Thursday, December 16, 2004

டிசம்பர் 17, 2004 - வெள்ளி

இன்றைய வார்த்தை: காலாறுதல். பொருள்: 1. நடை ஓய்ந்திருத்தல் (to rest from walking), 2. காலில் ரத்த ஓட்டம் உண்டாக உலாவுதல் (to walk about for overcoming numbness of feet). உதாரணம்: ஓடிக் களைத்த அவன் காலாற சற்று நின்றான். சாப்பிட்ட பின் சற்று காலாற நடப்பது நல்லது.

வல்லின ஒற்று மிகும் இடம்: எட்டு, பத்து ஆகிய வார்த்தைகளின் பின்னால் வல்லின ஒற்று மிகும். இந்த வார்த்தைகளின் பின்னால் வல்லின ஒற்று வேறொரு விதியின் அடிப்படையிலும் மிகும். அதை அடுத்தமுறை பார்ப்போம்.

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு

பின் குறிப்பு: சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாள்களில் இந்தப் பகுதிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்துக்கு ஐந்து நாட்கள் இப்பகுதி தொடர்ந்து இடம்பெறும்.

No comments: