Monday, September 24, 2007

அரவிந்தன் நீலகண்டனின் இரட்டை நாக்கு

பாவம், இந்துத்துவாவை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களும் வேறு என்ன செய்வார்கள்? இயக்கமும் கட்சியும் "அடிடா பல்டி" என்றால் சந்தோஷமாக "அடித்தேன் பாரு பல்டி" என்று பல்டி அடிப்பதுதானே அவர்கள் வழக்கம். கட்சியும்/இயக்கமும் எந்த முடிவெடுக்கிறதோ அதற்குத் தோதாகப் புத்தகங்களைத் தோண்டி, அறிவுஜீவி மாதிரி ஆதாரங்களைக் கொடுத்துவிட்டுத் தன்னையும் தன் ஆன்மாவையும் ஏமாற்றிக் கொள்வதில் முதலில் நிற்பது இந்துத்துவவாதிகள் என்பது என் திட்டமான எண்ணம். இராமர் பாலம் என்று சொல்லப்படுவது இடிக்கப்படுவது குறித்து இந்துத்துவவாதியாக இல்லாத இந்துக்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால், அது உண்மையென்று நம்பலாம். அந்த உணர்வுகளை மதிக்கலாம். ஆனால் இந்துத்துவவாதிகளுக்கு ராமரை வைத்தாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா என்ற பேய்தான் பிடித்தாட்டுகிறது. நானறிந்தவரையில் பல இடங்களில் இராமர் பாலத்தைப் பிடித்துக் கொண்டு கட்சியும் இயக்கமும் தொங்கக் கூடாது என்று தனிப்பட்ட முறையில் அரவிந்தன் நீலகண்டன் சொல்லிக் கொண்டேயிருந்திருக்கிறார். ஏன் பொதுவிலேயே 2002-ஆம் ஆண்டில் அவர் திண்ணையில் எழுதிய கட்டுரையில் என்ன சொல்கிறார் பாருங்கள்.

"இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்குமொனுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. 'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ' "

முழுக்கட்டுரையையும் படிக்க இங்கே செல்லவும்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20210132&format=html

அதே அரவிந்தன் நீலகண்டன், ராமர் பாலம் குறித்து இப்போது "சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி" என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதனை http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html என்ற முகவரியில் காணலாம்.

அதில் அரவிந்தன் அடிக்கிற பல்டியைப் பாருங்கள்:

"அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் திமுக எனும் இனவாத க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.
ஸ்ரீ ராமரைப் பொறுத்தவரையில் அவர் இந்த தேசதர்மத்தின் சின்னம். சத்குரு நானக் ராஜா ராமர் தென்னிலங்கைக்கு பாலம் கட்டி சென்று அரக்கக் கும்பலை அழித்ததை பக்தியுடன் பாடியுள்ளார். புனித குரு கிரந்த சாகேப்பில் ஸ்ரீ ராமபிரானின் திருநாமம் 3533 முறை பெருமைப்படுத்தப்படுகிறது. (மிக அதிக அளவில் இறை நாமமாக குரு கிரந்த சாகேப் புகழுவது ஹரி எனும் திருநாமத்தைதான். 8344 முறை)."

அதே கட்டுரையில் அவர் காட்டுகிற மேற்கோள்:

"நவீன விஷப்பல் கொண்ட அரக்க சக்தியின் சவாலை ஏற்று ஸ்ரீ ராமன் பெருமையை விவாத மேடையில் ஏற்றுப் பேச முன்வந்துள்ளார் பாஞ்சால சிங்கமும் அகில பாரத பயங்கரவாத எதிர்ப்பு தலைவருமான பிட்டா. அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"ராமர் பாலத்தைக் காக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்....ராமர் உண்மை என நான் கருணாநிதியிடம் நேரடியாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அதில் தோற்றுவிட்டால் உயிரை விடவும் தயார்!"

கட்சிக்கும் இயக்கத்திற்கும் ராமர் பாலம் தேவையான அரசியல் ஆனவுடன், சட்டையை மாற்றுவது மாதிரி கொள்கையை மாற்றிக் கொண்டு, கட்சியும்/இயக்கமும் சொல்வதை வாந்தியெடுக்கிற அரவிந்தன் அவரைக் கேள்வி கேட்கிறவர்களை அடக்கப் பொதுவாக என்ன சொல்வார் தெரியுமா? "உங்களுக்குச் சொந்த புத்தி இல்லை. மற்றவர்கள் சொல்வதை அப்படியே சொல்கிறீர்கள்" என்று. மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு சொல்வது சொந்த அறிவுஜீவிதனத்திற்குப் பின்னர் அழைத்துச் செல்லுமா, கட்சி சொல்வதை நேரத்துக்கேற்ப அப்படியே வாந்தியெடுப்பது சொந்த அறிவுஜீவித்தனத்திற்குப் பின்னர் அழைத்துச் செல்லுமா?

வாசகர்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, இப்படிப் பிழைக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

5 comments:

Anonymous said...

//"அரவிந்தன் நீலகண்டனின் இரட்டை நாக்கு"//

தமிழ்பாரதியில் இருந்து கட்டம் தான்.

ஜடாயு said...

பிகேஎஸ்,

2002 கட்டுரையிலேயே ராமசேது புனித சின்னம் என்று அரவிந்தன் கூறியிருக்கிறார். நாசா புகைப்படம் என்ற ஒரே "ஆதாரத்தை" வைத்துக் கொண்டு மகத்துவம் வாய்ந்த ஒரு இதிகாச, புராண, ஐதிகத்தைக் கொச்சைப் படுத்துவதை மட்டுமே அதில் அவர் கண்டிக்கிறாரே அன்றி அந்த ஐதிகத்தையே இகழ்ந்தோ, பழித்தோ கூறவில்லை. ஒரு புராண நம்பிக்கை தொடர்பாக அறிவியலைப் புரட்டுத் தனமாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கும் அவர், அதே வீச்சில், வேறொரு சந்தர்ப்பத்தில், மேட்டிமை சிந்தனையுடையவர்கள் எளிதாக பரிகசித்து செல்லக் கூடிய பாம்புக்குப் பால் ஊற்றி வழிபடுவது என்ற நம்பிக்கையை செந்தழல் ரவி என்பவர் பரிகசித்த போது அந்த நம்பிக்கையின் ஆழ்ந்த குறியீட்டுத் தன்மையையும் அறிவியல் பூர்வமாக விளக்கத் தவறவில்லை (பார்க்க : http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_18.html)

இப்போது எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் அது ராமர் கட்டிய பாலம் என்று தான் முழுமையாக நம்புவதாக எங்கே ஐயா சொன்னார்? அது புனிதச் சின்னம், கலாசார அடையாளம் என்று கூறி தொன்மையான இலக்கியச் சான்றுகளைத் தானே அளித்திருக்கின்றார்?

அப்போது, 2002-ல் சேது சமுத்திர திட்டம் இந்த பாலத்தை சேதப் படுத்துவது பற்றியதான விவாதமே எழவில்லை.

ஆனால் இப்போது இது தேசியப் பிரசினையாகி விட்டதால், ராம சேது பாதுகாக்கப் பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

இதில் இரட்டை நாக்கு எங்கே வந்தது?

// இராமர் பாலத்தைப் பிடித்துக் கொண்டு கட்சியும் இயக்கமும் தொங்கக் கூடாது என்று தனிப்பட்ட முறையில் அரவிந்தன் நீலகண்டன் சொல்லிக் கொண்டேயிருந்திருக்கிறார் //

தனிப்பட்ட முறையில் கூறினார் என்றால் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமே? இப்படி அவரை அவதூறு செய்யும் ஒரு பதிவைப் போட்டு அதில் ஏன் கூற வேண்டும்? உங்கள் செயல்பாடு வருத்தமளிக்கிறது.

மேலும், நீங்கள் எழுதியதைப் பார்த்தால் "பிரசினையைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது" என்று தான் அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது, இந்த பிரசினையே தவறானது என்று அல்ல.
இயக்கங்களின் செயல்பாட்டில் மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சில பிரசினைகள் முன்னுக்கும், பின்னுக்கும் போவது சகஜமான விஷயம் தானே?

நீங்கள் தான் அந்த விமரிசனத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

// கட்சியும்/இயக்கமும் சொல்வதை வாந்தியெடுக்கிற அரவிந்தன் //

குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது, காழ்ப்புணர்ச்சியால் தான் இப்படி சொல்கிறீர்கள்.

PKS said...

ஜடாயு,

இந்தப் பதிவு நீங்கள் சொல்கிற மாதிரியே எனக்குக் காழ்ப்புணர்ச்சி என்று சொல்கிற பின்னூட்டங்கள் அனானியாக வந்தன. நான் கூட நினைத்தேன். தமிழ் இணையத்தில் இருக்கிற இந்துத்துவ ஆதரவாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதில் எதற்கு அனானியாக ஆதரவு இருக்கிற மாதிரியான பில்டப்புகளைச் செய்ய வேண்டும் என்று. ஆனால், பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைத்த மாதிரி, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு பில்டப்புகளின் மூலமே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிற இந்துத்துவ பழமைவாதிகளும் அடிப்படைவாதிகளும் வேறு என்னதான் செய்வீர்கள்?அந்த அனானி பின்னூட்டங்களை நான் அனுமதிக்கவில்லை. இப்போது நீங்கள். (நீங்களும் அனானிதான். ஊர் பேர் தெரியாத, சொல்வதைச் சொந்தப் பெயரில் சொல்லத் தைரியமில்லாத, கட்சிக்கும் கொள்கைக்கும் தாலி கட்டிக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்கிற அனானி. எப்படிய்யா இந்த மாதிரி. இப்படி செய்யலாம் என்று அர்த்த சாஸ்திரம், கீதை, வர்ணாசிரமம், இராமயணம், மகாபாரதத்தில் சொல்லியிருக்கிறது என்று இங்கே கடைவிரித்து விடாதீர்கள். அந்தக் கதையெல்லாம் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.) ஆனால் வலைப்பதிவு நீங்கள் வைத்திருப்பதால் உங்கள் கமெண்ட்டை அனுமதிக்கிறேன். சொல்லப் போனால், கருத்துச் சுதந்திரம் என்று வாய்கிழியக் கத்திவிட்டு, அதற்கு நீங்களும், நேசகுமார் என்கிற வேஷகுமாரும் (அயோக்கியத்தனத்தில் தலைசிறந்த இன்னொரு அனானி இவர்), அரவிந்தன் போன்ற அரைவேக்காடுகளும் மற்ற இந்துத்துவ அயோக்கியர்களும் கொடுக்கிற செயல்ரீதியான மரியாதையை நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் உங்கள் கமெண்ட்டை அனுமதித்திருக்கவே கூடாது. அரவிந்தன் தனிப்பட்ட முறையில் இல்லை, பலர் பங்கு பெறுகிற குழுமத்தில் அந்தக் குழுமத்திற்குப் பொதுவாக இராமர் பாலத்தைக் கட்டிக் கொண்டு கட்சி தொங்கக்கூடாது என்று எழுதியதைப் படித்துவிட்டு, அந்த முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற மாதிரி இங்கே கமெண்ட் போட ஓடி வந்துவிட்டீர் மகா யோக்கியராக. யோக்கியார் வரார். சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அரவிந்தன் எழுதியதை வெளியே எடுத்துப் போட ரொம்ப நேரம் ஆகாது. வெளியே எடுத்துப் போடக்கூட வேண்டாம். அதைப்படித்த உங்களைப் போன்ற இந்துத்துவ அடிவருடிகள் பொதுவில் பொய் சொல்லலாம். அதைப் படித்தப் பல நியூட்ரல் நபர்கள்களைப் பெயர்கள் குறிப்பிட்டுச் சாட்சிக்கு அழைக்க முடியும். ஆனால், நான் எழுதுவதை ஆதாரம் கேட்காமலேயே நம்புகிறவர்களுக்காக நான் எழுதுகிறேன். தேவையெனில் அவர்களுக்கு ஆதாரத்தை நான் வைப்பேன். உங்களைப் போன்ற அல்லக்கைகள் என்னைக் கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லாதவை. மேலும், தனிமடல்களைப் பொதுவில் போடுவதை நியாயப்படுத்துகிறவ உங்கள் கும்பலுக்கு அது சரியான பாடமுமாக இருக்கும். ஆனால், அது அதற்கு நேரம் இருக்கிறது. அப்போது செய்வோம்.

இப்போதைக்கு என்னுடைய நோக்கம் இரண்டுதான். ஒன்று, இந்த்துத்துவ அடிவருடிகளின் இந்து மத அபிமானம் பொய்மையும் கயமைத்தனமும் மிக்கது என்று நிரூபிப்பது. ஓர் இந்துவாக அதைச் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதை அரவிந்தன் விஷயத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறேன். இரண்டாவது, ஓர் இந்தியனாக அவர்களின் தேசப்பற்றும் எவ்வளவு பொய்மையும் கயமைத்தனமும் மிக்கது என்று காட்டுவது. நேரம் வரும்போது அதையும் சொல்கிறேன். அதுவரை காழ்ப்புணர்வு அது இதென்று கத்திக் கொண்டிருங்கள். காழ்ப்புணர்வில் இந்துத்துவ அடிவருடிகளை மிஞ்சுகிற திறமையை இறைவன் எனக்கு இன்னும் அருளவில்லை. இந்துத்துவ அடிவருடிகளை காழ்ப்புணர்வால் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியிருக்கும் என்றாலும் அதில் எனக்கு மிகவும் சந்தோஷமே.

- இந்துவும் இந்தியனுமான, பி.கே. சிவகுமார்

PKS said...

ஜடாயு,

அது எப்படி எனக்குக் காழ்ப்புணர்வு என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் எனிஇந்தியனின் இந்தப் புத்தகத்தைப் போடுங்கள் அந்தப் புத்தகத்தைப் போடுங்கள் என்று ஹரன் பிரசன்னாவிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் :-)) எதிரியைக் கூட எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சனாதன பிராமணீயப் புத்தியா? :-)) நீங்கள் போடச்சொல்லிப் பரிந்துரைத்த புத்தகங்களை எனிஇந்தியன் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காழ்ப்புணர்வில் எனக்கு எதிராகவும் அரவிந்தனுக்கு ஆதரவாகவும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்கிறேன் நான்.

Anonymous said...

Get some rest