Tuesday, November 02, 2004

தேர்தல் நிலவரம்

2000 வருட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 105 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என்று நம்பப்பட்டது. அதற்கேற்றாற்போல, காலையிலிருந்து வரும் செய்திகள் மக்கள் பல இடங்களில் மழையைப் பொருட்படுத்தாமலும், பல மணி நேரம் வரிசைகளில் காத்து நின்றும் வாக்களிக்கிற செய்தியை எல்லா செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. இத்தேர்தலில் 125 மில்லியன் மக்கள் வாக்களிக்கக் கூடும் என்று ஒரு செய்தி நிறுவனம் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கிறது.

நேற்று இரவு சி.என்.என். தொலைகாட்சியில் பேசிய நிலைய நிபுணர், குறைந்தபட்சமாக 112 மில்லியன் மக்கள் வாக்களித்தாலே கெர்ரி ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார்.

1 comment:

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

ஒரு காலத்தில் தமிழக வெகுசன இதழ்களில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் ஜெகசிற்பியன். இவரது சமூக நாவல்களான 'ஜீவகீதம்', 'கிளிஞ்சல் கோபுரம்', 'சொர்க்கத்தின் நிழல்', 'மண்ணின் குரல்' போன்றவற்றை எங்காவது பெறமுடியுமா? அறிந்தவர்கள் அறியத் தரவும்.

- கிரி -