Sunday, August 14, 2005

பை ஜுயி

புதிய கவிதைகள் எதையும்
அவனது தூரிகை தீட்டவில்லைதான்
அவனது புகழும்கூட மங்கிப்போனது
அவனது பழைய கவிதைகள்
பெட்டிகளில்
அலமாரிகளின் அடியில் தூசித்தும்புகளில் கிடக்கின்றன
ஒரு சமயம் எவனோ ஒருவன்
பாடிக் கொண்டிருந்தபொழுது
அவந்து அக்கவிதையைத் தற்செயலாகக் கேட்டேன்
ஒரு பெரும்வலி
எனது இதயத்தைத் துளைத்துச் சென்றது
முன்னமே அதனைக் கவனம்
செய்ய நேரமிருந்தும்
சும்மா இருந்ததால்

(கவிஞர் யுவான் ஷியன் எழுதிய பாடலை - ஷியன் இறந்து நெடுங்காலம் கழித்து - எவனோ ஒருவன் பாடக் கேட்டபொழுது பை ஜுயி எழுதியது. தமிழில் மொழிபெயர்த்தவர் பினாகினி)

நன்றி: புது எழுத்து - இதழ் 8

No comments: