Tuesday, January 25, 2005

சினிமா சினிமா

சென்ற வாரம் மூன்று படங்கள் பார்க்க முடிந்தது. அவற்றைப் பற்றிக் குறிப்புகளாவது தரவேண்டுமென்று நினைத்தேன். இப்போதைக்குப் படங்களின் பெயர்கள் மட்டுமே தரமுடிகிறது. http://www.imdb.com இணையதளத்தில் இப்படங்கள் குறித்த விவரங்களைக் காணலாம். என் குறிப்புகளையும் எண்ணங்களையும் இப்போது இங்கே சேர்க்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

Run Lola Run
The Usual Suspects
A short film about love

இவற்றில் A short film about love-ன் இயக்குநர் Krzysztof Kieslowski நன்கறியப்பட்ட போலந்து இயக்குனர். இவரின் ஐந்தி நிமிடக் கருப்பு-வெள்ளைக் குறும்படம் Tramway-ம் அதே டிவிடியில் இருந்தது. 1966ல் எடுக்கப்பட்டதாம். அதையும் பார்க்க முடிந்தது. இவரின் Triology ஆன Red, White and Blue டிவிடிக்கள் நண்பரிடம் வாங்கி என்னிடம் பலநாட்களாகத் தங்கிப் போயுள்ளன. இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். A short film about loveன் கதாநாயகி, அப்படம் தான் நடித்தவற்றுள் சிறந்த படம் என்று சொன்னார்.

இப்படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியுமே நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், மூன்று படங்களுமே பார்க்கத் தகுந்தவை, மிகவும் உயரிய மதிப்பீடுகள் பெற்றவை என்று பரிந்துரைக்கிறேன். என்னைவிட உலக சினிமாவை நன்கறிந்த இணைய நண்பர்கள் மாண்ட்ரீஸர், ஆசாரகீனன், அருண் வைத்யநாதன், பாலாஜி சீனு (bb) உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். நான் இவ்விஷயத்தில் கத்துக்குட்டி. நேரம் இருக்கும்போது ஒன்றிரண்டு பார்ப்பதோடு சரி. எனவே, மற்றவர்கள் யாரும் இவற்றைப் பற்றி எழுதினாலும், இப்படங்களைப் பார்த்திருப்பதால், ஆழ்ந்தும் ஒன்றிப்போயும் வாசிக்கிற வாசகர்களில் ஒருவனாக இருக்க விருப்பம்.

இந்த வாரத்துக்கு மூன்று படங்கள் எடுத்து வந்துள்ளேன். பொதுவாகப் படங்கள் எடுத்து வந்தால் பார்க்காமலும், அரைகுறையாகப் பார்த்து நிறுத்தியும், காலக்கெடு முடிந்து விட்டதால் திருப்பித் தந்துவிடுவது வழக்கம். போனவாரம் முழுமையாகப் பார்க்க முடிந்தது. இந்த வாரம் எடுத்து வந்துள்ள படங்களைப் பார்க்க முடிந்தால் அவற்றின் பெயர்களை அடுத்த வாரம் தருகிறேன்.

2 comments:

சன்னாசி said...

A short film about love, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த படம். மொட்டைமாடிக்கு ஓடிப் போய் பனிக்கட்டியைக் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டு அதைக் கடித்துத் தின்னும் காட்சி உங்களுக்கு எப்படிப் படுகிறதென்று தெரியவில்லை...
A short film about killing என்றும் ஒரு படம் உள்ளது...

PKS said...

Hi Montresor, Thanks. I also personally liked "A short film about love" a lot. Told a friend today not to miss it. I saw an interview by the heroine and the translator of the directory about this movie at the end too. The scene you mentioned, milk being used throughout as a symbol to show the hero's innocence, the end (heroine looking through hero's telescope - this end was given as per heroine's request, the original end was diffent) are very good.

I have seen the trailer of "A short film about killing". Asked my local library for it. They dont have it. But said, they will see if other libraries have it. If not, irukave iruku NetFlix. Anga irunthaal, nanbarkal moolam eduththu parthu vida vendiyathu thaan.

Thanks and regards, PK Sivakumar