Monday, June 14, 2004

நன்றி!

அன்பினாலும் நட்பினாலும் என்னை எழுதச் சொல்லிக் கேட்கிற நண்பர்கள் என் எழுத்துக்கு உதவுகிற வழிகள் பல. மென்பொருள் உருவாக்குகிற துறையில் பணி புரிந்தாலும் நான் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க சோம்பேறித்தனம் பட்ட போது என் வலைப்பதிவை என் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொடுத்து உதவியவர் தோழி மதி. பின்னர் HTML மற்றும் Javascript பிழைகள் சில உண்டானபோது, புதியதாய் பல விஷயங்களை Blogger-ல் செய்ய முடியும் என்று சொல்லி என் வலைப்பதிவின் வடிவமைப்பை மாற்றி உதவியவரும் மதியே. இப்போது நண்பர் பரியும் உதவிக்கரம் நீட்ட வந்திருக்கிறார். தற்போது என் வலைப்பதிவில் தாங்கள் பார்க்கும் மாற்றங்களைச் செய்தவர் அவரே. நண்பர்கள் சிலருக்கு Unicode எழுத்துருவைப் படிப்பதில் சிரமங்கள் இருந்தன என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் ஓரிரவில் சரி செய்து விட்டார். இன்னும் கொஞ்சம் செம்மைப்படுத்தவும் போகிறார். மதிக்கும் பரிக்கும் உளமார நன்றி சொல்கிறேன். "நீ எழுதுகிற காரியத்தைப் பார். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று செயலில் காட்டுகிற நட்பு வாய்த்தது என் அதிர்ஷ்டம். அந்த வகையில் நண்பர்கள் விஷயத்தில் நான் பாக்கியவான்.

No comments: