Thursday, June 10, 2004

ஏக்கம்

இன்றைக்கு
எழுத முடியாமல் போனது
வருத்தமளிக்கவில்லை
நாளைக்கோ
நாளை மறுநாளோ
அதற்கடுத்த நாளோ
கொஞ்சம் கொஞ்சமாகவோ
மொத்தமாகவோ எழுதிக் கொள்ளலாம்
எழுதாவிட்டாலும்
மனதுக்குள் வாசித்துக் கொள்ளலாம்

நேற்றைக்கும்
அதற்கு முந்தைய நாள்களிலும்
இன்றைக்கும்
வாழ முடியாமல் போன
கணங்கள் பற்றி
வருந்தியபடி கழியப் போகிற
நாளைய பொழுதுகளையும்
பேனாவைப் போல
மூடிவைக்க முடிந்துவிட்டால்
நன்றாகத்தான் இருக்கும்

No comments: