வார்த்தை: காடுவசாதியாய்த்திரிதல். பொருள்: 1. விகாரமான கோலத்தோடு திரிதல், 2. அநாதையாகத் திரிதல். உதாரணம்: கவனிப்பார் யாருமின்றியும் சரியான நடையுடை பாவனையின்றியும் அவன் காடுவசாதியாய்த் திரிந்தான். (காடுவசாதி என்பது காடுவாழ்சாதி என்பதன் திரிபாகும்.)
வேற்றுமைத் தொடர்களில் ஒற்றுமிகும் இடங்கள்:
வேற்றுமைத் தொடர்களுக்கான பயிற்சியை அளித்த ஜெயஸ்ரீக்கு மீண்டும் நன்றிகள். அப்பயிற்சிகள் உதவிகரமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி வேற்றுமைத் தொடர்களில் ஒற்று மிகும் இடங்களை நாளுக்கு ஒன்றாய்ப் பார்ப்போம்.
இரண்டாம் வேற்றுமை விரித்தொடரில் (இது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர் எனவும் அழைக்கப்படுகிறது என்பது நாமறிந்ததே.) வல்லின ஒற்று மிகும்.
அதாவது, இரண்டாவது வேற்றுமை உருபான "ஐ" வெளிப்படையாகப் புலப்படுமாறு அமைந்து வருகிற தொடர்களில் வல்லின ஒற்று மிகும். இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும் என்றாலும் 4 உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதுவும் மிகவும் சுலபமான விதியாகும். இணையக் குழுக்களில், நிறைய இடங்களில் பலர் (சில நேரங்களில் நான் கூட அவசரத்தில்) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லின ஒற்று மிகுவதைக் கவனித்துப் பயன்படுத்துவதில்லை. எனவே, இதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
உதாரணங்கள். சீதையைக் கண்டேன், உண்மையைச் சொன்னான், திருடனைத் திருத்தினார், வீட்டைப் பூட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
kaaduvasaathi: Isn't it good that this word went out of circulation? Isn't it pejorative to a group (possibly a caste) of people?
Srikanth, you are right. I also thought about it. However, before starting listing words, I have said that I will randomly pick words. If any words that are not in use come up, I will also list it. This may help to know the history. Thats the reason I listed it. If you have noticed, sometimes I may also list words that are used only in poetry. Its upto one, to use these words or not. Thanks, PK Sivakumar
Stop this non sense for for some time...there are 10s of thousands of people dead and you are trying to teach ???
Hello Anonymous, Have you stopped commenting in blogs because of this tragedy? Have you stopped your normal and routine life because of the tragedy? Grieving for someone does not mean, one has to stop something he/she is doing. So, keep your advice to yourself.
Another thing. I am not teaching anything here. I am just sharing whatever I am learning. If you dont want to read it, please get lost.
Thanks, PK Sivakumar
காட்டான் மாதிரித் திரிந்தான் என்றும் கூறலாமோ? அப்போது சாதிப் பிரச்சினை வராது அல்லவா?
அன்புடன்,
டோண்டு Raghavan
Post a Comment