Thursday, November 24, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - VII

சு.ரா.: ஆமா... அது வந்து - முதல்ல எனக்கு வந்து அந்த மலையாள லிட்டரேச்சர் பத்தின விஷயங்கள் தெரியும் என்கிறது ஒண்ணு. இல்லைன்னா எழுத முடியாது. அந்த பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியும். அது சம்பந்தமான சூட்சுமங்கள் நிறைய தெரியும். நான் ரொம்ப சூட்சுமமான விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள முயற்சி பண்ணுவேன். நீங்க நம்ப மாட்டீங்க - தமிழ்ல வந்து ஒரு பத்திரிகை வருதே - கவிதாசரண் (வீடியோ காம்கார்டரை நோக்கிக் கையை நீட்டி) இப்ப நான் ரெக்கார்ட் பண்றேன் - கவிதாசரண் - அதை மூணு தடவை படிப்பேன். த்ரீ டைம்ஸ் அந்தப் பத்திரிகையைப் படிப்பேன். எல்லா ஆர்ட்டிகிள்ஸையும். ஏன்னா, அதுக்குள்ள பல விஷயங்கள் இருக்கு. அது வந்து நீங்கப் பார்த்தேள்னா ரொம்ப சாதாரணமா இருக்கற மாதிரி தோணும். ஆனால், அதுக்குள்ள பலவிதமான வேவ்லெங்க்த்ஸ் வந்து இருக்கு... So. ரோடுல எல்லாம் வந்து ரொம்பத் திருட்டுப் போகற இடங்கள்ல எப்படி இருக்குதுனு வச்சுக்குங்களேன் - ஒரு சாமானைக் கொடியில போட்டா போயிடும். செருப்பை வெளியில விட்டாப் போயிடும். அப்ப நீங்க ரோடுல போறச்சே - யார் யார் வந்து போறாங்க என்பதை ரொம்ப நல்லா வாட்ச் பண்ணனும் - நீங்க மட்டும் இல்ல உங்க வை·ப்பும் வாட்ச் பண்ணனும். அப்பதான் நீங்க உங்க சாமானைக் காப்பாத்திட்டு வாழ முடியும். அந்த மாதிரி பொஸிஷன்ல நான் இருக்கறேன். அதனால, நான் வந்து என்னைச் சுத்தி இருக்கற ஆளை ரொம்ப வாட்ச் பண்ணுவேன். அதுக்கு பத்திரிகை வந்து ஒரு வென்ட்டிலேஷன். அதுல ஒரு கட்டுரை வரும். அதுல என்னைத் திட்டுவான். திட்டுறதுக்குக்கூட நான் வந்து அந்தப் பத்திரிகைல என்ன வேர்ட்ஸ் யூஸ் பண்றான் திட்டுறதுக்காகன்னு பார்ப்பேன். இந்துக்கு முந்தி என்ன வேர்ட்ஸ் யூஸ் பண்ணான். அங்க இருந்து இங்க எப்படி நகர்ந்து வந்தான். அதுக்கான காரணம் என்ன - இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிண்டிருக்கேன். இந்த ஆராய்ச்சியை எல்லாம் வந்து ரைட்டிங்ல எழுத முடியாது. ஏன்னா - இதுக்கெல்லாம் ஒண்ணும் தடயம் கிடையாது. நான் வந்து தடயம் இல்லாத ஒரு விஷயத்தை நான் இதுவரை எழுதினதே கிடையாது. ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமானால் அதுக்குக் குறைந்தபட்சம் ஒரு தடயம் வேணும். சில விஷயங்களுக்கு உங்களுக்குத் தடயம் தேவையில்லை. உதாரணமா (சில நொடிகள் யோசிக்கிறார்.) எம்.ஜி.ஆர் நடிக்க வரார். இதுக்குத் தடயம் தேவையா? (கூட்டத்தில் சிரிப்பு) அவர் ரொம்ப பாப்புலர் நடிகர் என்கிறதுக்குத் தடயம் தேவையா? இந்த மாதிரியான விஷயங்கள் தவிர - லிட்டரேச்சர்ல சீரியஸாப் பேசறோம்னா - நீங்கப் பத்திரிகைல வந்து இது மிக மிக முக்கியமா எடுக்க வேண்டிய விஷயம் - ஒருத்தன் தடயம் குறைந்தபட்சமும் கொடுக்கலையானால் அவனுடைய - அந்தக் கருத்தைக் கேட்கணும். ஏன் கொடுக்கலைன்னு. கேட்கவே மாட்டேன்கறீங்க. கேட்கவே நீங்க மாட்டேன்கறீங்க. அப்படித்தான் இப்ப நடைமுறைல எனக்குத் தெரிது. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

ராஜாராம்: இல்ல, நாங்க கேட்கறோம். கேட்கற கட்டுரைகளை நாங்க போடறோம்... ஆனா, தடயத்தை அவங்க கொடுக்காதப்ப அவங்கள நம்மால கம்பெல் பண்ண முடியறது இல்ல...

சு.ரா.: அப்படிப் போட - அவனுக்குத் தகுதியில்லை சார். சொசைட்டில அவனுக்கு வந்து எந்தத் தடயமும் இல்லாம பேசுறதுக்கு அவனுக்குத் தகுதி கிடையாது. நான் அவனுடைய பேனாவைத் திருடியிருக்கலாம். அவன் பேனாவைத் திருடினேன்னு சொன்னா - நீங்கப் போட்டேள்னா - நான்தானே திருடன் இல்லைன்னு பேச வேண்டியிருக்கு சொசைட்டில போய். நான் திருடலே நான் திருடலேன்னு எத்தனை பேர் கிட்டப் போய்ச் சொல்லுவேன். அதை... இம்மீடியட்டா நம்பறவங்க இருக்காங்க... இம்மீடியட்டா நம்ப ஆசைப்படறவங்க இருக்காங்க... ரெண்டு விதமான குரூப் இருக்கு. சுந்தர ராமசாமி பேனா திருடினார் அப்படீன்னு சொல்லி (கூட்டத்தில் சிரிப்பு) நம்புவோம் அப்படீன்னு நினைக்கறவங்க இருக்காங்க. நான் எத்தனை பேர்கிட்டப் போய்ச் சொல்லுவேன். ஆகவே - பேனா திருடினேன்ன்னு சொல்றதுக்கான சுதந்திரம் உனக்கு இருக்கு. ஒரு எவிடென்ஸ் கொடு. உங்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுக்கு முன்னாடியே பலவிதமான பேனாக்கள் திருடியிருக்கார். என் நண்பர்கள் பல ஆட்கள் சொன்னார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார். அவர் சொன்னார். இவர் சொன்னார்னு. இவங்க எல்லாமே அவர்கிட்டப் பேனாவை இழந்து இருக்காங்கன்னு (கூட்டத்தில் சிரிப்பு) சர்க்கார்னு ஒருத்தர் இருக்கார் தெரியுமோ... கல்கத்தால - ஒரு மேஜிஷியன்.... கேள்விப்பட்டது இல்லையா?

கூட்டத்தில் குரல்கள்: பி.சி. சர்க்கார்.

சு.ரா.: பி.சி. சர்க்கார் - அவர் இங்க வந்தார்னா - நம்ம அவ்வளவு பேர் பேனாவையும் எடுத்துண்டுடுவார். (கூட்டத்தில் சிரிப்பு) எடுத்துண்டு பக்கத்துல வச்சுட்டு இருப்பார். அப்புறம் அவங்க அவங்க உங்கப் பேனாவை எடுங்கோ என்பார். பேனா நம்ம கிட்ட இருக்காது. அப்புறம் அவர் மடில இருந்து எடுத்துத் தருவார். இதுமாதிரி பேனாவைத் திருடறார் அப்படிங்கறதுக்கான எவிடென்ஸை அவன் கொடுக்கத்தான் வேணும். கொடுக்காட்டா நான் என்ன செய்வேன். என் பேர்ல ஒரு இதை (குற்றச்சாட்டை) அவன் போட்டாச்சு. அப்புறம் நான் என்ன செய்வேன். இதுமாதிரி - இப்ப நான் உயிரோடு இருப்பதால நான் இதை உங்களுக்குச் சொல்றேன் - ஹிஸ்டாரிகலான பொஸிஷன்ஸ் மேல - அவனுக்கு எந்த சார்ஜஸ¤ம் சொல்ற ரைட் கிடையாது. அவன் வந்து சொல்ல முடியாது. கம்பன் மேல..

(கேசட் முடிந்து விடுகிறது. இடையில் சில நிமிடங்கள் ரெக்கார்ட் செய்யப்படவில்லை. கேசட் மாற்றப்பட்டு மீண்டும் ரெக்கார்டிங் ஆரம்பித்தபோது...)

சு.ரா.: ஏதோ காலம் சம்பந்தமா சொன்னார். இவர் சொன்னது மட்டுமில்லை. மதுரைல என் பிரெண்ட் இருக்கார். சிவராமன்னு (ராஜாராமைப் பார்த்து உங்களுக்குத் தெரியுமே என்கிறார். ஆமா தெரியும் என்கிறார் ராஜாராம்) அவங்க வை·ப் பவானின்னுட்டு... அவங்கள் நான் வந்து முப்பது வருஷமா நாப்பது வருஷமா பார்த்துண்டு இருக்கேன். ஒருநாள் கூட அவங்க புஸ்தகத்தைப் படிச்சிருக்கேன்னு சொன்னதே கிடையாது அந்த அம்மா.. சொன்னதே கிடையாது. திடீர்னு அவங்க கிட்டேயிருந்து லெட்டர் வருது. இவருடைய அதே விஷயத்தை அவங்களும் பாயிண்ட் அவுட் பண்ணாங்க. காலம் சம்பந்தமா குழப்பம் இருக்குன்னு. ரெண்டு பேருக்கும் தேங்க் பண்ணி - இவர் வந்து கொஞ்சம்தான் செய்ஞ்சார். இவருடைய presence-ஐ மத்தவங்க feel பண்ற மாதிரி ஆக்கிட்ட்டார். சொன்ன விஷயங்கள் பற்றி எனக்கு ரொம்பக் கோபதாபங்கள் உண்டு. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, அது வேற விஷயம். இவங்க வேற அவரைக் கல்யாணம் பண்ணிட்டாங்க. இவங்க மேல எனக்கு ரொம்பப் பிரியம் (கூட்டத்தில் சிரிப்பு) இவங்க மேல. எனக்குக் காரணமே தெரியாது. இந்தப் பொண்ணு வந்து இவரைக் கல்யாணம் பண்ணிகிட்டது (கூட்டத்தில் சிரிப்பு) அப்ப வந்து எனக்கு freedom என்கிற ஏரியா ரொம்பக் குறைஞ்சு போயிட்டது. ஆனால், ஏன் எழுதாம இருக்கார் இப்போன்னு எனக்குத் தெரியலை. அப்படித் தள்ளிப் போட்டீங்கன்னா - பொதுவா வந்து தள்ளிப் போட்டு எழுதணும்னு நினைக்கறோம் இல்லையா - அவரை எங்கக் காணலை - என்ன சீட்டை மாத்திட்டே இருக்கீங்க (கூட்டத்தில் சிரிப்பு) அம்மா எங்கே போய்ட்டாங்க - தள்ளிப் போட்டீங்கன்னா பெரும்பாலான காரியங்கள் நடக்காமலே போயிடும். எஸ்பெஷலி, இந்த சொசைட்டில உங்களுக்கு நீங்க ஒரு டாக்டரேட் வாங்கறீங்க.. ஒரு காலேஜ்ல உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும். அப்ப உங்களுடைய திறமைகள் எல்லாம் you may prove - உங்களுக்கு நிரூபிக்கப்படும். அப்போ உங்களுக்கு அது சின்ன விஷயமாகிவிடும். தமிழன் என்ன சண்டை போட்டுட்டே இருக்கான். இந்தப் பத்திரிகைகள்ல அர்த்தமில்ல. ஒருத்தனுக்கு ஒருத்தன் மண்டையை உடைச்சிட்டே இருக்கான். இப்ப நாம என்ன பண்றதுன்னு... அவங்க என்னிக்குமே அப்படித்தான் இருப்பாங்க.

(மேலே - ஒரு புளியமரத்தின் கதையில் இருந்த காலக் குழப்பத்தைப் பற்றி ராஜன் குறை முன்னர் குறிப்பிட்டு எழுதியதைப் பற்றிப் பேசுகிறார் சு.ரா.)

ராஜான் குறை: நான் ரொம்பத் தொடர்ந்து - சிறுபத்திரிகைல இருந்துதான் கிளம்பினேன் என்பதிலும் - அதுக்குத் திரும்பிப் போகணும் என்பதிலும் ரொம்ப conscious-ஆ இருக்கேன்.

சு.ரா.: சரி. நான் என்ன சொல்றேன்னா - சமீபத்துல ஒரு நாலு வருஷமா உங்க மேட்டர் அதிகமா இல்லை. (ராஜன் குறை நான் எழுதல என்கிறார்.) எழுதலை. அதான் சொல்றேன். நான் பார்க்கலை. நீங்க இந்தக் கன்ட்ரில இருக்கீங்கன்னு - அவர் (அண்ணாமலை) இந்தக் கன்ட்ரில இருக்கார்ன்னு நேக்குத் தெரியாது. நீங்க டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல வொர்க் பண்ணேளா. (ராஜன் குறை ஆமாம் என்கிறார்.) அது யாரோ சொன்னாங்க. அப்ப நான் கேட்டேன். ராஜன் குறைன்னு ஏன் பெயர் வெச்சிருக்கார்னு. (கூட்டத்தில் சிரிப்பு) அவருக்குத் தெரிஞ்சவங்ககிட்டே கேட்பேன். அதுக்கு ஏதாவது ஒரு ரீசன் அவங்க சொல்வாங்க (கூட்டத்தில் சிரிப்பு) Imperfect. மனுஷன் வந்து யாருமே பர்பெக்ட் இல்லை imperfect அப்படீங்கற காரணதுக்காக வெச்சிண்டிருக்கார் அப்படீன்னு. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டே இருந்தீங்க.

சு.ரா.: (சிரித்தபடியே) என்ன அது?

ராஜாராம்: ஜேஜே சில குறிப்புகள் ஏன் வந்து தமிழ் பின்னணியில் இல்லாம மலையாளப் பின்னணியில் இருக்கு...

சு.ரா.: என்ன காரணம்னா - நான் சொல்ற எல்லா விஷயமும் தமிழ் சம்பந்தப்பட்டதுதான். அதுல - அதைப்பத்தி நான் கட்டுரையிலே எழுதிட்டேன் - ஏன் அப்படிச் சொன்னேன் என்கிறதை. ஒண்ணுக்குமேல எழுதியிருக்கேன். என்னன்னா - வந்து இவங்க சொல்ற காரியங்களைச் சொல்றதைவிட - இன்னொரு இடத்துல நடக்கறதா காரியங்களைச் சொன்னா இவங்க கவனிப்பாங்க - கொஞ்சம் ஆதரவா பார்ப்பாங்க - நம்மள antagonize பண்ணிக்க மாட்டாங்க. மத்த இன்னொரு கல்ச்சர் பத்திய விஷயம் சொல்றோம்னு கேட்பாங்கன்னு எனக்கு மனசுல ஒரு எண்ணம் இருந்தது. அப்படியெல்லாம் நடக்கலை. அந்த மாதிரி வித்தைகள் எல்லாம் தமிழ் சொசைட்டில செல்லுபடி ஆகவே செய்யாது. அவங்க உடனே அதுக்கு எதிரா வேறு விஷயங்கள் பார்ப்பாங்க. அது ஒரு எண்ணம் இருந்தது. மத்தபடி மலையாள கேரக்டர்ஸ¤க்குத் தமிழ்ல அதுக்குப் பேரலல்லா கிரியேட் பண்ண முடியுமான்னு சந்தேகமா இருக்கு. அந்தக் கேரக்டர்ஸ¤க்குத் தமிழ்ல கிரியேட் பண்ண முடியுமா என்பது...

ராஜாராம்: அதுல, இன்னொரு பிரச்னை வந்து - ஜோசப் - ஜேஜே வந்து - வாழ்க்கையைச் சொல்லிட்டே வரும்போது - திடீர்னு அவன் சமரசங்கள் பண்ண வேண்டி வந்தது அப்படீன்னு சொல்றீங்களே தவிர, அந்த process இதுல சொல்லப்படவே இல்லை...

சு.ரா.: (தலையசைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தவர்) ம்.. ம்.. அது வந்து நான் நினைச்சிருக்கேன். நான் இப்படி நினைச்சிருக்கலாம். தமிழ் சொசைட்டில உங்களுக்கு எவ்வளவோ examples இருக்கு. தமிழனுடைய இயற்கையிலேயே அந்த விஷயம் அவனுக்குத் தெரியும். ஏன்னா - நம்முடைய ஐடியலிஸ்ட் அவ்வளவு பேருமே கடைசிக் காலங்களில் மோசமா காம்ப்ரமைஸ் பண்ணிட்டிருக்காங்க. நீங்கப் பார்த்தீங்கன்னா பாலிட்டீஷியன்ஸ், ரைட்டர்ஸ், ஸ்காலர்ஸ் எல்லாருமே அவங்க age ஆச்சுன்னா - துட்டு வாங்காம இருக்காங்க சில கவர்ன்மென்ட் சர்வன்ட்ஸ் - அறுபது வயசுல அவனுக்கு இன்னும் நாலு நாள் கழிஞ்சா பென்ஷன் கொடுத்துடுவான். அப்புறம், கடைசிவரை காசு வாங்கலைன்னு சொல்லக்கூடிய கௌரவம் அவனுக்கு இருந்திருக்கு. ஆனால், அதைக்கூட விடாமல், ஒரு வாரத்துக்குள்ளே ஒரு லட்ச ரூபாய் அடிச்சிடறான். so, அந்தப் பெருமையை அவன் இழந்துடறான். காரணம் என்னன்னா - உங்களுக்குச் சொன்னா நீங்க நம்புவேளான்னு தெரியலை. (ராஜாராமைப் பார்த்து) நீங்க இங்கே வந்து பத்து வருஷமாச்சா - (ம் என்கிறார் ராஜாராம்) நம்ப மாட்டீங்க - எங்க வீட்டுக்கு ரைட்டர்ஸ் எல்லாமே வருவாங்க - எஸ்பெஷலி என்னோட ஜெனரேஷன்க்கு முன்ன உள்ள ரைட்டர்ஸை ரொம்ப எல்லாம் வரவழைச்சி - என் வீட்டுல தங்கும்படி வெச்சிருக்கேன். ஒவ்வொரு ரைட்டரோட வை·பும் நம்ப மாட்டீங்க - ஒவ்வொரு தமிழ் ரைட்டரோட வை·பும் - இந்தக் குறிப்பிட்ட ஆளைக் கல்யாணம் பண்ணிகிட்டதற்காக வருத்தப்படறாங்க.

ராஜாராம்: So, நீங்க அதுக்காகத்தான் கேட்டீங்களா அவங்களை (மோனிகாவை)...

சு.ரா.: அதுக்காகத்தான் கேட்டேன்.

மோனிகா: அதுனாலதான் ராஜன் எழுதறதே இல்லை (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: ஏன் அப்படி?

சு.ரா.: இப்ப - ராமாமிர்தம் வை·ப் - நான் பர்சனலா சொல்றேன்னு தயவுசெய்து நினைச்சுக்காதீங்க (இல்லை, இல்லை அதெல்லாம் இல்லை என்கிறார் ராஜாராம்) சொன்னாங்க - என்னிக்காவது இவருக்கு தமிழ்வாணன் மாதிரி ஒரு பேரு வந்திருக்கா? (அது கஷ்டம்தான் என்கிறார் ராஜாராம்) என்னிக்காவது வந்திருக்கா - ஜெயகாந்தன் எவ்ளோ பெரிய பேரோட இருக்கார் - இவரைச் சொன்னால் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கே தெரிய மாட்டேங்குது. ராமாமிருதம்? .... நாங்க கல்கி படிச்சிட்டிருக்கோம், குமுதம் படிச்சிட்டிருக்கோம், ஆனந்த விகடன் படிச்சிட்டிருக்கோம்.. உன் புருஷன் பேரு ராமாமிருதமா? அவர் கதையெல்லாம் எழுதியிருக்கார்னு சொல்றியே - நாங்க படிச்சதே இல்லேன்னு இந்த அம்மாகிட்டே சொல்றாங்க - சரின்னு, நானே ஒரு பொஸ்தகத்தைக் கொடுத்தேன். முதல்லே, - இவர் எந்த லாங்வேஜுல எழுதியிருக்கார்னு கேட்கறாங்க (கூட்டத்தில் சிரிப்பு) இவரோட லாங்வேஜ் என்ன தமிழா இல்லை சான்ஸ்கிரிட்டா இல்லை வேற லாங்வேஜ்ல எழுதியிருக்காரா - அந்த அளவுக்கு அவங்களுக்குச் சிக்கல் இருக்கு - எதுக்கு இப்படி எழுதற - மத்தவங்கள எதுக்காக இப்படித் துன்புறுத்தற - எளிமையா இருந்துட்டுப் போக வேண்டியதுதானே - தமிழ்வாணன் மாதிரி இருந்துட்டுப் போக வேண்டியதுதானே - அப்படிச் சொல்லக்கூடிய பிரஷர்ல அவர் போறார் சார் எடிட்டர்களைப் பார்த்துட்டு. இந்த அம்மா சொல்றது பெரிய விஷயமே இல்லை. அவர் ஒவ்வொரு எடிட்டரா போறார். நான் கதை எழுதறவன். ரொம்ப வருஷமா எழுதிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏத்தாப்ல நான் கதை எழுதித் தரேன். நீங்க போடுங்க அப்படீன்னு. (கொஞ்சம் இடைவெளி விட்டு) So, என்னோட சிஸ்டத்துல அது இருக்கறதால அதைச் சொல்லணும்னு நான் எதிர்பார்க்கலை. For example, இப்ப English-ல அதை translate பண்ணேன்னா - ஒருத்தர் சொல்லலாம் எப்படி அந்த discrepancy வந்துச்சுன்னு...

ராஜன் குறை: உங்க மூணாவது நாவல் ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு...

சு.ரா.: அப்படியா... உங்க வாயால கேட்கறது இருக்கே (கூட்டத்தில் சிரிப்பு) ரொம்ப சந்தோஷம். (சு.ரா.வும் சிரிக்கிறார்.) அதைவிடச் சந்தோஷமான விஷயம் எதுவுமே இல்லை. அப்படிச் சொன்னா, உங்களை வெளில தள்ளிடுவாங்களே உங்க பிரெண்ட்ஸ் எல்லாம்...

ராஜன் குறை: அந்த மாதிரி எனக்கு ஒண்ணும் ...

சு.ரா.: பயமே கிடையாது.

ராஜன் குறை: ஆமா... Actual-ஆ எல்லார் கிட்டேயும் சொல்லியிருக்கேன். எழுதியிருக்கணும். அந்த மாதிரியான ஒரு...

சு.ரா.: இல்லை... பொதுவா என்ன பேசுறாங்களோ அதை நான் எடுத்துக்கவே மாட்டேன். என்ன எழுதறாங்களோ அதைத்தான் எடுத்துக்குவேன். அப்படித்தான் எடுத்துக்கணும். இல்லை?

ராஜன் குறை: ஆமா.

துக்காராம்: ஓ... இப்ப எனக்குப் புரியுது. ஒருவேளை குறை சொல்லிட்டே இருப்பதால குறைன்னு பெயர் வந்ததா... (கூட்டத்தில் சிரிப்பு)

மோனிகா: அவரே குறையாக இருப்பதால்....

துக்காராம்: அது நம்பற மாதிரி இல்லையே...

சு.ரா.: அப்படி வெச்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. யாருமே அவரைப் பர்பெக்ட் ஆள்னு யாராவது தப்பாக நினைச்சாலாவது குறைன்னு சொல்லலாம். அப்படி யாருமே நினைக்கலியே இந்த உலகத்துலே. சுந்தர ராமசாமி குறைன்னு எழுத முடியுமா? அதை எழுத வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு குறையான ஆள்னு எல்லாருக்கும் தெரியும்.

மோனிகா: நான் ஜே.ஜே. சில குறிப்புகள் படிச்சதும் - ரொம்ப மிகவும் மற்ற எழுத்துகளைப் படிச்ச பிறகும் என்னைக் கவர்ந்தது - ஓமனக் குட்டியை ஜே.ஜே. குறை சொல்வது (சிரிக்கிறார்.)

சு.ரா.: ஓமனக்குட்டி வந்து அவரை ரொம்ப மோசமா ட்ரீட் பண்றார். என்ன பண்றார்னா - அவரோட third rate poems-ஐ அவர்ட்டே கொடுத்து - அதை first rate poems-னு சொல்லுங்கோ என்கிறார். ஆனா, ஓமனக்குட்டி நல்ல போயம்ஸ் எழுதலை என்பதாலேயோ, அவருக்கு ஒரு disease இருக்கு - ஸ்கின் ப்ராப்ளம் - அதுபத்தியோ அவனுக்கு (ஜே.ஜே) ஒண்ணுமே இல்லை. உண்மையிலேயே அந்த நாவலில் ஓமனக் குட்டியைப் பத்திப் பெருமையா சொல்றவன் அவன்தான். சொசைட்டி அவனை வந்து isolate பண்ணுது. ஆனா, அவர் வந்து ஒரு சின்ன trick பண்றார். இவன் மனசுக்குள்ளே இடம் பிடிக்கணும். ஆகவே, இவரை நாம நல்ல போயட்னு சொல்ல வைக்கணும்னு நினைக்கறார். அந்த எண்ணம் வந்து மோசமான எண்ணம்னு நினைக்கறான் அவன். ஏன்னா, தமிழ்ல இது நடந்திருக்கு...

ராஜாராம்: அப்படியா...

சு.ரா.: ஆமா, தமிழ்ல பெண்கள் வந்து இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்காங்க. ஆனா, நாவலுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு. நாவலில் அவன் தொகுதியைத் தூக்கி வெளில போட்டுட்டான். தமிழ்ல ஒசத்தியா எழுதுவான். அந்த difference தானே ஒழிய, தமிழ்ல இதுமாதிரி நடந்திருக்கு.

மோனிகா: எல்லாருமே அரவிந்தாட்ச மேனன் மாதிரி - கரெக்டா பேனாவில் மை ஊத்திட்டு - அது மாதிரியான - ஜே.ஜே. மாதிரியான - சரியான ஆளாவே இருக்க முடியுமா?

சு.ரா.: இல்லை, நான் அப்படிச் சொல்லலை. அவன் பர்பெக்ட் ஆகணும்னு சொல்லலை. நீங்க பர்பெக்ட் ஆகறதுக்கான முயற்சியை மேற்கொண்டே இருக்கறீங்க. நீங்க - இப்ப கம்ப்யூட்டர்ல வொர்க் பண்றீங்க - உங்க job-ஏ பர்பெக்ஷனுக்குப் போறதுதான். நீங்க தத்துபித்துன்னு ஒரு ஆர்டர் கொடுத்து, கமாண்ட் கொடுத்தா - இது பண்ணேள்னா போயிடும். எப்படி நல்லா கார் ஓட்டுவது, எப்படி ஆக்ஸிடென்ஸை அவாய்ட் பண்றது, எப்படி உங்க ஹெல்த்தை நல்லா கவனிச்சிக்கறது, எப்படி மத்தவங்க முன்னாடி பிஹேவ் பண்றது, எப்படி பிஹேவ் பண்ணக் கூடாது - இதெல்லாம் என்ன - மனுஷன்கிட்டே பயங்கரமான craving இருக்கு. அந்த மாதிரியான craving தமிழ்நாட்டிலேயே இருக்கே... அப்புறம் உலகத்துல எந்தக் கன்ட்ரில இருக்காது. (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: ஆனால், எழுத்தில மட்டும் அது இல்லே...

சு.ரா.: எழுத்துல இல்ல. எழுத்துல இல்லனா கூட பரவாயில்லை. செயலில் இல்லை. அவனுடைய செயல்பாடுகளில் இல்லை.

முருகானந்தம்: எந்திரத் துடைப்பான் - எப்படி motivation உங்களுக்கு வந்தது?

சு.ரா: எனக்கு அதை எழுதினேன்னு ஞாபகமே இல்லை.

ராஜாராம்: அது தொடர்பா - ஒரு கேள்வி என்னன்னா - உங்க கிட்டே வந்து ரெண்டு streams இருக்கு - ஒண்ணு வந்து satire. satire வந்து ரொம்ப அற்புதமா இருக்கு அது வர்ற இடங்களில். இன்னொரு stream வந்து seriousness - சீரியஸா ஒரு விஷயத்தை டச் பண்றது - ரெண்டையும் ஒரு சேரப் பண்ண புதுமைப்பித்தன் முயற்சி பண்ணி ரொம்ப நல்லா வெற்றி பெற்றவர். satire-ஐ வந்து ஒரு ரொம்ப சீரியஸான ஒரு ஆர்ட்டா கன்வர்ட் பண்ணதுல புதுமைப்பித்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. நீங்க அந்த satire-ஐயே முழுக்க வெச்சி - ஜேஜே சில குறிப்புகளை இரண்டாம் முறை மூணாம் முறை படிக்கும்போது - எனக்கு அதுதான் தோணிச்சு. ஏன் வந்து முதல் வரில வர்ற satire வந்து முழுநாவலிலும் வந்திருந்துச்சுன்னா - வேற ஒரு நாவலா ஆகியிருந்திருக்குமோன்னு எனக்குத் தோணுச்சு. ஆனா, அது உங்களுக்குப் பிடித்தம் இல்ல. இல்லை?

(தொடரும்...)

No comments: