பாவம், இந்துத்துவாவை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களும் வேறு என்ன செய்வார்கள்? இயக்கமும் கட்சியும் "அடிடா பல்டி" என்றால் சந்தோஷமாக "அடித்தேன் பாரு பல்டி" என்று பல்டி அடிப்பதுதானே அவர்கள் வழக்கம். கட்சியும்/இயக்கமும் எந்த முடிவெடுக்கிறதோ அதற்குத் தோதாகப் புத்தகங்களைத் தோண்டி, அறிவுஜீவி மாதிரி ஆதாரங்களைக் கொடுத்துவிட்டுத் தன்னையும் தன் ஆன்மாவையும் ஏமாற்றிக் கொள்வதில் முதலில் நிற்பது இந்துத்துவவாதிகள் என்பது என் திட்டமான எண்ணம். இராமர் பாலம் என்று சொல்லப்படுவது இடிக்கப்படுவது குறித்து இந்துத்துவவாதியாக இல்லாத இந்துக்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால், அது உண்மையென்று நம்பலாம். அந்த உணர்வுகளை மதிக்கலாம். ஆனால் இந்துத்துவவாதிகளுக்கு ராமரை வைத்தாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா என்ற பேய்தான் பிடித்தாட்டுகிறது. நானறிந்தவரையில் பல இடங்களில் இராமர் பாலத்தைப் பிடித்துக் கொண்டு கட்சியும் இயக்கமும் தொங்கக் கூடாது என்று தனிப்பட்ட முறையில் அரவிந்தன் நீலகண்டன் சொல்லிக் கொண்டேயிருந்திருக்கிறார். ஏன் பொதுவிலேயே 2002-ஆம் ஆண்டில் அவர் திண்ணையில் எழுதிய கட்டுரையில் என்ன சொல்கிறார் பாருங்கள்.
"இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்குமொனுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. 'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ' "
முழுக்கட்டுரையையும் படிக்க இங்கே செல்லவும்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20210132&format=html
அதே அரவிந்தன் நீலகண்டன், ராமர் பாலம் குறித்து இப்போது "சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி" என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதனை http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html என்ற முகவரியில் காணலாம்.
அதில் அரவிந்தன் அடிக்கிற பல்டியைப் பாருங்கள்:
"அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் திமுக எனும் இனவாத க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.
ஸ்ரீ ராமரைப் பொறுத்தவரையில் அவர் இந்த தேசதர்மத்தின் சின்னம். சத்குரு நானக் ராஜா ராமர் தென்னிலங்கைக்கு பாலம் கட்டி சென்று அரக்கக் கும்பலை அழித்ததை பக்தியுடன் பாடியுள்ளார். புனித குரு கிரந்த சாகேப்பில் ஸ்ரீ ராமபிரானின் திருநாமம் 3533 முறை பெருமைப்படுத்தப்படுகிறது. (மிக அதிக அளவில் இறை நாமமாக குரு கிரந்த சாகேப் புகழுவது ஹரி எனும் திருநாமத்தைதான். 8344 முறை)."
அதே கட்டுரையில் அவர் காட்டுகிற மேற்கோள்:
"நவீன விஷப்பல் கொண்ட அரக்க சக்தியின் சவாலை ஏற்று ஸ்ரீ ராமன் பெருமையை விவாத மேடையில் ஏற்றுப் பேச முன்வந்துள்ளார் பாஞ்சால சிங்கமும் அகில பாரத பயங்கரவாத எதிர்ப்பு தலைவருமான பிட்டா. அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"ராமர் பாலத்தைக் காக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்....ராமர் உண்மை என நான் கருணாநிதியிடம் நேரடியாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அதில் தோற்றுவிட்டால் உயிரை விடவும் தயார்!"
கட்சிக்கும் இயக்கத்திற்கும் ராமர் பாலம் தேவையான அரசியல் ஆனவுடன், சட்டையை மாற்றுவது மாதிரி கொள்கையை மாற்றிக் கொண்டு, கட்சியும்/இயக்கமும் சொல்வதை வாந்தியெடுக்கிற அரவிந்தன் அவரைக் கேள்வி கேட்கிறவர்களை அடக்கப் பொதுவாக என்ன சொல்வார் தெரியுமா? "உங்களுக்குச் சொந்த புத்தி இல்லை. மற்றவர்கள் சொல்வதை அப்படியே சொல்கிறீர்கள்" என்று. மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு சொல்வது சொந்த அறிவுஜீவிதனத்திற்குப் பின்னர் அழைத்துச் செல்லுமா, கட்சி சொல்வதை நேரத்துக்கேற்ப அப்படியே வாந்தியெடுப்பது சொந்த அறிவுஜீவித்தனத்திற்குப் பின்னர் அழைத்துச் செல்லுமா?
வாசகர்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, இப்படிப் பிழைக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
Showing posts with label இந்துத்துவா. Show all posts
Showing posts with label இந்துத்துவா. Show all posts
Monday, September 24, 2007
Subscribe to:
Posts (Atom)