Tuesday, November 15, 2005

ஹிந்து ராமும் பிரபாகரனும்

(முன்குறிப்பு: ஹிந்து என். ராமின் விடுதலைப் புலிகளுக்கெதிரான தற்போதைய நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. அதற்காகவே 'எப்போது வாய்ப்பு கிடைக்கும்' என்று பார்த்து அவரைத் தாக்குவதற்கு அலைபவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை எதிர்த்தால் இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் எதிர்ப்பது என்று அவ்வெதிர்ப்பைத் திரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஹிந்து என். ராம் ஆரம்பம் தொட்டே விடுதலைப் புலிகளை எதிர்த்து வருகிறாரா? இல்லையென்கிறது கீழே உள்ள ஜெயகாந்தன் கட்டுரை. ஆரம்பத்தில் பிரபாகரனை (ஏறக்குறைய எல்லா இந்தியர்களும் செய்த மாதிரி) ஆதரித்த ஹிந்து என். ராம் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியது ஏன் எதனால் என்ற கேள்வியை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வது, வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும். எப்போது ஹிந்து என். ராம் விடுதலைப் புலிகளை எதிர்க்க ஆரம்பித்தார் என்று எனக்கும் தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்குமேயானால், அதுபற்றி அவரிடம் "எப்போதிலிருந்து, ஏன்" என்று கேட்க வேண்டும். இதுபற்றி அவர் ஏற்கனவே வேறு எங்கேனும் பேசியோ எழுதியோ இருந்தால், நண்பர்கள் கவனத்துக்குக் கொண்டுவருமாறு வேண்டுகிறேன். ஹிந்து என். ராமின் கொள்கைகள் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். நான் மதிக்கிற மரியாதை வைத்திருக்கிற இந்தியப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். அவர் மீது எனக்குள்ள மதிப்பையையோ மரியாதையையோ அவர் பிரபாகரனை முன்னர் பாராட்டியது மாற்றிவிடப் போவதில்லை. ஹிந்து என்.ராம் ஒரு குருட்டுத்தனமான இந்திய தேசியவாதி இல்லை. அப்படிப்பட்ட பிம்பத்துக்குள் அவரை அவரின் எதிரிகள் அடைத்துவிட முயல்கிற போதிலும். அப்படிப்பட்ட இந்திய தேசியவாதியாக என். ராம் இருப்பாரேயானால், "இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் தூக்கி நின்ற பிரபாகரனை" அவரது பாசறையில் சென்று சந்தித்து அதைப் பற்றிய துண்டுபிரசுரத்தை - பிரபாகரனைப் புகழ்கிற வாக்கியங்கள் கொண்டவை - என்.ராம் வெளியிட்டிருக்கமாட்டார். ஆனால், அப்போது அப்படிப் பாராட்டியவர் இப்போது எதிர்ப்பதற்குக் காரணங்கள் இருக்கக் கூடும் என்று யோசிக்கிற பொதுப்புத்தி எனக்கு இருப்பதாலேயே, அவர் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது குறித்து இன்னமும் சந்தோஷப்படுகிறேன். - பி.கே. சிவகுமார்)

இனி, சுலபமாக அணுக அனுமதியோம்!
- ஜெயகாந்தன்

வேங்கை வரிப்புலி நோய்
.....தீர்த்த விடதாரி
ஆங்கதனுக்கு ஆகாரம்
.....ஆனாற்போல்
பாங்கறியாப்
.....புல்லறிவாளர்க்குச் செய்த
உபகாரம்
......கல்லின் மேலிட்ட கலம்!

என்றொரு பழம்பாடல் உண்டு. ஈழத்துப் புலிகள்பால் அனுதாபம் கொண்டு அவர்களுக்குப் பலவகையிலும் உதவி செய்யப் போன இந்தியாவுக்கும் தமிழர்க்கும் இன்று இறுதியாகப் புலிகளின் பகைமைதான் பயனாகக் கிடைத்துள்ளது.

தம்மை அழித்துக்கொண்டேனும் இந்தியாவின் தலைவர்களையும் தமிழ் மக்களின் அமைதியான ஜனநாயக வாழ்வையும் அழித்துச் சீர்குலைக்கத் தீர்மானித்துச் செயலாற்ற ஆரம்பித்து விட்டனர் நன்றி கெட்ட புலிக்கூட்டத்தினர்.

இந்த கொலை பாதகத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாகக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இந்தியாவில் -குறிப்பாகத் தமிழ் நாட்டில் -நன்கு ஊடுருவிப் புகுந்து அங்கெங்கெனாதபடி எல்லாவிடத்தும் நிலை கொண்டுள்ளனர்; செயல்பட்டும் வருகின்றனர்.
"இதில் திமுக மீது மட்டும் குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது. எந்தக் கட்சியையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. எல்லோருமே குழம்பினார்கள். யாரும் நெஞ்சைத் தொட்டு இதில் நான் சரியான முடிவெடுத்தேன் என்று சொல்லமுடியாது" என்று வாதிடும் நண்பர் திரு. என் .ராம் அவர்களோடு நான் மாறுபட வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் புலிகள் உட்படப் பல போராளிகளும் வந்து முகாமிட்டுள்ளனர் என்கிற விஷயம் எப்போது எல்லா மக்களுக்கும் தெரியவந்தது?

சென்னை நகரில் பாண்டி பஜாரில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் இன்னொரு பிரிவைச் சேர்ந்த முகுந்தனும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாவதற்கு முன் இந்த போராளிகள் இங்கு தஞ்சம் புகுந்திருந்த விஷயமே யாருக்கும் தெரியாது. அகதிகளுக்கு முன்பாகவே இந்த ஆயுதம் தரித்த புலிகள் குடியேறி இருந்ததற்கு யார் பொறுப்பு?

இந்த கேள்வி எல்லா மக்கள் மனத்திலும் எழுந்தது. நானும் நண்பர் சோவும் இந்தக் கேள்வியை அப்போதே எதிரொலித்தோம். அப்போது பாரதத்தின் பிரதமராக இந்திரா அம்மையார் இருந்தார். அப்போதிருந்த ஈழத்து இனப்போரில் நமது அனுதாபம் ஈழத்தமிழ் மக்களின் சார்பாக இருந்ததற்கும், இந்தப் பிரிவினைவாத வன்முறையாளர்களுக்கு இங்கு இடம் தந்ததற்கும் சம்பந்தம் கிடையாது.

ஆயினும் அப்படியொரு சம்பந்தத்தை ஏற்படுத்தி, 'இந்த ஆயுதமேந்திகளுக்கு இங்கு இடம் தந்து ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை எடுத்துக்கொண்டு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்கள் இந்திரா காந்தியைச் சென்று பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். மார்க்ஸிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மட்டுமே "இந்த கோரிக்கை அபத்தமானதும், ஆபத்தானதும் ஆகும்" என்று எச்சரித்து இந்தக் குழுவிலிருந்து தமது கட்சியை விலக்கிக்கொண்டார். தம்மையும் இந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளததற்காக அன்று குறைபட்டுக்கொண்டார் கருணாநிதி.

சீக்கியப் பிரிவினைவாத வன்முறையாளர் சதிக்கு இந்திரா காந்தி அம்மையார் பலியான பிறகும்கூட இந்த ஈழப் பிரிவினைவாத வன்முறையாளர்கள் குறித்து எத்தகு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் தனித்தனியாகவும் கூட்டாகவும் நான், நண்பர் சோ, ம.பொ.சி போன்றவர்கள் புலிகளின் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அதன் அபாயங்களையும் குறித்து எச்சரித்து வந்தோம்.

தமிழகத்தில் புலிகளுக்கும், பிரிவினைவாதத்துக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர்களால் 'தமிழ்த் துரோகிகள்' என்று நாங்கள் அபவாதம் செய்யப்பட்டோம், அச்சுறுத்தப்பட்டோம். ஆரம்பத்திலேயே செய்த தவறுகளைப் புரிந்து கொண்டு மனம் மாறிய தலைவர்களின் முன் முயற்சியால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தியாலும், எம்.ஜி.யாராலும் உருவாயிற்று. அதை ஏற்றுக்கொண்டு ஈழம் திரும்பிய பிரபாகன் அந்த ஒப்பந்தத்துக்கே எதிரியானார்.

அது சமயம் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் தூக்கி நின்ற பிரபாகரனை அவரது பாசறையில் சந்தித்த இந்து என்.ராம் அவர்கள் ஒரு விரிவான பேட்டி கண்டு தனிப்பிரசுரமாகவும் அதை வெளியிட்டிருந்ததை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதில் பிரபாகரனை சுபாஷ் சந்திரபோஸை ஆதர்சமாகக் கொண்ட புரட்சிக்காரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது.

இந்த வன்முறையாளர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது வேறு: இவர்களுக்கே இடம் கொடுப்பது வேறு என்று புரிந்து கொண்ட ராஜீவ் காந்திதான் ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு காண்பது ஒன்றே ஈழப்பிரச்னை தீர வழியென்று நிரூபித்தார். அமிர்தலிங்கமும், ஈழப் புரட்சிகர முன்னணியினர் பலரும் ராஜீவின் வழியை ஆதரித்தனர். யாழ்ப்பாணம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஈழத் தமிழ் மாநிலம் அமைந்தது. தேர்தலும் நடந்து தமிழர்க்கு என்று ஒரு மாநில அரசும் அமைந்தது...

புலிகளுக்கு இந்த முயற்சிகள் அனைத்தும் தமக்கு எதிரான காரியங்கள் ஆயின. ஆம்; அவர்கள் ஜனநாயகத்தின் பகைவர்கள். ஆயுதக் கலாச்சாரத்துக்கு அஞ்சிப் பணிகிறவர்களையும், அந்த கொலைவெறி சாகசத்துக்கு உறுதுணையானவர்களையும்தான் அவர்கள் விட்டு வைப்பர். மற்றவர்களை பயன்படுத்த முடியாதபோது துரோகிகளாகக் கருதி, எவ்வாறேனும் தன் உயிரைத் தந்தேனும் கொன்றொழிப்பர். இதுவே அவர்கள் கொள்கை. இதற்கு பலியானவர்கள்தான் அமிர்தலிங்கமும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணித் தலைவர் பத்மநாபா உட்பட அந்த பதின்மூன்று தோழர்களும்... இறுதியாக நமது இனிய தலைவர் ராஜீவ்காந்தியும்... இதற்கு இங்கு இடம் தந்தது அண்மையில் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க ஆட்சியே.

புலிகளது கொலைப்பட்டியலில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பேர் இடம் பெற்றிருக்கிறது என்பதில் ஐயத்துக்கு இடமே இல்லை. தமிழகத்தில் புலிகளுக்கு இடமில்லை என்று உறுதிபட அறிவித்திருப்பதும், தமிழகத்தில் தங்களது ஆட்சியில் புலிகளுக்கு தங்கு தடையற்ற உரிமை தந்திருந்த தி.மு.க ஆட்சியை வேரும் மண்ணுமில்லாமல் அவர் சாய்த்திருப்பதும் இந்த ஆபத்தை மேலும் பல மடங்கு கூர்மைப்படுத்தியிருப்பதை எவரும் உணர முடியும்.

புலிகளுக்கு அடுத்த இலக்கு செல்வி ஜெயலலிதாதான் என்று உணருமிடத்து நமது தமிழக முதல்வருக்கு இன்னும் அதிகமான, ஆழமான, கடுமையான பாதுகாப்பு தேவை என்பதை யாரும் அலட்சியப்படுத்திவிடலாகாது.

பத்திரிக்கைக்காரர்கள் என்ற பெயரோடோ, மக்கள் தொடர்பு என்ற பெயரிலோ நமது முதல்வரை யரும் சுலபமாக 'அணுகி' விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

திரு.ராம் அவர்களின் இது குறித்த யோசனையையும் நாம் மறுக்க வேண்டி இருக்கிறது. பிற மாநில முதல்வர்களை உதாரணம் காட்டுவது இந்த மாநில முதல்வருக்குப் பொருந்தாது. ஆபத்தும் அபாயங்களும் சூழ்ந்து நிற்கும் வேளையில் புலிகளுக்கு அஞ்சாமல் சூளுரைத்து அரியணை ஏறும் செல்வி ஜெயலலிதாவைக் காப்பாற்றி, புலிகளின் மீது வெற்றிகொள்ளச் செய்வதே நமது முதல் கடமை.

எழுதப்பட்ட காலம்: டிசம்பர் 1992.

நன்றி: சிந்தையில் ஆயிரம் (ஜெயகாந்தன் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு) பாகம் - 2 - ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை - 17.

3 comments:

கொழுவி said...

//யாழ்ப்பாணம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஈழத் தமிழ் மாநிலம் அமைந்தது. தேர்தலும் நடந்து தமிழர்க்கு என்று ஒரு மாநில அரசும் அமைந்தது...//

ஆஹா.. அப்படியா.. எனக்குத் தான்.. ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. இந்தியர்களுக்கு ஈழத்தமிழர்கள் பற்றிய சரியான தகவல்களும் செய்திகளும் சொல்லப்பட வில்லை என்பது மீண்டும்.. நிருபனம் ஆகியிருக்கிறது.. அவ்வளவும் தான்..

சுபம்.

ravi srinivas said...

ராஜீவ் காந்தி முயற்சியால் தமிழர் வாழும் பகுதிகளில் பாலாறும், தேனாறும் ஒடியது, ஒவ்வொருவருக்கும் தங்கமும்,வைரமும் தரப்பட்டது, பரிபூரண அமைதி நிலவியது, ஒரு
பொற்காலத்தை அவர் அமைத்துக் கொடுத்தார், புலிகள்தான் அதை பாழாக்கிவிட்டார்கள்
என்று ஜெயகாந்தன் எழுதினால் எதிர் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி
கேட்டால் நீங்கள் தேசத்துரோகி, புலி ஆதரவாளர், வன்முறையாளர் என்று முத்திரை குத்தப்படுவீர்கள், ஜாக்கிரதை. என்ன செய்வது ஜெயகாந்தனின் ஞானக்கண்களுக்கு
தெரிபவை நம் ஊனக்கண்களுக்குத் தெரிவதில்லை. அமைதிப்படை உதவியுடன் ராஜிவ்
காந்தி செய்த சாதனைகள் அவர் கண்களுக்கு மட்டும் தெரிந்தன. அங்கிருக்கும் தமிழர்களுக்கு
த் தெரியவில்லை. பிழை அங்கிருந்த தமிழருடையது, அவரதல்ல என்று அவரது ரசிகர்கள்
சொன்னாலும் ஆச்சரியமில்லை.

PKS said...

"Arignar" Ravi Srinivas-

Since you dont know how to read and interpret Tamil and English, let me tell that Arignar is used in an euphemistic way here. :-)

You have proved yet again you are the intellectual joker in Tamil Internet. A person who uses even a fraction of his/her brain would have found out that this post talks about N. Ram and his past stand on LTTE/Prabhakaran. I could have just written that N Ram supported Prabhakaran in the past. Jokers like you would ask for proof. So, I gave this document itself as a Aavanam for it. For idiots like you who would like to steal away discussions and divert them in the angle they want, I gave a clear foreword too saying this article talks about N.Ram's past support of LTTE.

Do you have any points to contest that N. Ram did not support LTTE in the past and he is against LTTE from the beginning, then say it. We will correct Jayakanthan on that. Else its absurd, inappropriate and non-sense to vent your hatred against Jayakanthan and me, when we are talking about N. Ram.

I suspect that you have tactically chosen to remain silent on the core issue (N. Ram) and talk about Jayakanthan here. Anyone - those who even opposes N. Ram should think why Ravi Srinivas is trying to divert the attention from N. Ram to Jayakanthan. You know how to play for the crowd and you have no ethics and values. All you need is people to appreciate and recognize you as a arignar. If they do it, you will do even adiyaal job for them, hitting people that your fans dont like. We all know your hatred against the people whose name start with Jaya. :-). All you can do is find fault with what others say to prove that you are better than them. Why should you prove it again and get exposed. Atleast upto this point, some in internet thought you are a balanced person. You spoiled it yourself.

By your post http://ravisrinivas.blogspot.com/2005/11/1992.html and the comment above you are just proving that you are shooting the messenger. Forget about Jayakanthan and his politics. I dont want you or others to accept what he says. But your problem is expecting others to say what you want. Thats idiotic.

Why are you keeping mum on N.Ram here and diverting the attention from N.Ram into Jayakanthan. Though you are such a sanathani, I have no time to expose you right now since I am too busy with transcribing Su.Ra discussions.

However, please note that my patience with you is lost. Once I finish Su.Ra discussions I may be coming back to you and we may see who is honest and who is sincere.

Until then Have Fun!

Thanks and regards, PK Sivakumar