Tuesday, January 16, 2007

புத்தகக் கண்காட்சி - ஏழாம் நாள்

வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி 16, 2007 செவ்வாய் மாலை நடைபெற்றது. இன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட அண்ணா கண்ணன் பெற்றுக் கொண்டார். யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார். அண்ணா கண்ணன், க்ருஷாங்கினி, வெ.சா ஆகியோர் உரையாற்றினர். எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவுற்றது.

ஜனவரி 17, 2007 புதன் மாலை இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் கடை எண் 326-ல் நடைபெறும். அவற்றின் விவரம் பின்வருமாறு:

புதன் மாலை 4 மணிக்கு பிரதாப சந்திர விலாசம் புத்தக வெளியீட்டு விழா
வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி
பெற்றுக் கொள்பவர்: வெளி ரங்கராஜன்
புத்தகத்தைப் பற்றி வெளி ரங்கராஜன் பேசுவார்.

புதன் மாலை 6 மணிக்கு விசும்பு புத்தக வெளியீட்டு விழா
வெளியிடுபவர்: யுவன் எம். சந்திரசேகர்
பெற்றுக் கொள்பவர்: எழுத்தாளர் ஷாஜி

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இனி, ஜனவரி 16, 2007 புத்தகக் கண்காட்சி காட்சிகள்:

Haran Prasanna Speaks:

Ve.Sa & Krushangini

Ve.Sa & Anna Kannan







Ve.Sa & Prasanna





Quiz: Who is the person in Yellow Shirt?

Gnanakoothan

Smile Of the Day - Badri

Sujatha at Uyirmmai Stall

2 comments:

வாசன் said...

Quiz: Who is the person in Yellow Shirt?


sA. Kandasamy's nephew a.w.a mu ka's mAppiLLai

He was one of the very first participants
in tamil iNaiyam .< through tamil.net > in 96-97

PKS said...

Vasan,

Correct & Thanks. Yes, it is "Singai" Aravindan.