Sunday, June 06, 2004

தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்

சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய தமிழ் கலைப்பட விழா ஜீன் 5, 2004 அன்று நடந்தேறியது. அவ்வமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம். இப்புகைப்படங்களில் சில தவிர மற்றவை என்னால் எடுக்கப்பட்டவை. என்னதான் 5 MP டிஜிட்டல் கேமிராவில் எடுத்தாலும், ஆல்பத்தில் போடுவதற்கு அளவைக் குறைக்கும்போது புகைப்படங்கள் அவற்றின் ஒரிஜினல் தரத்தை இழந்து விடுகின்றன என்று தோன்றுகிறது. வரும் நாட்களில் நண்பர் துக்காராம் எடுத்த புகைப்படங்களுக்கு அவர் உதவியுடன் சுட்டிகள் தர முயல்கிறேன். இன்ஷா அல்லாஹ். இப்புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்தால் நன்றாக இருக்கும்.

அரங்கிற்கு வெளியே விழாக்குழு உறுப்பினர் சாமிநாதன்

விழாக்குழு உறுப்பினர்களில் சிலர்

விழாக்குழு உறுப்பினர்களில் இன்னும் சிலர்

அரங்கிற்கு வெளியே ராஜன் குறை தம்பதியுடன் விழாக்குழு உறுப்பினர்கள் சிலர்

போஸ்டர்களைப் பார்வையிடும் பார்வையாளர்கள் - 1

போஸ்டர்களைப் பார்வையிடும் பார்வையாளர்கள் - 2

வருகைப் பதிவிற்குப் பின் பார்வையாளர்கள் அளவளாவுதல்

சிந்தனை வட்ட நிறுவனரும் விழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் முருகானந்தம் நடராஜனின் வரவேற்புரை

நிழல் சிறப்பு மலரை வெளியிட்டு கோபால் ராஜாராம் உரையாற்றுகிறார்

காலை அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் பி.கே.சிவகுமார்

வயிற்றுக்கும் விருந்து தயார்

மதிய உணவு - 1

மதிய உணவு - 2

மதிய உணவுக்குப் பிந்தைய அமர்வுக்குத் தயாராகும் பார்வையாளர்கள்

பிற்பகலின் முதல் அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க ஸ்தாபகர் மருத்துவர் சுந்தரம்

பிற்பகலின் இரண்டாம் அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் முனைவர் மீனாட்சி சுந்தரம்

இயக்குனர் அருண் வைத்யநாதனுக்குப் கவுரவப் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்குகிறார் முனைவர் முருகானந்தம்

ஏற்புரை வழங்குகிறார் அருண் வைத்யநாதன்

பெட்னா 2004 விழாவுக்கு வரச் சொல்லிப் பார்வையாளர்களை அழைக்கிறார் அரசு செல்லையா

ஒருத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோபால் ராஜாராமுக்கு மருத்துவர் சுந்தரம் கவுரவப் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்குகிறார்

ஒருத்தி திரைப்படத்தை அறிமுகம் செய்கிறார் முனைவர் முருகானந்தம்

கடைசி வரிசையில் அமர்ந்தபடி ஒருத்தியை ரசிக்கும் விழாக்குழு உறுப்பினர்களில் சிலர்

வாயிலில் அமர்ந்தபடி ஒருத்தியை ரசிக்கிறார்கள் துக்காராம் கோபால்ராவும் முனைவர் சாரதா முருகானந்தமும்

திரையிடப்பட்ட படங்களைப் பற்றிய பார்வையாளர் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து ஒருங்கிணைக்கிறார் முனைவர் முருகானந்தம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் திருமதி ஜமுனா

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மானுடவியலாளரும் கட்டுரையாசிரியருமான ராஜன் குறை

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மருத்துவர் சுந்தரம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த சங்கரபாண்டி

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மானுடவியலாளர் கஜேந்திரன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் திருமதி மோனிகா ராஜன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் சுதர்சன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் கோபால் ராஜாராம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த M.P. சிவா

கலந்துரையாடலை கவனிக்கும் பார்வையாளர்கள்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த குமரன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் துக்காராம் கோபால்ராவ்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் பார்வையாளர் ஒருவர்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்தவர்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் பாஸ்டன் ரமேஷ்

நன்றியுரை சொல்கிறார் முனைவர் சாரதா முருகானந்தம்

அப்பாடா! எல்லாம் நல்லபடியாக முடிந்தது

1 comment:

Jeevan said...

குறும்பட விழா பற்றிய தகவல்களைப் பார்க்க முடிந்தமைக்கு நன்றிகள்.

AJeevan
Switzerland

www.ajeevan.com
http://ajeevan.blogspot.com/