Thursday, January 13, 2005

அறிவிப்பு

இந்த வாரம்முதல் மனைவி பகுதி நேர வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார். இது குடும்பத்தின் சமன்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வாரத்துக்கு மூன்று நாட்கள் அரை நாள் pre-school சென்று கொண்டிருந்த மகளுக்கு வாரம் முழுவது முழுநாள் பள்ளிக்கூட அனுமதி பிப்ரவரியிலிருந்தே கிடைத்திருக்கிறது. இந்த மாதம் முழுவதும் எப்படி இதைச் சமாளிப்பது என்பது குறித்த தெளிவான திட்டம் இல்லை. என் வேலை நேரத்தையும் இது மாற்றியமைத்திருக்கிறது. காலை ஐந்து மணிக்கு எழுந்து ஆறுமணிக்கு வேலைக்கு ஓட வேண்டியிருக்கிறது. அப்போதுதான் ஏழுமணிக்கு இருக்கையில் இருக்க முடியும். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், பிற வீட்டு வேலைகள் என்று புதிய பொறுப்புகள்.

இவ்வளவு நாட்கள் எவ்வளவு சோம்பேறியாய், வேலை, படிப்பு, எழுத்து, பிற வேலைகள் என்று சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தேன் என்று புரிகிறது. அவ்வப்போது அலுத்துக் கொண்டாலும், குறை கண்டாலும், என் இஷ்டப்படி என்னை அலையவிட்ட மனைவி மீதான மதிப்பு அதிகமாகிறது. எனவே, இந்தப் புதிய ஏற்பாடு ஒரு சமநிலையை அடைந்து, எல்லாம் திட்டமிட்டபடி நடந்து, எனக்கான நேரம் எதுவென்று பிடிபடும்வரை, நிறைய இங்கு எழுத இயலாமைக்கு வருந்துகிறேன். தினம் ஒரு சொல்லும், இலக்கணக் குறிப்பும் அதுவரை இல்லாமல் போவது மேலும் வருத்தமளிக்கிறது.

சுனாமியினாலும் மற்றும் அது குறித்த நிவாரண உதவிகளில் ஈடுபட்டிருந்ததாலும் திட்டமிட்டபடி திண்ணை தொகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு நேர்காணலுக்கான கேள்விகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த இயலவில்லை, நண்பர்களுடன் பல மாதங்களுக்கு முன் செய்த ஒரு நேர்காணலை ஒளி வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்தில் கொண்டுவர இயலவில்லை. இப்படிப் பல வேலைகள் அந்தரத்தில் தொங்குகின்றன. எனவே, எனக்கான நேரம் கிடைக்கும்போது இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

மரத்தடியில் பிறர் படைப்புகளை வலையேற்றுகிற என் தன்னார்வப் பணியிலும், ஏற்கனவே வாக்குக் கொடுத்துள்ள பிற தன்னார்வப் பணிகளிலும் தொய்வு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிற கடமையும் சேர்ந்திருக்கிறது. திண்ணை - மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டிக்குக் கடைசிநாள் ஜனவரி 15, 2005. பின்னர் கதைகளைத் தொகுத்து நடுவருக்கு அனுப்புவதிலிருந்து, நடுவர் முடிவுகளை அறிவிக்கும்வரை அந்த வேலைகளிலும் என் பங்கைச் செலுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் மீறி என்னை வலைப்பதிவில் எழுதத் தூண்டுகிற விஷயங்கள் இல்லாத வரைக்கும் வலைப்பதிவுலகத்தில் வாசகராக இருக்கப் போகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். நான் எழுதாமல் இருப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. ஆனால், தினம் ஒரு சொல்லும் இலக்கணக் குறிப்பும் பாதிக்கப்படுவதால் இந்த வியாக்கியானத்தைத் தர வேண்டியிருக்கிறது.

10 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

LILT, i.e. Life Is Like That :). we plan for something
and what we did not plan for overruns that :)

ROSAVASANTH said...

where is your email address? I am not able to find in this page. Ofcourse I would like to write a mail.

anbuLLa vasanth

ROSAVASANTH said...

anyway I will come and chcek here tommorow. Now I have to sleep. anbuLLa ..

Anonymous said...

இந்த வாரம் முதல் மனைவி
how many wivies do you have PKS Ji?
usha

PKS said...

Usha, After posting in the blog, I also thought like you. Its a byproduct of writing in a hurry :-((. Sorry about it. I have only one wife. - Thanks and regards, PK Sivakumar

PKS said...

Rosa: I sent my email in an email. Here it is again, pksivakumar@yahoo.com - PK Sivakumar

Anonymous said...

உஷா, இரண்டாவதாக புத்தகம் படிப்பது இருக்கலாமே ?

Anonymous said...

உஷா, இரண்டாவதாக புத்தகம் படிப்பது இருக்கலாமே ?

- Ganesh

SnackDragon said...

//srry about it. I have only one wife. //
Does ur wife know that? P

Anonymous said...

þôÊ ¯„¡¸¢ð¼ Á¡ðÊ츢ÈÐìÌ "þó¾ Å¡Ãõ Ó¾ø ±ý Á¨ÉÅ¢" Û ±Ù¾¢Â¢Õó¾¡ ±Š§¸ô ¬¸¢Â¢ÕôÀ£§Ã À¢.§¸.±Š…¤!

-ôâ¡