சுமாராய்ப் படித்து
பார்டரில் பாஸான மகனுக்கு
அரசாங்க உத்தியோகம்
கேட்டார் தந்தை
ஸ்டிரைக் செய்த
காலத்துக்கும்
சம்பளம் வேண்டுமென்று
கேட்டார் யூனியன் தலைவர்
ஊரில் செய்கிற பிஸினஸ்
பாதிக்கப்படாமல் இருக்க
வேறூருக்கு வந்த மாறுதலை
ரத்து பண்ணச் சொல்லிக்
கேட்டார் ஆசிரியர்
சிறுவிவசாயிகளூக்குக்
கிடைக்கிற சலுகைகள்
பண்ணையாளும் டிராக்டரும்
வைத்திருக்கிறவர்களூக்கும்
வேண்டுமென்று கேட்டார்
விவசாய சங்கத் தலைவர்
தன் ஜாதிக்கு
பத்து சதவீதம்
இடஒதுக்கீடு கேட்டார்
ஜாதிசங்கத் தலைவர்
அரசாங்க ஊழியர்
வேலை செய்யாதபோது
நடவடிக்கை எடுக்காமல்
அழைத்துப் பேசவேண்டும்
என்றார் அரசாங்க ஊழியர்
படித்த புதுமைப்பெண்ணுக்கு
சிரமங்கள் இல்லாமல்
வீட்டுக்கருகிலேயே
வேலை வேண்டுமென்றார்
பெண்விடுதலைக்காரர்
கேள்வித்தாள் கடினமென்று
பாஸ் போடச்சொல்லிக்
கேட்டார் மாணவர் தலைவர்
வணிகவரியைக்
குறைக்கச் சொல்லிக்
கேட்டார் வணிகர்சங்கத் தலைவர்
தனக்கு
என்ன வேண்டுமென்று
யோசிக்க ஆரம்பித்தார்
அனைத்துக்கும் தலையாட்டின
புதிதாகப் பதவியேற்ற மந்திரி
எழுதப்பட்ட நாள்: மே 20, 2004.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment