விவாதங்களுக்கு இரண்டு அடிப்படை குணங்கள் தேவை. ஒன்று, எதிர்க்கருத்துள்ளவன் மீது மரியாதையும், அவன் நல்லெண்ணத்தின் மீதான நம்பிக்கையும். இன்னொன்று, எதிர்க்கருத்தை எளிமைப்படுத்தாமல் அதன் முழுமையுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது. இன்று இத்தகைய விவாதங்கள் தமிழில் மிகக் குறைவாக அதிக ஆரவாரமின்றி நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் பங்குபெற்ற நிறைவு தரும் அனுபவமும் எனக்குண்டு. இந்நூல் கூட அத்தகைய விவாதங்களின் விளைவே. ஆனால், அதிகமும் முழங்கிக் கேட்பவை அமைப்புகள் மற்றும் கருத்துக் குழுக்களைச் சார்ந்து தங்கள் அடையாளங்களை உருவாக்கி வைத்திருக்கும் நபர்களுடைய குரல்களே. ஒருபோதும் பிற கருத்துக்களை இவர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை. எதிர்க்கருத்துகளைக் கூறுபவனின் 'உள்நோக்கத்தைக்' கண்டடையும் துப்பறியும் வேலையில் ஈடுபடுவார்கள். அவன் நேர்மை மீது புழுதி வாரித் தூற்றுவார்கள். அவதூறு செய்வார்கள். அத்துடன் ஆய்வு என்ற பெயரில் எதிர்க்கருத்துகளைக் குறுக்கி, எளிமைப்படுத்தி, அதற்குத் தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பதில்களைக் கூறுவார்கள். வரிகளை பிய்த்து எடுத்து தங்கள் வசதிப்படி விளக்கம் தந்து, எதிராளியை தங்கள் எதிரிகளில் ஒருவனாக சீடர்களுக்கு அடையாளம் காட்டியபிறகு, அவ்வெதிரிகளுக்கு எதிரான தயார்நிலை கோஷங்களை எழுப்புவார்கள். உரத்த குரலில் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் தமிழ்ச்சூழலில் இன்று பல விஷயங்களை நிறுவிவிட முடியும். படைப்பாளி என்ற முறையில் எனக்கு இவர்களைப் புறக்கணித்து விடுவது தவிர வேறு வழியே இல்லை.
- "நாவல்" புத்தகத்தில் ஜெயமோகன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஏதோ சுவையான இலக்கியப் பதிவாக்கும் என்று ஆவலோடு வந்தால் இப்படி மறுஒளிபரப்பு செய்து ஏமாற்றி விட்டீர்களே. :-)
http://en.wikipedia.org/wiki/Ad_hominem
"An ad hominem argument, also known as argumentum ad hominem (Latin, literally "argument against the person") involves replying to an argument or assertion by attacking the person presenting the argument or assertion rather than the argument itself. It is a logical fallacy."
Post a Comment