Wednesday, July 13, 2005

கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள்

அவர்கள்
முதலில் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை
நான் கம்யூனிஸ்ட் இல்லை

பின்னர்
தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை
நான் தொழிற்சங்கவாதி இல்லை

அதற்குப் பின்னர்
யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை
நான் யூதன் இல்லை

அடுத்து
கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள்
நான் ஒன்றும் பேசவில்லை
நான் கத்தோலிக்கன் இல்லை

கடைசியாக
என்னைத் தேடி வந்தார்கள்
எனக்காகப் பேச அப்போது யாருமே இல்லை.

[ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சியைப் பற்றி மார்டின் நிமோலர் (Martin Niemoller) 1937-ல் எழுதிய புகழ்பெற்ற வரிகளின் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம். மொழிபெயர்ப்பின் குறைபாடுகள் என்னுடையவை. இவ்வரிகள் பலவிதமான பாடங்களில் (variations) இணையத்தில் கிடைக்கின்றன. சிலவற்றில் தொழிற்சங்கவாதிகளைப் பற்றிய வரிகள் இருக்கா. சிலவற்றில் கத்தோலிக்கர்களைப் பற்றிய வரிகள் இருக்கா. நான் எனக்குக் கிடைத்த ஒரு வடிவத்தை மொழிபெயர்த்திருக்கிறேன். இந்த வரிகளைத் தழுவி சமீபத்தில் அமெரிக்காவின் பேட்ரியாட் ஆக்ட்டை எதிர்த்தும் எழுதப்பட்டிருக்கிறது.]

5 comments:

PKS said...

Priya -

Kavithaiyai ezuthiyavaruku apply panni parka koodathu :-) Ingey naan ithai ezutha kooda illai. Oru famous quote ai translate panna try panni irukean. :-)

Anbudan, PK Sivakumar

.:dYNo:. said...

Trans-iterate செய்திருந்தாலும் காலாத்திற்கேற்ற பதிவே!

.:டைனோ:.

PKS said...

Dyno -

Thanks for your comment.

Recently I started a yahoo 360 post. you may please visit it at http://360.yahoo.com/pksivakumar. I posted few posts there today. This is one of them. I have been telling for more than one month about this famous quote to many friends including Baba (Boston Balaji). When I first posted it in yahoo 360, Baba came and suggested me personally to post it in Blogspot too. His logic is that way, its easy for many to read. So, I posted it in my blogpost account too.

However, looks like some self-obsessed people who imagine that others talk only about them think its directed about them. I feel sorry for them. My intention is not to target anyone with this translation. In this case friends like Baba knew what happened and I was telling them about this famous quote for more than a month etc. However, we cannot help if someone draws their own imaginary conclusions and hurt themselves. Its not the first time they do it.

Thanks and regards, PK Sivakumar

.:dYNo:. said...

சிவா, நீங்களும் 360க்கா? என்னமோ போங்க!

.:டைனோ:.

PKS said...

Dyno -

Nothing wrong in experimenting. right?

My Maraththadi friend Iyappan who works for yahoo added me into 360 as soon as the beta version was available. I have not used it since though used it to read 360 blogs in tamil.

I will also continue to write in my blogspot account. Initially I thought I would use 360 account for English and then realized that my English is no good for writing.

In the coming days, I will try to differntiate (allot) different subject areas to both blogs.

Thanks and regards, PK Sivakumar