இத்தலைப்பில் இந்த வார திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரையை இங்கே காணலாம்.
நேற்றைய தமிழ் வார்த்தை: புலனெறிதல். இதன் பொருள்: ஐம்புலனை வெல்லுதல். உதாரணம்: அக்கால முனிவர்கள் புலனெறிந்தவர்களாக இருந்தார்கள்.
இன்றைய தமிழ் வார்த்தை: மழைமாரிச்சண்டை. இதன் பொருள்: கடுஞ்சண்டை (violent quarrel like a rain storm). உதாரணம்: மழைமாரிச்சண்டையான கலிங்கப் போரால் மனம் மாறிய அசோகர், புத்த மதத்தைத் தழுவினார்.
பி.கு: vocabulary என்ற சொல்லுக்கு சொல்வளம் என்ற பொருளை எடுத்துக் காட்டிய பரிக்கு நன்றி. நானும் அதற்கு சொல்லாட்சி/சொல்லாற்றல் என்று என்னளவில் ஒரு பொருள் கண்டிருந்தேன். நான் சொன்னதுபோல, ஆங்கிலம் புழங்கும் வாழ்க்கையாலும், தமிழ்நாட்டுக்கு அப்பால் இருக்கிற காரணத்தாலும், என் ஞாபக மறதியாலும், அது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"அங்கத்தினர்" என்பதைத் தமிழில் கூற பாரதியார் மிகக் கஷ்டப்பட்டதாக படித்த ஞாபகம். இப்போது நாம் எளிதாகப் பயன் படுத்தும் "உறுப்பினர்" என்றச் சொல் அவருக்குத் தோன்றவில்லை. உறுப்பாளி என்றெல்லாம் முயற்சி செய்துப் பார்த்திருக்கிறார்.
I think the right tamil word for 'Vocabulary' would be 'Chorpulam'. I am not sure if anybody used this way before.
Post a Comment