November 2, 2004 - 4:15 PM EST
தேர்தல் கணிப்புகள் செல்போன் வைத்திருப்பவர்களின் கருத்துகளைக் கண்டறிந்ததில்லை. 18லிருந்து 29வரை வயதுள்ள செல்போன்களில் வாழ்கிற வாக்களிப்புகளில் இதுவரை ஆர்வம் காட்டாத இளையர்கள் இந்தத் தேர்தலின் X Factor ஆக இருக்கக் கூடும் என்று பலரும் சொல்லி வந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கெர்ரியை ஆதரிக்கிறார்கள் என்பது பலரும் அறிந்ததே.
அதற்கேற்றாற்போல, இன்றைக்கு வாக்களித்தவர்களில் 7 பேர்களில் ஒருவர் முதன்முறையாக வாக்களிக்கிறார் என்ற புள்ளிவிவரத்தை இப்போது சி.என்.என். தொலைகாட்சியில் கேட்டேன்.
கெர்ரி முன்னிலையில் இருக்கிறார் என்ற டிரட்ஜ்ரிப்போர்ட்.காமின் தகவலை அடுத்து (என் முந்தைய பதிவுகளில் ஒன்றில் இதைக் குறிப்பிட்டிருந்தேன்.) பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன. மேலும், இதுபற்றிய தகவல்களை http://finance.yahoo.com தளத்தில் அறியலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பேராசிரியர் Tennenbaum நடத்திவரும் http://www.electoral-vote.com என்ற தளத்திலும் இந்த செல்போன் புறக்கணிப்பைப்பற்றி எழுதியிருந்தார். நீங்கள் east coastல் இருக்கிறீர்கள் போலிருக்கு. நான் கலிபோர்னியாவில் இருப்பதால் இன்றைய கடைசி தேர்தல் முடிவுகள் வரும்வரை (1 a.m. EST) விழித்திருக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் எப்படி?
Hi, Thanks for your comment. I am in NJ. I like electoral-vote.com. Its my favorite. I have written a post here giving link to it. I plan to be awake too. But once they start announcing exit polls, I may not write much in blog since it will be immediately available all over the net. Before that, I will try to give as much info. as possible. Regards, PK Sivakumar
Post a Comment