப்பேன் என நினைத்து அது நடக்காமல் ஏமாந்து போயிருக்கலாம். அந்த ஏமாற்றமே இப்போது என்னைப் பற்றிய பல அவதூறுகளை அவரை எழுத வைக்கலாம். 


ஆனாலும், அவ்ரிடம் இருந்து ஒரு நல்ல படைப்பைப் படிக்கிறபோதும், அவர் பிறந்த நாட்களின்போதும், அல்லது அவரைத் தனிமடலிலோ எஸ் எம் எஸ் டெக்ஸ்டிலோ தொடர்புகொண்டு செய்திகள் ஏதும் சொல்லவேண்டிய சூழல்களின்போதும் அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். எழுத்தும் எண்ணமும் குழுமம் 2007 நவம்பர் முதல் 2013 வரை செயல்பட்டது. ஆனால் கடைசி இரண்டு ஆண்டுகளில் அவரவர் வேலைகளில் பிஸியாகிவிட, பெரிய உரையாடல்கள் இல்லை. ஜெயமோகனும் எழுத்தும் எண்ணமும் குழுமத்தை முன்மாதிரியாகக் கொண்டு, அவர் விஷ்ணுபுரம் அமைப்புக்கு அது தொடங்கியதும் தனிக்குழுமம் உருவாக்கிக் கொண்டார். அந்தக் குழுமங்களிலும் சேராமல் நான் ஜாக்கிரதையாகவே ஒதுங்கிக் கொண்டேன். அவர் நடத்துகிற எந்த இலக்கிய முகாம்களிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை. 2011 (என் தாயார் மறைவு), 2014, 2015, 2018, 2022 என என் இந்தியப் பயணங்களில் ஜெயமோகனைச் சந்திக்கவில்லை. நண்பர் சுகாவையேனும் சிலமுறைகள் சந்தித்தேன்.

 

ஜெயமோகனுடனான என்னுடைய தனிப்பட்ட கசப்பான அனுபவங்கள் அவர் எழுத்துகள், கருத்துகளை மதிப்பிடுவதில் தடையாக வந்துவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும் எனக்குண்டு.

 

 எப்போதேனும் என்ன மடல் எழுதுவேன். ஏதேனும் இலக்கிய நிகழ்ச்சிகள் (உதாரணமாக, நண்பர்களுடன் இணைந்து சென்னையில் நடத்திய பாவண்ணனைப் பாராட்டுவோம் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன்.) அல்லது அவர் எழுத்தில் பிடித்தது ஏதும் இருப்பின் சொல்லி என ஒரு வாசகனாக மடல் அனுப்புவேன். அவற்றுக்கான சில உதாரணங்கள் பார்ப்போம்.

 

உதாரணமாக, 2012ல் ஜெயமோகனுக்கு இப்படி ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன்.




அதற்கு ஜெயமோகன் இப்படி பதில் அனுப்பி இருக்கிறார். என் மகன் சதுரங்கம் ஆடுவது உட்பட என்னைப் பற்றி எல்லாவற்றையும் ஜெயமோகன் அறிந்திருக்கிறார் என இதிலிருந்து தெரியும். அவரின் இந்தப் பதிலுக்கு நான் ஒரு பதில் எழுத (மகனின் சதுரங்கம் குறித்துச் சொல்லி) , அவர் ஒரு பதிலும் எழுதினார்.





அப்புறம் 2014-ல் ஜெயமோகனின் நெருங்கிய நண்பரும் ஜெயகாந்தன் சபை சஹிருதயருமான அன்பு விபத்துக்குள்ளானது குறித்து அறிந்தபோது, அதை ஜெயமோகனுக்குத் தெரியப்படுத்தி நான் எழுத, என்மூலம் அதை அறிந்தபின் ஜெயமோகன் எழுதிய மடல் கீழே:







இவையில்லாமல் 2009க்கு அப்புறம் இத்தனை வருடங்களில், என் கவிதைத் தொகுதியை அவரின் முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன், பாவண்ணனைப் பாராட்டுவோம் நிகழ்வின் சுட்டிகள், சமயவேல் என் கவிதைகள் குறித்து எழுதியதன் சுட்டி தனிமடலில் அனுப்பியிருக்கிறேன். 2017ல் சபரிநாதனுக்கு குமரகுருபரன் விருது கொடுத்த காலகட்டத்தில், ஜெயமோகன் அழைத்துப் பேசியதற்கு நன்றி எனச் சொல்லி (எதற்கு அழைத்தார் என மறந்துவிட்டது) அவ்விருதை வாழ்த்தி எழுதியிருக்கிறேன். ஜெயமோகனைப் பற்றி எழுதிய பகடி பதிவொன்றைமற்றவர் உங்களுக்குக் காட்டும்முன் நானே அனுப்புகிறேன்என அனுப்பி வைத்திருக்கிறேன். சு.ரா. சங்க இலக்கியம் குறித்துக் கூறியது குறித்த என் கேள்விக்கு சுராவிடம் உரையாடிய உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் என தனிமடலில் எழுதியிருக்கிறேன்.  என்னால் முடிந்த அளவு நான் தொகுத்தவை இவை. ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். அவை ஜெயமோகன் எழுத்தாளர்களுக்கு உதவச்சொல்லி நண்பர்களுக்கு எழுதிய மடல்களுக்கு எழுதிய பதில்கள் போல. அப்புறம் அஜிதனின் நாவலுக்கு நான் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பை அனுப்பிய ஞாபகம் இருக்கிறது.


இவையில்லாமல் என் உதவி கேட்கப்பட்டதால் 2015-ல் ஜெயமோகன் நியூஜெர்ஸி வந்தபோது அவர் கூட்டம் நியூஜெர்ஸியில் சிறப்பாக நடக்க என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்


ஜெயமோகனின் அடுத்த பொய்:

அவருடைய அமெரிக்க இலக்கியப்பூசல்களில் என்னை இழுக்கிறார் என தெரிந்தபின் நான் அந்த எளிய அறிமுகத்தையும் தொடரவில்லை.” என்கிற பொய்யை ஜெயமோகன் 2015ன் இந்நிகழ்வை வைத்து எழுதியிருக்கலாம் என்பதால் இதையும் விரிவாகப் பார்த்துவிடுவோம்

 

என் பதில்:

ஜெயமோகன் எதை வைத்து இதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. அவருடைய 2015 நியூ ஜெர்ஸி கூட்டத்துக்கு நான் பாஸ்டன் பாலாஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க உதவிகள் செய்தபின்னர், அந்தக் கூட்டம் குறித்த ஒரு மோசமான பதிவை என்னைக் குற்றம் சாட்டும் விதமாக அரவிந்தன் கண்ணையன் எழுதினார். அதைவைத்து ஒருவேளை ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனாலும், 2009 மோசமான அனுபவத்துக்குப் பின்னரும், ஜெயமோகன் என்ற எழுத்தாளருக்கு நான் எந்த அளவு உதவினேன் என நிரூபிக்க இதையும் பார்த்து விடுவோம்.


மே 11, 2015 அன்று கலிபோர்னியாவின் திருமலை ராஜன் தன் நண்பர்களுக்கு ஜெயமோகன் மற்றும் அவர் துணைவியாரின் அமெரிக்க விஜயம் குறித்து எழுதிய மடலை பாஸ்டன் பாலாஜி டைனோபாய், கோபால் ராஜாராம், நான் உள்ளிட்ட சிலருக்குப் பார்வேர்ட் செய்திருந்தார். இதன்வழியே தான் ஜெயமோகனின் 2015 அமெரிக்கப் பயணம் குறித்து எனக்குத் தெரிய வந்தது. நான் அதற்கு எந்தப் பதிலும் எழுதவில்லை. 2009ல் பட்ட அனுபவம் போதாதா என நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

 

அதற்குப் பதில் எழுதிய டைனோபாய், ஜெயமோகன் வரவிருக்கிற 2015 ஜூலையில் அவர் இந்தியா போகவிருப்பதாகவும், வாரநாட்களில் நியூஜெர்ஸியில் இருந்ந்து ஒஹயோ மாநிலத்துக்கு வேலைக்குப் போவதால் டைனோபாய் இந்தியா போவதற்கு முன் வாரவிடுமுறையில் ஜெயமோகன் நியூஜெர்ஸி வந்தால் ஓரிரு நாட்கள் ஜெயமோகனை வெளியே அழைத்துச் சென்று காட்ட முடியும் எனவும் எழுதியிருந்தார். அதோடு சும்மா நிற்காமல், நான் (பிகேஎஸ்) நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் அல்லது தனியே ஜெயமோகனுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். நான் அப்போது நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அப்போதைய தலைவர் உஷா கிருஷ்ணகுமார் வற்புறுத்தலால் மொழி கமிட்டி உறுப்பினர் மட்டுமே. என் கல்லூரி வகுப்புத் தோழர் கல்யாண் துணைத்தலைவராக இருந்தார். இது ஒரு தன்னார்வலர் பணிதான். ஆனாலும் டைனோ போன்றவர்கள் நியூஜெர்ஸியில் தமிழ் இலக்கிய நிகழ்ச்சி என்றால் என் இலக்கியச் செயற்பாடுகளால் என் பெயரை உரிமையுடன் சொல்லி வைப்பார்கள். அப்படி இங்கே அவர் என்  பெயரை யதார்த்தமாகக்  கோர்த்து விட்டார். டைனோ இந்த மடலை மே, 16, 2015ல் அனுப்பினார். டைனோ தன் மடலில் நியூ ஜெர்ஸியில் இருந்த பத்மா அரவிந்த், அரவிந்தன் கண்ணையன் ஆகியோரையும் சேர்த்திருந்தார். பாஸ்டன் பாலாஜி அவருடைய முதல் மடலில் அரவிந்தன் கண்ணையனைச் சேர்க்கவில்லை என்பதையும் கவனிக்கவும்.

 

அதற்கு 5/17/2015 அன்று பதில் எழுதிய அரவிந்தன் கண்ணையன் அவரால் ஒருநாள் ஜெயமோகனை பிலெடெல்பியா கூட்டிச் செல்ல முடியும் என எழுதினார்.

 

நான் சரி நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் ஜெயமோகனை வைத்துக் கூட்டம் நடத்தத் தானே டைனோபாய் சொல்கிறார். நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் பாஸ்டன் பாலாஜியை கனெக்ட் செய்து வைத்து உதவலாம் என்று பாஸ்டன் பாலாஜியைக் காபி செய்து, ஜெயமோகன் அமெரிக்கா வருகிற விஷயத்தைச் சொல்லி, ஜெயமோகன் எவ்வளவு முக்கியமான தமிழ் எழுத்தாளர் எனச் சொல்லி, அவரை அழைப்பது நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்துக்குக் கௌரவம் எனச் சொல்லி, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் அவரைப் பேச அழைக்க முடியுமா எனவும் கேட்டிருந்தேன். நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தால் இயலாதென்றால் ஜெயமோகன் நியூ ஜெர்ஸி வரும்போது அவர் நண்பர்களும் ஆர்வமுள்ளவர்களும் அவரைத் தனியே சந்தித்துக் கொள்வார்கள் எனவும் எழுதியிருந்தேன். ஜூன் 30 முதல் ஜூலை 2, 2015 தேதிகளில் ஜெயமோகன் நியூ ஜெர்ஸியில் இருப்பார் என பாஸ்டன் பாலாஜி சொன்ன தேதிகளையும் குறிப்பிட்டு இருந்தேன்.

 

இந்த மின்மடலை மே 18, 2015 அன்று அனுப்பினேன்.

 

ஒருவாரம் முன்னால் தகவல் தெரிந்தால் ஜெயமோகனை நியூஜெர்ஸியில் எங்கேனும் கூட்டிச் சென்று அவரால் காட்ட இயலும் என்றும், மாலை ஆறு மணிவரைதான் அதுவும் இயலும் எனவும் பத்மா பதில் அனுப்பியிருந்தார். இவரும் டைனோபாயும் 2009 நியூ ஜெர்ஸி பயணத்தில் அவரை நியூ ஜெர்ஸியில் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்று உதவியவர்கள்.

 

பத்மாவின் மடலுக்குப் பதில் அளித்த நானும் ஞாயிறுக்கிழமைகளில் நான் என் மகளைக் கர்நாடக சங்கீத வகுப்புக்கு அருகில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், நான் வாரவிடுமுறையில் எதுவும் செய்ய இயலாது எனச் சொல்லிவிட்டேன்.

 

இதற்கு Lol எனப் போட்டுப் பதிலளித்த அரவிந்தன் கண்ணையன், அவரைத் தவிர வேறு யாரும் ஜெயமோகனைச் சந்திக்க இயலாது போலிருக்கிறது என எழுதிவிட்டு, அரவிந்தனுடைய ஒரே பிரச்னை, அவர் தந்தையார் இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் இருப்பதால், அவருக்கு எதுவும் பிரச்னை எனில், அரவிந்தன் உடனடியாக இந்தியா போக வேண்டி வரும், இல்லாதபட்சத்தில் ஜெயமோகனும் அவர் மனைவியும் அரவிந்தன் வீட்டில் ஒரு வாரவிடுமுறையில் தங்கலாம் என்று எழுதியிருந்தார்.

 

ஆக எல்லாருமே ஜெயமோகனைத் தங்க வைப்பதிலும் ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்வதிலும் அவரவர் பிரச்னைகளை 2015லும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இவையெல்லாம் அமெரிக்க வாழ்வில் எல்லாருக்கும் இருக்கக் கூடிய பிரச்னைகள். இதற்கெல்லாம் யாரையும் பழி சொல்வது என்பதே அபத்தம். 2009ல் இதே மாதிரி என் இயலாமையைச் சொன்னதற்குத்தான் ஜெயமோகன் அவரைத் தவிர்க்கத் திட்டமிட்டுச் செயல்பட்டேன் என்ற பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் இப்போது படிக்கப் போகிற ஜெயமோகன் இவர்கள் மீதெல்லாம் என்ன அவதூறு சொல்லப் போகிறாரோ?

 

இம்மடல்கள் அனைத்தும் ரிப்ளை ஆல் போட்டு ஒரு மெயில் செயினாக அனைவரும் படிக்க, பதில் எழுதும் வகையில் வந்தன. முக்கியமாக இங்கே கவனிக்கவும். அரவிந்தன் கண்ணையன் இதுவரையில் ஜெயமோகனை வைத்துக் கூட்டம் நடத்துவது குறித்தெல்லாம் எதுவும் பேசவில்லை. டைனோபாய் பிகேஎஸ் தமிழ்ச் சங்கம் மூலமோ தனியாகவோ ஜெயமோகனுடன் கெட்-டுகெதர் ஏற்பாடு செய்யலாம் எனச் சொன்னதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. நான் சொல்கிற இவற்றுக்கெல்லாம் ஆதாரமான மின்மடல்கள் என்னிடம் உள்ளன. ஆங்கில மடல்களில் உள்ளடக்கத்தைத் தமிழ்ப்படுத்தி, சுருக்கி இங்கே எழுதுகிறேன். என் மொழிபெயர்ப்பில் குறைபாடுகள் இருக்கலாம். தேவையெனில் ஒரிஜினல் மின்மடல்களைப் பொதுவில் வைக்கவும் தயார்.

 

அரவிந்தனின் கடைசி மடலை எடுத்து நான், நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கம் ஜெயமோகனை வைத்துக் கூட்டம் நடத்த முடியுமா என நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் சொல்கிறேன் என நான் அனைவருக்கும் பதில் எழுதினேன்.

 

பாஸ்டன் பாலாஜி உடனே, ஜெயமோகனின் நியூ ஜெர்ஸி வருகை தேதி தெரிந்ததும் அனைவருக்கும் சொல்கிறேன். நன்றி என என் மடலுக்குப் பதில் எழுதிவிட்டார்.

 

இடையில் நியூ ஜெர்ஸி தமிழ் சங்கத்துக்கு ஜெயமோகனை வைத்துக் கூட்டம் நடத்த முடியுமா என பாஸ்டன் பலாஜியைக் காபி செய்து மின்மடல் அனுப்பி இருந்தேன் அல்லவா? அதற்கு நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கல்யாண் பாஸ்டன் பாலாஜியையும் காபி செய்து பின்வருமாறு பதிலளித்து இருந்தார்.

 

Pk, 

 Writer Jeyamohan meeting/discussion in NJTS Chindhanai vattam will be a great honor indeed. The days you mentioned are in middle of the week. If we can bring him on a weekend  that will be great.  Can you please check his avaiability for Saturday in July?  If he can't come on a weekend due to busy schedule, we can plan how well we can utilize his presence based on his availability.  We can discuss this with mozhi/chindhanai vattam committee and come up with a plan.”

 

இந்த மடலைப் பார்த்ததும் நான் பாஸ்டன் பாலாஜிக்கு வேறு ஏதும் வழிகள் (தேதிகள்) இருக்கிறதா எனக் கேட்டு, அவரை தொலைபேசியில் அழைத்தும் பேசுகிறேன் எனச் சொல்லி மடல் எழுதினேன்.

 

பாஸ்டன் பாலாஜி, உடனே, ”Weekends are difficult. I will discuss with the coordination committee for Jeyamohan visit and let you know. But, most probably, the dates will be ஜூன் 29 முதல் ஜூலை 1 (திங்கள் முதல் புதன்)” எனப் பதில் எழுதினார்.

 

பாஸ்டன் பாலாஜிக்கு நான் இவ்வாறு பதில் அனுப்பினேன். “Baba, thanks. As you know, Tamil Sangams in USA have their meets only on weekends here. Even the office bearers cannot attend if its on weekday as its working day for all and organizing takes full day of work on the meeting day in addition to all advance work.  Let us know after discussing with the committee. Thanks and cheers.”

 

இம்மடல்களில் எல்லாம் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும் காபி செய்யப்பட்டார்கள்.  ஜெயமோகன் வருகையின் கோ-ஆர்டினேஷன் கமிட்டி யார் என்றெல்லாம் நானும் கேட்டுக் கொள்ளவில்லை. பாஸ்டன் பாலாஜியும் சொல்லவில்லை. இது ஒரு உத்தியாகக் கூட இருக்கலாம். ஜெயமோகனை அழைக்கிறவர்களோ அவரின் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட உறுப்பினர்களோ பொதுவாக நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல், பிறருக்குத் தெரிந்த பாஸ்டன் பாலாஜி போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாளைக்கு யாரும் ஏதும் சொன்னால், நாங்கள் யாரும் இவரின் உதவியைக் கோரவில்லை. பாஸ்டன் பாலாஜி எங்களுக்குத் தெரியாமல் செய்தார் என்கிற deniability வாய்ப்பு கிடைக்கிறதல்லவா? தமிழ் எழுத்தாளர்கள் விஷயத்தில் யார் என்ன உதவி கேட்டாலும் என்னால் செய்ய முயன்றால், முடிந்ததைச் செய்பவன் நான். அதனால் நான் இதைக் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

 

ஜூன் 2, 2015 அன்று நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களையும் காபி செய்து பாஸ்டன் பாலாஜி பின்வரும் மடலை அனுப்பினார். “Jeyamohan will be staying at NY/NJ, from ஜூன் 29 முதல் ஜூலை 2 (திங்கள் முதல் வியாழன்). He will be hosted by Karthikeyan in East Rutherford, NJ” நன்றாகக் கவனிக்கவும், இந்த மடலில் ஜெயமோகன் அரவிந்தன் கண்ணையன் வீட்டில் தங்குவதாக இல்லை. பின்னர் என்ன ஆயிற்றோ தெரியாது, ஜெயமோகன் அரவிந்தன் கண்ணையன் வீட்டில் தங்கியதாகக் கேள்விப்பட்டேன். நான் கேள்விப்பட்டது தவறாகவும் இருக்கலாம். மே 22, 2015 அன்றும் பாஸ்டன் பாலாஜி, டைனோபாய், துக்காராம், அரவிந்தன் கண்ணையன் ஆகியோர் இருந்த மின்மடல் செயினில் பாஸ்டன் பாலாஜி, ” This will be the NY/NJ/Philly dates: ஜூன் 29 முதல் ஜூலை 2 (திங்கள் முதல் வியாழன்) - நியு யார்க் கார்த்திகேயன்என எழுதியிருந்தார்.  இந்த நண்பர்களுக்கிடையேயான மெயில் செயினில் இடையிடையே டைனோபாய், பாஸ்டன் பாலாஜி ஆகியோர் கலாய்க்கும் மெயில்களையும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒன்றுக்கு நானும் பதில் சொன்னேன். அவை இங்கு அவசியம் இல்லாதவை என நினைக்கிறேன். அவற்றில் நான் எதுவும் முக்கியமானதை விட்டுவிட்டேன் என யாரும் குற்றம் சொன்னால், அவற்றை அடுத்த பகுதியாகப் பிரசுரிக்கிறேன்.

 

சரி, ஜெயமோகன் தேதிகளுக்கும் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத் தேதிகளுக்கும் ஒத்துவரவில்லை போலிருக்கிறது என நானும் இதை அப்படியே விட்டுவிட்டேன்.

 

ஜூன் 14, 2015 அன்று, பாஸ்டன் பாலாஜின் ஜெயமோகனின் பின்வரும் நியூஜெர்ஸி நிகழ்ச்சி நிரலை அனுப்பி அதை நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தன் உறுப்பினர்களுக்கு அனுப்ப முடியுமா எனக் கேட்டிருந்தார்.

Jeyamohan meer booked for Jul-2-2015, between 6:30 PM - 8:30PM

Address:

Bharat Sevashram Sangha of North America

3490 Route 27, Kendall Park, NJ 08824 

Contact  -- Pazhani

 

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஜூலை 2, 2015 வியாழக்கிழமை. அடுத்த நாளில் இருந்து அமெரிக்கச் சுதந்திர தின லாங் வீக்வெண்ட் ஆரம்பிக்கிறது. வெளியூர் கிளம்புகிறவர்கள் வியாழன் இரவே கிளம்புவார்கள் அல்லது வெள்ளிக்காலை கிளம்புவதற்கான ஆயத்தங்களில் இருப்பார்கள். ஜெயமோகனை 2009லும் 2015-லும் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தவர்கள் அவரின் நியூஜெர்ஸி தேதிகள் குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள், பிறந்த நாள், திருமண நாள், பொங்கல், தீபாவளிப் பண்டிகைகளையே வார இறுதியில்தான் கொண்டாடுபவர்கள். லாங் வீக் எண்டுக்கு எங்கேயாவது கிளம்பிப் போகிறவர்கள். இவையெல்லாம் ஜெயமோகனை அழைத்து வந்தவர்களுக்கும் திட்டமிட்டவர்களுக்கும் தெரியாமல் இருக்காது. ஜெயமோகன் நியூ ஜெர்ஸிக்கு வருகிற நாளில் அவருக்காகத் தனிப்பட்ட வாழ்வில் தியாகங்கள் செய்து, எல்லாரும் அவரைச் சென்று பார்க்க வேண்டும், அவரை வைத்துக் கூட்டம் நடத்த வேண்டும் என்கிற மனநிலையே இதில் தெரிகிறது.

நான் பாஸ்டன் பாலாஜிக்குப் பிறரின் நிகழ்ச்சிகளை நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கம் பொதுவாக விளம்பரப்படுத்துவதில்லை (அப்படி ஒருவருக்குச் செய்தால் எல்லாருக்கும் செய்ய வேண்டி வரும் என்பதால்) ஆனால் கேட்டுப் பார்க்கிறேன் என பதில் அனுப்பினேன். அதற்கு அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆதங்கப்பட்டுக் கொண்டார்.  என்னால் செய்ய முடிந்து நான் தட்டிக் கழிக்கிறேன் என்கிற தொனி அதில் இருந்தது. நான் உடனே பாஸ்டன் பாலாஜிக்கு இப்படி மடல் அனுப்பினேன். “Sir - NJTS do not normally e-mail other events as members complain of spam or misusing emails. I can ask them if they can email. BTW, i dont know why you rely on small orgs like NJTS, when JeMo site is so popular and read by lakhs of people as claimed by him :-) At the end of the day, i am a volunteer for Tamil Sangam. I directly put you in touch with Tamil Sangam office bearers. You did not continue to work with them to sell your points. You can also directly contact them on this. I will be happy if NJTS do anything on this. But i am neither an office bearer nor an influencing power :-) so please reach out to NJTS directly. As you started complaining about my motives, i dont want to get involved anymore.  Cheers.”

பாஸ்டன் பாலாஜி உடனே அந்தப் பொருளில் சொல்லவில்லை என வருத்தம் (மன்னிப்பு) தெரிவித்து நாகரீகத்துடன் பதில் எழுதினார்இடையில் நண்பர்களுக்கிடையேயான மெயில் செயினில், அரவிந்தன் கண்ணையன் நியூ யார்க்கில் நடைபெறும் ஒரு நிகழ்வுக்கு ஜெயமோகனை அழைத்துச் செல்லலாம் என ஜெயமோகனின் ஹோஸ்ட் கார்த்திகேயனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும். இது நடந்த நேரத்தில் அரவிந்தன் கண்ணையனுடன் எனக்குத் தனிப்பட்ட தொடர்பு இல்லைஅவர் டைனோபாய் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். என்னுடைய அலுவலக நண்பரும் அவருடைய துணைவியாரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அதனால் அந்த அலுவலக நண்பர் வீட்டுப் பார்ட்டிகளிலும் சந்தித்து இருக்கிறேன். அவருடைய வாசிப்பின் ஆர்வம், தொடர்ச்சி ஆகியன குறித்து என நல்ல அபிப்ராயமே உண்டுஅவருக்கும் எனக்கும் ஜெயகாந்தனைப் பிடிக்கும், பா.ஜ.க.வைப் பிடிக்காது என்கிற ஒற்றுமைகளைத் தாண்டி - இட ஒதுக்கீடு, திராவிட இயக்கம் மீதான பார்வை என்கிற பல விஷயங்களில் அரவிந்தன் கண்ணையனும் நானும் வேறு வேறு கருத்துகள் கொண்டவர்கள். அதே நேரம் அதிரடியாகவும் தடாலடியாகவும்  அவர் அப்போது அபிப்பிராயங்கள் சொல்லி வந்தார் என நான் நினைத்தேன். மேலும் என்னைப் போன்றவர்கள் வெல்கிறோமோ தோற்கிறோமோ நல்லதோ கெட்டதோ அமெரிக்கா என்கிற அயல்நாட்டில் தமிழ் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் இயன்ற அளவு களமிறங்கி வேலை செய்த களப்பணியாளர்கள். ஒரு சிஸ்டத்தை மாற்ற வேண்டுமானால் அந்த சிஸ்டம் உள்ளே நுழைந்து பணியாற்றுவதன் மூலமே மாற்ற முடியுமென நம்புகிறவன் நான். நான் அவரை அறிந்த காலங்களில் அவர் களப்பணிகள் எதுவும் செய்யாமல், இங்கே செய்கிறவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பார். ஒரு பேஸ்புக் உரையாடலில் அவருடனான விவாதம் பிடிக்காமல் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டோம். பொதுவில் எங்கும் தவிர்க்க இயலாமல் பார்த்தால் ஹலோ சொல்லிக் கொள்கிற நாகரீகம் கடைபிடிக்கிறோம். அரவிந்தன் கண்ணையனுடன் எனக்கு வேறெந்தத் தனிப்பட்ட பகையும் இல்லைஅரவிந்தனிடம் பேசிக்கொண்டிருந்த காலத்தில் அவருடன் எனக்கு நல்ல நட்பே இருந்தது, அவர், நான், டைனோபாய் ஆகியோர் ஒன்றாக சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தொலைபேசியில அடிக்கடி பேசிக் கொள்வோம். இந்த நேரத்தில் அரவிந்தன் கண்ணையன் நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் இணைந்து எனக்குத் தெரிந்து அதுவரை எந்தத் தன்னார்வலர் பணியையும் செய்தது இல்லை. நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் சிலவற்றில் பார்வையாளராக அவர் கலந்து கொண்டிருக்கலாம்.

 

இடையில் ஜுன் 20 அன்றோ, ஜூன் 21 அன்றோ பாஸ்டன் பாலாஜி என்னைத் தொலைபேசியில் அழைத்து, ஜெயமோகனுக்கு திட்டமிட்டு இருக்கிற ஜூலை 2, 2015 நிகழ்ச்சியில் 15லிருந்து அதிகபட்சம் 20 பேர்கள் தான் வருவார்கள் போலிருக்கிறது. நானோ நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் மூலமோ இன்னொரு 25 பேர் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்ய இயலுமா எனக் கேட்டார். ஜெயமோகன் கூட்டத்துக்கு 15 to 20 பேர் வந்தால் நன்றாக இருக்காதே என்றார். இதற்கு இடையில் அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள அவரின் பிற தமிழ்ச்சங்க நண்பர்கள் மூலமும் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் ஜெயமோகனை வைத்துக் கூட்டம் நடத்த முடியுமா எனக் கேட்டு, அங்கும் அதே பதிலைப் பெற்றிருக்கிறார் என்பதை அவருக்கு உதவிய இன்னொரு தமிழ்ச் சங்க நண்பர் பின்னால் தெரிவித்தார்.

 

சரி, நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் கேட்டுச் சொல்கிறேன் என்றேன். என் கல்லூரி வகுப்புத் தோழரும் தமிழ்ச்சங்கத்தில் துணைத்தலைவரும் இலக்கிய ஆர்வம் உள்ளவருமான கல்யாணை அழைத்து பாஸ்டன் பாலாஜி சொன்னதைச் சொன்னேன். இதே காரணத்துக்காகத்தான்வார வேலை நாளில் 15ல் இருந்து 20-பேர் வந்தால்ஜெயமோகன் என்ற பெரிய எழுத்தாளரை அவமதித்ததாக ஆகிவிடுமே என தமிழ்ச் சங்கமும் வார நாள் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனச் சொன்னார். பின்னர், 15லிருந்து 20 பேர் அவர்கள் தரப்பில் இருந்து கண்டிப்பாக வருவார்களா எனக் கேட்டுச் சொல் என்றார். அவரும் தமிழ்ச் சங்கத்தின் பிற நிர்வாகிகளுடன் பேசுகிறேன் என்றார். பாஸ்டன் பாலாஜியுடன் பேசியதில் குறைந்தது 15லிருந்து 20 பேர் நியூ ஜெர்ஸி விஷ்ணுபுரம் வாசகம் வட்டம் சார்பில் நிச்சயம் வருவார்கள் என்றார். இடத்துக்கு வாடகை எல்லாம் கொடுத்தாகி விட்டது என்றார். கல்யாண் தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் பேசி, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் சார்பாகக் குறைந்தபட்சம் எத்தனைபேர் கலந்து கொள்ள முடியும் என கணக்கெடுத்தோம். அந்த எண்ணிக்கையும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் எண்ணிக்கையும் சேர்ந்து, ஓரளவுக்குக் கூட்டம் வரும் எனத் தோன்றியது. உடனே, கல்யாண், ஜெயமோகனின் நிகழ்ச்சிக்கான அத்தனை செலவையும் நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கமே ஏற்றுக் கொள்ளும், இடவாடகையையும் நாமே கொடுத்துவிடலாம். ஆனால் கூட்டத்தை நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கமும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும் என இரண்டு பேரிலேயே நடத்தலாம் என்றார்ஆனால் கூட்டத்தை நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கமும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும் என இரண்டு பேரிலேயே நடத்தலாம் என்றார். இதை பாஸ்டன் பாலாஜியிடம் நான் சொல்ல பாஸ்டன் பாலாஜி நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் பெயரிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

 

நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கம், வரவேற்புரையோ நன்றியுரையோ இரண்டில் ஒன்றை ஆற்ற விரும்பியது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். ஜெயமோகன் அறிமுக உரையை யார் ஆற்றுவது என விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் முடிவு செய்து கொள்ளலாம் எனத் தமிழ்ச் சங்கம் சொல்லி விட்டது.  ஜெயமோகன் அவருக்குப் பிடித்த தலைப்பில் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பேசுவார். பின்னர் கேள்வி பதில்கள் எனப் பின்னர் முடிவானது.

 

பாஸ்டன் பாலாஜி வரவேற்புரையையும், நன்றியுரையையும் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கமே ஆற்றலாம் எனச் சொல்லிவிட்டு, ஜெயமோகன் அறிமுகவுரையையும் என்னை ஆற்றச் சொன்னார். வேறு யாரையாவது செய்யச் சொல் பாபா, அப்போதுதான் நான் கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க வசதியாக இருக்கும் எனச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் ஜெயமோகனை நீ நன்றாகப் படித்திருக்கிறாய். பாஸ்டனின் நான் ஓர் அறிமுகவுரை கொடுத்து அவருக்கு எந்த அளவுக்குப் பிடித்தது எனத் தெரியவில்லை. அதனால் நீ பொறுப்பாகச் செய்வாய், நீயே செய் எனச் சொல்லிவிட்டார். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்திலும் நான் அறிமுகவுரை தருவது சரியென்று சொன்னார்கள். பாஸ்டன் பாலாஜியும் நானும் தனிப்பட பேசிக்கொள்ளும்போது ஒருமையிலும் வாடா போடா என்றும்கூட பேசிக் கொள்வோம். அவர் பாதை வேறு, என் பாதை வேறு, ஆனால் அப்படி இருக்கிற பலரிடம் எனக்கு நல்ல தனிப்பட்ட உறவு உண்டு. அதில் பாஸ்டன் பாலாஜியும் ஒருவர்.

 

நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 10 நாட்கள் முன்னர், ஜூன் 20 அல்லது ஜூன் 21 அன்று பாஸ்டன் பாலாஜி SOS மோடில் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டதால், நானும் பரபரவென்று பல தொலைபேசி அழைப்புகள் தமிழ்ச்சங்க கல்யாண் உடன், பாலாஜி உடன் எனப் பேசி, கல்யாண் உள்ளுக்குள் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுடன் பேசி இந்த ஏற்பாடுகளை ஒருநாளுக்குள் செய்து கொடுத்தேன்.

 

இப்படியெல்லாம் செய்வதில் எனக்கு எந்தத் தனிப்பட்ட லாபமும் இல்லை. ஜெயமோகன் ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்தாளருக்கு நான் வசிக்கிற நியூஜெர்ஸியில் என்னால் இயன்றதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையிலேயே செய்தேன். ஜெயமோகனுடனான் 2009 அமெரிக்க விஜய அனுபவத்துக்குப் பிறகு இதையெல்லாம் நான் செய்யாவிட்டாலும் யாரும் என்னைக் குற்றம் சொல்லியிருக்க முடியாது.

 

பாஸ்டன் பாலாஜிக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. நியூஜெர்ஸி விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பழனியைத் தொலைபேசி அழைப்பில் இணைத்தார். பழனிக்கும் இந்த ஏற்பாடுகள் முழுசம்மதமே என்றார்.

 

ஜூன் 21ஆம் தேதி அரவிந்தன் கண்ணையன, டைனோபாய் உள்ளிட்ட நண்பர்கள் இருந்த மெயில் செயினில், பாஸ்டன் பாலாஜி பின்வரும் அறிவிப்பைச் செய்தார். சிந்தனை வட்டம் என்பது நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தும் அமைப்புக்குப் பெயர். நண்பர் முருகானந்தம் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்த அதை, 2010க்குப் பிறகு நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்துடன் இணைத்துவிட்டார். இந்த மின்மடல் செயினில் நியூஜெர்ஸி விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பழனி, கார்த்திகேயன் உள்ளிட்ட இன்னும் சில நண்பர்களைச் சேர்த்து பாஸ்டன் பாலாஜி இந்த மடலை அனுப்பினார்.

 

NJites,

To make the event more successful, New Jersey Tamil Sangam and Sindhanai Vattam has kindly agreed to sponsor the event. Please spread the word and bring at least three of your Tamil friends to the event. Thanks to PK Sivakumar for making this happen. I heard there are going to be snacks at the meet. Hopefully, the light refreshments will be allowed by the venue.

 

இதிலே பாஸ்டன் பாலாஜி, குறிப்பாக சொல்வதைப் பாருங்கள், Thanks to PK Sivakumar for making this happen.”

 

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பழனியும் அவர் பதிலில் முதல் வரியே, Thanks Balaji and PK Sivakumar for the support and reaching out to more tamil friends” என்று எழுதினார்.

 

அரவிந்தன் கண்ணையன் அதற்கு இப்படிப் பதில் எழுதினார்: I think we need to figure out a topic for Jeyamohan to speak. காந்தியொன்றும் அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரில்லை என்று சொல்லும் இந்தியர்கள் வாழும் நியு ஜெர்ஸியில் ஜெயமோஹன் "வரலாற்றில் காந்தியின் இடம்" அல்லது "காந்தி மிகையாகப் போற்றப்படுகிறாரா?" என்றுப் பேருரையாற்றுவது சாலச் சிறந்தது. 

I'll provide the introduction. ”

 

நன்றாகக் கவனியுங்கள். அரவிந்தன் கண்ணையன் அதுவரை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் முதலில் திட்டமிட்டிருந்த ஜெயமோகனின் நியூஜெர்ஸி கூட்டத்துக்கு எதுவும் பொறுப்பு ஏற்று இருப்பதாக எந்த மடலும் எனக்கு வரவில்லை. அப்படியான பங்களிப்புகளை அளிப்பதாக அவர் நண்பர்கள் வட்டத்தில் எழுதிய மடலிலும் குறிப்பிடவில்லை. ஜெயமோகனை ஒருநாள் பிலெடெல்பியா அழைத்துச் சென்று காட்ட முடியும் என்றும், ஒருவார விடுமுறையில் ஜெயமோகன் தம்பதியர் அவர் வீட்டில் தங்கலாம் என்றும் அவர் எழுதிய மடல் விவரங்களை முன்னரே தந்திருக்கிறேன்.  பாஸ்டன் பாலாஜி முன்னர் ஜூன் 14 அன்று ஜெயமோகன் கூட்டம் குறித்த விவரங்களைப் பகிர்ந்தபோதும் அரவிந்தன் இதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அந்த மின்மடல் செயினில் இருந்த யாருக்கும் தெரியாது.

 

இப்போது அவர் எல்லாம் ரெடியானதும் ஜெயமோகனுக்குத் தலைப்பு தான் தருகிறேன் என்கிறார், ஜெயமோகன் அறிமுகத்தை அவர் செய்கிறேன் என்கிறார். இப்படி திடீரென இடையில் புகுந்து சொல்வது குறித்து அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எனக்கு இந்த அரசியலில் நுழைகிற ஆர்வமோ, அவர் ஆசையைக் கெடுக்கும் எண்ணமோ இல்லை. அதனால் அதே மெயில் செயினில் அரவிந்தன் கண்ணையனுக்கு இப்படிப் பதில் எழுதினேன்.

 

Thanks for the suggestions. NJ Tamil Sangam decided to call it a meet with Writer JeMo and let JeMo choose any topic he likes. As per NJ Tamil Sangam practices, there will be an welcome speech and may be a thanks giving speech at the end by its office bearers. Baba from Vishnupram Ilakiya Vattam and few in NJTS asked me to give intro speech about JeMo which is a privilege but i am very fine if someone else agreeable to both Vishnupuram Ilakiya Vattam and NJTS - want to do it. In fact i suggested to Baba to let someone else do it because that way i can look into other arrangements. But Baba insisted. We plan to have a dinner and post dinner informal meet at a friend home with JeMo after the meeting. Anyone can ask any questions and spend more time with Jemo there. I will share details once its finalized. If u plan to attend that informal dinner meet, let me know so that we can include you in dinner arrangements. The next day is a holiday and so hope many can attend the informal dinner meet too. Thanks and cheers, PKS


(பலர் நியூஜெர்ஸி கூட்டம் முடிந்து கல்யாண் வீட்டில் நடக்கவிருந்த இன்பார்மல் டின்னர் நிகழ்வில் கலந்து கொள்ள திட்டமிடவில்லை – அடுத்த நாள் லாங்வீக் எண்ட் ஆரம்பித்ததால். அதனால் டின்னர் நிகழ்ச்சியில் அரவிந்தன் கண்ணையன் கலந்து கொள்வதாக இருந்தால், சொன்னால் உணவு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும் என்றே மேலே எழுதியிருக்கிறேன். இப்படிக் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்வது இங்கே வழமையாக நடப்பது. இப்படி கேட்பதன் மூலம் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதைத்தான் நான் அரவிந்தனிடம் கேட்டிருந்தேன். நியூ ஜெர்ஸி ஜெயமோகன் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்வீர்களா எனக் கேட்கவில்லை. இதை என் மடலைப் படிக்கிற யாரும் உணர முடியும். மேலும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமோ நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கமோ ஜெயமோகன் அறிமுக உரையை என்னைத் தவிர வேறு யாரைக் கொடுக்கச் சொன்னாலும் எனக்குப் பிரச்னையில்லை. அதை நான் பாஸ்டன் பாலாஜிக்கும் சொன்னேன். நான் ஜெயமோகனின் அறிமுக உரை கொடுக்காமல் வேறு யாரும் கொடுத்தால் நான் கூட்ட நிகழ்வுகளில் உதவுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும் என்றெல்லாம் விளக்கியிருக்கிறேன். ஆனால் பாஸ்டன் பாலாஜி நான் அறிமுகவுரை கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினார் எனவும் எழுதி இருக்கிறேன்.) 

 

என்னுடைய மேற்கண்ட பதிலில் பாஸ்டன் பாலாஜி, நியூஜெர்ஸி விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பழனி, கார்த்திகேயன், என்னுடைய பிற நண்பர்களான டைனோபாய் எனப் பலர் காபி செய்யப்பட்டு இருந்தார்கள். நான் சொன்னது தவறோ எனில் அவர்கள் தலையிட்டுச் சொல்லியிருக்கலாம். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்கள்.

 

அரவிந்தன் கண்ணையன் அதற்கு இப்படிக் குற்றம் சாட்டும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். A very loaded email that not so subtly hints that I am unwelcome. I am fine with it. Wish you the very best. I am sorry I did not realize that this was a NJ Tamil Sangam show all the way. 

 

அதற்கு நான் அரவிந்தன் கண்ணையனுக்கு இப்படிப் பதில் அனுப்பினேன்: Aravindan - i am sorry that you mistook my e-mail. You are most welcome. All i wanted to say as Baba mentioned earlier is that this event is sponsored and co-hosted by NJTS as agreed with JeMo trip organizers. When formal entities run an event there were decisions already agreed upon by them. And we cannot arbitrarily decide or change anything like who will do what without their approval. So please dont attribute motives to what i did not say. I am just a NJTS member and volunteer. My personal involvement in this comes from my interest in making Jemo's NJ event successful and as a person who knows people from both NJTS and JeMo trip management, i did the facilitation as they asked me. Who has to speak, what topic etc have to be decided by them. I am fine with whatever they chose to do even if it means turning down any suggestions i personally give. When one is in public life doing volunteer role, i know there will be multiple thoughts and organizers will do whats best in their opinion. So one cannot make decisions and think that we are unwelcome when its not accepted. So please dont mistake me. You are most welcome to attend the event. Those who run the event collectively decide on what to do. Pls dont mistake me for saying that in straight forward way. As i said i am very fine with whoever runs the show. Whoever giving intro speeches etc. i will be there to attend and listen to Jemo. To me honoring a writer like JeMo is more important than my own personal preferences. So pls attend the meet. We can keep our arguments and fights outside this event. Let us not taint this event with personal differences. That is my humble request. Thanks and cheers.

 

பாஸ்டன் பாலாஜி, பழனி ஜோதி, கார்த்திகேயன் ஆகியோர் இதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. அரவிந்தன் கண்ணையன் என் மடலுக்குப் பதில் அளிக்கவில்லை. பாஸ்டன் பாலாஜியை நான் தொலைபேசியில் அழைத்து அரவிந்தன் கண்ணையனை அறிமுக உரை செய்யச் சொல் எனக்குப் பிரச்னையில்லை எனச் சொன்னேன். பாஸ்டன் பாலாஜி, முடிவு செய்துவிட்டதை மாற்ற வேண்டாம், தொடர்ந்து கூட்ட ஏற்பாடுகளைச் செய்வோம் எனச் சொல்லிவிட்டார். இதற்கு ஆதாரம் என்னவென்று அரவிந்தன் கண்ணையன் கேட்கலாம்.  இந்த மடலும் என் வசம் இருக்கிறது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் என்னை நம்பாவிட்டால் இந்த மடலின் காபியை பாஸ்டன் பாலாஜியிடமும் கேட்டுப் பார்க்கலாமே.

 

ஜூலை 4, 2015 அன்று பாஸ்டன் பாலாஜிக்கு நான் எழுதிய மின்மடலில் இருந்து சில வாசகங்கள்: “2. Recently, when we arranged for NJTS meet for Jeyamohan you have kindly asked me to give intro to JM at the meet. Even though there are other qualified people like Aravindan Kannaiyan  showed interest in introducing JM speech, you had faith in me and requested me to do it as you said that I would write a balanced view - (though Aravindan Kannaiyan is not active in NJ Tamil Sangam at all, he could have done it as JM reader forum member)”

 

ஆனால், அரவிந்தன் கண்ணையன் நான் ஏதோ அவர் வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டதாகவும், ஜெயமோகன் கூட்டத்தில் அவர் பேசுவதை  நான் கெடுத்துவிட்டது போலவும், ஒரு பொய்யான பதிவை ஜெயமோகனின் கூட்டம் முடிந்ததும் எழுதினார். அதற்கு நான் அப்போது பதிலளிக்கவில்லை. இப்படி ஆதாரங்களை எடுத்துப் போட்டு விரிவாக எழுதுவதில் வருகிற மன அயற்சியைத் தவிர்க்கலாம் என.  நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் அரவிந்தன் கண்ணையனும் கலந்து கொண்டு ஜெயமோகன் பேச்சைக் கேட்டார், பின்னர் கல்யாண் வீட்டில் ஜெயமோகனுடன் நடந்த கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

 

இதைத்தான், ஜெயமோகன், ” அவருடைய அமெரிக்க இலக்கியப்பூசல்களில் என்னை இழுக்கிறார் என தெரிந்தபின் நான் அந்த எளிய அறிமுகத்தையும் தொடரவில்லை.” எனத் திரிக்கிறார் என நினைக்கிறேன். ஜெயமோகன் இதைச் சொல்லவில்லை எனில் எதைச் சொல்கிறார் எனச் சொன்னால், அப்படி ஒன்று நடந்ததா என நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆக ஜெயமோகனின் இந்தப் பொய்க்கும் ஆதாரங்கள் கொடுத்துவிட்டேன்.

 

அரவிந்தன் கண்ணையன் அவர்களே, என் மீது நீங்கள் பழி சொல்வதை விட, நீங்கள் ஜெயமோகன் அறிமுக உரை கொடுக்க ஆசைப்பட்டு எழுதிய மின்மடலில் ஜெயமோகனுக்கு நெருக்கமான பாஸ்டன் பாலாஜி, பழனி, கார்த்திகேயன் ஆகியோர் இருந்தார்களே. நானும் அவர்கள் ஒத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் அறிமுக உரை கொடுக்கலாம் எனச் சொன்னேனே, ஏன் அவர்கள் யாரும் அதை ஏற்று, சரி அரவிந்தனே அறிமுக உரை கொடுக்கட்டும் எனச் சொல்லவில்லை என யோசியுங்கள்.  இப்படியெல்லாம் யோசிக்காமல் நீங்கள் நிகழ்ச்சி முடிந்த பின்னர் எழுதிய பதிவும், என்மீது இன்னமும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வும் உங்கள் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.  இப்போது நான் சொல்வதில் நம்பிக்கை இருந்தால், என்னைப் பற்றி மோசமாக எழுதிய அந்தப் பதிவை நீக்க இப்போதும் உங்களால் முடியும், நீக்காவிட்டாலும் எனக்குப் பிரச்னை இல்லைதான்.

 

ஜூன் 21, 2015 அன்று நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கமும் இணைந்து ஜெயமோகன் கூட்டத்தை நடத்துவதாக முடிவு செய்தபின், அவர் வருகைக்கான ப்ளையர் உட்பட நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் செய்தது. அப்போதைய நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் விழா நேரத்தில் பெட்னா விழாவுக்குச் சென்றிருப்பார், இன்னும் பலர் அந்த விழாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதால், வேலைகளை இருக்கிற நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க நண்பர்கள் உடனிருந்து செய்து கல்யாணுக்கும் எனக்கும் உதவினார்கள். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க பலரும் உதவினார்கள்.

 

ஜூன் 21, 2015 அதிகாலை நான் ஜெயமோகன் கூட்டத்தை நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கம் நடத்த ஒத்துக் கொண்ட பின் அனுப்பிய ஒரு மடலைப் பார்த்து பாஸ்டன் பாலாஜி பின்வருமாறு பதில் எழுதியிருந்தார். ” Ada... innumaa  muzhichundu irukkinga. Nice”

அவருக்கு நான் பின்வருமாறு பதில் எழுதினேன். Baba, if u made me get into this fully, can i sleep until its over successfully? :-)

 

ஜெயமோகனின் 2015 நியூஜெர்ஸி கூட்ட ஏற்பாடு திட்டத்துக்காக நான் நடத்திய ஒரு திட்டமிடல் கூட்டத்தின் அஜெண்டாவைக் கீழே காணலாம். இந்தக் கூட்டத்தைக் கூட அலுவலக வேலை நாளில் மதிய உணவு இடைவேளையின்போது நடத்தியிருக்கிறோம் என்பதைக் கவனிக்கலாம்.









இதைப் பார்த்த பாஸ்டன் பாலாஜி, ”PKS, Very impressive. I am truly floored. Thank you for the excellent arrangements. I am sure Jeyamohan and his readers, will like it.”

 

ஜெயமோகனின் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 80க்கும் மேல் கலந்து கொண்டார்கள். ஜெயமோகனுக்கு நான் வாசித்த அறிமுக உரை https://puthu.thinnai.com/archives/29703 என்கிற சுட்டியில் உள்ளது, விரும்புவோர் வாசிக்கலாம். கூட்டத்தில் புகைப்படங்களும் நான் எடுத்துக் கொடுத்தேன். நான் பேசும்போது நண்பரொருவர் புகைப்படம் எடுக்கும் உதவியைச் செய்தார். கூட்டம் முடிந்து நண்பர் கல்யாண் வீட்டில் ஜெயமோகனுடன் நடந்த கலந்துரையாடலின்போது, ஜெயமோகனின் துணைவியார் அருண்மொழி நங்கை அவர்கள் தஞ்சாவூரில் வார விடுமுறையில் கூட்டம் வைத்தாலே 20லிருந்து 25பேர் தான் வருவார்கள். நியூஜெர்ஸியில் வார நாளில்லாங் வீக் எண்டுக்கு முந்தைய நாளில், 80க்கும் மேற்பட்டோர் வந்தது குறித்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தெரிவித்தார்


கவனிக்கவும். இந்த வெற்றிக்கெல்லாம் நான் மட்டுமே பொறுப்பு எனச் சொல்லவில்லை. நான் தன்னார்வ அமைப்புகளில் பல ஆண்டுகள் வேலை செய்பவன். எல்லாமே கூட்டு முயற்சிதான். ஆனால், நான் முயற்சிகள் எடுக்காமல் இது சாத்தியமாகி இருக்குமா என மட்டும் யோசியுங்கள். இதைக் கூட பெருமைக்காகச் சொல்லவில்லை. ஜெயமோகன் மூலம் 2009ல் பெற்ற கசப்பான அனுபத்தை மீறி இவற்றை முழுமனதுடன் செய்தேன் என்பதற்காகவே சொல்கிறேன். ஆனால் என்னைப் பற்றித்தான் இப்படியான அவதூறான பொய்களை ஜெயமோகன் எழுதி வருகிறார்.

 

கூட்டம் முடிந்ததும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பழனி பாஸ்டன் பாலாஜிக்கும் ஜெயமோகனுக்கும் அனுப்பிய மடல்: Dear Balaji, NJ meeting was awesome and went very well. Thanks to PKS and Tamil Sangam folks.” இதில் அவர் என் பெயரை முதலில் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருப்பதைக் காணலாம்.

 

இதற்கு அப்புறம் ஒரு வாசகனாக, பொதுமனிதனாக ஜெயமோகன் எழுத்துகள், அவர் முன்வைக்கும் கருத்துகள், ஆகியன குறித்துப் பேஸ்புக்கில் என் கருத்துகளை எனக்கு நேரம் கிடைக்கும்போது எழுதித்தான் வருகின்றேன். அவற்றை எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் என் உரிமை. 

 

முடிவுரையாக:

 ஜூன் 7, 2023 புதன் காலை எழுந்து அலுவலகத்துக்குப் போக ரெடியாகிற அவசரத்தில் வாட்சப்பைப் பார்த்தால், ஜெயமோகன் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று ஒரு நண்பரின் வாட்சப் செய்தி வந்திருந்தது.

அதைக் கீழே காணலாம்.










ஆனாலும் இந்தப் பதிலை எழுத வேண்டியதன் சூழல் நண்பர் சொன்னதுபோல் பொதுவில் பிறருக்கு என்ன நடந்தது என்பது ஆதாரத்துடன் தெரிய வேண்டும் என்றுதான். எவ்வளவு தான் எழுதினாலும், ஆதாரம் காட்டினாலும் ஜெயமோகனோ, அவரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களோ என்னை நம்பவும் போவதில்லை, தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும் போவதில்லை. இதை எழுதுவதன் மூலம் என் மீது இன்னும் பெரிய அளவில் அவதூறும், வசைகளும் வரக்கூடும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.  ஜெயகாந்தன் ஒருமுறை பொதுவாழ்வுக்கு வந்த பின்னர், சமூக அவமானங்களுக்கு அஞ்சக் கூடாதென்று சொன்னார். அதனால் அவற்றுக்கு நான் அஞ்சுவதில்லை.


அதனால் என்னுடைய இந்தப் பதிவுக்கு ஜெயமோகனோ அருண்குமார்களோ, சிவகுமார் புதியதாக ஒன்றும் எழுதவில்லை. ஜெயமோகன் சொன்னதையே உறுதிப்படுத்துகிறார் என்கிற அவர்களின் வழக்கமான ஸ்டைலில் பதிலை எழுதலாம். அவதூறுகளை ஆதாரங்களுடன் எதிர்கொள்வதே நான் விரும்புவது. அதை இந்தப் பதிவில் தேவைக்கு அதிகமான ஆதாரங்கள் கொடுத்துச் செய்திருப்பதாகவே நம்புகிறேன். 

 

ஜெயமோகனின் சமூகக் கருத்துகள் குறித்தும், எழுத்து குறித்த என்னுடைய பொறுப்பான எதிர்வினைகளை ஜெயமோகன் என்னைப் பற்றி எழுதும் அவதூறுப் பதிவுகளால் நிறுத்திவிட முடியாது.  அதேபோல், தமிழ்நாட்டில் இருந்து எந்த எழுத்தாளர் நியூ ஜெர்ஸி வரும்போதும், அவர்களுக்கு ஏதும் உதவி வேண்டுமென, எழுத்தாளரை அழைத்து வருகிறவர்கள் கேட்டால், என்னால் முடியுமானால் கண்டிப்பாகத் தொடர்ந்து செய்வேன். அது ஜெயமோகனுக்கும் எதிர்காலத்திலும் பொருந்தும். இதுதான் இலக்கியத்தை மதிக்கிற செயல் என்பது என் புரிதல்.

 

சுந்தர ராமசாமியை கோபால் ராஜாராம் வீட்டில் சந்தித்தபோது,  சிலவிஷயங்களை எழுதச் சொல்லிக் கேட்டபோது, தவறாக எழுதிவிடுவோமோ என பயமாக இருக்கிறது என்றார். சுந்தர ராமசாமியிடமிருந்தும் ஆற்றூர் ரவிவர்மாவிடமிருந்தும் நித்ய சைதன்ய யதியிடம் இருந்தும், பயின்ற ஜெயமோகன், இந்த இலக்கிய மற்றும் அடிப்படை நேர்மையின் பாலபாடத்தையும் படித்தப் பயின்று வந்தால், இந்நேரம் அவர் இன்னும் அதிகமான உயரங்களை எட்டியிருப்பார். அதிகமான நெஞ்சங்களைக் கவர்ந்திருப்பார் என்பது என் 2-செண்ட்ஸ்.

 

ஜெயமோகன் இப்போது உட்கார்ந்திருக்கிற பீடத்தில் அவரைப் பொதுவில் விமர்சனம் செய்ய / திருத்த அவருடன் பழகும் மூத்த /  சக எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், இளைய எழுத்தாளர்கள், நண்பர்கள் என நிறைய பேர் தயங்குகிறார்கள். இந்த நிலை மாறாத வரை இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் போல அவர் எழுதிக் கோண்டிருக்கிறார். இது எங்கே போய் முடியும் எனக் கவலையாக இருக்கிறது.

 

என் பதிவையும் அதில் கொடுத்திருக்கிற ஆதாரங்களையும் ஜெயமோகன் ஊன்றிப் படித்தால், என்னைப் பற்றி எழுதியுள்ள ஆதாரமற்ற அவரின் பதிவை நீக்க வேண்டும். அப்படி அந்தப் பதிவை ஜெயமோகன் இப்போது நீக்கவேண்டுமென இத்தனை ஆதாரங்களையும் பார்த்த அருண்குமார்கள் ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதிக் கேட்பார்களா?

 

நான் கணினி தொழில் நுட்பத்தில் பணி செய்வதால், பழைய மெயில்களை எல்லாம் சேகரித்து வைக்கவும், இப்போது தேவைக்கு அவற்றை எடுத்து ஆதாரமாகக் காட்டவும் முடிகிறது. என்னைப் போல் ஆவணங்களை ஒருவர் சேமித்து வைக்கவில்லை என்றால், ஜெயமோகனால் அவதூறு செய்யப்படும்போது இப்படி முழு ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. ஜெயமோகன் சொல்வது உண்மை என்றாகிவிடுகிற அபாயம் அப்போது. ஜெயமோகன் ஆதாரமில்லாமல் அவதூறு செய்துவிட்டு அடுத்த தலைப்புக்குச் சென்று விடுகிறார். பாதிக்கப்பட்டவர்கள்தான் எல்லாவற்றையும் விளக்கி விளக்கி விளக்கி எழுத வேண்டிய விதியில் இருக்கிறார்கள்.

 

ஜெயமோகனை ஆராதிக்கிற அருண்குமார்களுக்குஅது உங்கள் உரிமை. அவற்றின் பலன் நல்லவிதமாக உங்களுக்கு அமையட்டும். ஆனால் அடுத்தவர் இப்படியா அப்படியா என்கிற வம்பு வளர்க்கிற கேள்விகளை ஜெயமோகனிடம் கேட்பது மூலம் நீங்கள் எந்த இலக்கியத்தையும் பயிலவில்லை என நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள்.  

 

இந்த என் பதில் பதிவை நான் ஜெயமோகனுக்கு அனுப்பப் போவதில்லை. அதை அருண்குமார்கள் செய்வார்கள். செய்யட்டும்.


ஜெயமோகனுக்கு கொஞ்சமேனும் அடிப்படை நேர்மையும் குறைந்தபட்ச அறமும் இருந்தால், என்னுடைய இந்த ஆதாரபூர்வமான பதில்களைப் படித்துவிட்டு, என்னைப் பற்றிய அவர் பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தப் பதிவை நீக்க வேண்டும். இனி எதிர்காலத்தில் யாரைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என ஆதாரமில்லாமல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

 

இதை எழுத எனக்கு 5+ நாட்களுக்கு மேல் ஆனது.  எதையும் தவறாக எழுதிவிடக் கூடாது என என்னால் முடிந்த அளவு எல்லாவற்றையும் தேடி எடுத்துச் சரிபார்த்து பின்னர் தொகுத்து ஆதாரங்கள் கொடுத்து எழுதியிருக்கிறேன்.

 

எழுதி முடித்தவுடன் நாவின் அடியில் நம்மை இப்படியெல்லாம் பொதுவில் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு எழுத வைத்துவிட்டார்களே என்கிற கசப்புணர்வும், இதையெல்லாம் நாமறிந்த எழுத்தாளர் ஒருவரே செய்கிறாரே என்கிற மன அயற்சியுமே மிஞ்சுகிறது. இதைத்தான் வாழ்நாள் முழுக்க இலக்கியத்தை நம்பிய எனக்கு இலக்கியம் செய்யுமென்றால், இலக்கியத்தால் ஆன பயனென்ன?

 

பொறுமையுடன் இவ்வளவு நேரம் படித்த அனைவருக்கும் நன்றி!