Wednesday, September 19, 2007

பெரியாரும் ஜாதிப்புத்தியும்

பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் (அவருக்கு எதிர்க்கருத்துகளைக் கொண்டவர்கள்கூட) பெரியாரைப் பற்றிச் சொல்கிற சம்பவங்கள் சிலவற்றைக் கேட்கிற வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கும். அப்படிக் கேட்ட பெரியார் வாழ்வின் நிகழ்ச்சி ஒன்று. இதை முன்னரே எங்கேயோ எழுதிய ஞாபகம். அதனால் என்ன, திரும்ப நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த நேரம். கண்ணீர்த் துளிகள் அந்த முடிவை எதிர்த்தார்கள். அவர்களில் ஒருவர், "தேவையென்றால், கல்யாணம் எதற்கு, வைத்துக் கொள்ளலாமே?" என்று சொன்னாராம்.

அதைக் கேள்விப்பட்ட பெரியார் மிகவும் கோபமுடன், "என்ன இருந்தாலும் ஜாதிப்புத்தி போகுமா?" என்று திட்டினாராம்.

அப்போது அருகில் இருந்த தொண்டர்களில் ஒருவர் எழுந்து, "அய்யா, ஜாதி இல்லை இல்லை என்று சொல்கிற நீங்களே ஜாதிப்புத்தி என்று திட்டுகிறீர்களே, அது சரியா" என்று கேட்டாராம்.

அதற்குப் பெரியார், "ஜாதிதான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். ஜாதிப்புத்தி இல்லை என்று சொல்லியிருக்கிறேனா?" என்று பதிலுக்குக் கேட்டாராம்.

நினைவுப்படுத்தல் நிறைவுற்றது.

1 comment:

Anonymous said...

இப்படியெல்லாம் புனித பிம்பங்களை உடைக்கிறீர்களே..

நிறையபேருக்கு வயிறெறியும். நிறைய பேருக்கு மண்டை பிச்சிக்கும்..