ஜனவரி 20, 2007 (சனி) - இன்று காலை புத்தகக் கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுவதற்கு முன் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் பேட்டரி கார் மூலம் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார். கண்காட்சியில் இருந்த அனைத்துக் கடைகள் வழியாகவும் முதல்வரின் பேட்டரி கார் சென்றது. ஒவ்வொரு கடையின் முன்னும் நின்று, பதிப்பாளர்களிடம் சில நிமிடங்கள் பேசி, அவர்கள் தருகிற புத்தகங்களை முதல்வர் பெற்றுக் கொண்டார். எனிஇந்தியன்.காம் கடை எண்:326-க்கு முன்னே எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா முதல்வரை வரவேற்று, எனிஇந்தியன்.காம் இணையதளம், அதன் செயல்பாடுகள், பதிப்பகப் பிரிவு, ஆகியவை பற்றிச் சொன்னார். பின்னர், எனிஇந்தியன் பதிப்பித்த புத்தகங்களை முதல்வரிடம் அளித்தார். பபாஸி சார்பாக முதல்வரின் வருகையின்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றை பபாஸி நிர்வாகிகள் பகிர்ந்து கொள்ளும்போது, அவை பபாஸி இணையதளத்தில் பதிப்பிக்கப்படும்.
முதல்வர் பதவியேற்றபின் அரசு விழாக்களில் புத்தகங்கள் மட்டுமே பரிசளிக்கப்பட வேண்டும் என்ற ஆணை, நூலக ஆர்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியமை, தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடியை பபாஸிக்கு வைப்பு நிதியாகக் கொடுத்தது, அதிலிருந்து வருடம்தோறும் ஐந்து லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்க வழி செய்தமை, புத்தகங்களின் மீதும் தமிழின் மீதும் இருக்கிற ஆர்வத்தால் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல், அனைத்துக் கடைகளையும் நேரமும் ஆர்வமும் எடுத்துப் பார்வையிட்டமை ஆகியவற்றுக்காக தமிழக முதல்வருக்கு ஒரு வாசகனாகவும், பதிப்பாளனாகவும், என் பாராட்டுகளையும் நன்றிகளையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நாளை கடைசி நாள் என்பதாலோ என்னவோ கூட்டம் அலைமோதியது. இயக்குனர் பாலா, எழுத்தாளர் ஜெயமோகன், உதவி இயக்குனரும் எனதருமை நண்பருமான சுரேஷ் கண்ணன் (இவர் நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வர். ஒருமுறை உயிர்மையில் இளையராஜாவைப் பற்றிய கட்டுரையை எழுதியவர்.), சொக்கன், "அங்கிங்கெனாதபடி" வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இன்று எனிஇந்தியன்.காம் கடைக்கு விஜயம் செய்தனர்.
இனி இன்றைய காட்சிகள்:
Buyers at AnyIndian Stall
Director Bala & Writer Jeyamohan
Blogger Siddharth Venkatesh
Night View
Ticket Counter
Dheemtharikida Logo Sale
Dheemtharikida Poll
Suresh Kannan, Jeyamohan & Director Bala
Poet Vikramathithyan & 'Marutha' Balaguru
Christian Convention Alongside
(expect Hindu & Muslim conventions alongside Book Fair next year :-) )
N.Chokkan
No comments:
Post a Comment