Wednesday, February 01, 2006

தினமணி நூலரங்கம் - தீராநதி வரப்பெற்றோம்

பிப்ரவரி 2, 2006 வியாழன் தினமணி நூலரங்கம் பகுதியில் எதிர்காலம் என்று ஒன்று, அட்லாண்டிக்குக்கு அப்பால் ஆகிய புத்தகங்களைப் பற்றிய சிறுகுறிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தினமணி நூலரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வரிகள் பின்வருமாறு:

எதிர்காலம் என்று ஒன்று - தொகுப்பாசிரியர்: கோபால் ராஜாராம்; பக்.176; ரூ.80.

ஜெயமோகன், என். சொக்கன், நளினி சாஸ்திரி, ராமன் ராஜா உள்ளிட்ட எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. வாசகர்களுக்கு புதிய வாசிப்பனுபவத்தைத் தரும்.

அட்லாண்டிக்குக்கு அப்பால் - பி.கே. சிவகுமார்; பக்.287; ரூ.120.

புகழ்பெற்ற படைப்பாளிகள், அவர்களின் படைப்புகள், சமூகம் குறித்த சிந்தனைகள், அமெரிக்க வல்லரசு குறித்த விரிவான பார்வை...என பலதரப்பட்ட தலைப்புகளில் நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

மேற்கண்ட இரண்டு நூல்களும் வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், 102, எண். 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017.


நன்றி: தினமணி

பிப்ரவரி 2006 குமுதம் தீராநதி இதழில் எதிர்காலம் என்று ஒன்று அறிவியல் புனைகதைத் தொகுப்பைப் பற்றி வரப்பெற்றோம் பகுதியில் வெளியாகியுள்ளது. அதன் பிரதி கீழே தரப்பட்டுள்ளது.

நன்றி: தீராநதி

No comments: