Monday, February 06, 2006

பொறாமை

இன்றைக்கு மத்தியானம் கொஞ்சம் திருக்குறளை மறுபடியும் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. வாரக் கடைசியில் ஒரு குறளின் அடி சரியாக நினைவுக்கு வராமல், பொருள் மட்டும் நினைவுக்கு வந்து நண்பரிடம் அதைப் பற்றிப் பேசியபோது, அந்தக் குறளைப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதால், இப்படித் திருக்குறள் ஆராய்ச்சி. இணையத்தில் விக்கிபீடியாவிலிருந்து பல இடங்களில் திருக்குறள், தெளிவுரை என்று திருக்குறள் இருப்பது தேடுவதற்குச் சுலபமாக இருக்கிறது. அதனால், இன்றைக்கு என் தேர்வில் மாட்டிய மூன்று திருக்குறள்களை (இதில் ஒன்றுதான், நண்பரிடம் பேசியபோது பயன்பட்டது) இங்கே இட்டுள்ளேன். தெளிவுரை இடாததற்குக் காரணம் இருக்கிறது. ஒரு காரணம், இணையத்தில் அவை சுலபமாகக் கிடைக்கின்றன. இரண்டு, இரண்டாவது காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

Disclaimer: இதைப் பார்த்துவிட்டு, வலைப்பதிவுலகிலோ இணையத்திலோ பிறர் திருக்குறளை யெடுத்துப் போடுகிற திருப்பணி செய்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. அந்தப் புண்ணியமும் என்னைச் சாராது. ஆனால், என் பொருட்டாவது மற்றவர் திருக்குறள் படித்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். :-)

No comments: