Tuesday, November 02, 2004
என் மாநிலம் - நியூ ஜெர்ஸி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நியூ ஜெர்ஸியில் வாக்களித்தவர்களில், 55% சதவீத மக்கள் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கவலைப்படுபவர்கள். ஆனால், இவர்கள் கெர்ரிக்கு வாக்களித்திருக்கிறார்கள். 9/11ல் ஏறக்குறைய 700 நியூஜெர்ஸியர்கள் மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ ஜெர்ஸியை Battleground State என்று குடியரசு கட்சியினர் சொல்லி வந்தார்கள். ஆனால், பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கிற நியூ ஜெர்ஸி இந்த முறையும் அதைச் செய்திருக்கிறது. 1988க்குப் பிறகு இங்கே குடியரசு கட்சி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்ததில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தெளிவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். ஆனாலும், இப்போதைக்கு கிழக்கு பக்கம் பூரா சிவப்பாதான் இருக்கு போலிருக்கு.
Post a Comment