சு.ரா.: சார், வந்து satire என்பது வந்து - ஒரு மனுஷனுக்கு வந்து - இந்த thought இருக்கு இல்லை thought - ஒரு மனுஷனுக்கு இருக்குமேயானால் அவன் வந்து தொடர்ந்து satire-ல depend பண்ணிட்டே இருக்க முடியாது. மீட்டிங்ல பார்த்தீங்கன்னாவே தெரியும். முதல்ல ஒரு ரெண்டு மூணு விஷயம் சொல்லுவான். satire. உடனே, ஆடியன்ஸ் சிரிப்பான். சந்தோஷப்படுவாங்க. அதுக்கப்புறம் சப்ஜெக்ட்டுக்கு வருவாங்க. நீங்க சொல்லணும் என்கிற ஒரு விஷயம் - இன்னொரு விதத்துல நீங்க சொல்லணும்கிற விஷயம் இருக்கோ இல்லையோ satire-ஐ சொல்றாங்க. இன்னொன்னு satire-ஏ இல்லாத கதைகள் நிறைய இருக்கு. அந்தக் கதைகள் எல்லாம் மிக முக்கியமான கதைகள்.
ராஜாராம்: ஆமா. நிறைய இருக்கு.
சு.ரா.: அவையெல்லாம் சட்டயர் இல்லை என்பதால் மோசமான கதைகள் இல்லை. எனக்கு வந்து மனசுக்குள்ளே வந்து நான் ஒரு விஷயம் சொல்லணும்னு வரும்போது அதை நீங்க சீரியஸா எடுத்துக்கணும். அப்படி நினைக்கிற சமயத்துல சட்டயர் பின்னாலதான் போகும். எந்தக் காரணம் கொண்டும் இதை நான் தமாஷா நினைக்கறேன். எனக்கு அதில pain இல்லை அப்படீன்னு நீங்க நினைச்சுடக் கூடாது. எனக்கு அதுல ரொம்ப pain இருக்கு. அப்படீன்னு நான் சொல்ல நினைக்கற சமயத்துல - அந்த மாதிரியான விஷயங்கள் வரத்தான் செய்யும். அதனால எந்த ரைட்டரும் வந்து - ஏதாவது ஒரு விஷயத்தை கம்யூனிகேட் பண்ணனும் என்கிற ரைட்டர் வந்து தொடர்ந்து சட்டயரை சொல்லிண்டிருந்தான் என்பது கிடையாது. சட்டயரைச் சொல்லாமலேயே அவன் காரியத்தைப் பண்ணான் என்பதும் கிடையாது. எப்படியும் வந்திடும் அது. சட்டயர் தானா வந்திடும். நீங்க... (கொஞ்சம் யோசிக்கிறார்) இந்த... ஒரு ஐரிஷ் நாவல் .... (யோசிக்கிறார்) Angela's ...
கூட்டத்தில் குரல்கள்: Angela's Ashes.
சு.ரா: அந்த நாவலைப் படிச்சீங்கன்னா - அவனுடைய ஹியூமர் இருக்கு இல்லையோ - பர்ஸ்ட் பேஜுல இருந்து - கடைசி வரைக்கும் அவன் ஹியூமரஸா மட்டும்தான் இருக்கான். நடக்கறது என்னவோ எல்லாம் நடக்குது.
ராஜாராம்: ஆமா, நடக்கறது எல்லாம் சீரியஸ் ஆன விஷயம். டெத்...
சு.ரா.: Death... அது... இது... எக்கச்சக்கமான குடி... ஐரிஷ்... எக்கச்சக்கமான குடிகாரர்கள். தமிழ்நாட்டு ·பேமிலிஸ் ஞாபகம் வரக்கூடிய பல விஷயங்களை அவன் எழுதியிருக்கான். ஆனா அவன் தொடர்ந்து சட்டயராத்தான் எழுதியிருக்கான். அதுமாதிரி - நான் அப்படி பார்க்கலையே. இப்ப எனக்கு வந்து ஹார்ட் அட்டாக் வந்ததுன்னா - நான் அதை சட்டயரிகலா பாக்கலை. அது ஒரு சீரியஸான விஷயம். உடனடியா கொண்டுபோய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு பார்க்கணும். அதிலிருந்து மீண்டதுக்குப் பின்னாடி - சுஜாதா கூட ஒரு piece எழுதியிருக்கார். அந்த piece-ஐ நான் படிச்சேன். அதிலே அவர் - வேற ஒருவனுக்கு அந்த வியாதி வந்த மாதிரி பார்க்கறார். ரொம்ப முக்கியமான விஷயம்தான் அது. ஆனா, அப்போ அவர் மீண்டாச்சு. அந்தக் கணத்துல அவர் பார்க்கலை. ரொம்ப பில் போடறாங்க. நம்ம பேண்ட்டை உருவிட்டு விட்டுடுவான் ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா - ரொம்ப மோசமான காரியம் நடக்குது - பிஸினஸ்தான் அது - இந்த மாதிரியெல்லாம் அவர் சொல்றார். ஆனா, அப்போ அவருக்கு ஹெல்த் இம்ப்ரூவ் ஆயிடுச்சி. இப்ப நீங்க எதிலும் விசுவாசமா இருக்கணும். இப்ப ஹார்ட் அட்டாக் வர்ற நேரத்துல என் மைண்ட் எப்பது ப்ளே பண்றது என்பதுதான் முக்கியம். சில ஆட்கள் டெத் சமயத்துல - டெத்தை வந்து - லீவ் எடுத்துட்டுப் போறோம் என்ற மாதிரி டெத்தைப் பார்த்திருக்காங்க. எல்லாரையும் கூப்பிட்டு போயிட்டு வரேன், குழந்தையைப் பார்த்துக்கோ. நாப்பத்து மூணு ரூபார் டிராயர்ல வெச்சிருக்கேன். அதை எடுத்துக்கோ... இப்படியெல்லாம் சொல்லிட்டுப் போனவங்க இருக்காங்க.
ராஜன் குறை: ஓ.கே. இடைவெளில வந்து இந்த பாலன்ஸ் நல்ல வந்திருக்குன்னு சொல்வாங்க. ஹியூமரும் சீரியஸ்னசும் வந்து...
சு.ரா.: எதுல வந்து...
ராஜன் குறை: சம்பத்தோட இடைவெளில. அதுல மரணத்தைப் பத்தி தொடர்ந்து யோசிச்சாலும்... ஒரு நகைச்சுவையோட...
சு.ரா.: நகைச்சுவையோட சொல்றார். ஆனா - மரணத்தை வந்து அவர் வந்து மரணம் என்பது கட்டில்ல நடக்கக் கூடிய விஷயம்தானே. ஆனா அதை அவர் ட்ரான்ஸ்பார்ம் பண்ணி வேற இடத்துக்குக் கொண்டு போறார். அப்படிக் கொண்டு போறதாலதான் நீங்க அதைத் தாங்கிக்கறீங்க. அது கட்டிலில் நடக்கக் கூடிய மரணமாக மட்டுமே இருக்குமானால், நீங்க அந்த விஷயத்தை ஏத்துக் கொள்ளவே மாட்டீங்க. அவர் என்ன பண்றார்... டெத்தை வேறொரு இடத்துக்குக் கொண்டு போயிடறார். அதுல அவருக்கு நம்பிக்கை இருக்கான்னு நமக்குத் தெரியாது. கெட்டிக்காரத்தனமா அந்த ஆள் பண்றார். டெத்தை வந்து - அவர் கொடுக்கற எக்ஸ்பிரஷன் என்னன்னா - அது ஒரு இடைவெளி என்கிறார். டெத் என்பது ஒரு இடைவெளி அப்படீன்னு அவர் நம்பறார். அதுக்கு exact-ஆ எனக்கு என்னன்னு தெரியலை. டெத் டெத்தான் அப்படீங்கறதுதான் என்னோட எண்ணம்.
ராஜாராம்: டெத் ஒரு இடைவெளி என்று நம்புவது - ஒரு belief system. அதாவது, its a kind of denial of death. நாம இன்னும் வாழ்ந்துட்டு இருக்கோம், மறுபிறவி எடுப்போம்... இன்னொரு...
சு.ரா.: அந்த இடத்துக்குத்தான் - அவர் போறார். ஒரு பிலாஸபிகலா சொல்லணுமேனு சொல்றார்.
டெக்ஸன்: நான் நீங்க ஜே.ஜே. பத்தி எழுதின கட்டுரைகளைப் படிச்சதில்லை. புக் படிச்சிருக்கேன். JJ was inspired by James Joyce-னு எல்லாம் சொல்லியிருக்காங்களே. அது எல்லாம் ஏதாவது...
சு.ரா.: இல்ல இல்ல. கேரளால C.J. தாமஸ்னு ஒருத்தர் இருந்தார். C.J. தாமஸ¤டைய இன்ப்ளுயன்ஸ்லதான் அந்தக் கேரக்டர் ·பார்ம் ஆயிருக்கு. ஆனா, அப்படியே C.J. தாமஸைப் பண்ணலை. C.J. தாமஸ¤டைய ரொம்ப க்ளோஸ் பிரண்டாக்கும் எம். கோவிந்தன் என்பவர். எம். கோவிந்தன் என்ற ஸ்காலர் வந்து outstanding-ஆன intellectual கேரளாவுல. அவர் வந்து ரொம்பக் க்ளோஸ் பிரெண்ட். அவருக்கு வந்து இந்த நாவலைக் கொண்டுபோய் ராமகிருஷ்ணன் படிச்சிக் காட்டறார் தமிழில். அவருக்குத் தமிழ் நல்லா புரியும். ஆனா படிக்க முடியாது. பெரியாரோட பிரெண்ட். நெடுஞ்செழியனோட பிரெண்ட். DK மூவ்மெண்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவர். (ராஜாராமைப் பார்த்து உங்களுக்குத் தெரியுமே என்கிறார். ஆமாம் என்கிறார் ராஜாராம்.) அவர்கிட்ட படிச்சுக் காட்டினதுல - ரெண்டு விஷயங்கள். கிட்டத்தட்ட பாதி ஆனதுக்கு அப்புறம்தான் C.J. தாமஸ்னு புரியுது என்கிறார். பாதி ஆனதுக்கு அப்புறம் C.J. தாமஸ் ஞாபகம் வரலைன்னு சொன்னார். இந்த ரெண்டு விஷயமும் முக்கியமானது. அப்ப எந்த அளவுக்கு அவரை ட்ரான்ஸ்பார்ம் பண்ணியிருக்கேன் என்பதும், எந்த அளவுக்கு அவர் காரணமா இருந்திருக்கிறார் என்பதும் அவர் பேச்சிலிருந்து வெளிப்படுது. அது உண்மைதான். அதே நேரத்துல ... அந்த... அவர் (C.J. தாமஸ்) வை·ப் இந்த நாவலைப் படிச்சார். அவர் சொன்னார். C.J.க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு. அவர் இன்ப்ளூயன்ஸ் பண்ணியிருக்கலாம். ஆனா நிஜ C.J.க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு அவர் எழுதிக் கொடுத்துட்டார். அதெல்லாம் இமாஜினேஷன். ஏன்னா, அவரை ஒரு இடத்துல பார்த்தேன். அதுக்கு முன்னாடி அவரோட புக்ஸ் வந்து என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணியிருக்கு.
ராஜாராம்: அவர் கிரிடிக்தானே...
சு.ரா.: ஆமா, கிரிடிக்தான். ஆனா, அவர் டிராமா வந்து சார்...ரொம்ப வேடிக்கையான டிராமா இருக்கு. பதினொன்ணு - இருபத்தேழு - அவர் லாயரும் கூட ஆனா ப்ராக்டிஸ் பண்ணல - பதினொன்ணு இருபத்தெட்டில் கைதி நம்பர் நாலுன்னு போட்டு ஒரு நாவல் எழுதியிருக்கார். அந்த நாவல் வந்து - Absurdist Movement இருக்கு இல்ல, அது இன்டர்நேஷனலா வரதுக்கு முன்னால, க்ளியரா absurdistதான் அவர். க்ளியரா அவர் absurdistதான். அப்ப அந்த மூவ்மெண்ட் இன்டர்நேஷனலா இல்ல அல்லது நமக்குத் தெரியாத பாஷைகள்ல முளைச்சு இருக்கலாம். இவருக்குத் தெரிந்திருக்க சான்ஸே கிடையாது. அவர் டிராமாவிலும் ரொம்ப இன்ட்ரஸ்ட் உள்ளவர். ஆர்ட்ல இன்ட்ரஸ்ட் உள்ளவர். இந்த ஷார்ட் ஸ்டோரி, பொயட்ரி எல்லாம் அவர் எழுதினதே இல்லை. பின்னால ஒரு பெரிய blind anti-communist ஆயிட்டார். அந்த டைம்ல - anti-communist-ஆ வர்ற புத்தகங்களை ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்கார். அந்த ட்ரான்ஸ்லேஷன்ஸ் ரொம்ப நல்ல ட்ரான்ஸ்லேஷன்ஸ். சில புக்ஸ் நல்லா பண்ணியிருக்கார். உதாரணமா, darkness at noon - அதை ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்.
ராஜாராம்: அந்த anti-communist புக்ஸ¤க்கு மலையாளத்துல எது மாதிரியான வரவேற்பு இருக்கு?
சு.ரா.: ஒரு க்ரூப் இருக்கு இல்ல... இதுக்கே ஒரு க்ரூப் இருக்கு.
ராஜாராம்: அது என்ன இண்டலக்சுவலா தெரிவிக்கிற எதிர்ப்பா... இல்லை...
சு.ரா.: ஆமா, இன்டலக்சுவலா தெரிவிக்கிற எதிர்ப்புதான். முக்கியமா வந்து anti-communistனு சொல்றதைப் பார்த்தா - நான் எல்லாம் anti-communist இல்லை. நான் ஒரு anti-communistனு பிராண்ட் பண்ணிடாங்க. நான் anti-communist-ஏ இல்லை. நான் anti-stalinist. நீங்க சொல்றீங்க - நான் பேசுவேன் நீங்க பேசாதேன்னு சொன்னேள்னா, எனக்குக் கோவம் வருமா வராதா? இந்த விஷயம் தவிர ஒண்ணுமே கிடையாது. வேற ஒரு பிலாசபிகல்... அதை நீங்க promote பண்றீங்க. So, மார்க்ஸிஸம் என்ன என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்க ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றீங்க.. உங்க வை·பை கொண்டு போய் அட்மிட் பண்றீங்க. டாக்டர்ஸ் ரொம்ப மோசமா ட்ரீட் பண்றாங்க. மோசமான காரியங்கள் அவ்வளவும் பண்றாங்க. அதுல அவங்க ரொம்ப suffer பண்றாங்க - உங்க வை·ப். அதுக்கு அப்புறம் நீங்க மெடிகல் சயின்ஸஸ்ல இது எல்லாம் சொல்லப்பட்டதில்லை (ராஜாராம் சிரிக்கிறார்) அப்படீன்னு சொன்னால் என்ன அர்த்தம்? உங்க வை·பை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்களே! So, எது இம்பார்ட்டெண்ட்? (Doctor was not real doctor என்கிறார் ராஜாராம்.) ஆமா, இப்போ நீங்க சொல்ல வேண்டிய விஷயம் இதுதான். இப்போ நான் மார்க்ஸிஸத்தைப் பத்திச் சொல்லவே இல்லை. இவங்க அவ்வளவு பேரும் சோவியத் யூனியனை blind-ஆ follow பண்றாங்க. இவங்களுக்குச் சொந்த... இவங்க மார்க்ஸிஸ்ட் இல்லை. மார்க்ஸிஸ்ட் ஏன் இல்லைன்னு கேட்டா, டெமாக்ரஸியை எப்படி சார் ஏத்துக் கொள்ளாம இருக்க முடியும்? நான் உடனே ராமமூர்த்தி கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்.
ராஜாராம்: ஆனா, அது ஒரு contradiction இருக்கு. ஏன்னா, கம்யூனிஸ்ட்கள் எல்லாமே இதுவரை form பண்ண சொசைட்டி எல்லாமே - டோட்டாலிடேரியன் சொசைட்டியாதானே இருந்து வந்திருக்கு.
பி.கே. சிவகுமார்: ஒரு கட்சி சார்ந்த கம்யூனிஸ்டாவோ மார்க்ஸிஸ்டாவோ இல்லாமல் உங்களுடைய எழுத்துகளில் ஒரு இடதுசாரித்தன்மை இருப்பதாக நான் பார்க்கிறேன்.
சு.ரா.: ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம். நீங்க அதை வெளில நிறைய பேருக்குச் சொல்லுங்க. (கூட்டத்தில் சிரிப்பு) என்ன சொல்றாங்கன்னா - இந்த ஆள் வந்து anti-communist. Anti-communist-ஆ இருப்பதற்கு ஏதோ காரணம் இருக்குன்னு - ஏதோ பணம் கிணம் வருது அமெரிக்கால இருந்து (கூட்டத்தில் சிரிப்பு) (ராஜன் குறையைக் காட்டி) இவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. (கூட்டத்தில் சிரிப்பு)
துக்காராம்: யாருங்க இவருடைய ப்ரெண்ட்ஸ்...
சு.ரா.: இவரோட பிரெண்ட்ஸ் அத்தனை பேரும் - என் பேர்ல ரொம்ப மோசமா - blind-ஆ ஏதானும் சொல்வாங்க. சார், நான் இப்ப வந்து தடயம்ம் இல்லாம சொல்றதுக்கு நீங்க திரும்பவும் பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னேன் இல்லையா... அது நான் சொன்னதுக்குக் காரணமே என்னுடைய வேதனைதான். எனக்குப் பதில் சொல்ல முடியலை. காரணம், அவர் தடயமே கொடுக்கலையே... நீங்க என்னன்னு பதில் சொல்வீங்க. சிம்பிளான வேர்ட்ஸ்தான். சனாதனின்னுடுவாங்க. நான் சொன்னேன். சொசைட்டில குடிக்கக் கூடாது என்ற விஷயம் முக்கியமான விஷயம். நீங்க குடிக்கறீங்க குடிக்காம போறீங்க அது உங்க இஷ்டம். ஆனா, குடியைப் பரப்ப - தயவுசெய்து செய்யாதீங்க - நம்ம சொசைட்டில குடியைப் பரப்ப தயவுசெய்து செய்யாதீங்கன்னு எழுதிட்டேன். உடனே, இவரோட பிரெண்ட் நான் சனாதனின்னு எழுதிட்டார்.
ராஜாராம்: இவரு... யமுனா ராஜேந்திரன் சொன்னார். இது மாதிரி வந்து - இந்த மாதிரி சொல்றவங்க எல்லாம் அவங்க வீட்டுல யாரையும் உள்ளே கூட்டிட்டுப் போய்க் குடிக்கறது கிடையாது. ஆனா, மத்தவங்க வீட்டுல வந்து குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றாங்கன்னு.
சு.ரா.: சார், நான் வந்து அந்தக் காரியம் சொன்னதுக்காக சனாதனின்னா அப்புறம் பெரியார், அப்புறம் காந்தி, அம்பேத்கர் இந்த மாதிரி எத்தனையோ ஆட்கள் சனாதனிங்கதான் இந்தியால.
பி.கே. சிவகுமார்: திருவள்ளுவர்.
சு.ரா.: திருவள்ளுவர் வந்து பழைய காலத்து ஆள். (கூட்டத்தில் சிரிப்பு) இவங்க எல்லாமே கான்டெம்பரிஸ். அவங்களுடைய ஒரு பெரிய அட்மைரர் - நான் என்ன சொன்னேன்னா - குடிக்காதே குடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை. குடிச்சிட்டுக் கூட்டங்களுக்கு வராங்க. கூட்டங்கள்ல கலாட்டா பண்ணாத வரை பிரச்னை இல்லை. அவங்களுடைய சுதந்திரம். குடிக்கறவங்களுடைய சுதந்திரம். ஆனா, ஸ்டூடண்ட்ஸ் வர மீட்டிங்ல போய், நல்ல குடிங்க.. அது ஒரு பெரிய ஆசிர்வாதம். கடவுளுடைய blessing அப்படீன்னு சொன்னா - தயவுசெய்து சொல்லாதீங்க - அந்த pain-ல இவர் (ராஜன் குறை) கிட்ட நான் சொல்லலை - இவர் பிரெண்ட் மார்க்ஸ் இருக்காரே அவ்ர்ட்ட நான் சொல்லலை - பெருமாள் முருகன் கிட்ட சொன்னேன். நான் இவர்ட்ட - இவர் (ராஜன்குறை) இல்லை அவர்ட்ட (மார்க்ஸ்) - பேசக்கூடாது என்கிறதுல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். அவர் என்ன நான் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க மாட்டார். ஏதாவது ஒண்ணு குதர்க்கம் பண்ணிடுவார். அது அவர் பண்ண முடியும். அவருடைய குதர்க்கம் இன்னும் தமிழ் சொசைட்டில effective-ஆ இருக்கு. அந்தக் குதர்க்கத்தை என்னால பண்ண முடியலை. So, பெருமாள் முருகனுக்கு எழுதினேன். நீங்க அப்படிச் சொல்லாதீங்கன்னு. அவர் சொன்னார். நான் சப்போர்ட் பண்ணலை. மார்க்ஸ் வந்து புரட்சிகரமான ஒரு காரியத்தைச் சொல்லியிருக்கார்...
ராஜாராம்: என்ன புரட்சி அது எல்லாம்?
சு.ரா.: அப்படீன்னு சொன்னார். அப்போ நான் கேட்டேன். உங்க வை·ப்புக்கு நீங்க வழக்கமா கொடுக்கறேளா... ஸ்டூடன்ட்ஸ்க்கு Class-ல தொடர்ந்து சொல்றேளா இந்த விஷயத்தை - எப்ப அது நல்லதுன்னு நீங்க நம்பறேளோ - நீங்க தொடர்ந்து சொசைட்டில எல்லா இடத்துலயும் அதைச் சொல்லணுமே...
ராஜாராம்: குடிச்சிட்டுதான் class-க்கு வரணும்னு ஒரு ரூல் போட்டுடுங்க...
சு.ரா.: ஆமா, ரூல் போடுங்க. அந்த கண்டிஷன் உங்களுக்கு இருக்கா. ஏன்னா, குடிகளுக்கு எதிரா தமிழ்நாட்டுல பல கூட்டங்கள் நடக்குது. இப்ப, வசந்திதேவி கூட ஒரு கூட்டம் நடத்துறாங்க. அந்தக் கூட்டத்துக்கு நான் போயிருந்தேன். பெண்கள் தொடர்ந்து வந்து, தங்களுடைய ஹஸ்பெண்ட்ஸைச் சொல்லி அழறாங்க. மேடையிலேயே அழறாங்க. படிக்காத பெண்கள். அங்க போய் நீங்க சொல்லுங்க. அங்க போய் நீங்க சொல்லுங்க. வாரியலால உங்கள அடிப்பாங்க. வாரியல்னா உங்களுக்குத் தெரியுமா? விளக்குமாறு. அங்க போய்ச் சொல்லுங்க. அதுதான் கண்டிஷன்... அப்படீன்னு நான் சொன்னதுக்கு. அவர் சனாதனி அப்படீங்கறார் அவர்.
ராஜாராம்: அவங்களுக்கு வந்து...
சாமிநாதன்: சனாதனிங்களும் சோம பானம், சுரா பானம் எல்லாம் குடிச்சிருக்காங்களே... (கூட்டத்தில் சிரிப்பு)
சு.ரா.: அது ஒரு கெட்ட வார்த்தை. அது ஒரு கெட்ட வார்த்தை என்பதுக்கு மேல அதுல ஒண்ணுமில்லை.
துக்காராம்: இல்ல. இல்ல. இவர் (சாமிநாதன்) கிண்டல் பண்றார்.
சந்திரா: சாப்பிடப் போகலாமா... மணி ரெண்டுக்கு மேல ஆகுது...
ராஜாராம்: ம்... சாப்பிடலாமே..
பி.கே. சிவகுமார்: நான் சாப்பிட்டுட்டேதான் இருக்கேன்... வந்ததுல இருந்து.. (கூட்டத்தில் சிரிப்பு)
ராஜாராம்: (பி.கே. சிவகுமார் டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்து) நீங்க உட்கார்ந்து இருக்கிற இடத்தைப் பார்க்கும்போதே எனக்குத் தெரியும். (கூட்டத்தில் சிரிப்பு)
துக்காராம்: (சிரித்தபடியே ஜாலியாக) நகர மாட்டேன் என்கிறார் அங்க இருந்து...
ராஜன் குறை: இந்த நட்பு விஷயம் வந்து - ஒரு சிலரோடு மட்டும் அது நிக்கறதில்லை அது. நிறைய பேரோடு நட்பு இருக்கு பல காரணங்களால..
சு.ரா.: அது - somehow தமிழ்ல நான் மட்டும் இல்லை, எல்லாருமே உங்களை அதுமாதிரிதான் associate பண்ணிப் பார்த்திருக்காங்க.
ராஜன் குறை: அது நிறப்பிரிகைன்னு ஒரு பத்திரிகை - நல்ல பத்திரிகை - வந்தது இல்லையா... அதுல ஒரு ஈடுபாட்டோட வேலை செய்ததால அப்படி...
சு.ரா.: என்ன காரணம் தெரியுமா? அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அவங்களுக்கு எதிரான பாயிண்ட்ஸ் ஒண்ணுமே நீங்க ரெக்கார்ட் பண்ணலை. அது சும்மா வந்தது இல்லை. இப்ப என்னுடைய நாவல் நல்ல நாவல்னாக்க - நீங்க இதுக்கு முன்னால அதை ரெக்கார்ட் பண்ணினா - உடனே அவங்களுக்குத் தெரியும். அவங்க எந்த ஆட்கள்னு. உங்களுக்கு ஒரு நாவல் பிடிச்சது குத்தமாக நீங்க feel பண்ணும்படி அவங்க செஞ்சிடுவாங்க... அது குத்தம் அல்ல...
ராஜாராம்: அது ஏன் அப்படி... எனக்குப் புரியலை...
ராஜன் குறை: முதல்லயே அவங்ககிட்டே இதையெல்லாம் பேசியிருக்கேன்.
சு.ரா.: நீங்க பேசினேள்னா - அவங்க சொல்வாங்க - நான் படிச்சேன். நல்ல நாவல்தான். அவர் ஒரு முட்டாள்தான். சனாதனிதான். ஆனா இந்த நாவலை எப்படியோ நல்ல நாவலா எழுதிட்டார் அப்படீன்னுதான் அவங்க சொல்வாங்க. ஆனால், நீங்க எழுதினேள்னா, அதனுடைய விஷயமே வேற. ரெக்கார்ட் பண்ணீங்கன்னா, அந்த விஷயமே வேற. அப்படிப்பட்ட விஷயங்களை நீங்க செய்யாம, தொடர்ந்து அந்த மாதிரி விஷயங்களைச் செய்யும்போது, நேச்சுரலா உங்க இமேஜ் அப்படித்தான் வரும். நீங்க யாருமே எதிர்பார்க்கலை அந்த விஷயத்தை.
ராஜாராம்: That is correct. You have to redeem your image, if, after sometime.
(இந்த இடத்தில் பி.கே. சிவகுமார் ராஜன் குறையின் இன்னொரு நண்பர் பற்றிய உதாரணத்தைச் சொல்கிறார். ராஜன் குறை "அதுக்காக வந்து கவலைப்பட்டா இருக்க முடியுமா..." என்கிறார். உரையாடலில் துக்காராமும் கலந்து ஓரிரு வரிகள் பேசுகிறார். அந்த உதாரணம் எல்லாம் வேண்டாமே என்கிறார் ராஜாராம். அந்த உதாரணமும், சில வரிகளும் தரப்படவில்லை.)
ராஜன் குறை: (தொடர்ந்து) தமிழ்நாட்டுல அதுவுமில்லாம - சு.ரா. நிச்சயம் ஒத்துப்பார் - இந்தமாதிரி திட்டாத ஆட்களோடதான் பழகணும்னா - யாரோடும் பழகவே முடியாது. அதுவே ஒரு பிரச்னை.
சு.ரா.: இல்லை இல்லை. நீங்க எல்லாரோடும் பழகலாம். எந்தக் கூட்டத்திலும் நீங்க போகலாம். அதுபத்திப் பிரச்னை இல்லை. அதுக்காக நீங்க அப்படீன்னு நான் mean பண்ணிக்க மாட்டேன். நான் ரொம்பக் கவனமாக நீங்க முதலில் இருந்து கடைசி வரைக்கும் நீங்க எங்கத் திரும்பி வரீங்கன்னு கவனிச்சிட்டு இருக்கேன். அப்படிக் கவனிக்கும்போது நீங்க சில விஷயங்களைச் சொல்றீங்க. சில விஷயங்களைச் சொல்லாம விடறீங்க. அந்த சென்சார்ஷிப் வந்து அவங்களைச் சார்ந்தது அப்படீங்கறேன் நான்.
ராஜாராம்: அது உண்மைதான்.
துக்காராம்: Yeah. That is true.
ராஜன் குறை: அது என்னோட பிரச்னைதான்.
ராஜாராம்: உங்களோட பிரச்னை இல்லை அது. Actual-ஆ இது நிறைய பேரோட பிரச்னை. முன்னாடி உங்களுக்குத் தெரியும். ஜெயகாந்தனைப் பத்தி விமர்சனம் வந்துட்டு இருந்தப்ப - கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்து - தாமரைல நிறைய பேரு விமர்சனம் எழுதினாங்க. பர்சனலா போய்க் கேட்டா ஜெயகாந்தனை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெயகாந்தனை நல்லாப் படிப்பாங்க - ஆனா, ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பா தாமரையிலோ செம்மலரிலோ வருவதற்கு they will not react at all. பர்சனலாப் போய் பேசினீங்கன்னா, ஜெயகாந்தனை அவங்களுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன்கூட பிரண்ட்லியாவும் இருப்பாங்க. போய்ப் பழகுவாங்க..
சு.ரா.: சார், வந்து ஜெயகாந்தனை - அவங்க leftists வந்து - leftist writers leftist parties யாருமே - especially marxist and communist parties யாருமே - ஜெயகாந்தன் மேல விமர்சனம் வைக்கவே மாட்டாங்க.
ராஜாராம்: இல்லை, தாமரைல, அந்த ரிஷிமூலம் எல்லாம் வந்தக் காலத்தில் தாக்கி எழுதியிருந்தாங்களே...
(தொடரும்...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment