Tuesday, March 28, 2006

பிடித்த பத்துப் புத்தகங்கள்

விகடனில் சிலவாரங்களாக "டாப் 10 பக்கம்" என்ற பகுதியில் பிரபலங்கள் பிடித்த பத்து புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு வருகிறார்கள். அப்படிப் பிடித்தப் பத்துப் புத்தகங்களைச் சமீபத்தில் சுஜாதா, அசோகமித்திரன் ஆகியோர் பட்டியலிட்டு இருந்தனர். அதைப் பார்த்ததும் எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் என்று யோசிக்க ஆரம்பித்ததில் உடனடியாகத் தோன்றியது இந்தப் பட்டியல். இதற்காக நிறைய யோசிக்கவோ மெனக்கெடவோ இல்லை. படித்த ஆங்கில மற்றும் தமிழ்ப் புத்தகங்களிலிருந்து பட்டியல் இருக்க வேண்டும் என்று முனைந்ததோடு சரி. மெதுவாக யோசிக்க முடிந்தால் (அதற்கு நேரம் வேண்டுமே!) இந்தப் பட்டியலை இன்னும் சரிபார்த்துச் செய்திருக்கலாம். ஆனாலும், இந்தப் பட்டியல் உடனடியாகத் தோன்றியது என்பதாலும் எனக்குத் திருப்தி தருகிற பட்டியலாக இருப்பதாலும் இப்போதைக்கு இதையே பதிவு செய்து வைக்கிறேன். எதிர்காலத்தில் என்னுடைய வாசிப்பும், ரசனையும், ஞானமும் வளர்ந்தால் இந்தப் பட்டியல் மாறலாம். பிடித்த பத்துப் புத்தகங்களை நினைவுகூர வைத்த ஆனந்த விகடனுக்கு நன்றிகள்.

1. பைபிள் புதிய ஏற்பாடு
2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்)
3. மஹாகவி பாரதியார் கவிதைகள்
4. மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை
5. ஜவஹர்லால் நேருவின் The discovery of India
6. திருவாசகம்
7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
8. ஜெயமோகனின் தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு(கள்)
9. Francis Wheen எழுதிய "Karl Marx - A Life."
10. Richard Dawkins எழுதிய "The Selfish Gene".

PS: வாசிக்கிற எல்லாருமே இப்படிப் பிடித்த பத்து புத்தகங்கள் பட்டியல் இட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது சங்கிலித் தொடராகவோ, தொடர் பதிவுகளாகவோ (ஏன் பிடித்தது என்று விளக்குகிற காரணிகள் இன்னபிற சொந்தச் சோகக் கதைகள் என்று நீளும்போது) விரைவில் அலுப்படிக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால், எனக்குத் தெரிந்து நிறைய படிக்கிற நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த 10 புத்தகங்களின் பெயர்களை மட்டும் இடுவதை நான் வரவேற்கிறேன் என்றாலும், அதைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுகூட இந்தப் பதிவின் நோக்கமில்லை.

3 comments:

பிச்சைப்பாத்திரம் said...

///சங்கிலித் தொடராகவோ, தொடர் பதிவுகளாகவோ (ஏன் பிடித்தது என்று விளக்குகிற காரணிகள் இன்னபிற சொந்தச் சோகக் கதைகள் என்று நீளும்போது) ////

:-))))


- Suresh Kannan

Raj Chandra said...

After read your list, I was enthused to enter my favourites(ofcourse without any unwanted/unnecessary explanations:)), so the list is in my blog.

PKS said...

Raj, Thanks for your comment & post.

For others: Raj's list is available at
http://rchandra.blogspot.com/2006/03/blog-post.html

Thanks and regards, PK Sivakumar