Tuesday, September 14, 2004

சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்பு

செப்டம்பர் 19, 2004 ஞாயிறு காலை 11 (EST) மணியிலிருந்து எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி கனெக்டிகட் மாநிலத்தில் மில்போர்ட் நகரில் திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் கோபால் ராஜாராமின் இல்லத்தில் நடைபெறும். நிகழ்ச்சி நிரல் எதுவுமின்றி, காலை பதினோரு மணியிலிருந்து மாலை வரை சுந்தர ராமசாமியுடன் உரையாடல், அளவளாவுதல் என்று இன்பார்மலாக இந்நிகழ்ச்சி இருக்கும். மில்போர்ட் எடிசன், நியூ ஜெர்ஸியிலிருந்து ஏறக்குறைய ஒன்றரை மணிநேர தொலைவில் (எடிசனிலிருந்து ஏறக்குறைய 112 மைல்கள்) இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சந்திக்க விரும்புகிற இலக்கிய ஆர்வலர்கள் திரு.கோபால் ராஜாராமை gorajaram@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது என்னை pksivakumar@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டால் கோபால் ராஜாராம் இல்லத்தின் முகவரி, தொலைபேசி எண், வழி முதலியன கொடுக்கிறோம். கலந்துகொள்ள விரும்புகிற நண்பர்கள் செப்டம்பர் 18, 2004 (சனிக்கிழமை)க்குள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பது நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்கவும் நடத்தவும் உதவும்.

1 comment:

Boston Bala said...

சந்திப்பு ரிப்போர்ட் உண்டா?