Friday, May 19, 2006

அஜீவனுடன் ஒரு சந்திப்பு

தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம்.

வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைபெறவுள்ள குறும்பட பயிற்சிப் பட்டறையை அஜீவன் நெறிப்படுத்த உள்ளார். அதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605198&format=html என்ற முகவரியில் காணலாம். பயிற்சிப் பட்டறைக்கு மிகக் குறைந்த அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மே 27, 2006 (சனி) பிற்பகல், கனெக்டிகட் மாநிலம் மில்போர்ட் நகரில், திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. கனெக்டிகட், மசாசூசெட்ஸ் மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் அப்பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், தங்களையும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதுகுறித்த மேலதிக விவரங்களை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605199&format=html என்ற முகவரியில் காணலாம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.

மே 28, 2006 (ஞாயிறு) பிற்பகல் நியூ ஜெர்ஸியில் என்னுடைய இல்லத்தில், அஜீவனுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. நியூ ஜெர்ஸி மாநிலத் தமிழன்பர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறீர்கள் என்றால் இச்சந்திப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். இச்சந்திப்பின்போது அஜீவனின் குறும்படங்கள் திரையிடல், கலந்துரையாடல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=806051910&format=html என்ற முகவரியில் காணலாம். நியூ ஜெர்ஸி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் முன்கூட்டியே pksivakumar [at] yahoo [dot] com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் தெரிவித்தால், நிகழ்ச்சி நடைபெறுகிற இடத்தின் முகவரி, வருகிற வழிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கிறோம்.

வட அமெரிக்க வாழ் தமிழன்பர்கள் தங்கள் ஊருக்கு அருகில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் ஆதரவு தருமாறூம் அன்புடன் வேண்டுகிறோம்.

பின்குறிப்பு: ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். இணைய நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பெப் சுந்தர் ஆகியொர் கனெக்டிட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வாக்களித்துள்ளனர். நியூ ஜெர்ஸி நிகழ்ச்சியில் வழக்கம்போல இணைய நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

1 comment:

Boston Bala said...

ஒருங்கிணைப்புக்கும் சந்திப்பு அழைப்புக்கும் நன்றி பிகேயெஸ் :-)