Thursday, April 08, 2004

A right comment at the wrong place

I tried posting this comment in my friend Boston Balaji Blog for his latest entry regarding Rangabashyam. The comment did not go through fully and also said, more than 5 comments were not allowed when I tried to repost. So, I am giving below what I wrote as comments to my friend Boston Balaji.

பாபா, வம்பு கிசுகிசு பாணியில் எழுதுவதை நிறுத்தும். ஊகங்களில் இறங்கி உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர். பாவம், தென்றல் மணிவண்ணன். ரங்கபாஷ்யம் மணிவண்ணன் இல்லையென்று சொல்வதன்மூலம் என்னச் சொல்ல வருகிறீர்கள் என்று சிறார்களும் புரிந்து கொள்ள முடியும். ரங்கபாஷ்யம் சில நாள்களுக்கு முன் எனக்கு அனுப்பியத் தனிப்பட்ட மின்மடலில் அவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார். அவர் விரும்பியவண்ணம் அவருடன் தொலைபேசியில் ஒருமுறை பேசியிருக்கிறேன். குறும்படங்கள் தொடர்பாக. அவர் எல்.ஏ. சுவாமிநாதனும் இல்லை. ரங்கபாஷ்யம் நீங்கள் யூகிக்கிற, கைகாட்டுகிற நபர் இல்லை என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். ஆனாலும், ரங்கபாஷ்யத்தைப் பற்றி அவர்தான் சொல்ல வேண்டும் என்பதால் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எனவே, இப்படி வம்பு எழுதி வாங்கிக் கட்டிக் கொள்ளாமல், உருப்படியாக ஏதேனும் எழுதுங்கள். இந்தக் கமெண்ட்டைப் போடுவதற்குமுன் நிறைய யோசித்தேன் - இதைச் சொல்ல வேண்டுமா என்று. ஆனாலும், உங்களின் கிசுகிசுவால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் எழுதுகிறேன். அப்புறம் உங்கள் விருப்பம். அன்புடன், பி.கே. சிவகுமார்

No comments: