இந்தப் பதிவின் தலைப்புக்குள் நுழைவதற்கு முன் -
1. என் புத்தகம் பற்றித் தன்னுடைய கருத்துகளை மரத்தடியில் பகிர்ந்து கொண்டு வரும் நண்பர் மரவண்டு கணேஷ் அவர்களுக்கு நன்றி.
2. இ.பா.வுடனான தென்றல் நேர்முகத்தையும், நண்பர் BB நேர்முகத்தின் முதல் பகுதியையும் வாசிக்கக் கொடுத்தமைக்கு தொடர்புடையவர்களுக்கு நன்றி. இ.பா. அமெரிக்காவிற்கு வந்தபிறகு நான் வாரம் ஒருமுறை விரும்பிப் பேசுகிறவர்களுள் இ.பா.வும் ஒருவர். அவர் ஒரு நல்ல உரையாடல்வாதி (conversationalist). அவர் தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்ததால், அவருக்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் இருக்கிற ஆழ்ந்த புலமையை அவருடன் பேசுவதன்மூலம் சுவீகரித்துக் கொள்ள முடியுமா என்று எனக்குள் ஒரு பேராசை. அவருடன் பேசும்போது அவர் சொல்கிற பழந்தமிழ் இலக்கியங்கள், ஷேக்ஸ்பியர் முதலியவற்றை அவர் எழுதவேண்டும் என்று நான் எப்போதும் வேண்டுகோள் வைப்பதுண்டு. ஷேக்ஸ்பியரின் tempest நாடகத்தை அவர் தமிழில் transcreate செய்தபோது, அதை முதலில் படிக்கிற வாய்ப்பைத் தந்தமைக்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சமீபகாலங்களில் இ.பா.வுடன் மூன்று நேர்முகங்கள் வந்துள்ளன. பாஸ்டன் பாலாஜியின் தமிழோவியம் நேர்முகம், திருமலை ராஜனின் தென்றல் நேர்முகம், BB-யின் வானொலி நேர்முகம். மூன்றுமே அமெரிக்கத் தமிழ் ஊடகங்களில் வந்துள்ள நேர்முகம் என்பதை அறியும்போது, அமெரிக்கத் தமிழர்கள் மீதான என் நம்பிக்கை அதிகரிக்கிறது.
3. மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் - இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது - என்னுடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அந்தக் கதையை விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பி.கே.எஸ்ஜி,
அச்சில் முதல் சிறுகதையா? பிடியுங்கள் வாழ்த்தை. சீக்கிரம் வலையில் ஏத்துங்க. படிக்க ஆவலாய் இருக்கிறேன்.
அன்புள்ள உஷா,
வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி. கதையை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். கதை பற்றிய உங்கள் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.
- பி.கே. சிவகுமார்
Post a Comment