1970-இல் ஞானரதம் இதழொன்றில் வெளியான சித்ர (ஞானரதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த தேவ. சித்ர பாரதியா இவர்?)வின் கவிதை ஒன்று.
காலமென்ன காலம்?
- சித்ர
கற்றதெல்லாம் மூடமாக்கும்
.....காலமென்ன காலம்;
கற்கக்கற்கத் தெளிவுகாட்டும்
.....காலமென்ன காலம்!
கண்ட உண்மை கனவாய்ப்போகும்
.....காலமென்ன காலம்;
காணக்காண உண்மையூட்டும்
.....காலமென்ன காலம்!
கொண்டதெல்லாம் கழியச்செய்யும்
.....காலமென்ன காலம்;
கொள்ளக்கொள்ளத் தந்துவைக்கும்
.....காலமென்ன காலம்!
அறிந்தமட்டில் வியந்து நிற்க
.....மனிதன் என்ன மாடா?
வாழ்ந்தவழியில் தொடர்ந்துசெல்ல
.....வாழ்க்கை ஒரே கோடா?
வாழ்ந்துசென்ற மனிதர்க் கெலாம்
.....வணக்கம்பல கோடி;
வாழப்போகும் என்னைத் தேக்க
.....எவருக்குண்டு நீதி?
காலமென்ன காலம்!
கருணைமிக்க காலம்!
கோலமென்ன கோலம்;
கோட்டைத் தாண்டின் எங்கும்!
நன்றி: சித்ர, ஞானரதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment