ஜனவரி 21, 2007 ஞாயிறு. இன்று கண்காட்சியின் கடைசி நாள். புத்தகக் கண்காட்சி நடந்த 12 நாட்களிலும் எனிஇந்தியன்.காம் சார்பாக தினசரி புகைப்பட விவரங்களும் பிற தகவல்களையும் சென்னைக்கு வெளியே வாழ்கிற தமிழர்களோடு - சென்ற ஆண்டைப் போலவே - பகிர்ந்து கொள்ள முயன்றோம். என் வலைப்பதிவின் வழியாக விவரமாகவும், திண்ணை.காம் வழியாக முக்கியமானவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.
எனிஇந்தியன்.காம் தொடர்புடையவை மட்டுமல்லாமல் புத்தகக் கண்காட்சியில் இருந்த பிற பதிப்பகங்கள், பத்திரிகைகள், பற்றிய புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றையும் எங்களால் இயன்ற அளவு பகிர்ந்து கொண்டோம். தீம்தரிகிடவின் தினசரி வாக்குப்பதிவு கேள்விகளை எல்லா நாட்களிலும் தர முயன்றோம். அப்படியே நக்கீரன், தமிழினி, மருதா, உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிற கடைகளின் புகைப்படங்களையும் தந்தோம். எங்களால் இயன்ற அளவு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த எழுத்தாளர்கள், முக்கியஸ்தர்கள், வருகையாளர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டோம். தினமும் ஒருமுறை ஹரன் பிரசன்னாவுடன் தொலைபேசியின் மூலம் பேசிப் புத்தகக் கண்காட்சி விவரங்களை உடனுக்குடன் அறிய முடிந்தது உதவியாக இருந்தது. தினசரி புகைப்படங்களை எடுத்து அவற்றை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவியர் நண்பர் சாமிநாதன். அவருக்கு எனிஇந்தியன் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள். அவர் இல்லாவிட்டால், நேரில் சென்று வந்தது போன்ற அனுபவத்தைத் தந்த அளவுக்கான புகைப்படங்கள் சாத்தியாகி இருக்கா.
எனிஇந்தியன் புத்தகங்களுக்கும், வாசகர் சேவைக்கும் கிடைத்திருக்கிற அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது.கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் கடைக்கு வருகை தந்த வாசகர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். எங்கள் கடைக்கு வருகை தருகிற நேரம் இல்லாவிட்டாலும், புத்தகக் கண்காட்சியின் மீதான ஆர்வத்தில் கண்காட்சிக்குள் நுழைந்த அத்தனை பேருக்கும் நன்றிகள். புத்தகக் கண்காட்சியை நடத்திய பபாஸிக்கு நன்றிகள். எனிஇந்தியனில் தினசரி புத்தகக் பரிசுகளை வென்றவர்களுக்கு, அவர்களின் பிப்ரவரி 15க்குள் புத்தகங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். சென்னையில் இருக்கிற வெற்றியாளர்கள் எங்கள் தி. நகர் கடையிலும் புத்தகங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
எனிஇந்தியன் புத்தகங்களை வெளியிடும், பெற்றுக் கொள்ளும் முகமாகவும், கடையைப் பார்வையிடும் முகமாகவும் எங்கள் கடைக்கு வந்திருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். ஹரன் பிரசன்னாவின் தலைமையில் எனிஇந்தியனின் சென்னை ஊழியர்கள், புத்தகக் கண்காட்சியில் எங்கள் கடை பெற்ற கவனத்திற்குக் காரணமாவார்கள். அவர்களுக்கு எங்களின் பாராட்டுதல்கள்! அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் "தரமான உள்ளடக்கம்" என்று எனிஇந்தியன் பெற்றிருக்கிற பெயருக்கேற்ற புத்தகங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். அதுவரை நன்றி, வணக்கம்.
கடைசி நாள் காட்சிகள்:
Science Gallery - Demo:
Science Gallery - Magic Well:
Science Gallery - Magic Tunnel:
Blood Donor Registration:
Visitors 1:
Visitors 2:
Dheemtharikida - Dial a Book:
Dheemtharikida Poll:
Infant Visitor:
AnyIndian Winners:
Book Fair Power Source:
Photographer Saminathan:
Monday, January 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment