சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி ஜீன் 5, 2004 அன்று நடத்திய குறும்பட விழாவில் திரையிடப்பட்ட விவரணப் படம் The Untouchable Country. யமுனா ராஜேந்திரன் இப்படத்தின் பெயரைத் தமிழில் "தீண்டத்தகாதவர் தேசம்" என்று மொழிபெயர்க்கிறார். Dalit Media Networks தயாரித்த இப்படத்தை R.R.சீனிவாசன் இயக்கியிருக்கிறார். R.R.சீனிவாசன் காஞ்சனை என்கிற சினிமா இயக்கத்தின் மூலம் அறியப்பட்டவர். ஒரு நதியின் மரணம், சுழற்பாதை, காணாமல் போதல், பட்டின் பாதை, விழிகளை மூடுங்கள், சிதைவுகள் ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார் என்று அறிகிறேன். (அவற்றை நான் இன்னும் பார்க்கவில்லை.) The Untouchable Country என்கிற இந்தக் குறும்படம் இந்தியாவில் தலித்துகள் ஆளாகும் கொடுமைகளை வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச நிறவெறி எதிர்ப்பு மாநாட்டின் கவனத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தையும் ஈர்த்து தலித்துகள் மீது இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகளையும் Racisim (நிறவெறி) என்று வகைப்படுத்திக் கண்டிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை வைக்கிற முகமாக எடுக்கப்பட்ட படம் என்று சொல்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மீதும், சமீபகாலமாக மதரீதியாக மைனாரிட்டியானவர்கள் மீதும் நடைபெற்று வருகிற தாக்குதல்களும் வன்முறையும் நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. முக்கியமாக, பரவலாக தன் கோரமுகத்தைக் காட்டி ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்து வருகிற அல்லது நியாயப்படுத்தப்படுகிற ஜாதிக் கொடுமையானது தலித்துகளுக்கு இழைக்கிற சமூக அவலங்களை இந்தப் படத்தில் பார்க்கும்போது கோபமும், வெட்கமும், அவமானமும் வருகிறது. எனவே, தலித்துகளுக்குச் சமஉரிமையும், கவுரவமும், நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத பலரும், இப்படம் தலித்துகள் மீதான பிரச்னைகளுக்குக் கொடுக்கிற காரணங்கள், சொல்கிற தீர்வுகள், காட்டுகிற வழிகள் பற்றிக் கடுமையான மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்குப் பின்னான கலந்துரையாடலில் அத்தகைய மாற்றுக் கருத்துகளைக் கேட்க முடிந்தது. மாற்றுக் கருத்துகள் சொல்கிறவர்கள் தலித்துகளுக்கான எதிர்கள் அல்லர். தலித் பிரச்னை பற்றி இப்படம் அணுகுகிற முறைக்கான விமர்சனங்கள் உடையவர்கள் மட்டுமே என்று எடுத்துக் கொண்டால் படத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனமாக அவற்றை எடுத்துக் கொள்ள முடியும். வலைப்பதிவுகளிலும் அத்தகைய விமர்சனங்கள் இப்படத்தைப் பற்றி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து முடியாமல் போய்விட்டது. ஆனால், இப்படத்தைப் பார்த்தபின்னர், இப்படம் குறித்தும், ஆர்.ஆர்.சீனிவாசனின் பிற படங்கள் குறித்தும் யமுனா ராஜேந்திரன் எழுதிய ஒரு கட்டுரையை என் நண்பர்கள் என் பார்வைக்குக் கொண்டு வந்தனர். யமுனா ராஜேந்திரனின் அனுமதியோடு இப்படம் குறித்த அவர் கருத்துகளைக் கீழே தந்துள்ளேன். நான் எழுத நினைத்த விஷயங்களை என்னைவிடவும் சரியாகவும் கோர்வையாகவும் அவர் எழுதியிருக்கிறார். யமுனாவின் பார்வையில் நான் வித்தியாசப்படுகிற ஒரே இடம் - இப்படத்தின் வரலாற்றுக் காட்சிகள் கோர்வையாக இல்லை என்பதே. படத்தின் எடிட்டர் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார் என்ற யமுனாவின் கூற்றில் நான் உடன்படுகிறேன் என்றாலும், வரலாற்று நிகழ்ச்சிகள் அவை நடந்த கால வரிசைப்படி இல்லாமல், குறைவான வன்முறையிலிருந்து அதிகமான வன்முறை என்ற போக்கில் இருக்கிறது. உதாரணமாக, தலித்துகள் மீது நடந்த அதிகபட்ச வன்முறைகள் கடந்த காலத்தில் (பல வருடங்களுக்கு முன்) நிகழ்ந்துள்ளன. இப்போதும் வன்முறைகள் நடக்கின்றன என்றாலும், அவை முந்தைய வருடங்களைப் போல அதிகமாகவும் மோசமாகவும் இல்லை. ஆனால், இப்படம் அத்தகைய வரலாற்று முன்னேற்றத்தையே கணக்கில் கொள்ளாமல் வேறு மாதிரியாகச் சித்தரிக்கிறது என்பதை கோபால் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துரையாடலில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி யமுனா ராஜேந்திரனின் கருத்துகள்:
"தீணடத்தகாதவர்களின் தேசம் தமிழகத்தில் நடந்த தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளின் வரலாற்று ரீதியலான தொகுப்பு. இந்த விவரணப்படம் இரண்டு வகைகளில் ஆனது. ஓன்று சம்பவம் நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று அந்தச்சம்பவங்களில் தொடர்புள்ளவர்களின் நேர்முகத்துடன் அச்சம்பவங்களை விவரிக்கிறது. இரண்டாவதாக சாதிய உளவியல், வரலாற்று ரீதியில் சாதியத்தின் கொடு¨மி போன்றவற்றை தமிழ்ச் சூழலில் இயங்கும் கோட்பாட்டுச் செயலில் ஈடுபட்டிருப்பவரக்ளின் நேர்முகங்களின் வழி முன்வைக்கிறது. முதலாவது பகுதிக் காட்சிகள் புவியியல் பிம்பங்களை அள்ளிவந்திருப்பதன் மூலம் மிகுந்த ஆவணத்தன்மையைக் கொணடிருக்கிறது. வெண்மணி, கொடியங்குளம் போன்ற சம்பவங்கள் ராஜ்கௌதமன் காஞ்சா அய்லய்யா போன்றவர்களின நேர்முகங்கள் எனப்படம் இயங்குகிறது.
படத்தில் தலித் பிரச்சினை பற்றிய கோட்பாட்டாளர்களாக, அந்தப்பிரச்சினை பற்றிப் பேசும் தகைமை உடையவர்களாக> ஒரு சிலரையே படம் முன்வைக்கிறது. இன்னும் இவர்கள் அனைவருமே இப்பிரச்சினை பற்றி சமீப காலத்தில்தான் தீவிரமாகப் பேசிவருகிறவர்கள் என்பதும் தௌ¤வு. நான் திரும்பவும் சொல்கிறேன்; : மிகத் தீவிரமாகப் பேசிவருகிறவர்கள். இதில் இன்னும் சிலர் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கம்யூனிஸ்ட்டுகளின் மீதும்> மார்க்சிஸ்டுகளின் மீதும் சாதியத்தின் அமைப்புமுறை பற்றி அதிகம் அக்கறை செலுத்தாதவர்கள் எனும் விமர்சனம் முன்வைக்ப்படுகிறது. இதில் மறுத்துப் பேச ஒன்றுமில்லை. அது அப்படித்தான் இருந்தது. இன்று அப்பிரச்சனை பற்றி மார்க்சியர்கள் அதிகம் அக்கறை செலுத்தி வருகிறார்கள் என்பது கண்கூடு.
ஆனால் காத்தமுத்து, சீனிவாசராவ், ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, து.ராஜா எனத் தலைமைப் பொறுப்புகளேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாரந்தவர்கள் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எனும் பதாகையின் கீழ் சாதியத்திற்கு எதிராகச் சளையாத போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இன்னும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்ச்¤யின் தலைமை என்பது தலித்களையும் உள்ளிட்ட பிராமணரல்லாதவர்களின் தலைமைதான். தஞ்சையில் சாதியத்திற்கெதிரான முறைப்படுத்தப்பட்ட போராட்டங்களை நெடுங்காலமாக நடத்தி வருகிறவர்கள் அவர்கள்தான்.
இன்னும் வெண்மணிக் கொடுமைக்கு எதிராக சாதியத்திற்கு எதிராக வன்முறையை ஒரு கருவியாகக் கையாண்டு கோபாலகிருஷ்ணநாயுடுவின் அத்தியாயத்தை முடித்து வைத்ததும் இடதுசாரி; இயக்கம் சாரந்தவர்கள்தான். இவையெல்லாம் தமிழகத்தின் வரலாற்றில் பதிந்த பக்கங்கள். ஆனால் சாதியம் பற்றி எழுதத் தெரிந்தவர்கள்தான் இன்று தலித்தியப் போராட்டத்தின் தானைத் தலைவர்களாக வேஷங்கட்டுகிறார்கள். இன்னும் தமது சாதிகளை மட்டுமே மையப்படுத்துபவர்கள் இன்று கோட்பாட்டாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் வரலாற்றை மறுக்கிற பார்வையாகும். தலித் சமூகத்தைச்சாரந்த தோழரும் எனது பிரியத்துக்குரிய நண்பருமான து. ராஜா இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே வரலாற்றைப் புரட்டுகிற மாதிரியான இம்மாதிரிச் சித்தரிப்புகள் படத்தின் ஆதாரத்தன்மையையும் நோககத்தையுமே கேள்விக்கு உள்ளாக்கிவிடக்கூடியதாகும்.
கிறித்தவத் தன்னார்வ நிறுவனங்கள் குறித்த கேள்விகளை இன்று அந்தந்த நாட்டு இடதுசாரிகள் மட்டமல்ல மேற்கத்திய இடதுசாரிகளும் எழப்பிவருகிறார்கள். பாரம்பர்யமாக சோசலிஸ்ட்டுகள் என்று சொலலப்படுகிற மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்சியிலிருந்தவர்கள், வில்லி பிராண்ட போன்றவர்கள் அதற்கு முன்பாக இரண்டாவது அகிலத்தில் மாரக்சியர்களுக்கு எதிராக இருந்தவர்கள், இந்தியாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் லோகியா போன்றவர்கள், மார்க்சியர்களின் சமூகப் போராட்டங்களுக்கு எதிராக நிதி தருவது என்றுதான் இந்தத் தன்னார்வ நிதிக் குழுக்களை உருவாக்கினர்கள். மேற்கிலிருக்கும் மாரக்சியர்களதும் இஜாஸ் அஹமது போன்ற இந்திய மாரக்சியர்களதும் விமர்சனங்கள் இவ்வகையில் அமைக்¤ன்றன. : மூன்றாம் உலக நாடுகளில் இயங்கும் தன்னார்வக் குழக்கள் தங்களது மேற்கத்திய நிதிகளை தேசிய அரசின் அதிகாரவரக்கக் கட்டுப்பாடுகள் உள்ள நிறுவனங்கள் மூலமே பெறுகின்றன. அவை பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதிருப்தியுற்ற அல்லது வலதுசாரி நோக்கம் கொண்ட குழக்களுக்கு வழங்கப்படுகின்றன. தேசிய அரசின் அதிகாரவர்க்க அமைப்புகளுடன் இறுக்கமான உறவுகளில்லாமல் இந்தக் குழக்கள் இயங்கமுடியாது என்கிறார்கள் அவர்கள்.
தன்னார்வக்குழக்களின் நோக்கம்; குறித்த அரசியல் கேள்விகள் நியாயமாகவே எழுப்பப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. என்கௌன்டர் பத்தரிக்கைக்கு அதன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த ஸ்டீபன் ஸ்பென்டருக்குத் தெரியாமலே சிஐஏ பணம் வந்து கொண்டிருந்ததை பிற்பாடு அவர் அறிந்தபோது, அதிலிருந்து விளகினார் என்பது வரலாறாக இருப்பதையும் நாம் மறந்து விடமுடியாது. இதன் அரத்தம் தன்னார்வக் குழக்களில் இயங்குகிற அனைவருமே வலதுசாரிகள் என நாம் சொல்கிறோம் என அர்த்தமில்லை..
இந்த விவரணப்படத்தின் அழகியலில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் நேரத்தியான படத் தொகுப்பு.. பொதுவாக சீனிவாசனின் எல்லாப்படங்களதும் சிறப்பான ஒரு அம்சம் இப்படங்களின் படத்தொகுப்பாகும். படத்தொகுப்பின் நேர்த்தியை நாம் நதியின் மரணம் படத்திலும் பார்க்கலாம். நிலா தொலைக் காட்சியின் பிம்பங்கள் படத்தின் பல இடங்களில் பார்வையாளர் மனத்தை உலுக்கும் வகையில் பாவிக்கப்பட்டிருக்கிறது. தலித் மகக்ளது கேள்விகளாலான உலுக்கும் நேர்முகங்கள் மிகச்சரியான இடங்களில் நிறுத்தப்பட்டு உக்கிரமான கேள்விகளை பார்ப்பவர்களிடம் எழுப்புகிறது. இந்த இரண்டு படங்களிலும் அரசியல் விவரணப்படத்திற்குரிய வேகம், சுறுக்கெனச் சொல்தல் போன்றவற்றை நாம் பார்க்க முடியும். ஐஸன்ஸ்டீனின் பாட்டில்சிப் போதம்கினில் நம் நெஞ்சை உடைப்பதாக இருப்பது அந்த படத்தொகுப்பின் வேகம். அந்த வேகத்தை தீண்டத்தகாதவர்களின் நாடு படத்தில் ஆண்டுகள் ஓடிமறைந்து சம்பவங்கள் வெடிப்பறும் மனிதக்குரல்களோடு ஆரம்பிக்கும்போது தொடங்கிவிடுகிறது. இவ்வகையில் சினிவாசனுக்கு ஒரு அற்புதமான தொகுப்பாளராக ஜோன்சன் வாய்த்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்."
ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய படங்களைக் குறித்த யமுனா ராஜேந்திரனின் முழுக்கட்டுரையையும் திண்ணையில் இங்கே காணலாம்.
நன்றி: யமுனா ராஜேந்திரன், திண்ணை.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment