Tuesday, July 05, 2005

தஞ்சாவூர் ஓவியங்கள்

எனிஇண்டியன்.காம்-இல் தஞ்சாவூர் ஓவியங்கள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுவரை 18 தஞ்சாவூர் ஓவியங்கள் விற்பனைப் பட்டியலில் உள்ளன. இந்த எண்ணிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கும். தற்போது கிருஷ்ணர், விநாயகர், சாமுண்டி அம்மன் போன்றவை தஞ்சாவூர் ஓவியங்களாக எனிஇண்டியன்.காமில் கிடைக்கின்றன. இனிவரும் நாள்களில் இன்னும் பலவிதமான ஓவியங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஓவியங்களின் படைப்பாளர் கலாமணி T. வெங்கடேசராஜா ஆவார். இவர் தஞ்சாவூர் ஓவியங்களை வரைவதிலும் உருவாக்குவதிலும் பலவருட அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர். இடைத்தரகர்கள் யாருமில்லாமல் எனிஇண்டியன்.காம் நேரடியாக ஓவியக் கலைஞரிடமிருந்தே ஓவியங்களைப் பெற்று விற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வோர் ஓவியமும் பல அளவுகளில் (sizes) கிடைக்கின்றது. அந்த ஓவியப் பக்கத்தை எங்கள் தளத்தில் திறந்து பார்ப்பதன்மூலம், அது எத்தனை வகையான அளவுகளில் கிடைக்கின்றது, ஒவ்வோர் அளவுக்குமான விலை என்ன ஆகியவற்றைப் பயனர்கள் சுலபமாக அறிய முடியும்.

இவ்வோவியங்களை இந்தியாவில் இருக்கிற நுகர்வோர் மட்டுமே தற்போது வாங்க இயலும். வெகுவிரைவில் - உலகெங்கும் இருக்கிற நுகர்வோர்கள் எனிஇண்டியன்.காமிலிருந்து ஓவியங்களை வாங்குகிற வசதியும் சேர்க்கப்படும்.

No comments: