ஜனவரி 11, 2006 அன்று மாலை சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகங்கள் கிடைக்கும் நவீன விருட்சம் கடை எண் S-59-இல், நவீன விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களின் புத்தகம் வெளியிடப்பட்டது. அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா. கந்தசாமி உள்ளிட்ட பலர் இவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். புத்தகம் பற்றிய தகவல்களும், வெளியீட்டு விழா பற்றிய விவரங்களும் கிடைக்கப் பெறும்போது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வெளியீட்டு விழாவில், அசோகமித்திரன் பேசுகிற புகைப்படங்களை நண்பர் ரஜினி ராம்கி அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லி, அவற்றை இப்போதைக்கு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1 comment:
ஹ¥ம்.. (பெருமூச்சு) :-)
Post a Comment