Friday, November 12, 2004

ஜெயேந்திரர் கைது - என் எண்ணங்கள்

இந்த விஷயத்தில் எனக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. சட்டம் தன் கடமையை இதுவரை சரியாகச் செய்து வருவதாகவே தோன்றுகிறது. எனவே, ஒரு "ஸ்பின் மாஸ்டராக" யூகங்களுக்குள் இறங்கி எந்த ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையும் எடுக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஜெயேந்திரரின் கடந்தகால செயல்பாடுகள் குறித்து எனக்குக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அவற்றை முடிந்தபோது வெளிப்படுத்தியும் வந்துள்ளேன். ஆனால், அதற்குள் இந்த விஷயத்தில், "காங்கிரஸின் சதி" என்றும், "ஜெயலலிதாவின் அரசியல் ஆதாய முயற்சி" என்றும், "தீபாவளி அன்று கைது செய்தது சரியா" என்றும், பலவிதமான விளையாட்டுகள் ஆரம்பித்துவிட்டன. இவையெல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்வதை விரும்பாதவர்களின் முயற்சி என்றே நான் பார்க்கிறேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. காஞ்சி மடத்தின் மறைந்த பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது பெருத்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரின் சில கொள்கைகள் எனக்கு உடன்பாடானவை அல்ல. ஆனால், அவரை நேரில் பார்த்திருந்தால் அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தவறியிருக்க மாட்டேன். அத்தகைய மரியாதை அது. ஆனால், ஜெயேந்திரர் காஞ்சி மடத்துக்குத் தன் செயல்கள் மூலம் களங்கமே விளைவித்து வந்திருக்கிறார் என்பது என் கணிப்பாக இருந்து வருகிறது.

ஜெயேந்திரர் கைதை நான் ரீடிப்பில் செய்தி வந்த உடனேயே பார்த்து விட்டேன். அது எனக்கு ஆச்சரியமோ திகைப்போ அளிக்கவில்லை. அப்போது நான் என் நண்பர்கள் 4 பேருடன் ஒரு கான்ப்ரன்ஸ் காலிலும் இருந்தேன். அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜெயேந்திரர் இத்தகைய செய்திகளில் அடிபடக் கூடியவர்தான் என்ற மனோபாவம் அவர்களுக்குமா என்று தெரியவில்லை. எனவே, இதுதான் ஜெயேந்திரரின் லெகஸியோ என்று அப்போது எனக்குத் தோன்றியது.

இந்தக் கைதைப் பற்றி ஆளாளுக்கு எழுதி விட்டார்கள். பத்திரிகைகளுக்கு இன்னும் சில மாதங்களுக்கு வாண வேடிக்கைதான். எனவே, இந்த வழக்கினுள் செல்லாமல், அவசர முடிவுகள் எடுக்காமல், இந்தக் கைதை ஒட்டி நடக்கிற சில செயல்கள் பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தீக்குளிக்கிற திருஜனங்கள் காஞ்சிக்கும் பக்தர்களாக இருக்க முடியும் போல :-). ஜெயேந்திரர் "சட்டப்படி" கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்களாம். விவரங்களை http://www.petitiononline.com/dharma1/petition.html என்ற முகவரியில் காணலாம். இப்படியே போனால் எதெதற்குக் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்ற விவஸ்தையில்லாமல் போய்விடும். பதிலுக்கு, ஜெயேந்திரரைக் கைது செய்ததை ஆதரித்து ஒரு கையெழுத்து இயக்கமும் விரைவில் வரும் பாருங்கள்.

ஜெயேந்திரர் சன்னியாசி என்பதால் மூன்று வேலையும் பூஜை செய்ய சிறையில் அனுமதி கிடைத்திருக்கிறதாம். நாளைக்கு ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர் 8 மணி நேரம் பயன்படுத்த சிறை அதிகாரிகள் கம்ப்யூட்டரும் இண்டர்நெட் வசதியும் தருவார்களா என்று தெரியவில்லை. :-) அப்படி அந்த வசதிகளை சாப்ட்வேர் எஞ்ஜினியர் கேட்கக்கூடுமானால் இந்த முன்னுதாரணத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியுமா என்றும் தெரியவில்லை. நாகரீகமாக சாப்ட்வேர் எஞ்ஜினியர் உதாரணத்தைக் கொடுத்துள்ளேன் :-)

இந்த விஷயத்தில் சட்டம் அதன் கடமையைச் செய்ய விட்டுவிட்டு, கவனித்து வருவதே பொறுப்புள்ளவர் செய்கிற காரியமாக இருக்கும். சட்டம் கடமையைச் செய்யத் தவறும்போதோ, விஷயம் சரிவர கையாளப்படவில்லை என்ற சந்தேகம் வலுக்கும்போதோ குரல் கொடுத்தாலாவது புண்ணியமுண்டு. ஜெயெந்திரர் கைது விஷயத்தில் இதுவரை எதுவும் சட்டத்துக்குப் புறம்பாகவோ முறை தவறியோ நடந்ததாகத் தெரியாத பட்சத்தில் வி.எச்.பி.யும் பா.ஜ.க.வும் எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது ஜெயேந்திரர் இதுவரை யார் பக்கம் இருந்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல இருக்கிறது. இஸ்லாமியர்களின் பாப்ரி மஸ்ஜித் குழுவைப் பாராட்ட வேண்டும். இவரை நம்பி சமாதானப் பேச்சுக்குள் இறங்கி ஏமாந்து போகாமல் இருந்தார்களே.

கருணாநிதி முதல்வராக இருந்தால் கூட இத்தகைய "சென்சிட்டிவான" கைதுகள் செய்ய யோசித்திருப்பார் என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். ஜெயலலிதாவுக்கு நிறையவே தைரியம். அதையும் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த காலத்தில் தான் மதித்த ஒருவரை, சன்னியாசியாய் வணங்கிய ஒருவரைப் பாரபட்சமின்றிக் கைது செய்ய ஜெயலலிதாவால் முடிந்திருக்கிறது என்றால், அதில் "காஞ்சி மடத்தின்" பிரதான சீடர்களுள் ஒருவரான "சோ"வாலும் தவறு காண முடியவில்லை என்றால், புகைக்குள்ளே நெருப்பு இருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. நெருப்பு இருந்தால், என்ன நெருப்பு, எத்தனை பேரைப் பொசுக்கிய நெருப்பு என்ற விவரங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பது இப்போதைக்கு உசிதமான செயல்.

பி.கு.: கடந்த காலத்தில் சின்னக் குத்தூசியும் ஞாநியும் ஜெயேந்திரரை எடுத்த பேட்டியன்று பழைய தீம்தரிகிட இதழொன்றில் சில வருடங்களுக்கு முன் வெளியானது. தகவல்கள் நிறைந்த, படிக்க வேண்டிய பேட்டி அது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கப் பெற்றால், தட்டச்சு செய்ய முடிந்தால், இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

8 comments:

suratha yarlvanan said...

/கருணாநிதி முதல்வராக இருந்தால் கூட இத்தகைய "சென்சிட்டிவான" கைதுகள் செய்ய யோசித்திருப்பார் என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். ஜெயலலிதாவுக்கு நிறையவே தைரியம். /

உண்மை!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

PKS You have given a balanced view.I have read that interview published as a booklet years ago.Since I am not sure about the details i did not refer to that in
my blog posting.The details in The Hindu are shocking,
and there is a reference to an earlier attempt to murder a person who disagreed with jayendrar.Let the law take the course.If they chargesheet under Section 302 they should prove beyond doubt that he plotted the murder and used others to execute that and if proved
the maximum punishment is capital punishment.

Anonymous said...

இந்திரா காந்தி விதவை என்ற ஒரே காரணத்திற்காக அவரை சந்திக்க மறுத்தவர்தான் நீஙகள் சொல்லும் மகாப் பெரியவர் ( ?? ) . சிலரின் முயற்சியால் அவர் கடைசியாக சந்திக்க ஒப்புக்கொண்டார்... அதுவும் எப்படி..

ஒரு திரைக்கு அப்பால் இந்திரா காந்தியை நிற்க வைத்து, இவர் இந்தப் பக்கம் பசு மாட்டைப் பார்த்து பேசினார்... விதவயைப் பார்த்தால் தீட்டாம்.

PKS said...

Dear Ananymous, I can make a reasonable guess about who you are :-) But, thats immaterial. I have known what you have mentioned. Thats why, I told clearly that I did not agree with everything Swami Chandrasekarendra Saraswathi said and did. For example, I am told that he also opposed "harijan's aalaya pravesam". I dont agree with it either. I remember reading something abt his dialogue with Gandhiji too. But these disagreements did not stop me from respecting him.

Jeyakanthan opposed Periyar karuthukal tooth and nail. But When he met Periyar and saw how Periyar gave way for even opposing views to be expressed in democratic way, Jeyakanthan wrote that he felt like falling at the feet of Periyar as a sign of respect. If you could understand Jeyakanthan here, you could understand me too.

If you cant understand either, dont worry. I understand about what I say. :-) Thats what matters.

Thanks and regards, PK Sivakumar

rajkumar said...

Good views.

For your info, one of the Muslims association condemned the arrest.

Anbudan

Rajkumar

Anonymous said...

I agree with your comments. BJP & VHP members are protesting but not even a single word mentioned about Jayalalitha's involvement. Are they afraid?

Anonymous said...

I have one question about this case....

If I want to kill one of my associates will I make it happen in my own premises? Why would I pay money and ask someone to do that way? What would be the reason?

The reasons would be ...

1) I am an idiot...
2) I am an idiot
3) I am an idiot...
4) I am an extraordinarily brilliant guy who can do this way and still get away by having some agreement with police and the government...but if they become against me..then should I have a plan for that also?

Hope Jeyendrar is not like me....He is a saint and he cannot think like me...Should I believe in that...

Anonymous said...

Hold it....the murder did not happen in the math. Look at this link for more details..

http://www.dailypioneer.com/displayit1.asp?pathit=/columnist/mishra/mishra53.txt