Saturday, October 16, 2004

சின்ன விளக்குடன் -பி.ச.குப்புசாமி

(ஏப்ரல் 1965-ல் தீபம் இதழில் வெளியான பி.ச.குப்புசாமியின் கவிதை இது. கண்டெடுத்தும் தட்டச்சு செய்தும் உதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு நன்றிகள்.)

வையம் அனைத்தும் ஒளியுற
......வைத்த விளக்குகள் பாடிடுவோம்
மெய்யை இருளினில் துலக்கிட
.....விளைந்த சுடர்களைப் பாடிடுவோம்
செய்யவள் வந்து புகுந்திடச்
.....செம்மை நலங்கள் மிகுந்திட
நெய்யில் எரித்திடும் விளக்குகள் - நம்
.....நெஞ்சில் எரிந்திடப் பாடிடுவோம்!

சொந்த அறிவில் மனதினில்
.....சூழ்ந்த இருட்டுகள் யாவுமே
இந்த ஒளியில் விலகிடும்
.....இன்புற ஓங்கி விளங்கிடும்
சிந்துரச் செவ்வொளி சிந்திடும்
.....சின்ன விளக்குடன் உங்கள்
சிந்தை விளக்கையும் தூண்டிடுவீர் - அதில்
.....தெய்வ நிலைகளை வேண்டிடுவீர்!

- பி.ச.குப்புசாமி

2 comments:

Mookku Sundar said...

உங்களோட தாத்தா கவிதை நல்லா இருக்கு பி.கே.எஸ்.

Mookku Sundar said...

மன்னிக்கவும்...

"உங்கள் தந்தையார் கவிதை" என்று வாசிக்கவும்