Monday, June 14, 2004

அப்படி இப்படி

நான் அப்படி இல்லை
நான் அப்படி இல்லை என்றபடி
அந்த
அப்படியாகிக் கொண்டிருப்பது
சஞ்சலங்கள் எழுப்பவில்லை
சங்கடங்கள் கொணரவில்லை

நான் இப்படி
நான் இப்படி என்றபடி
சஞ்சலங்கள் எழும்பாமல்
சங்கடங்கள் இல்லாமல்
அந்த
இப்படியாகாமல் இருப்பவரை
எங்கும் சந்திக்கிறபடியால்

No comments: