கண்களை விழுங்கி
கரைகள் விரிந்து
நுரையுடன் சுழித்து
சங்கீத லயத்துடன்
முனகல்கள் இன்றி
நடக்கிறது புண்ணியநதி
முக்கி எழுபவரின்
பாவங்களைக் கழுவிச்
சுமப்பதறிந்த
வருத்தங்கள் இல்லாதபடி
கண்களை மூடிக்கொண்டு
மந்திரங்கள் உச்சரித்தபடி
முக்கியெழும் தந்தையின்
பாவங்கள் அறிந்த நதி
தந்தையைப் பார்த்தபடி
சிரத்தையாய்
அவர் செய்வதைச் செய்யும்
பாலகனின் பால்நெஞ்சத்தையும்
அறிந்திருக்க வேண்டுமென்று
வேண்டிநிற்கிறது மனம்
எழுதப்பட்ட நாள்: மே 16, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment