திண்ணையில் பெரியார் எழுதிய, பெரியாரைப் பற்றிப் பல கட்டுரைகள் இருக்கின்றன என்று எழுதியபோதே, நேரம் கிடைக்கும்போது அவற்றுக்கான இணைப்புகளைத் தர வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றைக்கு தலைப்பில் "பெரியார்" என்று இருக்கிற கட்டுரைகளைத் தேடும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றுக்கான இணைப்புகளை இங்கே தருகிறேன். இவையில்லாமல் ஈரோட்டுப் பாதை சரியா என்று ஜீவா எழுதிய கட்டுரையின் இணைப்பும், தலைப்பில் பெரியார் என்ற வார்த்தை இல்லாமல், ஆனால் பெரியாரைப் பற்றியது என்று நானறிந்த கட்டுரைகளின் சுட்டிகளையும் தந்திருக்கிறேன்.
என் தேடலில் சிக்காத கட்டுரைகளும் இருக்கக் கூடும். என்னால் முடிந்த அளவுக்கு வெவ்வேறு வார்த்தைகளை வைத்துத் தேடி இவற்றைத் தொகுத்திருக்கிறேன். ஆனால், இது முழுமையான தொகுப்பல்ல. உதாரணமாக, கடிதங்கள் பகுதியில் உள்ள பெரியாரைப் பற்றிய கருத்துகளைத் தொகுக்கவில்லை. அரசியலும் சமூகம், இலக்கியக் கட்டுரைகள் பகுதிகளில் இருந்து முடிந்தவரை தொகுத்திருக்கிறேன். உதாரணமாக, சிலர் ஈ.வே.ரா என்று எழுதுகிறார்கள். சிலர் ஈ வே ரா என்று எழுதுகிறார்கள். இத்தகைய வார்த்தைகள் தலைப்புகளில் இருக்குமானால், அவற்றை என் தேடலில் முழுமையாகக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதே, சுட்டி கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று பரி கருத்து சொன்னார். எனவே, இச்சுட்டிகளைப் பயன்படுத்தப் போகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு நிறைவைத் தருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, திண்ணை தவிர பிற இணைய தளங்களில் இருக்கிற பெரியார் எழுதிய மற்றும் பெரியார் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்துச் சுட்டிகள் தர நண்பர்கள் யாரேனும் முன்வர வேண்டும். பெரியார் மீது விமர்சனங்கள் இருக்கிற என்னால் இதைச் செய்ய முடிந்திருக்கிறபோது, பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிற நண்பர்கள் அதைச் செய்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
பெரியார் பேச்சுகள்/கட்டுரைகளைப் பின்வரும் சுட்டிகளில் பார்க்கலாம்:
ஈ.வே. ராமசாமி படைப்புகள்
தந்தை பெரியார் கட்டுரைகள்
பெரியாரைப் பற்றிய கட்டுரைகளைப் பின்வரும் சுட்டிகளில் பார்க்கலாம்:
பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்) - ஞாநி
நிஜநாடக இயக்கத்தின் கலகக்காரத் தோழர் பெரியார் - வெளி ரங்கராஜன்
கேள்வி 2: தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார்? - ஞாநி
பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதன் கட்டுரைக்கு எதிர்வினை - ஞாநி
காந்தியார், பெரியார், சாதிகள் - வீ செல்வராஜ்
வைணவரின் குறும்புச் செயலே சுயமரியாதை இயக்கமாகும்
சங்கராச்சாரியார் பெரியாருக்கு எழுதிய கடிதம்
ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் - சில கேள்விகள் - மஞ்சுளா நவநீதன்
சூத்திர பார்ப்பனர்களும் பார்ப்பன சூத்திரர்களும்
ஞாநிக்கு மீண்டும் - மஞ்சுளா நவநீதன்
அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை - ஈ.வே.ரா.வின் அணுகுமுறை - ஜெயமோகன்
இந்தியாவின் தாமஸ் பெயின் - பெரியாரின் அறிவியக்கம் - கோபால் ராஜாராம்
பெரியாரின் பெண்ணுரிமை பற்றி சின்னக்கருப்பன்
பெரியாரியம் 1 - ராஜன் குறை
பெரியாரியம் 2 - ராஜன் குறை
பெரியாரியம் 3 - ராஜன் குறை
பெரியாரியம் 4 - ராஜன் குறை
ஜெயகாந்தனும் பெரியாரும் - மஞ்சுளா நவநீதன்
ஈரோட்டுப் பாதை சரியா - 1 - ஜீவா
ஈரோட்டுப் பாதை சரியா - 2 - ஜீவா
ஈரோட்டுப் பாதை சரியா - 3 - ஜீவா
சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம் - சின்னக்கருப்பன்
திருவள்ளுவரும் திராவிட அரசியலும் - சின்னக்கருப்பன்
நன்றி: திண்ணை இணைய தளம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்தச் சுட்டிகளால் பெரியாரின் சிந்தனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி சிவகுமார்.
அன்புள்ள சிவக்குமார்,
நான் உங்களுக்கு ஒரு பாராட்டையோ நன்றியோ தொலைபேசியில் சர்வசாதாரணமாகக் கூறி விட முடியும்..ஆனால், இந்த எனது பாராட்டும் நன்றியும் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் வலைப்பதிவு மறுமொழிப் பெட்டியை உபயோகித்துக் கொள்கிறேன். மிக மிக பயனுள்ள சுட்டிகளை தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். நான் வெகுகாலமாக பெரியார் சம்பந்தமான விஷயங்களை, அவரின் சிந்தனைகளைப் படிக்க வேண்டும் அதே சமயம் அவருக்கான எதிர் தரப்பின் நியாயமான அலசல்களையும் படிக்க வேண்டும் என்று பல நண்பர்களிடம் புத்தகங்கள் கேட்டு நச்சரித்திருக்கிறேன். ஆனால், திண்ணை ஒரு அரிய பொக்கிஷமாய் அத்தனை விஷயங்களையும் உள்ளே வைத்திருக்கிறது என்பதை அறியாமலே இத்தனை காலம் இருந்திருக்கிறேன். மிக்க நன்றி...ஜெயமோகனின் கட்டுரையையும், பெரியாரின் கட்டுரைகளையும் படித்தேன். பல விஷயங்கள் மிக மிக சுவாரஸ்யமாக உள்ளது...மீண்டும் மீண்டும் படிப்பேன். நன்றிகள் பல.
- அழியா அன்புடன் அருண்
மரத்தடியில ஒரு பிட் நோட்டீஸ் போடுங்க...ஜெயஸ்ரி தான் கேட்டாங்க பெரியாரின் எழுத்துக்களைப் பத்தி..
Dear PKS,
Thanks for the links and your efforts.
Suresh Kannan
=D> =D> =D>
திண்ணையில் நான் பழைய ஆக்கங்களை படித்தது இல்லை. நீங்கள் திண்ணையில் பெரியாரைப் பற்றிய கட்டுரைகள் பல இருப்பதாக சொன்னதும் சரி ஒரு நாள் தேடி படிக்கலாம் என்று நினைத்தேன். இப்போ வாழைப்பழத்தை உரித்து வாயில் ஊட்டுறிங்க. கலக்குங்க :-).
>>>>கட்டுரைகளைத் தொகுத்துச் சுட்டிகள் தர நண்பர்கள் யாரேனும் முன்வர வேண்டும்.
பிடியுங்கள் ஈ-தமிழ் பாலாஜியை... அவர்தான் இது போன்ற தொகுப்புகளை பல முறை தேடி பதித்திருக்கிறார்!
-டைனோ
Post a Comment