Friday, July 21, 2006

ஆறு வார்த்தைக் கதைகள்

பாஸ்டன் பாலாஜி Six Word Stories என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் விளையாட்டாக நானும் ஆறுவார்த்தைக் கதைகளைப் பின்னூட்டமாக இட்டிருந்தேன். அவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன். இதை ஒரு விளையாட்டாகச் செய்தாலும் இந்தப் பயிற்சி மொழியின் மீதான ஆளுமைக்கு (language grip) உதவுவதை உணர முடிகிறது. சிலபல கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை ஒரு வார்த்தையாக பாவித்திருப்பதை பொருட்படுத்த வேண்டாமென வேண்டுகிறேன். இங்கிருப்பவை திருத்தப்பட்ட வடிவங்கள்.

கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.

ஊர் ரெண்டுபட்டது. கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நியூட்ரல் ஜல்லியடித்தான்.

கருத்தையல்ல எதிராளியை ஆடினார். வலைப்பதிவுக் கூட்டம் கைதட்டியது.

உள்குத்து வெளிக்குத்து. காணாமல் போயிருந்தது பொதுக்கருத்து.

வலைப்பதிவு எழுதிச் செத்துப் பிழைக்கிறான் அனுதினமும்.

ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி வேண்டாமென்று பிரபந்த-திருவாசகம் பாடினார்.

அவர் அரசியல் பேசமாட்டார். செய்வார். வலைப்பதிவு நிபுணர்.

கருத்து கந்தசாமி ஆனான். இரண்டு பக்கமும் இடித்தார்கள்.

அரசியல் சினிமா நிறைய சண்டை. தமிழ்வலைப்பதிவு வளர்கிறது.

பத்துப் பதிவு எழுதினார். எழுத்தாளரானார்.

இரண்டாயிரமாண்டு செத்திருந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.

ஆறு வார்த்தைகளை அடுக்கினார். கதை கவிதை ரெடி.

கருத்துள்ள பதிவைவிட கமெண்ட்டுள்ள பதிவு மேலென்றார்.

எக்ஸ்ஸைப் பரிசோதித்த டாக்டர் "வலைப்பதிவு சின்ட்ரோம்" என்றார்.

அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பயந்து பின்வாங்கினான்.

பிள்ளைகள் முன்னே சண்டையிட்டார்கள். படுக்கையில் கொஞ்சிக் கொண்டார்கள்.

கைகுலுக்கி அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.

பீர்பாட்டிலைக் கவிழ்த்து வைத்தான். பேப்பர் நிரம்பியது எழுத்துகளால்.

சிரித்தழுதோடியாடி திரை நிரைத்தான். தேறாதென்றார் இருக்கையிலிருந்த படி.

தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.

காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.

அனுமதி வாங்காமல் பிரசுரமாவென அழுதார். அடுத்தவர் செய்தபோது.

ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.

பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.

கவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.

இலக்கிய விசாரம் செய்தார்கள். இலக்கிய அனுபவம் தொலைந்தது.

ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.

பிற்சேர்க்கை:

ஜூலை 22, 2006

வினவியவரை "மெண்டலா" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள்.

காசுக்கேற்ற சுகம் கிடைக்க வயகரா சாப்பிட்டுப் போனான்.

அவர் செத்துப் போனார். எல்லாரும் பாராட்டினார்கள்.

படிப்பு. அழகு. திமிர். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.

அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை. அவன் வாக்கிங் போனான்.

பின்னூட்டம் நூறாகியது. ஐம்பது அவரது. ஆனாலும் மகிழ்ந்தார்.

பிள்ளைகள் தூங்கியபின் நெருங்கினாள். டயர்டா இருக்கு என்றான்.

நினைத்ததை எழுதினார். பிரபலமானார். பிறர் நினைப்பதை எழுதினார்.

அவன் வலைப்பதிவில் பிஸி. அவள் 'சாட்"டில் பிஸி.

மேலதிகாரி திட்டினார். வெளியே வந்தான். செக்ரட்டரியிடம் வழிந்தான்.

ஆறு வார்த்தையில் நூறு எழுதினான். எதிலும் கதையில்லை.

8 comments:

Movie Fan said...

Pks,

//இதை ஒரு விளையாட்டாகச் செய்தாலும் இந்தப் பயிற்சி மொழியின் மீதான ஆளுமைக்கு (language grip) உதவுவதை உணர முடிகிறது.

நானும் உணர்ந்தேன்.

எனக்கு பிடித்த சில

கைகுலுக்கி அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.

காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.

ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.


அதுசரி சில கதைகள் நான்கு வார்த்தைகளிலும் ஐந்து வார்த்தைகளில் அடங்கிவிட்டதே

வலைப்பதிவு எழுதிச் செத்துப் பிழைக்கிறான் அனுதினமும்.

-- Vignesh

http://vicky.in/dhandora

PKS said...

விக்னேஷ், நன்றி.

"சதுரங்கக் கதை" எனக்கும் பிடித்த ஒன்று.

ஆறு வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவாக என்று நினைத்து எழுதினேன். ஆறு வார்த்தைகளில் இருந்தே குறைக்க முடியும் என்றால் அதுவும் நல்லதுதானே என்று நினைத்தேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Movie Fan said...

// ஆறு வார்த்தைகளில் இருந்தே குறைக்க முடியும் என்றால் அதுவும் நல்லதுதானே என்று நினைத்தேன்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரு வார்த்தைக்கதை ??

// பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

அனுபவம் ??

-- Vignesh

http://vicky.in/dhandora

PKS said...

// பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

அனுபவம் ??

-- Vignesh

Yes.

Boston Bala said...

பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம்பியது தடி எழுத்தில்)...

பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.

ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.

பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள். என்று தொடங்கும் 'மேலும்...'இல் அனைத்துமே நன்றாக வாய்த்திருக்கிறது. நன்றி!

பிற விமர்சனங்கள்:

தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.

நான் (கொலை செய்து) மாற்றினால் - சப்தஸ்வரங்கள் முடிவுகளிலும் இடஒதுக்கீடு தேவை: பின்க் ஃப்ளாய்ட்

காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.

பதிப்புரிமை அத்துமீறலா? காப்பிரைட் சட்டப்புத்தகம் ஜெராக்ஸ் தேவை.

ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.

ஊடகங்கள் அசட்டை. புலம்பினார். உபசரணையுண்டு; தனியே தொடர்ந்தார்.

கவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.

நெடுங்கவிதை விமர்சனம் : கதைபோல. அனுபவக்கதை : விமர்சகன் விடவில்லை
(என்னைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

Boston Bala said...

இந்த வோர்ட் பெரிஃபிகேசனை எடுத்து விட இயலுமா? (அதுதான் மறுமொழி மட்டுறுத்தல் இருக்கிறதே; மேலும் இப்பொழுதெல்லாம் ப்ளாகரில் எரிதம் வருவது மிக மிக அரிதாகி விட்டது!)

PKS said...

Baba,

I will try to remove word verification later. Blogger gives error now.

Thanks for your comments.

Regards, PK Sivakumar

பிச்சைப்பாத்திரம் said...

இந்த மாதிரி gimmicks-ல் எனக்கு நம்பிக்கை கிடையாது.

(ஆறு வார்த்தை சரியா வருதா?) :-)