Wednesday, November 10, 2004

அமெரிக்க குடியேறிகளுக்கு உதவும் தீர்ப்பு

இதைப் பற்றி விவரமாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஓடும் உலகத்தை உட்கார்ந்து கூட பார்க்க முடியாத நிலை. :-) மடியில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னை எடுத்துக் கொள் என்று நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தபோது அசட்டையாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இப்போது காலத்தின் பின்னால் கால்தடுக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆதலால், நான் விவரமாக எழுதாவிட்டால் பாதிப்பில்லை. ஆனால், இவ்விஷயம் முக்கியமானது என்பதால் இணைப்பு கொடுக்கிற சுட்டி வேலையாவது செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இத்தீர்ப்பு குடியேறிகளுக்கு உதவக் கூடியது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரென்க்விஸ்ட் பழமைவாதி (Conservative). குடியேற்றப் பிரச்னைகளில் அரசாங்க முடிவுக்கு எதிரான நிலை எடுக்காத இயல்புடையவர். அவரே, இத்தீர்ப்பைச் சொல்லியுள்ளது ஆச்சரியமானது. வரவேற்கத் தக்கது. சுருக்கமாகச் சொன்னால், விஷயம் இதுதான். குடியேறிகள் மோட்டார் வாகன விபத்தில் சிக்கிக் கொண்டு, பொருள்களுக்கோ உயிருக்கோ சேதம் விளைவித்தால், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட வகை செய்யும் ஒரு சட்டப்பிரிவு இருந்தது. அது சரியில்லை என்று சுப்ரீம் கோர்ட் இப்போது சொல்லியிருக்கிறது.

மேலும் விவரமாகப் படிக்க இங்கே சுட்டுங்கள்.

இந்தச் சுட்டியும் உதவும்.

2 comments:

Anonymous said...

Ennamo ponga..

What you are writing is putting food on the table of some families. Keep it up...

Ippavum
Ennamo ponga...

Anonymous said...

Hi PKS

This is indeed really a good news. Recently (abt a month back) a Combodian was convicted of drunken driving (and killing his sister) and was ordered to be deported. He was having GC for about 20 years and never took up citizenship. Governor Baldacci (of ME) pardoned and stopped his deportation.

Now that this is a law, we can drink drive and kill ;). However its a very welcome change.


-dyno

Wish you a very happy Diwali!