Tuesday, November 15, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - VI

சு.ரா.: அது முக்கியமான விஷயம். அது முக்கியமான விஷயம். அவன் யாரு, எங்க இருக்கான்... சார், சில லெட்டர்ஸ் வந்து பிரில்லியண்ட்டா இருக்கு. உடனே நான் அவனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பறேன். இதைக் கவனிச்சுக்குங்க. ராம் என்ற பேர்ல ஒருத்தன் ஒரு லெட்டர் எழுதியிருக்கான். அந்த லெட்டர்ல இருக்கற ஐடியாஸ் எதுவும் எனக்கு ஒத்து வராது. ஆனால், அவன் ஒரு உண்மையான fellow. ரொம்ப அழகா இந்த விஷயத்தைச் சொல்றான் அப்படீன்னு எனக்கு இருக்கு. நான் உண்மையாவே அவனுக்கு ஒரு லெட்டர் எழுதறேன். இ-மெயில்ல. ஏன்னா, இ-மெயில் அட்ரஸ்தானே நீங்க கொடுத்திருக்கீங்க. (ராஜாராம் "ஆமாம்" என்கிறார்.) ரொம்ப சந்தோஷம். நான் என்ன எழுதறேன்னா - உங்களுக்கு வந்து லிட்டரேச்சர்ல நிறைய விஷயம் தெரியுது. ஏன் திண்ணைக்கு மட்டும் லெட்டர் எழுதறீங்க. மத்த பத்திரிகைங்கல எழுதலாமே, எல்லா விஷயங்களையும் எழுதலாமேன்னு எழுதினாக்க, அவன் கிட்டேயிருந்து பதிலே வராது.

ராஜாராம்: சிலபேரு வந்து திண்ணைல மட்டும் எழுதறவங்க இருக்காங்க because அவங்க வந்து என்ன சொல்றாங்கன்னா...

சு.ரா.: நான் வந்து... எனக்குப் புடிச்சி இருக்கக் கூடிய ரைட்டர்ஸை வந்து வெல்கம் பண்றேன்... உள்ளே வான்னு...

ராஜாராம்: பிரிண்ட் மேகசைன்ஸ்க்கு ஏன் அவங்க அனுப்ப மாட்டேங்கறாங்கன்னா - they think that they are not upto that standard-ன்னு சிலபேரு நினைக்கறாங்க. இப்போ - பிரிண்ட் மேகசைன்ஸ்ல என்ன பிராப்ளம்னா - they have a limit on their resources. இப்போ எங்களுக்கு அந்த resources constraints கிடையாது. அதனாலதான் நீங்க பார்த்தீங்கன்னா...

சாமிநாதன்: ஒரு எண்ணூறு வார்த்தைகளில் அனுப்புங்கன்னு சொல்வாங்க. (கூட்டத்தில் மெலிதான சிரிப்பு.)

ராஜாராம்: எண்ணூறு வார்த்தைகளில் அனுப்பணும். ஒரு நாற்பது பக்கத்துக்கு மேல எல்லாரும் - இப்போ திண்ணை மாதிரி ஒரு இது வரதுன்னா - காலச்சுவடு வந்து ஐநூறு பக்கம் வரணும் - மூணுமாசத்துக்கு ஒருமுறை. It is not possible. So, அதனால வந்து - பலபேரு வந்து திண்ணைல மட்டும் எழுதறோம் நாங்கன்னு இருக்கறவங்க இருக்காங்க.

சு.ரா.: நான் வந்து - அந்த குரூப்ஸை எல்லாம் question-ஏ பண்ணலை நான் வந்து. ஆனா வரது - எல்லா இண்டியன் மேகசைன்ஸ்லயும் லெட்டர்ஸ் போடுறா. அவா differ பன்ற லெட்டர்சும் போட்டுண்டுதான் இருக்கா. அப்படி இல்லேன்னு சொல்ல முடியாது. இப்போ திண்ணைல எழுதக்கூடிய ஒரு ஆள் இருக்காரே - அவருடைய potentiality-க்கு - அவர் தமிழ்நாட்ல இருக்கக்கூடிய சிறுபத்திரிகைகள் எதுல வேணும்னாலும் லெட்டர் எழுதலாம். லெட்டர் மட்டும் இல்லை. ஆர்டிகளும் எழுதலாம். அதுக்கான potentiality அவர்கிட்டே இருக்கு. பல லெட்டர்ஸ் நான் பார்த்து இருக்கேன். அதுல அட்லீஸ்ட் ஒரு பிப்டி பர்சண்ட் ஆட்களுக்காவது - எல்லாம் நான் பார்க்க முடியாது - பிப்டி பர்சண்ட்டுக்காவது நான் உடனே இ-மெயில் போடுவேன். ஒருத்தன் வந்து புளிய மரத்தின் கதையை third rate novel-னு உங்க பத்திரிகைல இல்ல இன்னொரு பத்திரிகைல போட்டு இருந்தான். உடனே நான் எழுதினேன். உன்னுடைய பாயிண்ட்டை நான் ஒத்துக் கொள்ளலை. ஆனா, நீ புளிய மரத்தின் கதையைப் பத்திப் பேசறியே, அது நேக்கு சந்தோஷமா இருக்கு. எனவே, புளிய மரத்தின் கதையைப் பத்திப் பேசினதோட நிப்பாட்டிக்காம, மத்த நாவல்கள் பத்தியும் நீங்க பேசணும் அப்படீன்னு போட்டிருந்தேன். பதிலே கிடையாது. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) என்னோட லெட்டர் அவனுக்குக் கிடைச்சதுல ஒரு சின்ன சந்தோஷம் இருந்தாலும், அவன் பதில் போடாம இருப்பானா? யோசிச்சிப் பாருங்க.

ராஜாராம்: So, you mean to say - இது எல்லாம் ghost writing மாதிரி பண்றாங்க அப்படீன்னு...

சு.ரா.: அப்படித்தான் நான் நினைக்கறேன். நான் சந்தேகப்படுறேன். நான் உண்மைன்னு சொல்லலை. நான் சந்தேகப்படுறேன். அந்த சந்தேகம் ஒரு எழுத்துல இருக்கு...

ராஜாராம்: அந்தச் சந்தேகம் சிலசமயம் எங்களுக்கே வந்து - சிலதை ரிஜக்ட் பண்ணியிருக்கோம் நாங்க.

சு.ரா.: சார், நாம திட்டவட்டமா ஒரு காரியத்தை சிலசமயம் நாம மறுக்க முடியாது. இப்ப நாம ஒரு கூட்டம் போடுறோம். ஒரு third rate ஆள் - இந்தக் கருணாநிதி மீட்டிங்ல பேசக் கூடியவன் - நானும் வரேன் என்கிறான். நீங்க அவனை அவாய்ட் பண்ணுவீங்களா மாட்டேளா? அவன் வந்தா - நம்ம யாரையுமே பேச விடமாட்டான். ரெண்டு ரெண்டு நிமிஷத்துக்கு ஏதாவது ஹியூமர் சொல்லிட்டே இருப்பான். ஏதாவது ஒண்ணு wit அவன் சொல்லிண்டே இருப்பான். அவ்வளவு பேரும் சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அவனை நீங்க அவாய்ட் பண்ணலேன்னா - இந்தக் கூட்டத்திலே எந்த டிஸ்கசனும் நடக்காது. (ராஜாராம் "That is true" என்கிறார்.) அதுக்கு எந்த ரீசன் சொல்லுவீங்க? அவருக்குத் தமிழ்ல பற்று இல்லை என்பேளா? அவருக்குப் பேசத் தெரியலை என்பேளா? சுந்தர ராமசாமிக்குத்தான் ஹியூமர் இருக்கு, உனக்கு ஹியூமர் இல்லை என்பேளா? என்னுடைய ஹியூமர் எல்லாம் தூக்கித் தூரப் போட்டுடுவான். வந்து அரை நிமிஷத்துல என்னை ஜன்னல் வழியா வெளியே போட்டுடுவான். அவ்ளோ ஹியூமரஸா பேசுவான். பிரபஞ்சன்கூட ஒருத்தர் வந்திருந்தார். கேட்டேளா? (கூட்டத்தில் சிரிப்பு) பிரபஞ்சன்கூட ஒருத்தர் வந்திருந்தார். கேட்டிருக்கீங்களா?

பி.கே. சிவகுமார்: இந்த... ரேடியோ ஸ்டேஷன்ல வொர்க் பண்றார். பேரு மறந்து போச்சி.. (சற்று யோசித்தபின்) ஆவுடையப்பன் (இன்னும் சிலரும் ஆவுடையப்பன் என்கிறார்கள்.)

சு.ரா.: சார், ஒரு செகண்டுக்கு ஒரு ஹியூமர் சொல்றார். நானே சிரிக்கறேன்.

முருகானந்தம்: அடுத்த மீட்டிங்லயும் அதே ஹியூமர்தான் சொல்லுவார்.

சு.ரா.: சொல்லிட்டுப் போகட்டும். நான் பல்லைக் கடிச்சிண்டு சிரிக்கக் கூடாதுன்னு இருக்கறேன். (கூட்டத்தில் சிரிப்பு) இவர் பேசறதுக்கு சிரிக்கக் கூடாதுன்னு. ஆனா, within five minutes சிரிக்க ஆரம்பிச்சாச்சி. சொல்றார் அவர். ஆனா, அவர் வந்தார்னா, இந்தக் கூட்டத்துல நாம இவ்ளோ பேசறோம் இல்லை, இதுல எதுவுமே பேச முடியாம ஆயிடும். அப்படி ஆக்குறவங்கள நமக்குத் தெரியாது.

ராஜாராம்: அது, அவர் இயல்பா இருக்கற மாதிரி இருக்கார் அவர்.

சு.ரா.: இருக்கார் மட்டுமில்லை. அந்தக் கூட்டத்திலே அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். அவ்வளவுமே சிடுமூஞ்சிகள். படிச்ச சிடுமூஞ்சிகள் வந்திருக்கு. அவர் போயி கொஞ்சம் கலகலப்பா ஆக்கிட்டேன்னு சொல்லுவார். So, எல்லாத்துக்கும் நீங்க ரீசன் சொல்ல முடியாது. எவ்வளவோ தந்திரங்கள் இருக்கு. மொதல்ல தமிழ்நாட்ல இருக்கக் கூடிய தந்திரங்கள் அளவுக்கு - எனக்குத் தெரிஞ்சி - மத்த லிட்டரேச்சர்ல... வேர்ல்ட்ல எதுவுமே கிடையாது. ஒரிஜினல். தந்திரங்கள் இருக்கு இல்லையா? தமிழ்ல இவன்தான் முதல்ல கிரியேட் பண்றான். அது கொஞ்சம் கொஞ்சமா மத்த தேசங்களுக்குப் பரவுது. (கூட்டத்தில் சிரிப்பு) விளையாட்டுக்குச் சொல்லல சார்.

துக்காராம்: (சிரித்தபடியே) எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்றோம்.

சு.ரா.: ஆமா... நீங்க பண்ணுங்கோ... அதுதான் எனக்குப் பயமாயிருக்கு. (சிரிக்கிறார். கூட்டத்திலும் சிரிப்பு.)

ராஜாராம்: (சிரித்தபடியே) கேசட்டை உங்ககிட்டேயே கொடுத்துடறேன் நான்.

சு.ரா.: (சிரித்தபடியே) இல்ல இல்ல. சும்மா சொல்றேன். (சிரிக்கிறார்.) நீங்க அப்படி மிஸ்யூஸ் பண்ணுவீங்க என்ற எண்ணம் எல்லாம் எனக்கு அறவே இல்லை.

மோனிகா: எனக்கு வந்து ரெண்டு கேள்விகள் இருக்கு.

சு.ரா.: உங்களைப் பத்தியா? (சிரிக்கிறார்.)

மோனிகா: என்னைப் பத்தி நிறைய கேள்விகள் இருக்கு. (சிரிக்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையைக் காட்டி) இவரைப் பத்தி ஏதாவது கேள்விகள் இருக்கா? criticism அல்லது appreciation ஏதாவது இருக்கா?

மோனிகா: இன்னும் கொஞ்ச நாள்ல புக்கா போடலாம்னு இருக்கேன் (சிரிக்கிறார். கூட்டத்தில் சிரிப்பு.) அதுக்கு முன்னாடி..

சு.ரா.: சொல்லி முடியாது... சொல்லி முடியாது...

மோனிகா: அப்பதான் வந்து யாரும்...

ராஜாராம்: திண்ணைக்கு அனுப்புங்க (சிரிக்கிறார்.)

மோனிகா: இப்ப வந்து யார்கிட்டயாவது கருத்து வேறுபாடுன்னா யாரும் பேசித் தீர்த்துக்கறதே இல்லை. புத்தகமா போட்டுடறாங்க. So, வாசகர்களுக்கும் - சண்டைகளையே படிச்சி - இலக்கியங்களை விலக்கி வெச்சிட்டு - சண்டைகளை அதிகமாகப் படிக்கறாங்க (சிரிக்கிறார்.)

ராஜாராம்: அதானே சுவாரஸ்யமா இருக்கு. இவர் (சு.ரா.) சொல்ற மாதிரி - கலகலப்பு ஊட்டறவங்கதானே - பெரும்புகழ் இருக்கு அவங்களுக்கு.

சு.ரா.: ரொம்பக் கஷ்டமா இருந்தது எனக்கு. ஏன்னா, நான் இருந்து இருந்து ஒரு கூட்டத்துக்குப் போய் இருக்கேன். ரொம்ப பேர் இன்ஸிஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்தப் பத்து வருஷமா - எந்த பப்ளிக் மீட்டிங்குக்கும் நான் போனதில்லை. போகக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன்.

ராஜாராம்: பிரபஞ்சன் வந்திருக்காரேன்னு போயிருக்கீங்க.

சு.ரா.: ஸ்டேட்ஸ்க்கு வந்ததே - போகக்கூடாதுன்னு (கூட்டத்தில் சிரிப்பு) கூட்டங்களுக்குப் போகக் கூடாதுன்னு தெளிவாதான் வந்தேன். எனக்கு உங்களுடைய ஆடியன்ஸ் எல்லாம் என்டர்டெயின் பண்ண முடியாது. சிலசமயம் - நான் நல்ல பேசிடுவேன். என்னை அறியாமலே நல்லா பேசிடுவேன். அது உண்மைதான். ஆனால், நான் வந்து உங்க ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணுவேன் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லே. எனக்கு நீங்க பணம் கொடுத்து வரவழைச்சதுக்கு அப்புறம் - இந்த ஆள் ஒரு அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் பேசினான் - ஒரு wit கூட சொல்லலையே அப்படீன்னு நீங்க சொல்லும்படியான கஷ்டம் உங்களுக்கு வர வேணாம். நான் வரலை. அப்படீன்னு சொல்லிட்டேன். அப்புறம் அவங்க யாருமே கூப்பிடுறதையும் விட்டுட்டாங்க. இப்ப இருந்து இருந்து பிரபஞ்சன் மீட்டிங்குக்குப் போனேன் - அங்க இருக்கக் கூடிய எல்லாருக்கும் - பத்து பன்னிரண்டு பேர் இருக்காங்க - பன்னிரண்டு பேருக்கும் தமிழ் லிட்டரேச்சர் பத்தி எதுவுமே தெரியாது. எதுவுமே தெரியாது.

சாமிநாதன்: தெரிஞ்சிருந்தாதான் ஆச்சரியம்.

சு.ரா.: அந்த ஆட்கள் நினைக்கறாங்க - இந்த ரேடியோ ஸ்டேஷன்காரர் இருக்காரு இல்லையா... அவரோட இவர் (பிரபஞ்சன்) தொத்திண்டு இருக்காருன்னு. அவர்தான் முக்கியமான ஆள். இந்த தேசத்திற்கு வரவேண்டியவர். அதற்கானத் தகுதி உடையவர். இவர் எப்படியோ உள்ளே நுழைஞ்சிட்டார். இவரும் சும்மா ரெண்டு வார்த்தை பேசுவார்னு....

ராஜாராம்: பிரபஞ்சன் சும்மா கூட வந்திருக்கார்னு நினைக்கறாங்க.

சு.ரா.: அன்னிக்கு அவர் ரொம்ப உருக்கமா பேசினார். தமிழை நீங்க வந்து கவனிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் கவனிக்கனும்னு நான் நினைக்கறேன்னு ரொம்ப வேதனையாப் பேசினார்.

சாமிநாதன்: யாரு பிரபஞ்சனா?

சு.ரா.: ஆமா, அன்னிக்குப் பேசினார். சொல்றேன் நான். அவர் சொன்னார். எனக்கு ஹெல்த் கொஞ்சம் மோசமா ஆயிட்டு இருக்குன்னார் அவர். நான் சொன்னேன். இந்த மாதிரி ஆட்களோட நீங்க மீட்டிங்குக்குப் போனீங்கன்னா, உங்க ஹெல்த் மோசமாத்தான் செய்யும்னு. (கூட்டத்தில் சிரிப்பு.) ஏன்னா, நீங்க மீட்டிங்கை அவாய்ட் பண்றதுக்காக - வெளில சிகரெட் பிடிக்கப் போறீங்க. அப்படிப் போய் முடியுமா? போயிண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு பாக்கெட் சிகரெட் அதுக்கே போயிடும்.

முருகானந்தம்: இப்படி வருஷா வருஷம் ஒரு செட் வந்துட்டு இருக்கு.

சு.ரா.: தெரியும்... தெரியும்..

முருகானந்தம்: அந்த... லியோனில இருந்து ஆரம்பிச்சது...

சு.ரா.: ஆமா... ஆமா... அது.. வரதைப் பத்தி இல்லை சார். அவங்கதான் தமிழ்நாட்டுல முக்கியமான ஆட்கள்னு நீங்க நினைக்காம இருக்கணும்.

ராஜாராம்: அப்படித்தான் நினைக்கறாங்க. அப்படித்தான ஆகுது. இல்லையா?

சு.ரா.: அதானே விஷயம்.

மோனிகா: நான் உங்ககிட்டே கேள்வி கேட்கணும்னு... நீங்க என்கிட்டே கேள்வி... (சிரிக்கிறார்.)

சு.ரா.: சொல்லுங்கோ. சொல்லுங்கோ. Sorry. sorry. நீங்க இந்த chair-க்கு வந்திடுங்க. (அருகில் உள்ள சேருக்கு அழைக்கிறார். மோனிகா இடம் மாறுகிறார்.)

மோனிகா: முதல்ல பேசும்போது சொன்னீங்க. ஒரு ரைட்டர் என்ற ஆள் வந்து - என்னென்ன emotionally-ஆ feel பண்றாரோ எல்லாமே எழுதணும். ரொம்ப ஹானஸ்ட்டா இருக்கணும்னு. So, அப்படி இருக்கும்போது - writers பத்திய ஒரு value judgement-க்கு நீங்க எப்படி வரீங்க - இந்த ரைட்டர் நல்லவர், இந்த ரைட்டர் மோசமானவர்னு. Because ஒரு ஆள் உணர்ச்சிவசப்படும்போது இது நல்ல உணர்ச்சி, இது கெட்ட உணர்ச்சினுதானே சொல்ல முடியும் (சு.ரா. "ஆமா ஆமா" என்கிறார்). So, இப்ப வந்து - how do you judge a literature.

சு.ரா.: மோனிகா, நான் படிக்கற சமயத்துல - எனக்கு வந்து - நான் ஏற்கனவே இந்த இடத்துலதான் உட்கார்ந்திருக்கேன். என்னை அவன் வாசல் வழியாக் கூட்டிண்டு போக வேண்டாம் அந்த ரைட்டர். ரொம்பக் கொண்டு போக வெண்டாம் அவன். அப்படீன்னு நான் பாக்கறேன். ஆனா, கதையைப் படிக்கும் முன் நான் இங்கே உட்கார்ந்திருக்கேன். கதையைப் படிச்ச பின்னும் இங்கதான் உட்கார்ந்திருக்கேன்னா - எனக்கு அவனைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் லிட்டரேச்சரை கிரியேட் பண்ணலை அப்படீன்னுதான் நான் feel பண்றேன். அதை நான் சொல்றேன். வேற ஒண்ணும் இல்லை.

ராஜாராம்: So, அதுவந்து ஒரு subjective ஒண்ணுதான்?

சு.ரா.: subjective தான். சார், லிட்டரேச்சர்ல சிலது, சார் (அண்ணாமலை) கூட ஒரு எட்டு வருஷம் ஒன்பது வருஷம் முன்னால - ராமகிருஷ்ணன் வீட்டுல பேசிண்டு இருக்கும்போது சார் சொன்னார். (அண்னாமலையைப் பார்த்து) உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியலை - சார் சொன்னார். இந்த சயின்ஸ் மாதிரி லிட்டரேச்சர் ஏன் ஆகக் கூடாது. ஏன் அது subjective-ஆ இருக்கணும் அப்படீங்கற விஷயத்தைச் சார் சொன்னார். வாழ்க்கைல ஒரு ரைட்டர் எதைப் பத்தியும் சொல்றதுக்கு யோசிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் இருக்கு. ஒரு Physicist அப்படி இல்லையே - ஒரு விதி சொன்னீங்கன்னா - அது எல்லாருக்கும் அப்ளை ஆகுமெ. அதை நீங்க இங்க ப்ரூவ் பண்ணிக் காட்டலாமே. லிட்டரேச்சர் அப்படி இல்லையே. நான் ஒரு மிகச் சிறந்த புத்தகம் என்கிறேன். உடனே சார் சொல்றார். அதுமாதிரி third rate book-ஐ நான் படிச்சதே இல்லைன்னு. அவர் என்ன முட்டாளா? நான் என்ன புத்திசாலியா? So, இந்த மாதிரியான ஒரு இதுவந்து பாஸிபிள் இல்லைன்னு நான் நினைக்கறேன். பின்னால, ஒரு அம்பது வருஷத்துக்கு அப்புறம், நூறு வருஷத்துக்கு அப்புறம் - பாஸிபிளா இருக்கலாம். எனக்குத் தெரியாது. நிறைய common qualities வந்து - லிட்டரேச்சர்ல ஒண்ணா கொண்டு வந்து - அடிப்படைல என்ன - நீங்க அவர் இவர் எல்லாருக்குமே - எது பிடிக்கறதுன்னு பார்த்து - அப்படித்தான் சயின்ஸ் இணைச்சிருக்கு. அப்படி ஒண்ணா இணைச்சி - இந்த விஷயதை நாம திருப்பிக் கிரியேட் பண்ணினோம்னா - நிறைய பேருக்குப் பிடிக்கும். இதை சயின்ஸ்ல ப்ரூவ் பண்ண முடியாது. ஆனா, சயின்ஸ்ல ப்ரூவ் பண்ணது எல்லாமே - நூத்துக்குப் பாதி அபத்தம். சயின்டிஸ்ட்ஸ் ரொம்ப வருத்தப்படறாங்க. சயின்டிஸ்ட்ஸ் வந்து சந்தோஷமான நிலைமைல இல்ல. அது உங்களுக்குத் தெரியுமோ? சயின்டிஸ்ட்ஸ் வந்து போயட்ஸைப் பார்த்துப் பொறாமைப்படறாங்க. தத்துபித்துனு உளறுற போயட்ஸ்னு நாம நினைக்கறோம் இல்லையா. அவன் ஒரு சாதாரண ஆளு. ஒண்ணுமே தெரியாதவன். சயின்டிஸ்ட் ஒரு மகா பெரியவன். அப்படீன்னு நாம நினைக்கறோம் இல்லையா. நாங்க வந்து போயட்ஸைதான் படிக்கணும்கறாங்க. போயட்ஸை எங்களுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய அவசியமிருக்கு. எங்களுடைய இமாஜினேஷன் ரொம்ப அளவு மோசமாயிடுச்சி. ஆனா, ரொம்ப அபத்தமான விஷயம் - சமீபத்துலகூட இவர் சொல்லியிருக்கார்... புத்தகம் எழுதியிருக்காரே.. சயின்டிஸ்ட்... பிரிட்டிஷ் சயிண்டிஸ்ட்... (சில நொடிகள் யோசிக்கிறார்.) black hole-ஐப் பத்திச் சொன்னவர். அவன் சொல்றான். நான் black hole-ஐப் பத்திச் சொன்னது எல்லாமே தப்புன்னு. நான் பத்து வருஷமா அதை நம்பிண்டு இருக்கேன். இப்ப திடீர்னு வந்து அதைத் தப்புங்கறான். அதற்காக நான் நிறைய புஸ்தகங்கள் படிச்சித் தெரிஞ்சிருக்கேன். கஷ்டமான விஷயம் அது. ஏறக்குறைய அந்த விஷயங்களை நான் தெரிஞ்சிக்கக்கூடிய நிலைமைல அவன் சொல்றான். நான் சொன்னது எல்லாமே தப்புன்னு. So, சயின்டிஸ்ட் வந்து நாம நினைக்கற மாதிரி ஒரு தெளிவான நிலைல இருக்காங்க - ஆனா அதுனால அவங்களுடையது பாஸிடிவ் கான்ட்ரிபியூஷன் இல்லைன்னோ - சொசைட்டி மாற்றத்துல அவங்களுக்குப் பங்கில்லைன்னோ நான் சொல்லவே இல்லை - அந்த மாதிரி நான் நினைக்கவே இல்லை. எனக்கு சயின்டிஸ்ட்ஸ் மேல ரொம்ப ரெஸ்பெக்ட் உண்டு - சின்ன வயசிலேயும் உண்டு. இப்பவும் உண்டு. ஆனா, நாம நினைக்கற அளவுக்கு அவன் தெளிவா இல்லை. நாம நினைக்கறோம். ரைட்டர் confused-ஆ இருக்கான். சயின்டிஸ்ட் தெளிவா இருக்கான்னு. அப்படி இல்லை. நான் எவ்வளவு confused-ஆ இருக்கேனோ - நான் confused-ஆ இருக்கேன் என்கிற எண்ணம் என்கிட்டே இருக்கு - அதன்மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு. நான் confused-ஆ இருக்கேன். தெளிவான எண்ணங்கள் எனக்கு இல்லை. அப்பப்ப எனக்குத் தோணற விஷயங்களை நான் பேசறேன்...

சாரதா: இல்ல. science can expand. It doesn't have an end. It can go further...

சு.ரா.: what about writing?

சாரதா: Writing can go. But cannot go nowhere and anywhere. You can create things... But.. fact is a fact.

சு.ரா.: No.. No.. No. I wont admit. We are the teachers for scientists.

சாரதா: ம்... ம்... I dont think so. you may be giving some relaxation...

சு.ரா.: I will tell you... philosophers are teachers. அவங்க ஒத்துக்கறாங்க. philosophersதான் எங்களுக்கு டீச்சர்ஸ்.

ராஜாராம்: They need imagination.

சாரதா: ரைட்டர்ஸ் பிலாசபர்ஸா? writers are supposed to be philosophers?

சு.ரா.: No.. No.. நீங்க வந்து என்னை மடக்குறதுக்காக..

சாரதா: No.. No. I am just coming to.. மடக்கறதுக்காக இல்லை.

சு.ரா.: என்னை மடக்குறதுக்காக கேட்கறீங்கன்னு நான் நினைக்கலை (கூட்டத்தில் சிரிப்பு) அப்படீன்னு நான் சொல்றேன். ஆனா, பிலாஸபியை விட்டு - அது சம்பந்தம் இல்லாம - ரைட்டிங்னு எதுவுமே கிடையாது.

மோனிகா: ரெண்டாவது கேள்வி. இதோட தொடர்ச்சிதான்.. முதல் கேள்வியோட தொடர்ச்சிதான். இப்ப ஒரு பொதுவான ஒரு ஆடியன்ஸ் - அவங்க எல்லாரையும் சேர்ந்து ரீச் ஆகற மாதிரியான - ஒரு மூவியோ ஐடியாவோ இருக்கும்போது எல்லாரும் ஒத்துக்கறாங்க. சிறுபத்திரிகைன்னு வரும்போது ஒரு ஐநூறு பேர்தான் படிக்கறாங்க. So, subjective-ஆ ஒரு ஓபனிங்கா இருக்க முடியும் என்றபோது - ஒரு big publication-ஓ, மூவியோ அப்படி இருக்க முடியும் என்னும்போது, வெகுஜன கலாசாரத்தோட போய் எப்படி எல்லாரும் விஷயங்களைத் தரமுடியும் என்பது பற்றி யோசிக்காமல் - ஒரு குறுகிய வட்டத்தில் சிறுபத்திரிகைகள் - இப்போ சேரன் படத்துல ஒருத்தர் காலச்சுவடு படிக்கிறார் - அதைப் பார்த்துட்டு அது நல்ல பத்திரிகை போலன்னு மத்தவங்க வாங்கிப் படிக்கலாம். குமுதத்தில இருந்து தீராநதி வந்தபிறகு, இளைஞர்கள் கொஞ்சம் இலக்கியத்தை சீரியஸா படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. So somehow we have to relax our judgements...

சு.ரா.: ஒத்துக்கறேன். இப்போ நீங்க கேட்ட கேள்வி இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு அப்புறம் வந்த கேள்வியா, முதல்லயே இருந்த கேள்வியா? (கூட்டத்தில் சிரிப்பு)

மோனிகா: முதல்லயே இருந்த கேள்வி.

சு.ரா.: அப்படீன்னா பதில் சொல்றேன். இவரைக் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு வந்த கேள்வின்னா, அவர்தான் அதுக்கு பதில் சொல்லணும் (கூட்டத்தில் சிரிப்பு) அப்படீன்னா நான் என்ன சொல்றேன்னா - நீங்க சொல்ற process எல்லாமே நான் ஒத்துக்கறேன். ஆனா - எல்லா சமயத்திலேயும் இதுமாதிரி விஷயங்களைக் கிரியேட் பண்ணுகிற body வந்து சின்னதாகத்தான் இருக்கும். அங்க இருந்துதான் மத்த இடங்களுக்கு எல்லாம் பரவுது. Physics-ஐ எல்லாருக்கும் கொண்டு போகணும்னு சொல்லி - ரொம்ப அற்புதமா எழுதறானே அவன்கிட்ட கூட - எல்லார்கிட்டயும் ஏன்டா நீ பிஸிக்ஸைக் கொண்டு போறாய்னு கேட்கக் கூடாது. ஏன்ன, பிஸிக்ஸ் என்ற சப்ஜெக்ட் அந்தமாதிரி சப்ஜெக்ட்தான். இவன் வந்து ஈஸியா உட்கார்ந்து இருப்பான். இந்த ரைட்டர் வந்து இவனை வீட்டில் வந்து மீட் பண்ணனும். அப்படீன்னு சொல்லக் கூடாது இல்லையா. நான் பாதி வரேன். நீயும் பாதி வழி வா. நீங்க சொல்லக் கூடிய எல்லா டெவலப்மெண்ட்டும், சொசைட்டில நடக்கக்கூடிய எல்லா விஷயமும் - சேரன் ஒரு காலச்சுவடைக் காட்டறார் இல்லை ஆனந்த விகடன்லயும் ஆனந்த விகடன்ல வராதுன்னு நினைச்ச ஒரு கதை வருது... புரிஞ்சதா... என் கதை ஒண்ணை ஆனந்த விகடன் பப்ளிஷ் பண்ணலாம். இந்த பாஸிபிலிட்டிஸ் எல்லாம் - சிறுபத்திரிகைகாரங்களுடைய எக்ஸிஸ்டென்ஸ்னால வந்ததேயொழிய - அவங்களுடைய மூளைல இருந்து உதிச்சது இல்ல. நாங்க காலச்சுவடு என்ற பத்திரிகையை முக்கியப்படுத்தியிருக்கோம். அதுதான் தமிழ் சொசைட்டில முக்கியமான பத்திரிகைன்னு சொல்லியதால - அதை ரிப்ளக்டிவா வாங்கிக்கறார் சேரன். அவர் வந்து - காலச்சுவடு கீழே விழுந்துடுச்சின்னா - அடுத்த நிமிஷமே - இன்னொரு பத்திரிகையைக் காட்டுவார். அவருக்குக் கான்ஷியஸ்னஸ் இல்லை. அதற்கான கான்ஷியஸ்னஸ் இல்லை. அதனால நான் வந்து அதற்குப் பெருமைப்படல. சந்தோஷப்படல.

சு.ரா.: (தொடர்ந்து) மூனாவது கேள்வி - முக்கியமான கேள்வி - நான் உங்களைக் கேட்க வேண்டியது. இவரை நீங்க கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் உங்க லைப் எப்படியிருக்கு?

மோனிகா: கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகள்... உங்களை நைன்டி ஒன்ல பாத்ததுக்கு அப்புறம்...

சு.ரா.: முதல்ல படுத்தறாரா... இல்ல பெண்களுக்கு சுதந்தரம் வேணும்னு சொல்லியிருக்கார். அதை உங்களுக்குத் தந்திருக்காரா...

மோனிகா: இன்னும் நாங்க வந்து சேர்ந்து வாழறோம்னுதான் சொல்லிட்டு இருக்கோம். இவரை என் கனவர்னு நான் யாருக்கும் introduce பண்ணதே இல்லை.

சு.ரா.: இல்லை, நீங்க சொல்லவே வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சேர்ந்து வாழ முடியறதான்னு கேட்டேன் (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, உங்களுக்கு நீங்க யாரைக் கல்யாணம் பண்ணின்டாலும், நீங்க ஏதாவது ஒரு காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிதான் இருக்கும். அதுதான் உண்மை.

சாமிநாதன்: ஆம்பிளைக்கும் உண்டு அந்த காம்ப்ரமைஸ்.

சு.ரா.: ஆமா உண்டு. ஆம்பிளைக்கு நிறைய உண்டு. பெண்ணாவது அவங்க காம்ப்ரமைஸை வெளியே சொல்றாங்க. ஆம்பிளைங்க சொல்லவே முடியாது.

ராஜாராம்: உங்க (சு.ரா.) கிட்ட ஒரு கேள்வி - ஜே.ஜே. சில குறிப்புகள் - ஏன் மலையாள பின்னணியில் இருந்தது?

(தொடரும்)

3 comments:

Jayaprakash Sampath said...

அட... முக்கியமான கட்டத்துல வந்து ப்ரேக் போட்டுட்டீங்களே பிகேஎஸ்.....

PKS said...

Prakash,

I could transcribe only upto this point last weekend. Apart from family, NBA and NFL take over some of my time now :-(. Infact, after getting into transcribing this, I stopped most of my other literary activities. Will try to transcribe more tonight and tomorrow hopefully.

Thanks and regards, PK Sivakumar

Gurusamy Thangavel said...

Wonderful PKS. I used to read your trancription of Su.Raa interview in Thinnai. Now I read directly from your blog. Su. Ras's thought process in great. You are doing a monumental task. Hats off to you.