Thursday, December 08, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - IX

சு.ரா.: அது மத்தவங்க மேட்டரைப் போட்டு இருக்காங்க. ஜெனரலா நீங்கப் பார்த்தீங்கன்னா - இந்த country-க்கு வந்ததுக்கு அப்புறம் - (முருகானந்தத்தைப் பார்த்து) சாருக்கு அதுல ரோல் உண்டுன்னு நினைக்கறேன் - இங்கதான் கம்யூனிசம் அமுலாயிருக்கு அப்படீன்னு சொன்னார்.

ராஜாராம்: அதனாலதான் அவரை எல்லாரும் திட்டினாங்க.

சு.ரா.: யாருமே திட்டலை சார். (ராஜாராம் அப்படியா என்கிறார்.) தமிழ்நாட்டுல யாருமே அதைக் கண்டுக்கவே இல்லை. லெப்டிஸ்ட் பார்ட்டீஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா ரீயாக்ட் பண்ணியிருக்கணும். அப்படிச் சொல்லாதே, சோஷியலிசம் அங்க இன்னும் அமுலாகலை, சோஷியல் சிஸ்டம் அங்க வேற அப்படீன்னு யாருமே சொல்லலை.

ராஜாராம்: சொல்லலை? ம்...

சு.ரா.: ஏன்னா - அவர் கண்டபடி திட்டுவார். இப்ப நான் திட்டுற மாதிரி இல்லை. அவர் என்னை எப்படித் திட்டியிருக்கிறார் என்று சொன்னால்தான் உங்களுக்குத் தெரியும் மத்தவங்களை எப்படித் திட்டுவார்னு. கண்டபடி திட்டுவார் அவர். அதுக்குப் பயந்துண்டு அவங்க வாயை மூடிட்டு இருக்காங்க.

பி.கே. சிவகுமார்: கார்ல் மார்க்ஸ்கூட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலே முதலாளித்துவத்தின் சிறப்புகள்னு ஒரு அத்தியாயம் எழுதியிருக்கார். So, capitalism has its advantages too.

சு.ரா.: அதுபத்தி நான் சொல்லலை.

பி.கே. சிவகுமார்: அந்த aspect-ல ஜெயகாந்தன் அமெரிக்கா பற்றிச் சொன்னதை ஏன் ...

(உரையாடல் மேற்கொண்டு ரெகார்ட் செய்யப்படவில்லை. சில நிமிடங்கள் கழித்து ரெக்கார்டிங் மறுபடியும் ஆரம்பிக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே உரையாடல் தொடர்கிறது. சு.ரா.வும் சாப்பிட்டுக் கொண்டே பேசுகிறார். ரெக்கார்டிங் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன், பி.கே. சிவகுமார் "உங்கள் எழுத்துகளில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது ஒரு விசேடமான அன்பும் வாத்ஸல்யமும் தெரிகிறது. கிருஷ்ணன் நம்பி இருந்திருந்தால் உங்கள் எழுத்துகளுக்கு உதவி இருக்குமா? உதாரணமாக, இடைவெளி விடாமல் எழுத உதவியிருக்குமா?" என்று சு.ரா.வைக் கேட்கிறார். கிருஷ்ணன் நம்பி இருந்திருந்தால் அவர் என் மோசமான எதிரி ஆகியிருக்கலாம் என்று சு.ரா. பதில் சொல்கிறார். அந்த உரையாடலில் தொடர்ந்து சு.ரா. பேசுவது பின்வருகிறது.)

சு.ரா.: அவங்கதான் என் enemy ஆகி இருக்காங்க. ரொம்ப close-ஆ பழகினவங்க. மத்தவங்க இல்லை. மத்தவங்க இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இப்ப ராஜன் குறை என்னை என்ன வேணா திட்டட்டும். அவர் திட்டறது கொஞ்சம் கூட - எனக்கு மனசுல பாதிக்கவே இல்லை. என்ன வேணா அவர் விமர்சனம் பண்ணட்டும். அவரைத் தூக்கித் தூரப் போட்டுடுவேன். இல்லைன்னா, பதில் சொல்லுவேன். என்ன வேணா செய்வேன். என்ன வேணா செய்வேன். counter பண்ணுவேன். ரீஜாய்ண்டர் எழுதுவேன். அவர் என்ன விளையாடுறார் என்கறதை நான் பார்த்துண்டே இருக்கேன். ஆனா, அவங்களுடைய (க்ளோஸ் பிரெண்ட்ஸ¤டைய) விஷயம் நம்மால தாங்க முடியாது. ஏன்னா, நாம அவங்ககிட்டே பழகியிருக்கோம்.

பி.கே. சிவகுமார்: உங்க எழுத்துகளில் ஓர் இனம் புரியாத ஒரு துள்ளல் - ஒரு innocence - திடீர்னு ஒரு ஒளி - நீங்க கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது மட்டும்தான் வரும். மற்ற நேரங்களில் நீங்க ரொம்ப cautious-ஆ எழுதறீங்க. கிருஷ்ணன் நம்பியைப் பற்றிப் பேசும்போது மட்டும் நீங்க வந்து - திடீர்னு ஒரு பழைய காலத்துக்குப் போய் - கனவு வாழ்க்கைல இருந்து எழுதற மாதிரி - நீங்க எழுதுவீங்க. So, it is very hard for me to believe that he would have...

சு.ரா.: இல்ல இல்ல. உங்க பேர் என்ன?

பி.கே. சிவகுமார்: சிவகுமார்

சு.ரா.: சிவகுமார், நாம வந்து நல்ல மனநிலையில் இருக்கற சூழ்நிலையிலேயே நம்மளை அறியாமலேயே பிறரைத் துன்புறுத்தறோம். அதை நீங்க புரிஞ்சிக்குங்க. நாம ரொம்ப நல்ல மனநிலையிலே இருக்கறோம். இப்ப கிருஷ்ணன் நம்பிக்கு - அவரை நான் promote பண்ணலைன்னு எண்ணம்னு வெச்சுக்குங்களேன் - அவருடைய முக்கியமான - மனசுல உள்ள எண்ணம் வந்து - இந்தச் சுந்தர ராமசாமி என்கிற பயல் வந்து - என்னை ஏன் promote பண்ணலை - அப்படீங்கற எண்ணம் இருந்ததுனா, அவர் என்னைத் திட்டுறதுக்கான காரண காரியங்கள் - ஆயிரம் காரணங்கள் இருக்கு. நான் அவரை promote பண்ணலை. எந்த ரைட்டரையும் நான் promote பண்ணலை.

சாமிநாதன்: உங்க age group-லயே இருந்தவங்க அந்த மாதிரி ஆகி இருக்காங்களா? ஒரு மோசமான எதிரிங்களா?

சு.ரா.: அப்படி ஆகாதவங்க இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இந்த மாதிரி நம்முடைய விஷயங்களை - எண்ணங்களை - சுத்தமா ஏத்துக்காதவங்க இருக்காங்களே ராஜன் குறை மாதிரி - அவங்களைகூட நாம பிரெண்ட் ஆக்கிக்க முடியும். ஆனா, அவங்ககூட ப்ரெண்ட்டா இருக்க முடியாது.

பி.கே. சிவகுமார்: எனக்குக் கூட உங்களுடைய இலக்கியக் கோட்பாடுகளில் கருத்து வித்தியாசம் உண்டு. ஆனால், மற்றதில் எல்லாம்..

சாமிநாதன்: காலச்சுவடு வந்து - ஒரு institutionally established ஆனபிறகுதான் இந்த மாதிரி ஆனதுன்னு நினைக்கறீங்களா?

ராஜாராம்: இல்ல இல்ல. முன்னாடியே இருந்து...

சு.ரா.: உங்களுக்குத் தெரிய வரது இல்லை. காலச்சுவடு established ஆனபிறகு பல விஷயங்கள் ரீடர்ஸ்க்குத் தெரிய வருது. முன்னாடி அது தெரிய வராது.

சாமிநாதன்: சரி.

சு.ரா.: இது எல்லாம் என் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தமிழ் சொசைட்டி சம்பந்தப்பட்ட விஷயம். (கூட்டத்தில் மெலிதான சிரிப்பு) நான் இருக்கிற டைம்ல நான் இருக்கேன். இல்லைன்னா, வேற ஒருத்தன் இருப்பான். ஆனா, எல்லாருடைய எக்ஸ்ப்ரீயன்ஸ¤ம் கிட்டத்தட்ட ஒண்ணுதான். இப்ப வந்து அசோகமித்ரனுக்குச் சாகித்ய அகாடமி - சாகித்ய அகாடமி பரிசு என்பது சுண்டைக்காய் பரிசு - ரொம்ப சுண்டைக்காய் - உலகத்தில் உள்ள பரிசுகளை நீங்க கணக்கில் எடுத்துப் பார்த்தீங்கன்னா - ரொம்ப சுண்டைக்காயான பரிசு அது. அதுக்கு twenty five thousand rupees கொடுத்துட்டு இருந்தான். இப்ப இந்தியால வந்து ஒரு டாய்லெட் கட்டறதுக்கு ஐம்பதனாயிரம் ரூபாய் ஆகும் (கூட்டத்தில் சிரிப்பு)

பி.கே. சிவகுமார்: Eighty three வரைக்குமோ Eighty Five வரைக்குமோ five thousand-தான் கொடுத்துட்டு இருந்தாங்க.

ராஜாராம்: ஆமா ஆமா.

சாமிநாதன்: இன்னும் இலக்கியச் சிந்தனை ஐம்பது ரூபாய்தான் கொடுத்துட்டு இருக்காங்க போல இருக்கு.

சு.ரா.: அந்தப் பரிசு - அதை அசோகமித்ரனுக்குக் கொடுத்தாங்க - அதை oppose பண்ணி - (கொடுத்தாங்க? என்று கேட்கிறார் கூட்டத்தில் ஒருவர்) - கொடுத்தாங்க - இரண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி - அதைக்கூட நேர்மையா வாங்க முடியல - அவருடைய பிரெண்டு போய் காலைப் பிடிச்சி - அவர் வாங்கிக் கொடுத்தார். அவர் பிரெண்ட் வாங்கிக் கொடுத்தார். அதெல்லாம் ரெகார்ட்லேயே இன்னிக்கு இருக்கு. நான் சொல்றது இல்லை. ஞானி இருக்காரே ஞானி பழனிச்சாமி - அவர் வந்து அவர் ரெகார்ட்ல போட்டு அந்த ரெகார்ட் எனக்கு வந்தது. அதனால பிரிண்ட்டட் மெட்டீரியலா இருக்கறதுதான் நான் உங்களுக்குச் சொல்றேன். ஊகங்களோ ஒண்ணுமே கிடையாது. அவர் போய் அங்கக் காலைப் பிடிச்சி - அவர் பிரெண்ட் - அசோகமித்ரனுக்கு இந்தப் பரிசைக் கொடுத்தாகணும். இல்லைன்னா அவர்க்குப் பரிசு கிடைக்கறதுக்கு வாய்ப்பே இல்லாம ஆயிடும். இப்ப நீங்க சிபாரிசு பண்ற ஆட்களுக்கு நீங்க இரண்டு வருஷம்கூட தள்ளியோ கூட கொடுக்கலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை. அப்படீன்னு சொல்லிக் காலைப் பிடிச்சார் என்கிற வார்த்தையை ஞானி பயன்படுத்தறார். அவர் நான் காலைப் பிடிக்கலைன்னு பதில் சொல்லவே இல்லை. ரெண்டு பேருமே உயிரோட இருக்காங்க. அவர் காலைப் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லை. அப்படிக் கிடைச்ச பரிசு. பரிசு கிடைச்ச நிமிஷத்திலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு வந்திடுச்சு. ரேடியோல சொல்றாங்க. டி.வி.ல சொல்றாங்க. அசோகமித்ரன் சொல்றார். இந்தப் பரிசு எனக்குக் கிடைச்சதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன் என்கிறார்.

ராஜாராம்: யாரு?

சு.ரா.: அசோகமித்ரன் சொல்றார். டி.வி.யிலே சொல்றார். ரொம்ப பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னே எனக்குத் தெரியாது. ரொம்ப பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னு தெரியாது. சும்மா கொடுக்கறாங்கன்னு - இந்தக் கடைல கொடுப்பாங்க இல்லையா - கோயில்ல சுண்டல் கொடுப்பாங்க இல்லை. அதுமாதிரி கொடுக்கறாங்கன்னு நான் போய் வாங்கிட்டேன். இப்பதான் எவ்ளோ பேர் ஆசைப்பட்டிருக்காங்கன்னு தெரியறது என்கிறார். (கொஞ்சம் இடைவெளி விட்டு) அவருடைய கதைகளை எல்லாம் படிச்சிப் பார்த்தேன். சார், ஒருத்தன் வந்து சின்சியரான ரைட்டராக இருப்பானானால், அவனை நீங்க progressive-ஆ பார்ப்பதற்கு எவ்வளவு சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரானோ, அந்த அளவுக்கு reaction-ஆ பார்ப்பதற்கு சந்தர்ப்பங்கள் தந்துட்டே இருப்பான். progressive-ஆ பார்ப்பதற்கு மட்டும்தான் அவன் உங்களுக்குச் சந்தர்ப்பங்கள் தரான் என்று சொன்னால் அவன் ஒரு உண்மையான ரைட்டரே இல்லை. அவனுடைய நோக்கம் வந்து பாலிடிக்ஸ். லிட்டரேச்சர் இல்லை.

சு.ரா.: (சந்திராவைப் பார்த்து) ஏகப்பட்ட சமையல் பண்ணி இருக்கீங்க. (சாப்பாட்டைப் பற்றித் தொடர்ந்து பலரும் பேசுகிறார்கள். அவை இங்கு தரப்படவில்லை.)

பி.கே. சிவகுமார்: (அண்ணாமலையைப் பார்த்து) உங்ககிட்ட ஒரு கேள்வி. சலபதிகூட உங்க பேட்டி பற்றி. I have not read it. I just heard about it. So, please correct me if I am wrong. சு.ரா. சொன்ன மாதிரி - தகுந்த தடயங்களும் ஆதாரங்களும் இல்லாம, கொஞ்சம் over zealous ஆகி, தொ.ப.மீ., மு.வ. இவங்க எல்லாம் ஜாதி சார்பா செயல்பட்டார்கள் என்று அவர் கேட்டபோது உங்க மனநிலை எப்படி இருந்தது?

அண்ணாமலை: அப்ப நான் நினைச்சது - இது தேவையில்லாத கேள்வின்னு. (சு.ரா. சிரிக்கிறார்.) அது ஒருவேளை பத்திரிகைல controversy இருந்தா - பத்திரிகை விற்பனை கூடும்னு கேட்கறாங்கன்னு நினைச்சேன். (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: இல்ல, ஒரு மோசமான விஷயம் அது. மறுபடியும் அவர் மழுப்பி பதில் சொன்னது இன்னும் அசிங்கமா இருந்துச்சி.

சு.ரா.: யாரு?

ராஜாராம்: வெங்கடாசலபதி. அவங்க object பண்றது வந்து - specific-ஆ தொ.ப.மீ.யும் மு.வ.வும் இப்படிப் பண்ணாங்களான்னு கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர் கிட்ட போய் ஆயிரம் பேரைக் கேட்கலாம். இரண்டாயிரம் பேரைக் கேட்கலாம். ரெண்டு பேரை மட்டும் சொல்லிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. It does not prove anything.

சாமிநாதன்: இங்கேயே வந்தார் வெங்கடாசலபதி. அவர் சொன்னார். நான் திராவிட இயக்கம் சார்பான ஆள்தான்னு வெளிப்படையா ஒத்துக்கிட்டார்.

ராஜாராம்: திராவிட இயக்கத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. அதுக்குப் பதில் சொல்லும்போது - தமிழ்நாட்டுல வந்து - ஜாதி அடிப்படைல இல்லாம எதுவுமே நடக்காதுன்னார். that is not the question he is asking.

அண்ணாமலை: முன்னால இடதுசாரிகளைப் பொருத்தவரை எல்லாம் class என்கிற முறைல பார்ப்பாங்க. இப்ப we are going the other way. other extreme. எல்லாமே ஜாதியில பார்க்கறது. class-ஐயே விட்டுடறது என்கிற மாதிரி.

ராஜாராம்: ஆமாம். நீங்க சொன்னது எல்லாத்திலயும் ஜாதி இருக்கிறது என்பதை நான் ஒத்துக்குவேன். ஆனா, அது மட்டுமே consideration-ஆ இல்லை. அது வந்து - it is there. In part of their mind it is there. ஆனா, அது இல்லாத ஒரு பொது இடம் தமிழ்நாட்டுல இருக்கு.

அண்ணாமலை: நான் சொல்லவந்தது - தொ.ப.மீ.க்கும் மு.வ.வுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு in their approach to Tamil Research-ல. அதைக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழுக்கும். அவங்க எந்த ஜாதிக்கு வேலை போட்டுக் கொடுத்தாங்க என்பது... (கூட்டத்தில் சிரிப்பு) அதை வெச்சித் தமிழுக்கு..

ராஜாராம்: That is not the question he should be asking you. அதை வெச்சி அவர் ரிசர்ச் பண்ணி - ஒரு தனிகட்டுரை எழுதினார்னு வெச்சுக்குங்க. மு.வ. வந்து - அவர் என்ன ஜாதின்னு எனக்குத் தெரியாது - முதலியாரா - (அகமுடைய முதலியார் என்கிறார். பி.கே. சிவகுமார். "உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்க castist-ஆ" என்று பி.கே. சிவகுமாரை ஜாலியாகச் சீண்டுகிறார் துக்காராம். திண்ணையில் பி.கே. சிவகுமாரை ஒருவர் castist என்று திட்டியதை வைத்து அப்படிச் சீண்டுகிறார் துக்காராம். "I am not castist. என் தாத்தாவும் மு.வ.வும் classmates. அதனால எனக்குத் தெரியும்" என்கிறார் பி.கே. சிவகுமார்) - castist ஆ இருப்பதற்கு வெட்கப்படவே விஷயம் இல்லீங்க. (பாதித் தமிழ்நாடு முக்கால் தமிழ்நாடு அப்படியிருக்கு என்கிறார் டெக்ஸன்) caste is a reality.

அண்ணாமலை: அவங்க பின்னாடி எடிட் பண்ணும்போது சில பகுதிகளை விட்டிருந்தாங்க. இதை விட்டிருக்கலாமே, அதைச் சேர்த்திருக்கலாமே என்று நினைத்தேன்.

பி.கே. சிவகுமார்: I think Chalapathy is a very... Overall, if you ask my opinion, we need more people like Chalapathy in Tamil especially when we lack people who can do productive work. அவர் நிறைய நல்ல விஷயங்கள் கொண்டு வந்திருக்கார். புதுமைப்பித்தன் தொகுப்புகள் இந்த மாதிரி. Sometimes over zealous ஆயிடறார்னு நினைக்கறேன்.

அண்ணாமலை: அது விஷயம் இல்லை. over zealous இல்லை. அது பத்திரிகைக்காகச் செய்யறாரோ என்னவோ. சில gossip வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கற மாதிரி இருக்கு. (கூட்டத்தில் சிரிப்பு) gossip வந்தா குமுதத்துக்கும் காலச்சுவடுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். இதுவும் gossip-தான்.

பி.கே. சிவகுமார்: நல்ல பாயிண்ட் இது.

அண்ணாமலை: அந்த புரொபஸர் எந்த ஜாதியைச் சார்ந்தவர் என்பது gossip-தான்.

பி.கே. சிவகுமார்: நான் actual-ஆ பிரபஞ்சன் கிட்டே சொன்னேன். நான் காலச்சுவடு subscriber இல்லை. நண்பர் முருகானந்தம் subscriber. அவர்கிட்ட வாங்கிப் படிச்சேன். I subscribed to Uyirmmai, Chol Puthithu இதெல்லாம். If I like it, I will subscribe. We want something good to happen in Tamil Nadu. நான் நைட்ல படுக்கறதுக்கு முன்னாடி - ஒரு பத்துமணிக்கு - ஒரு ரெண்டு நாள் - ரெண்டு issues - காலச்சுவடு படிச்சேன். ஒரு இலக்கிய அனுபவமோ, உச்ச நிலையோ, intoxication-ஓ அது கொடுக்கும்னு பார்த்தா - ஒரே வருத்தமாயிடுச்சி. பார்த்தா இவர் அவரைத் திட்டறார். அவர் இவரைத் திட்டறார். காலச்சுவடு full-ஆ சண்டையா இருக்கற மாதிரி..

துக்காராம்: திண்ணை மாதிரின்னு உங்களுக்கு ஒரு feeling வந்திருக்குமே. (கூட்டத்தில் சிரிப்பு)

பி.கே. சிவகுமார்: இல்லை. திண்ணை வந்து - day time-ல படிக்கறேன். அதனால வந்து அவ்வளவா வந்து - தாக்கம் இருப்பதில்லை. (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: பாருங்க, நாம பேசறதிலேயே வந்து இவர் எவ்வளவோ விஷயங்கள் சொல்லியிருக்கார். ஆனா, கடைசியில நமக்கு வந்து focus ஆவறது இந்த மாதிரி விஷயங்கள்தான். thats very bad.

பி.கே. சிவகுமார்: பிரபஞ்சன் சொன்னார் - காலச்சுவடு பற்றி உங்களுக்கு இத மாதிரி ஒபினியன் இருந்தா உங்க ரசனை மிகவும் உயர்ந்த ரசனை அப்படீன்னார். so, எல்லா issues-லயுமே (பிரச்னைகளிலுமே) குறைகள் இருந்தா கண்டிப்பா எடுத்துச் சொல்லித்தான் ஆகணும். I agree with it. But, I think Kalachuvadu is kind of going little bit... இவர் (சு.ரா.) ஆசிரியரா இருந்தபோது நடத்தப்பட்ட காலச்சுவடுக்கும், இப்ப நடத்தப்படற காலச்சுவடுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கற வித்தியாசம் இருக்குன்னு சொல்ல முடியும்.

ராஜாராம்: இளைய தலைமுறை இது.

துக்காராம்: அப்படிச் சொல்ல முடியுமான்னு தெரியலை.

பி.கே. சிவகுமார்: This is only a compliment to him (Su.Ra.)

துக்காராம்: பெரியார் கட்டுரைகள்ல வந்திருக்கிற விஷயங்கள் வந்து ஜெனரலா common-ஆ எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களா?

ராஜாராம்: இல்லைன்னுதான் நினைக்கறேன் நான்.

துக்காராம்: ரவிக்குமார், ராஜ் கௌதமன் எழுதினது எல்லாம்...

ராஜாராம்: ரவிக்குமார், ராஜ் கௌதமன் எழுதினது வந்து - அந்த ரெண்டு கட்டுரையும் - I would say that - it cannot be dispassionate - அவங்க ஒரு பாயிண்ட் ஆ·ப் வியூல இருந்து பார்த்து எழுதறாங்க. See...

துக்காராம்: எதிர்பார்ப்பு வந்து இல்லை அப்படீங்கற சோகத்துல எழுதறாங்களா?

சாமிநாதன்: ராஜ் கௌதமன் வந்து மாவோயிஸத்தைப் போய் பெரிய புரட்சின்னு எழுதிப் போட்டாரு.

துக்காராம்: அது... ஒண்ணும் தெரியாதுன்னு அர்த்தம்.

பி.கே. சிவகுமார்: ரவிக்குமார் வந்து - he is coming from dalitism. அவருடைய நோக்கமே வந்து - they dont want anything that is there already. எல்லா பீடங்களையும் உடைப்பதும், தங்களுக்கான அழகியலைத் தாங்களே அடைவோம் என்கிற ஒரு நம்பிக்கையும்...

ராஜாராம்: இப்போ - பெரியார் வந்து - அவர் சொல்ற ஒரு பாயிண்ட் ரைட் - எத்தனை தலித்துகளுக்கு அவர் இடம் கொடுத்தார் பார்ட்டில. அப்படிப் பார்க்கப் போனால் எத்தனை பெண்களுக்கு அவங்க பார்ட்டில இடம் கொடுத்தாங்க - dmk-ல எத்தனை பெண்களுக்குப் பார்ட்டில இடம் கொடுத்து இருக்காங்க.

அண்ணாமலை: நாம இப்போ இருக்கற காலத்தை வெச்சிதானே பார்க்கிறோம். அந்தக் காலத்துல எவ்ளோ இருந்ததுன்னு...

ராஜாராம்: அது தெரியாதே நமக்கு. அதுவும் குறைவுதான்னு நினைக்கறேன்.

(தொடரும்...)

1 comment:

Boston Bala said...

அடுத்த பகுதி புத்தாண்டில் வருமா?!