Thursday, February 09, 2006

சுஜாதாவின் கையெழுத்துடன் பூக்குட்டி



சுஜாதாவின் பூக்குட்டி புத்தகம் பற்றி நண்பர் தேசிகன் அவர் வலைப்பதிவில் எழுதியதன் சுட்டி இங்கே.

நண்பர் ஹரன் பிரசன்னா பூக்குட்டிக்குக் கொடுக்கும் அறிமுகம் (மேற்கோள்கள் குறிகளுக்குள்) பின்வருமாறு:

"குழந்தைகளுக்காகத் தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்கிற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.

சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராகச் சொல்லும் கதை.

வடிவமைப்பின் நேர்த்தியும் வழுவழுப்பான பக்கங்களும் அவற்றில் நிறைந்திருக்கும் வண்ணங்களும் குழந்தைகளின் மனதை வசீகரிக்க வல்லவை. பூக்குட்டி ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது ஓவியர் மணியம் செல்வன் வரைந்த ஓவியங்கள் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன. கதையை வாசிக்கும் குழந்தைகள் அவ்வோவியங்களை உள்வாங்கிக் கதையோடு ஒன்றிப்போவார்கள் என்பது நிச்சயம்.

கதையின் முடிவில் படித்தவர்கள் மனதில் நிழலாடும் விம்முவும் வேலாயியும் பூக்குட்டியும், இக்கதை குழந்தைகளுக்கானது என்பதை மீறிய அனுபவத்தை உருவாக்கிவிடுகின்றனர்.

பூக்குட்டி பதிப்பகத்தின் முதல் பதிப்பாக வந்திருக்கும் இப்புத்தகம் குழந்தைகளின் புதிய உலகை மிகுந்த நம்பிக்கையோடு திறந்து வைக்கிறது."

மார்ச் 31, 2006 வரை, பூக்குட்டிப் புத்தகத்தை http://www.anyindian.com மின்வர்த்தகத் தளம் மூலம் வாங்குபவர்களுக்கு அந்தப் புத்தகத்தில் தன் கையெழுத்திட்டுத் தர சுஜாதா அன்புடன் இசைந்துள்ளார். .

சுஜாதாவின் கையெழுத்துடன் பூக்குட்டியை வாங்க இங்கே சொடுக்கவும்.

பி.கு: நண்பர் தேசிகன் வலைப்பதிவின் மூலம் இப்புத்தகத்தை வாங்கியவர்களுக்கும் AnyIndian.com மூலமாகப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தேசிகன் வலைப்பதிவின் மூலம் நீங்கள் ஆர்டர் செய்திருந்து, கேள்விகள் இருந்தால் customerservice [at] anyindian.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

No comments: