Friday, June 03, 2005

நீரின் துளியில் நதியின் பிரம்மாண்டத்தைக் காட்டியவர்

அசோகமித்திரன் என்றவுடன் ஒரு தேங்க்ஸ் கிவிங் நாள் பார்ட்டியில் நண்பர்கள் குடித்துக் கொண்டும் இலக்கிய விசாரம் செய்து கொண்டும் தொலைகாட்சி பார்த்துக் கொண்டும் இருந்த பிற்பகலில் - அவற்றில் கலந்து கொண்ட நேரத்தில் விலகி நின்றபடி - தண்ணீர் நாவலை ஆரம்பித்தபின் கீழே வைக்க முடியாமல் அதில் லயித்துப் போய் படித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. இயற்கை உபாதையை இடையில் கழிக்கப் போகும்போதுகூட அந்த நாவல் கையில் இருந்தது நினைவுக்கு வருகிறது. நதியின் துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றியடைகிறார் என்ற ஜெயமோகனின் வரிகள் நெடுநாட்கள் நினைவில் இருந்து - தண்ணீரைப் படித்த வாசக அனுபவத்தில் - ஆமென்று தலையாட்ட வைத்தன. அப்புறம் அவரின் ஒன்றிரண்டு சிறுகதைகள், அவர் எழுத்துகளைப் பற்றிய விமர்சனங்கள், அவர் எழுதிய விமர்சனங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவரை முழுமையாகப் படிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. நிச்சயம் ஒருநாள் நிறைவேறும். இன்ஷா அல்லாஹ்.

"மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள்தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது" என்ற வரிகளுடன் வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு (குறு)நாவல் முடிவடையும். சிலரின் எழுத்துகளைப் படிக்கும்போது மனமும் கடவுள்தன்மையை அடைந்துவிடுகிற பரவசம் கிடைக்கும். அசோகமித்திரனின் எழுத்துகளை மட்டுமல்ல அவரின் மெலிந்த எளிய உருவத்தைப் பார்த்தாலே, யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று வாழ்க்கையின் மீது இறுக்கமான பிடிப்பும் நேசமும் வரும்.

அவர் எழுத்தில் சிலவற்றைப் படித்து உள்வாங்கி கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கே அசோகமித்திரனின் ஆகிருதியும் எண்ணப் போக்குகளும் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறதென்றால், அவரை முழுக்கப் படித்தவர்கள் அவரை நன்கறிந்திருப்பர். பல நேரங்களில் அத்துமீறல்களையும் அவதூறுகளையும் வசைகளையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சிலர் வெளிப்படுத்தும்போது அவற்றைப் பொருட்படுத்தி பதில் அளிப்பதன்மூலம் கூட அந்த அவதூறுகளுக்கு விமர்சன அந்தஸ்து கொடுத்துவிடுகிறோம். அதனாலேயே சமீபத்தில் அசோகமித்திரன் குறித்து கிளப்பப்படும் சர்ச்சைகளைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை விரிவாகச் சென்னையில் சந்தித்த நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போதும் நான் எங்கும் இதுவரை எழுத முயன்றதில்லை. நேரத்தைத் துரத்திக் கொண்டிருப்பதும் இன்னொரு காரணம்.

ஐம்பது வருடங்களாக எழுதிப் பக்கங்களை மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்காமல், தமிழ் இலக்கியத்தில் புதிய கதவுகளைத் திறந்து விட்டு, தொடமுடியாத சிகரங்களைத் தொட்ட எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த எழுத்தையுமே கருத்தில் கொள்ளாமல், அவர்கள் சொன்னதாக நம்பப்படும் சில கருத்துகளின் அடிப்படையில் அவர்கள்மீது புழுதிவாரித் தூற்றுவதும், அவர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும், அவர்களைத் தமிழின விரோதிகளாகச் சித்தரிப்பதுமான அநியாயங்கள் தமிழில் மட்டுமே நடைபெறும். இதற்குத் துணைபோகிறவர்கள் அறிவுஜூவிகள் என்றால், அந்த அறிவுஜூவிகள் பாம்பைவிடவும் விஷமானவர்கள். கொலைகாரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும், சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் கொடுக்கிற benefit of doubt-ஐக் கூட இந்த அற்ப அறிவு ஜூவிகள் தமக்குப் பிடிக்காதவருக்குக் கொடுப்பதில்லை. ஆனால் இதுவும் தேவைதான். இப்படி விஷம் கக்குகிறவர்களின் எண்ணப் போக்குகளை நன்கறிந்து கொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தி நட்பு உறவாடிக் கொண்டிருக்கிற "எல்லாருக்கும் நல்லவர்"களுக்கு இது ஒரு பாடம்.

எனவே, அசோகமித்திரன் குறித்த சர்ச்சையையும் கேள்வியையும் எழுப்புபவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கட்டும். அவர்களின் அரசியல், நோக்கம், பார்வைகள் இவை அனைவருக்கும் பரிச்சயமானவைதான். ஆனால், மௌனமாக இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான வலைப்பதிவு வாசகர்கள், அசோகமித்திரனைப் பற்றிய எந்த முடிவுக்கும் வருவதற்குமுன் அவரைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

வார விடுமுறை தொடங்குகிற வெள்ளி முன்னிரவு. அதனால் இச்சிறு குறிப்புடன் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். மேலும் பின்வரும் சுட்டிகள் சொல்கிறவற்றைவிடப் பெரியதாக எதையும் நான் எழுதிவிடவும் போவதில்லை.

எனக்குத் தெரிந்து இணையத்தில் இருக்கிற அசோகமித்திரன் எழுதிய, அவர் எழுத்தைப் பற்றிய கட்டுரைகளுக்கான சுட்டியைக் கீழே இணைத்துள்ளேன். நான் இங்கே தராத அசோகமித்திரனின் பிற படைப்புகள் இணையத்தில் இருக்குமானால், அவற்றை என் பார்வைக்குக் கொண்டுவந்தால் நன்றியுடன் அவற்றையும் இங்கே சேர்த்து விடுகிறேன்.

வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் - 29: அசோகமித்திரனின் "அம்மாவுக்காக ஒருநாள்" - பாவண்ணன்)

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் - சூரியராஜன்

அசோகமித்திரனின் "விமோசனம்": ஒரு சிறுகுறிப்பு - திலீப்குமார்

அசோகமித்திரனின் "நம்பிக்கை" என்ற கதை - நகுலன்

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்

தாமரை இலை மீது ததும்பும் சொற்கள் (அசோகமித்திரன் சிறுகதைகளினூடே ஒரு பயணம்) - காலச்சுவடு அரவிந்தன்

சுட்டிகளுக்கு நன்றி: திண்ணை.காம், காலச்சுவடு

10 comments:

.:dYNo:. said...

பிகேஎஸ்

அருமையான கூற்று!

>>>>"எல்லாருக்கும் நல்லவர்"
இந்த குத்து யாருக்கு? ;)

எனிஇந்தியன் டாட் காம் வளர்ந்து வெற்றியடைய என் வாழ்த்துகள்!

நட்புடன்
-டைனோ

PKS said...

Dyno, More than one person qualify for that "Ellarukum Nallavar" Title. :-) And, that is not a kuththu, but a fact told in plain terms.

Thanks and regards, PK Sivakumar

ROSAVASANTH said...
This comment has been removed by a blog administrator.
PKS said...

Roza Vasanth Wrote and Deleted the comment below:

"மீண்டும் நன்றி பிகேயெஸ். இதைவிட விஷம் பொருந்திய, கயமைத்தனமான, பொய்யான, போலியான இன்னும் பல பல பரிமாணங்கள் கொண்ட எழுத்தை என் வாழ்வில் படித்ததில்லை. இதை பதிவாக தந்ததற்கு மிகவும் நன்றி. இனி உங்களை படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது என்று தோன்றுகிறது. "

My reply to Roza Vasanth:

நன்றி ரோசா வசந்த்! "இதைவிடக் கயமைத்தனமான எழுத்தைப் படித்ததில்லை.", "உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது." - இப்படியெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் வந்து வழக்கம்போல இந்தப் பழைய பல்லவியைப் பாடுவீர்கள் என்பது நான் அறிந்ததுதானே! சர்ச்சையைக் கிளறி வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும், உருப்படியாக எதைப் பற்றியும் ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை எழுதுகிற திராணி இல்லாதவர்களுக்கும், தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும், எந்த ஒரு விஷயத்திலும் யாரையாவது திட்டியே பிழைப்பை ஓட்ட வேண்டும் - உருப்படியாகத் தாமாக எதைப் பற்றியும் தம் கருத்தைச் சொன்னால் தம்முடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்று பயப்படுபவர்களுக்கும், இப்படியெல்லாம் அடுத்தவரைப் பற்றி "கயமைத்தனம், இனிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால்தான் பிழைப்பு ஓடும். அந்தப் பிழைப்பில் ஏன் மண்ணைப் போடுவானேன்?

அடுத்த முறையும் வந்து இதையே எழுதுங்கள். நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள். உங்களைப் போன்றவர்களுக்குத்தான் கோபத்தை அடக்கவும் நிதானமாக யோசிக்கவும் மாற்றுக் கருத்திருந்தாலும் சொல்லாமல் போகிற முதிர்ச்சியைப் பெறவும் எல்லாம் medidation வேண்டுமே. மெடிடேஷன் செய்யாமலேயே அவதூறுகளையும் அத்துமீறல்களையும் பொருட்படுத்தாமல் போகிற ஞானம் வாய்த்தவர்களைக் கண்டால்தான் உங்கள் ஈகோ அடிபட்டுப் படம் எடுத்து ஆடுமே! எனவே, ஆடுங்கள். நீங்கள் வருவீர்கள். வந்து எழுதுங்கள். இது தெரிந்த விஷயம்தானே. அப்புறம் எதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மாதிரி, "இனி உங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது" என்கிற வீரவசனம் எல்லாம்? என்னை மட்டும் திட்டுகிற வரை உங்கள் கருத்துகள் நீக்கப்பட மாட்டா. எனவே, மெடிடேஷன் செய்யாமல், சட்ட நடவடிக்கை எடுக்காமல், நான் எழுதியதை நானே "often" அழிக்காமல், அத்துமீறுவதும் அவதூறு செய்வதும்தான் கருத்துச் சுதந்திரம் என்று முனையாமல், இப்படிப்பட்ட அவதூறுகளைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொள்கிற பக்குவம் எனக்கு அதிகமாகவே உண்டு

- பி.கே. சிவகுமார்

ROSAVASANTH said...

//தான் என்ன எழுதுகிறோம் என்கிற நிதானமே இல்லாமல் கண்டதையும் எழுதிப் பின் அதைத் தாங்களே அழித்துவிடுபவர்களுக்கும்,//

சிவக்குமார் சொல்வது உண்மையல்ல. நான் அழித்ததற்கு காரணம் நிதானமின்றி எழுதியதனால் அல்ல. இங்கே எழுதியதை என் தளத்தில் (பின்னூட்டமாய்)பதிவு செய்திருக்கிறேன். அதனால் சிவக்குமார் சொல்வது போல் அதை மறைக்கவோ அழிக்கவோ எனக்கு காரணம் இல்லை. சிவக்குமார் எழுதியதை படித்ததும், அது குறித்து எழுதியதும், என்னுள் ஏற்படுத்திய குமட்டலின் காரணமாய், இங்கே எழுதும் விருப்பமின்மை காரணமாய் இதை நீக்கினேன். அதை மீண்டும் இட்டது அநாகரிகம் ஆயினும் அதனால் பிரச்சனை இல்லை.

மற்றபடி சிவக்குமார் என்னை பற்றி சொன்ன கருத்துக்களுக்கு நன்றிதான் தெரிவிக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் இந்த உலகில் நேர்மையின்மையின் உரைகல்லாக நினைக்கும் அவர் என்னை பற்றி சொன்ன அத்தனையையும் பாராட்டாக மட்டுமே எடுத்துகொள்ள முடியும். அவர் என்னை ஒரு முறை பாராட்டியபோது (அதன் பிண்ணணி என்னவாக இருந்தாலும்) மட்டுமே கலக்கம் வந்தது. அதனால் அவரின் நல்ல வார்த்தைளுக்கு நன்றி. அவர் சொன்ன விஷயங்கள் அவருக்கு பொருந்துமா எனக்கு பொருந்துமா எனபது சுயமாய் சுதந்திரமாய் சிந்திக்கும் அனைவருக்கும் புரியும். அப்படியில்லாதவர்கள் குறித்து கவலைப்பட ஏதுமில்லை.

PKS said...

அடடே! வாய்ச்சொல் வீரர் ரோசா வசந்தா? வாங்க வாங்க! என்ன மறுபடியும் என் பதிவுக்கு வந்து என்னைப் படித்து, பதிலுமா சொல்லியிருக்கிறீர்கள்? சூப்பர் அப்பு! இப்படி வார்த்தை மாறுகிற நேர்மை பற்றியெல்லாம் வலைப்பதிவில் ஒரு பயலும் எழுதுவதில்லை போலிருக்கிறதே! ஸாரி, பயலும் என்று மட்டும் சொல்லியிருக்கக் கூடாது. பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுகிற ஆண்மை மிக்க அநாமதேயங்களும் பெண்களும்கூட எழுதுவதில்லை போலிருக்கிறதே என்றும் சேர்த்துக் கொள்க!

"ரோசா வசந்த் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு" என்கிற புதுமொழியை மெய்யாக்கும் முகமாக, என் வலைப்பதிவுக்கு மீண்டும் வந்து, நான் எழுதியதைப் படிக்கிற "அவசியத்தை" மேற்கொண்டது மட்டுமில்லாமல், நான் எழுதியவற்றுக்குப் பதில் எழுதுகிற சிரமத்தை மேற்கொண்ட ரோசா வசந்த்துக்கு நன்றி!

அப்புறம் நிதானமில்லாமல் எழுதியவற்றை அழிப்பது என்று நான் எழுதியதைப் படித்ததும், இதுவரை வேறெங்குமே தான் எழுதியதை அழிக்காதது போலவும், என் வலைப்பதிவில் மட்டுமே அதைச் செய்ததாகவும் கற்பனையில் மிதந்து கொண்டு, ரோசா வசந்த் சொல்லியுள்ள "நேர்மையான" பதிலை மற்றவர்களும் அவசியம் படிப்பார்கள். எத்தனை பதிவுகளில் ரோசா வசந்த் கருத்தெழுதி எழுதி அழித்திருக்கிறார் என்பதைப் பற்றி ஒன்றுமே அறியாத குழந்தை மாதிரி அவர்தான் உளறுகிறார் என்றால் நாம் அதைப் பொருட்படுத்தக் கூடாதுதான். ரோசா வசந்த்துக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தாலும் அதைச் சரியாகப் புரிந்து கொள்கிற அளவுக்குத் தேர்ச்சியில்லை என்று நிரூபித்தமைக்கு நன்றிகள்!

அப்புறம் ரோசா வசந்த்தின் பிரச்னை - Attention Deficiency Syndrome - ஆ என்று எனக்கு ஒரு கேள்வி எப்போதும் ஓடுவதுண்டு. Attention Deficiency Syndrome என்று நான் எதைப் பொருள் கொள்கிறேன் என்றால் - அவரைப் பொருட்படுத்தாமலோ, அவருக்குப் பதில் சொல்லாமலோ போனால், அவர் ஈகோ அடிபட்டு அதனால் வார்த்தைகளின் வன்முறையில்கூட ஈடுபடுகிற செயல்களில் இறங்குவது. அதனால்தான் சமீப காலங்களில் அவருக்கு உதவும் முகமாக அவ்வப்போதாவது அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். ஏதோ என்னால் முயன்ற உதவி!

ரோசா வசந்த், திண்ணை ஆசிரியரைப் பற்றி நான் எழுதிய பதிவில் தாங்கள் எழுதிய கமெண்ட்டிற்கும் பதில் அளித்துள்ளேன். என்னைப் படிக்க வேண்டிய அவசியம் இப்போது உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இருந்தால் அதையும் ஒருமுறை படித்துவிட்டுத் திட்டவும். நான் தன்யனாவேன்.

ரோசா வசந்த், எனக்கு இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. பாருங்கள். இப்படி மாறி மாறி பதில் எழுதுகிற விளையாட்டை ஆடும்போது நீங்களும் குணமாகி விடலாம். நாமும் நண்பராகிவிடுகிற சாத்தியம் இருக்கிறதல்லவா? என்றாலும், என்னைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றால், தயவு செய்து படிக்காதீர்கள். படித்தாலும் உங்கள் மண்டையில் ஏறப் போவதில்லை. ஏறினாலும் ஒத்துக் கொள்கிற ஆன்ம பலம் உங்களுக்கு இல்லை. (ஆமாம், ஆன்ம பலம் என்று இரண்டு சுழி ன் தான் போட்டிருக்கிறேன். சரியாகப் புரிந்து கொள்க. வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு அதற்கொரு சண்டைக்கு வர வேண்டாம். தமிழ் புரிந்து கொள்ள முடியாத மொழிக் காவலர்களுடன் பேசும்போது இந்த மாதிரி எல்லாம் விளக்கம் எழுதித் தொலைக்க வேண்டி இருக்கிறது!)

- பி.கே. சிவகுமார்

PKS said...

ஹலோ விசிதா மேடமா? வாங்க மேடம் வாங்க! உங்களைப் பார்த்தால் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்த்த சந்தோஷம் வருகிறது. உங்களை மட்டுமல்ல, இணையப் பத்திரிகைகளில் ராதா ராமசாமி எழுதுவதைப் பார்த்தாலும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்க்கிற சந்தோஷம் வருகிறது. வலைப்பதிவுக்கு விசிதா, இணையப் பத்திரிகைகளுக்கு ராதா ராமசாமி என்று ஏரியா பிரித்துக் கொண்டு, அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸை நினைவுபடுத்தி வருவதற்கு நன்றிதானே சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுங்க. நீங்களும் ராதா ராமசாமியும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸ் மாதிரி அறிவுபூர்வமாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல வந்தேன். வேறு மாதிரி கோக்குமாக்கா நினைச்சுக்க்காதீங்க.

விசிதா மேடம், அதப் பாருங்க. அசோகமித்திரன் பிரச்னை என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால் - பெண்கள் பெயரில் ஐ.டி. கிரியேட் செய்து கொண்டு, தனக்குத் தானே சப்போர்ட்டிங் ஆர்க்யூமெண்ட்ஸ் வைக்கவும், அடுத்தவரைத் திட்டி எழுதவும் கற்றுக் கொள்ளாததுதான் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அப்படி இன்னொரு பெயரில் - அதுவும் பெண் பெயரில் எழுதினால் எல்லாரும் நம்பி விடுவார்களோ என்றோ, கடுமையான எதிர் விமர்சனம் இருக்காது என்றோ நம்பிக்கைகளில் - அப்படிப்பட்ட ஒரு ஐ.டி.யை உருவாக்கிக் கொண்டு, தன் வாதத்துக்குத் தானே சப்போர்ட் சேர்க்கிற Pathetic நிலைமைக்கு இன்னும் அசோகமித்திரன் வராதது கண்டு உங்களைப் போன்ற மேடம்களுக்கு பிரச்னையாகத்தான் இருக்கும்.

உங்களுக்குத் தெரியாத முடி பிளக்க முடியாத வாதங்கள் இருக்க முடியுமா மேடம். ஆனாலும் பாருங்கள். ஒரு பாயிண்டை விட்டுடறீங்க. பதில் சொல்லாமல் இருப்பவர்களுக்கெல்லாம் பதில் இல்லையென்றோ பதில் தெரியாது என்றோ அர்த்தமில்லை. என்னைப் போல பிழைப்பில்லாமல் உங்களைப் போன்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டாமே என்று அவர்கள் வாய் மூடியும் கொண்டிருக்கலாம்தான்.

இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கறேன் மேடம். வார விடுமுறை. புள்ள குட்டிக் காரன். அதையும் கொஞ்சம் பார்க்கப் போறேன்.

இங்க மேடம் என்கிற சொல் மரியாதை கருதி எழுதப் பட்ட வார்த்தை. நீங்க மிஸ் என்றால் கண்டுக்காதீங்க! நீங்க மிஸ்ஸா மேடமா? :-)

- பி.கே. சிவகுமார்

PKS said...

விசிதா மேடம், dirty tricks பண்றவங்க மேலே லீகல் ஆக்ஷன் எடுக்க முடியுமா இல்லையா என்று அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸ் கிட்டே கேட்டா சொல்லுவார். நான் என்ன டர்டி டிரிக்ஸ் பண்ணேன் என்று நீங்க சொல்லவே இல்லையே. அநாமதேயமா கமெண்டு போட்டேனா, பெண் பெயரில் ஒளிந்து கொண்டு எனக்கு நானே சப்போர்ட்டா எழுதிகிட்டேனா? அப்படியெல்லாம் எதுவும் இல்லையே. அப்புறம் எப்படி என்னை டர்டி டிரிக்ஸ் என்று சொல்றீங்க. அட்லீஸ்ட் இப்படி என்னை அபாண்டமா பழி சொல்ற உங்க மேலே லீகல் ஆக்ஷன் எடுக்க முடியுமா என்று "அசோகமித்திரன் ஏன் லீகல் ஆக்ஷன் எடுக்கவில்லை" என்று கேள்வி கேட்கிற ரவி ஸ்ரீனிவாஸ் அண்ணனைக் கேட்டுச் சொல்லுங்கோ. :-) கவலைப்படாதீங்க. உங்க மேலே லீகல் ஆக்ஷன் எடுக்கிற கிரவுண்ட்ஸ் ஒருவேளை இருந்தாலும் எடுக்கிற ஆசையுமில்லை.. இப்படி என்னை மாதிரியே நினைச்சுட்டு பலரும் (அசோகமித்திரன் உட்பட) இருக்கலாம். இதை ரவி ஸ்ரீனிவாஸ் அண்ணன் கிட்டே சொல்லுங்க. திண்ணையிலே அவரைப் பற்றி அவரும் ராதா ராமசாமியும் ஒன்றுதானோ என்ற பொருள்படும் அளவுக்குக் கூட அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கிறார். அது பொய்யென்றால் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸ் அரவிந்தன் மீது கேஸ் போட்டிருக்கலாமே? ஏன் போடவில்லை. ரவி ஸ்ரீனிவாஸ் அண்ணன் அப்படிக் கேஸ் போடவில்லை என்பதால், அவர்தான் ராதா ராமசாமி என்று ஒத்துக் கொள்கிறார் என்று எழுதினால் என்ன சொல்வார்? இப்படித்தான் இருக்கிறது அண்ணன் ரவி ஸ்ரீனிவாசும் அவர் மாதிரியே எழுதுகிற நீங்களும் வைக்கிற வாதங்கள்.

மத்தபடிக்கு என் கருத்துகள் எவ்வளவு மோசமென்று பிறரால் விமர்சிக்கப்பட்டாலும், அர்ச்சிக்கப்பட்டாலும், இன்-பாக்ட் ரோசா வசந்த், சங்கர பாண்டி போன்றோரால் abuse and discriminate செய்யப்பட்டாலும் அவற்றை நான் என் சொந்தப் பெயரிலும் சொந்த அடையாளங்களுடனுமே சொல்லி வருகிறேன். நீங்கள் யார், உங்கள் ஊரென்ன, பேரென்ன என்று கூட வலைப்பதிவில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. (எனக்குத் தெரிந்தாலும் வெளிப்படையாக நீங்களாகச் சொல்லும்வரை நான் சொல்ல மாட்டேன். அந்த நாகரீகமாவது எனக்கு இருக்கிறது. :-)) ஆனால் "அநாமதேயமான" நீங்கள் என்னை dirty tricks என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை cyborg என்று ஒருமுறை இணையத்தில் எழுதினீர்கள். ஆனால், நான் மேடம் என்று அழைத்ததுக்கு கோபித்துக் கொள்ளவில்லை. :-) அதற்கு நன்றி. எனவே, நீங்கள் நிஜத்தில் cyborg-உம் இல்லை, மேடமும் இல்லை, அந்த அண்ணனே என்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

அப்புறம் கடைசியாக், ரவி ஸ்ரீனிவாஸ் அண்ணன் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சொல்லாமல் விட்டுவிட்ட இழைகள் திண்ணையிலும், வலைப்பதிவிலும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் அண்ணனை முதலில் பதில் சொல்லச் சொல்லுங்கள். அப்புறம் அசோகமித்திரனையும் அடுத்தவர்களையும் ஏன் பதில் சொல்லவில்லை என்று அண்ணன் கேள்வி கேட்கலாம்.

நன்றி.

- பி.கே. சிவகுமார்

enRenRum-anbudan.BALA said...

Dear PKS,
//எனவே, நீங்கள் நிஜத்தில் cyborg-உம் இல்லை, மேடமும் இல்லை, அந்த அண்ணனே என்றாலும் நான் ஆச்சரியப்பட
மாட்டேன்.
//
இதென்ன புதுக்கதை ;-) நானென்னவோ (மாயவரத்தானும் தான்), இவ்வளவு நாள் விசிதாவை தமிழ்குடிதாங்கியின்
மீதுதீவிர அபிமானமும், ரஜினி மற்றும் தினமலர் மேல் அதிதீவிர வெறுப்பும் கொண்ட ஒரு "PMK" மேடம் என்று
நினைத்துத் தான் அவர் எழுதியவற்றுக்கு மறுமொழிகள் எழுதி வந்தேன் :))

ஒண்ணுமே புரியலே உலகத்திலே, என்னமோ நடக்குது, மர்மமா நடக்குது

ஒரு முறை எனக்கும் மாயவரத்தானுக்கும், சம்மந்தமே இல்லாமல், (அதாவது, தினமலரை நாங்கள் வசை பாடவில்லை
என்பதற்காக !!!!!) 'பெர்வர்ட்ஸ்' என்று பட்டம் வழங்கிய புண்ணியவதி (..வான்!) அவர் :-(

கீழுள்ள பதிவின் பின்னூட்டங்களை (கண்டிப்பாக!) பார்க்கவும்.
http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_08.html

Wichita's profile photo is really stunning ;-)))))

enRenRum-anbudan.BALA said...

PKS,
//http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_08.html
//
Did you find time to read the comments in the above link for you to get a "picture" ? ;-)