Monday, June 14, 2004

சொல்வதும் சொல்லாததும்

எவரோடும்
சண்டையில்லை என்பதை
சண்டை போட்டே
சொல்ல வேண்டியிருக்கிறது
சொல்ல முடிகிறது அனுதினமும்
குற்ற உணர்வின்றி

எல்லார் மீதும்
நேசமுண்டு என்பதை மட்டும்
கைகுலுக்கியோ
தோள் தழுவியோ
சொல்ல வேண்டியிருப்பதில்லை
சொல்லவும் முடிவதில்லை சிலமுறையேனும்
தயக்கங்கள் உதறி

No comments: